Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 59 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
”நான் கற்பனை பண்ணிட்டேன், ரொம்பக் கொடுமையா இருக்கும், தினம் தினம் வீடே கலவரமா இருக்கும், அதனால வேணாம், நான் சொல்றதைக் கேளு, இப்பவே கிளம்பலாம், உன்னை உன் அப்பா வீட்ல விட்டுட்டுதான் மறுவேலையே எனக்கு“
”முடியாது, நான் தாலியை தரமாட்டேன், உங்களை நல்லவனா மாத்திடறேன், அப்புறம் அப்பாகிட்ட போகலாம் சரியா, ஆமா சாப்பாடு எங்க, இன்னுமா வரலை, எனக்கு ரொம்ப பசிக்குதே, தோசையாவது சுட்டு வைச்சிருக்கலாம்ல வெட்டியாதானே சோபால உட்கார்ந்திருந்தீங்க, நானாவது இவ்ளோ நேரம் யோசிச்சி யோசிச்சி டயர்டாயிட்டேன், உங்களுக்கென்ன கேடு, பொழுதுக்கும் தூங்கி வழிஞ்சீங்களே, 2 தோசையாவது சுட்டு வைச்சிருக்கலாம்ல” என சம்யுக்தா திட்ட அவனோ அதிர்ந்துவிட்டான்
”அடிப்பாவி என்னடி இப்படி திட்டற, நான் தாதாடி”
”இந்த வீட்டுக்குள்ள நீங்க ஒண்ணும் தாதா கிடையாது, என் புருஷன் மறந்துட்டீங்களா எனக்கு தாலி கட்டினீங்களே”
”மறக்கலை, அந்தத் தப்பை ஏன் செஞ்சோம்னு நினைச்சி என் மேலயே எனக்கு ஆத்திரமா இருக்கு, எத்தனையோ பேரை கொன்னப்ப கூட நான் தைரியமா இருந்தேன்டி, உன் கழுத்தில தாலியை கட்டிட்டு நான் படற அவஸ்தையிருக்கே சே வாழ்க்கையே நரகமாயிடுச்சி”
”இதுவரைக்கும் நீங்க நரகத்திலதான் இருந்தீங்க, இனிமேலயாவது அந்த நரக வாழ்க்கையை விட்டுட்டு வெளிய வாங்க”
”எங்க வர்றது இதான் என் உலகம், இதை விட்டு நான் வெளிய வந்தா அவ்ளோதான், என் உசுரு என் உடம்புல இருக்காது”
”தாதாவாகனும்ங்கற லட்சியத்தை கைவிட்டாலே உங்க உயிருக்கு ஒண்ணும் ஆகாது“
”நீயெல்லாம் எனக்கு அறிவுரை சொல்ற மாதிரி என் நிலைமை இன்னும் மாறலை, இப்பவும் நான் தில்லைதான், என்னை உன்னால மாத்த முடியாது புரிஞ்சதா” என பொங்கினான் அதைக்