(Reading time: 24 - 48 minutes)

07. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

ன்னலின் வழியே எட்டிப்பார்த்தவனுக்கு கோபம் தலைக்கேரியது. அங்கு நந்து பேக்கை நெஞ்சோடு சேர்த்து பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் நான்கு பேர் சிரித்து கேலி பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதிலும் அங்கு சுபத்ரா நிற்பதைக் கண்டவன் அடுத்த நொடி நந்துவை அடைந்து, அவளை பின்னிலிருந்து பேக்கோடு சேர்த்து தன்னுடன் இறுக்கிக் கொண்டான். அவன் அவளை பிடித்திருந்த விதத்திலேயே possessiveness அப்பட்டமாக தெரிந்தது. கையை வேகமாக சுபத்ராவை நோக்கி ஓங்கியவன்..

"சே.." என்றுஓங்கிய கையை மடக்கினான். அந்த அடி மட்டும் அவள் மேல் விழுந்திருந்தால் அவள் கதி அதோ கதிதான்.

"அதான் ஒருத்தனை உயிரோட கொன்னுட்டேல்ல.. இன்னும் உன் வெறி அடங்கலையா.." அவளைப் பார்த்து வெறுப்புடன் கேட்டவன், பின்பு சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, திகைத்து போய் விழித்த நந்துவை இன்னும் இறுக்கி,

"இவ மேல உங்க யாரோட பார்வையாவது பட்டுச்சு.. நான் மனுசனா இருக்க மாட்டேன்..." என்று குறிப்பாக ப்ரேமை பார்த்து உறுமி விட்டு, நந்துவை கையோடு வெளியே இழுத்துச் சென்றான். அவன் வெளியே வரும் பொழுதே, சுபத்ரா மடங்கி அமர்ந்து கைகளால் முகத்தை மூடியபடி அழுவதை பின்னால் திரும்பி பார்த்தபடியே வந்தாள் நந்து.

வளை வெளியே அழைத்து வந்தவன், இரண்டு department தள்ளி patient அமருவதற்காக போடப்பட்டிருந்த சேரில் அவளை அமர வைத்தான். அவளிற்கு முதுகு காட்டி corridor-இன் கைப்பிடியை பிடித்தபடி வெளியே வெறித்துக் கொண்டிருந்தான். காற்றில் கலைந்த கேசம் ஆட, முழங்கை வரை மடித்துவிடப் பட்டிருந்த சட்டையும் அதற்கேற்றார் போல ஆட, அவன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் தன்னிடம் காட்டும் உரிமை தன்மேல் உள்ள பரிதாபத்தினால் வந்ததோ என்று யோசிக்க, அவன் திரும்பவம், சட்டென்று தரையைப் பார்த்தாள். வெகு நிதானமாக, அவளின் எதிர் இருக்கையில் அமர்ந்தவன், சில நிமிடம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள், நெஞ்சம் படபடக்க, இன்று தான் புதிதாக பார்ப்பது போல் தன் கை விறல்களையே பார்த்திருந்தாள்...

"சாரி.. " என்று சந்துருவின் குரல் மென்மையாக கேட்கவும், சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள்

"எ.... எதற்கு.." என்று தடுமாறி கேட்க..

"ம்.. எல்லாத்துக்காகத்தான்.." என்றவன், மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான். சங்கடத்துடன் நெளிந்தவள்,

"நான் போகட்டுமா.. class இருக்கு.." என்று இழுக்க,

"ம்.." என்று தலையசைத்தவன், விட்டால் போதுமென்று அவள் ஓடுவதைப் பார்த்து,

"ஒரு நிமிஷம்.." என்றான்.

"என்ன?" என்பதுபோல் அவள் பார்க்க,

" உன் பேர் சொல்லிட்டுப் போ...." என்றவுடன்,

நந்துவின் முகத்தில் இருந்த பரவசப் புன்னகை மறைந்து ஏமாற்றம் தெரிந்தது. தனது பெயர் கூட தெரியவில்லை, தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூட இப்போ தான் வருகிறது. ஆனால், தான் மனதளவில் இவனிடம் எவ்வளவு நெருங்கிவிட்டோம், எல்லாம் முட்டாள் தனம். இவன் தன்னிடம் மற்றவர்கள் போல ஒரு சீனியராகத்தான் நடந்து கொண்டிருக்கிறான். தான் தான் தவறாக கற்பனை செய்து கொண்டோம் போல என்று எண்ணியவளுக்கு, அவனிடம் பதில் சொல்லவே பிடிக்கவில்லை. ஏமாற்றத்தை மறைக்க முயன்றவாரே அங்கிருந்து நடக்க முயன்றாள், ஆம் நடக்க முயலத்தான் செய்தாள், ஆனால் முடியவில்லை. அவள் கையை பிடித்து நிறுத்தியவன், அவள் முகத்தை கூர்மையுடன் பார்த்தான், அவள் தலையை நிமிர்த்தாமல் இருக்கவும், படக்கென்று அவள் பாக்கை பறித்து, உள்ளே இருந்த புக்கை எடுத்து அதில் அவள் பெயரைப் பார்த்தவன், சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்து புருவம் சுருக்கி யோசித்து விட்டு, நினைவு வராதவன் போல் தோளைக் குலுக்கிக் கொண்டான்.  பிறகு ஒரு விரலால் பெயரை வருடியவாரு வாய்விட்டு " ந..ந்..தி..தா.." எனவும் நந்துவுக்கு சிலிர்த்தது.


