(Reading time: 7 - 13 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

கொண்டிருந்தது...

  

சாரதா அன்று ஸ்நாக்ஸ்க்காக வடை செய்திருந்தாள்... அதை ஒரு வெட்டு வெட்டியப்படி நான்கு பேரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்...

  

பேச்சின் நடுவே, ரோஹினி கவனிக்காமல் வடையில் இருந்த பச்சை மிளகாய் ஒன்றைக் கடித்தாள்... அவ்வளவு தான் அதன் காரத்தில் துடிதுடித்துப் போனாள்... பொதுவாக அவ்வளவு காரம் சாப்பிட்டு பழக்கமில்லாதவள் என்பதால் அவளின் கண்கள் சிவந்துப் போனது... முகம் அடிப்பட்டு விட்டதை போல வாடியது...

  

“ரோஹினிம்மா இரு... நான் உனக்கு தேன் எடுத்துட்டு வரேன்,” என சாரதா ஒரு பக்கம் செல்ல, விஜய்,

   

“ஐஸ்க்ரீம், பால் மாதிரி ஏதாவது சாப்பிட்டாலும் நல்லா இருக்கும் ரோ... நான் ஃப்ரிட்ஜ்ல இருந்து எடுத்துட்டு வரேன்,” என்று ஓடினான்...

  

தண்ணீர் குடி என்று சொல்ல நினைத்திருந்த நிரஞ்சனாவிற்கு, அவர்கள் இருவரின் பரபரப்பு பார்த்து கடுப்பாக இருந்தது...

  

நிரஞ்சனா அந்த வீட்டில் அறிமுகமான நாள் முதலே சாரதா அவளை செல்லம் கொஞ்சி சீராட்ட தான் செய்தாள்... இன்று வரை அதில் எந்த மாற்றமும் இல்லை... ஆனால் கடந்த சில நாட்களாக அந்த வீட்டில் தங்கி இருக்கும் ரோஹினியிடம் சாரதா மட்டுமல்லாமல் விஜயும் காட்டிய கூடுதல் அன்பு நிரஞ்சனாவிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை...

  

அவள் கூட தான் நான்கைந்து பச்சை மிளகாயை கடித்தாள்... அதற்காக இப்படியா அலறினாள்?? ரோஹினி தான் ஓவராக்ட் செய்கிறாள் என்றாள் அது கூடவா அத்தைக்கும், விஜய்க்கும் புரியவில்லை???

  

அப்போது அஜய் வீட்டுக்குள் வந்தான்... நிரஞ்சனாவை பார்த்து புன்னகைத்தவனின் கண்கள் ஒரு மின்னலுடன் ரோஹினி பக்கம் சென்றது...

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.