சினேகா அவனை கவனித்ததாக தெரியவில்லை...
சத்தம் போடாமல் வந்த வழியே திரும்பி போய் விடலாமா என்று தோன்றிய எண்ணத்தை சினேகா உட்கார்ந்திருந்த விதம் தடுத்து நிறுத்தியது!
படிகளின் ஓர சுவரில் சாய்ந்து, கன்னத்தில் கை வைத்த படி அமர்ந்திருந்தாள் அவள்... ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருக்கிறாள் என்பது ஆகாஷிற்குப் புரிந்தது...
எத்தனை முயன்றும் சினேகாவை அப்படியே விட்டு விட்டு செல்ல அவனுக்கு மனம் வரவில்லை.
என்ன விஷயம் என்று தெரிந்துக் கொள்ள.
“சினேகா...” என்று அழைத்தப் படி அவளின் அருகே சென்றான்...
வேறு ஏதோ உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சினேகா ஆகாஷின் குரல் கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள்.
அவள் விழிகளை விரித்து பார்த்த விதம் ஆகாஷை என்னவோ செய்தது...
அவளின் முகத்தில் இப்போதும் யோசனை ரேகைகள் இருந்தது... ஆனாலும் அதன் கூடவே... விரிந்திருந்த அவளின் கண்களில் எக்ஸ்ட்ரா ஜொலிப்பு வந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது...
அவனைப் பார்த்ததால் வந்த ஜொலிப்பா??
மேலே யோசிக்கவும் ஆகாஷிற்கு தயக்கமாக இருந்தது...
எனவே அந்த யோசனையை தொடராமல், சிறிய இடைவெளி கொடுத்து அவளின் பக்கத்தில் அமர்ந்தான்.