Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 58 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
”இதை சொல்லவா உனக்கு ஒரு நாள் தேவைப்பட்டிச்சி, காலையில போய் நைட் வந்து நிக்கற, என்னையே ஏமாத்தறியா”
”ஆமாம் உன்னை ஏமாத்தி பங்களா கட்டிட்டேன் பாரு, அட நீ வேற அண்ணா, வீட்டுக்குப் போனதும் ஒரே வேலை அண்ணா, பாட்டி ஏகப்பட்ட வேலையை வாங்கிடுச்சி, உடம்பே வலிண்ணா”
”சரி சரி பசிக்குது சாப்பாடு கொண்டு வா” என சொல்ல சித்தனோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு
”அண்ணா அவங்க எங்க”
”எவங்களை கேட்கற“
”அதான் அந்த மேடம் எங்க காணலை“
”எதுக்கு கேட்கற”
”வெளிய புது கார் நிக்குது, அதை பார்த்தேன் அவங்களுக்காகத்தானே அந்த காரை வாங்கி வைச்ச“
”ஆமாம்“
”எதுக்கு அவங்களை அனுப்பறதுக்குதானே“
”ஆமாம்”
”அனுப்பலையா இன்னும்”
“ராத்திரி நேரத்தில எப்படிடா அனுப்பறது, விடிஞ்சதும் அனுப்பலாம்னு இருக்கேன்“