(Reading time: 5 - 10 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

எனக்குத் தெரியும்”

  

”என்னது என்னை நல்லவனா ஆக்கப் போறியா“

  

”ஆமாம் எப்படியும் ஒருகட்டத்தில உனக்கு இந்த தாதா வாழக்கை பிடிக்காம போயிடும், அப்புறம் எல்லார் போலவும் இயல்பான ஒரு வாழ்க்கையை வாழனும்னு ஆசைப்படுவியே நீ”

  

”அதுக்கு”

  

”உன்னை திருத்திடலாம்னு முடிவு பண்ணிட்டேன்“

  

”என்னையா முடியுமா உன்னால”

  

”முடியும்னு நம்பறேன்“

  

”அம்மா தாயே உன் கால்ல வேணா நான் விழறேன், இந்த சினிமால வர்ற கதாநாயகி போல எல்லாம் வசனம் பேசாதம்மா, சினிமா வேற நிஜ வாழ்க்கை வேற, என்னை திருத்தி நல்லவனாக்க உன்னால முடியாது, நானா திருந்தினாதான் உண்டு”

  

”சரி அப்ப திருந்துங்களேன்“

  

”என்ன விளையாடறியா, நான் திருந்திட்டா என் லட்சியம் என்னாகிறது”

  

”என்ன லட்சியம் உங்களோடது”

  

”அதான் பெரிய தாதாவாகி இந்த ஊரையே ஆளனும்“

  

”சே இதானா“ என அலுத்துக் கொள்ள

  

”அலுத்துக்காத உன் அப்பா பேரைச் சொன்னா எத்தனை பேருக்கு தெரியும், அதே என் பேரை இந்த ஊர்ல சொல்லிப்பாரு, எல்லாருக்கும் தெரியும் அந்தளவுக்கு நான் உயர்ந்து இருக்கேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.