(Reading time: 7 - 13 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

சொல்றேன்னு தப்பா நினைக்காதே... உன் அம்மா உன்னை கூட பார்க்க முடியாம அவ்வளவு உழைச்சதுக்கு கிடைச்ச பலன் தான் அந்த நம்பிக்கை!”

   

சாரதாவின் பேச்சிற்கு சோக கீதம் பாடாமல் புரிந்தது என்பதாக தலையை அசைத்தாள் ரோஹினி!

   

“அம்மா வேலைங்க கூட எனக்கும் கொஞ்சம் நேரம் கொடுத்திருக்கலாம்... ஆனா, நீங்க சொல்றதும் புரியுதும்மா...”

   

ரோஹினி வெகு இயல்பாக சொன்ன பதில் சாரதாவிற்கு மீண்டும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது!

   

“ஏர்போர்ட்ல வந்து நின்ன ரோஹினிக்கும் உனக்கும் எவ்வளவு வித்தியாசம்,” என சொல்லிக் கொண்டே ரோஹினியின் கன்னத்தை கிள்ளி செல்லம் கொஞ்சினாள் சாரதா.

   

“அரண்மனையை விட்டு தள்ளி வந்து யோசிச்சது என் மனசுல பெரிய மாற்றத்தை கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்... அங்கே இருந்தப்போ பெருசா தெரிஞ்ச கல்யாண பிரச்சனை கூட இப்போ சின்னதா தெரியுது!”

   

“அப்போ பேசாம போய் அந்த வேதாளத்தோட ஃப்ரென்ட் விக்ரமை கல்யாணம் செஞ்சுக்கோ...”

   

முகத்தை அஷ்டக்கோணலாக்கிய ரோஹினி, ஆனாலும், “அதுக்கு உங்களை விட்டுட்டு நான் போகனுமே... அதனால தான் யோசிக்கிறேன்,” என்றாள் விளையாட்டாக!

   

சிரித்தாலும், சாரதாவிற்கு உச்சி குளிர்ந்து தான் போனது!

     

✽✽✽

   

மாலையில் நிரஞ்சனா வந்தப் பிறகு மூன்றுப் பேரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்...

  

சில நிமிடங்களில் விஜயும் ஆஃபீசில் இருந்து வந்து விடவே கலகலப்பாக நேரம் போய்க்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.