கேட்டு அலட்சியமாகச் சிரித்தவள்
”எனக்கு பசிக்குது சாப்பாடு எங்க” என அதிகாரமாக கேட்க அவனோ அடங்கிப் போய்
”சித்தன்கிட்ட சொல்லிவிட்டேன், வந்துடும், அய்யோ சித்தனா எங்க அவன்” என அலறியபடியே அவனை தேடி ஓடினான் தில்லை.
அவனது செயலைக் கண்ட சம்யுக்தாவோ
”இவரா தாதா, சின்ன விசயத்துக்கே இப்படி பயந்து ஓடறாரு, இவரை எல்லாம் எப்படி எல்லாரும் தாதான்னு நினைச்சி பயப்படறாங்களோ, இவர் என்னடான்னா என்னைப் பார்த்து பயப்படறாரு, இவர்கூட வாழனும்னு என் தலையெழுத்து, தேவையில்லாம இவர்கிட்ட தானா தேடிவந்து மாட்டிக்கிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும், இவரை எப்படி நல்லவனா திருத்தறது, முயற்சி செய்வோம் இவர் திருந்தி நல்லவரா ஆகறவரைக்கும் இவரை நம்ம கிட்டயே சேர்க்க கூடாது” என பெரிய முடிவு எடுத்தாள்.
மறுபக்கம் சித்தனோ அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைவரிடமும் சம்யுக்தாவை தில்லை திருமணம் செய்துக் கொண்டதை சொல்லிவிட தில்லை சித்தனை தேடி வரும் போது எதிர்பட்டவர்கள் அனைவரும் அவனை பிடித்து விசாரித்தனர். அதைக் கேட்டு நொந்துப் போனான் தில்லை
”அப்படி எல்லாம் இல்லை சித்தன் உளறி வைச்சிருக்கான்” என சொல்லியும் யாரும் நம்பவில்லை
”யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்ட பரவாயில்லை, எல்லாருக்கும் தெரியறமாதிரி கல்யாண விருந்தாவாது போடு“ என அங்கிருந்தவர்கள் சொல்ல அவனோ
”நான் இருக்கற இருப்புக்கு விருந்து ஒண்ணுதான் குறைச்சல், எதுக்கு என் எதிரிக்கு நானே என்னைப்பத்தி சொல்லி வரவழைக்கறதுக்கா, முடியாது, விட்டா என்னை என் எதிரிகிட்டயே கொண்டு போய் விடுவீங்க போல இருக்கே, இதப்பாருங்க இந்தச் கல்யாண விசயம் தற்செயலா நடந்தது, இதை வெளிய சொல்லி வைக்காதீங்க, என் எதிரிக்கு தெரிஞ்சா