(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 25 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

காலக்ஷ்மியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை... உணர்வுகளை துடைத்து எடுத்து விட்டவளைப் போல கற்சிலையாக நின்றுக் கொண்டிருந்தாள்... ஹுஹும்... நின்றுக் கொண்டிருப்பதாக காட்டிக் கொண்டிருந்தாள்....!!!!

  

அந்த கற்சிலையின் கண்ணில் தெரியும் வலி சினேகாவிற்கு அவளின் நெருங்கிய தோழி என்ற விதத்தில் தெளிவாக புரிந்தது...

  

மகாலக்ஷ்மிக்காக மனம் பரிதவிக்க, மீண்டும் அந்த பெண்மணி பக்கம் கடுப்புடன் பார்த்தாள் சினேகா..

  

சிநேகாவிற்கு நன்றாக பரிச்சயமான அந்த பெண்மணி இப்போதும் கத்திக் கொண்டே தான் இருந்தாள்...

  

ஆங்காங்கே நின்றுக் கொண்டு மற்றவர்கள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்... சிலர் கண்களில் ஆர்வம், சிலர் முகத்திலோ பாவம் என்ற உணர்வு...

  

இதற்கு மேல் அமைதியாக இருக்க கூடாது என்ற முடிவுடன், அங்கே பக்கத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வாட்ச்மேனிடம்,

  

“என்ன அண்ணா? யாரோ உள்ளே வந்து இப்படி சத்தம் போட்டுட்டு இருக்காங்க, நீங்க சும்மா இருக்கீங்க??? அவங்களை போக சொல்லுங்க... வார்டனுக்கு ஃபோன் செய்ங்க இல்ல போலீசை வர சொல்லுங்க,” என்றாள்!

  

அந்த குரலில் ஒலித்த திடம் அனைவரையுமே சினேகா பக்கம் பார்க்க வைத்தது...

  

“ஏய்...” என ஆரம்பித்து அந்த பெண்மணி சினேகாவிடம் எதுவோ சொல்ல தொடங்கவும், அவசரமாக குறுக்கிட்ட வாட்ச்மேன்,

  

“அவங்க சொல்றதும் சரி தான். உங்க சொந்த பிரச்சனைகளை வெளியே வச்சுக்கோங்க! இப்படி அப்பப்போ வந்து நீங்க நடந்துக்குறது சரி இல்லை,” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.