(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

  

கோபத்துடன் அவனை பார்த்து முறைத்தாலும், வேறு வழி இல்லை என்பதால் வாயை மூடிக் கொண்டு கிளம்ப தயாரான அந்த பெண்மணி, மீண்டும் மகாலக்ஷ்மி பக்கம் பார்த்து,

  

“இங்கே பாரு, இந்த விவாகரத்துல உனக்கும் சம்மதம்ன்னு நான் கொடுத்த பேப்பர்ல சைன் போட்டுக் கொடுத்திரு... நான் உன் பக்கமே வர மாட்டேன்,” என்று சொல்லி விட்டே சென்றாள்.

  

‘ஷோ’ முடிந்து விட்டதால் ஒவ்வொருவராக அங்கிருந்து நகர்ந்தார்கள்... சினேகாவும், மகாலக்ஷ்மியும் கூட ஒன்றாக தங்களின் அறை நோக்கி சென்றார்கள்...

  

“மஹா அக்கா, என்னைக் கேட்டா நீங்க எந்த மண்ணாங்கட்டிக்கு இந்த கல்யாணத்தை கட்டிக்கிட்டு அழுறீங்கன்னு புரியலை... அவங்க சொல்ற மாதிரி சைன் போட்டுக் கொடுக்க வேண்டியது தானே???”

  

“ப்ச்... நான் சைன் போட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொல்லலையே சினேகா...”

  

விஷயம் புரிந்து சினேகா உதடுகளை கடித்துக் கொண்டு அமைதியாக இருக்க,

  

“ஒவ்வொரு தடவை அவங்க வந்து இப்படி பேப்பர் கொடுக்கும் போதும் நான் சைன் போட்டு தான் தரேன்... ஆனா அதை அவங்க மகன் தான் கிழிச்சு போட்டுடுறார்!!!! அவர் கிட்ட எதுவும் கேட்க முடியாம தான் இங்கே வந்து என் கிட்ட கத்துறாங்க,” என்றாள் மகாலட்சுமி ஆதங்கத்துடன்.

  

“அதுக்காக நீங்க ஒவ்வொரு தடவையும் சும்மா இதை எல்லாம் கேட்டுட்டு அமைதியா இருப்பீங்களா???”

  

“நானும் கோபப் பட்டுட்டேன், திரும்ப கத்திட்டேன்... அதுக்கு எல்லாம் ஒரு யூஸும் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு சினேகா... அதான் இப்போ அமைதியா இருக்க பழகி கிட்டேன்.”

  

“damn it! நீங்க எனக்கு பிரேமோட நம்பரை தாங்க!”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.