“ஏன் என்ன செய்ய போற?”
“அவங்க அம்மா கத்தின லெவலுக்கு இல்லைனாலும், அவனுக்கு ரோஷம் வர மாதிரி நாலு கேள்வி கேட்பேன்...”
“ப்ச்... விடு சினேகா.. எல்லாம் என் தலைவிதி,” என்று அலுத்துக் கொண்டாள் மகாலக்ஷ்மி...
✽✽✽
நடந்த கலாட்டாவின் காரணமாக மனதில் ஏற்பட்டிருந்த ரணத்தினால் அன்று இரவு சீக்கிரமே தூங்க சென்று விட்டாள் மகாலக்ஷ்மி...
சினேகாவிற்கு தூக்கம் வரவில்லை...
ச்சே, என்ன மாதிரியான மனிதர்கள்!!! மகனை கேள்வி கேட்க முடியாதாம்... ஆனால் வேண்டவே வேண்டாம் என நினைக்கும் மருமகளிடம் வந்து கத்த முடியுமாம்!!! இதில் மிரட்டல் வேறு!!!
ப்ச்... அம்மா இப்படி என்றால், மகன் வேறு விதமான இம்சை....
இதில் அவனுக்கு மஹா அக்காவுடன் காதல் வேறு... மண்ணாங்கட்டி!!!!
கோபமாக யோசித்தாலும், ‘காதல்’ என்ற உடனேயே சினேகாவின் மனம் வாஞ்சையுடன் ஆகாஷை பற்றி யோசித்தது...
ஆகாஷ் இவனை போல எல்லாம் இல்லை...
பக்கா ஜென்டில்மேன்...