(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

அம்மா என்ன, கடவுளே சொன்னாலும் கூட ஆகாஷ் எப்போதும் பர்ஃபெக்ட் ஜென்டில்மேனாக தான் இருப்பான்...!!!

  

சுவற்றில் வாகாக சாய்ந்து அமர்ந்தப் படி ஆகாஷ் பற்றிய கனவுகளை தொடர்ந்தாள் சினேகா...!!!!

   

✽✽✽

  

அன்று காலையில் இருந்தே ஆகாஷிற்கு நிறைய வேலைகள் இருந்தது. புதிதாக அவன் கட்ட நினைத்திருக்கும் மால் தொடர்பான வேலைகள் ஒன்று மாற்றி ஒன்று வந்துக் கொண்டே இருந்தது... ஃபோன் கால்கள், மீட்டிங்குகள் என்று சென்றுக் கொண்டே இருந்த நாளின் வேலைகள் முடிந்தப் போது அவனிற்கு ‘ஹப்பாடா’ என்ற உணர்வு தான் மேலோங்கி இருந்தது...

  

அவனின் அறையை விட்டு வெளியே வந்து நடந்தவனின் மனதில் சினேகாவின் நினைவு ‘ஃப்ளாஷாக’ எட்டிப் பார்த்து விட்டு சென்றது... ஆனாலும் நிற்காமல் நடந்தவன், லிஃப்ட்டின் அருகே சென்றப் பின் ஒரு வினாடி தயங்கி நின்றான்...

  

முன் தினம் மாலையில் சினேகாவுடன் படிகளில் மோதிக் கொண்டது மீண்டும் அவன் நினைவில் வந்துப் போனது.

  

அதிகம் யோசிக்கவிடாமல் அவனின் கால்கள் தானாக அவனை படிகள் பக்கம் அழைத்துச் சென்றது...

  

பொறுமையாக படிகளில் இறங்கியவன், இரண்டாவது மாடியின் வளைவில், மூன்றாவது படியின் ஓரமாக அமர்ந்திருந்த சினேகாவை பார்த்து ஆச்சர்யப்பட்டான்!

  

சுத்தமாக பராமாரிக்கப் படும் படிகள் தான்... ஆனாலும் இங்கே அமர்ந்திருக்கிறாளே?? அதுவும் இந்த மாலை நேரத்தில்....???

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.