( யப்பா.......ஒரு பேருக்கு இத்தனை அக்கப்போரா’னு நீங்க திட்றது கேக்குது...ரொமான்ஸ்ல இதுலாம் சகஜம்.....டீல்ல விடுங்க பாஸ்...)

புக்கைமூடி பத்திரமாக உள்ளே வைத்துவிட்டு,

“ இப்போ போ....” என்றவாரு அவளை திரும்பிப் பார்க்காமல் தன்னுடைய டிப்பார்ட்மென்டிற்குள் நுழைந்தான்.

வனைப் பற்றிய யோசனையுடன் நடந்து வந்தவள், தன்னைத் தேடி ஆரு வருவதை கண்டு மற்றதை மறந்து, அவளிடம் சென்றாள்.

“ எங்க போன நந்து?...எங்க கூட தான வந்திட்டு இருந்த...திடிர்னு காணோம்..? என்று கேட்டவள், தானே யோசித்து,

“சே...சீனியர்ஸா..? ஏன் உன்னையே டார்ச்சர் பண்றாங்க..? என்றாள் கோபத்துடன்.

“ம்...அந்த ப்ரேம் சார் தான்...சும்மா ப்ரொபோஸ் பண்ணு.... பண்ணுனு சொல்றாங்க..” என்றாள் நந்து,

“ இவ்ளோ டார்ச்சர் பண்றான், அவனுக்கெல்லாம் என்ன சார் வேண்டியிருக்கு...பேசாம அவங்கள பத்தி கம்ப்லைன் பாக்ஸ்ல எழுதி போட்றலாமா?” என்றாள்,

“ இல்ல வேணாம் ஆரு... இன்னிக்கு அவங்க கூட சுபத்ரானு ஒரு சீனியர் இருந்தாங்க. அவங்க எனக்கு தான் சப்போர்ட் பண்ணாங்க...மத்தவங்கதான் கேட்கல....அதோட...” என்று சற்று தயங்கியவள், தொடர்ந்து,

“சந்துரு சார் வந்து ஹெல்ப் பண்ணினார்..” என்று பேசியவாறே தங்கள் கூட்டத்தை வந்தடைந்தார்கள். அவர்கள் பேச்சில் சந்துருவின் பெயர் வரவும் என்னவென்று கேட்ட கவினிடம் அனைத்தையும் கூற, அவன் நந்துவையே கூர்மையாக பார்த்தான். நந்து அவனை கவனமாக தவிர்த்தாள். சரி விட்டுப் பிடிக்கலாம் என்று நினைத்தவன், அனுவிடம்

“என்ன உங்க கேங்க்ல இன்னிக்கு வெயிட் கம்மியா இருக்கு.....?” என்றபடி ஜெனியைத் தேட ( ஜெனி கொஞ்சம் பூசினார்ப் போல இருப்பதை சொல்கிறாராம் )

“ அவகிட்ட அடி வாங்காம உனக்கு நாள் விடியாதே.... உன் தொல்லைத் தாங்க முடியாம தான், அவ கேங்க் மாறிப் போய்ட்டா..” என்றபடி பக்கத்தில் காவ்யா குரூப்புடன் ஜெனி இருப்பதை காட்டினாள்.

“இதுக்குத் தான்டா அப்பவே சொன்னேன்....ரொம்ப ஓட்டாதடா, அப்றம் அவளே ஓடிருவான்னு...” என்று அருண் சொல்லிவிட்டு அனுவிடம் ஹை-ஃபை கொடுக்க, இதற்கெல்லாம் மசிந்தால் அது கவினா !!!.....

“வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி...சைக்கிள் கேப் கெடச்சா போதுமே, அதுல ரோட் ரோலரே ஓட்டிருவியே...என்ன இருந்தாலும் உன் தங்கச்சிய அப்படி சொல்லலாமா... மச்சான் மனசு கஷ்டப்படுதில்ல...” என்று அவனுக்கு கவுன்டர் கொடுக்க,

“தங்கச்சியா.....!!!!!!முடிவே பண்ணிட்டியா... நல்லாயிருடா..” என்று அவன் நெஞ்சைப் பிடிக்க, அவனைக் கண்டுகொள்ளாமல்,

“அங்க என்ன மொக்கயை போட்டுட்டு இருக்கா....ஜெ...”என்று குரல் கொடுக்க முயல, அது “ஆ....” என்ற அலறலாக மாறியது, பின்னே அனு தனது முழு பலத்தையும் கொண்டு அவன் காலை மிதித்தால், அலறல் வராமல், ஆலாபனையா வரும்....

பிறந்த குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு

"ஏன்.. ஏன்.. இந்த கொலவெறி தாக்குதல்?" என்று அனுவிடம் கேட்க, அவள் ஜாடையாய் கேன்டினில் நின்றவனை காட்டினாள். அங்கு நின்றவன் juice-ஐ அருந்துவதை விட ஜெனியை நோட்டம் விடுவதை தான் முக்கிய வேலையாக பார்த்துக்கொண்டிருந்தான். கவினின் இரண்டு காதுகளிலும் புகை வர

"யாரவன்?" என்று கேட்க

"ஜெனியோட கசின் ப்ரதர்... ‘ஜான்’.." எனவும் காதின் புகை சட்டென்று நின்று நிம்மதி பெருமூச்சாய் வெளிவந்தது. பொறுக்கும்மா அனுக்கு,

"டேய்.. ரொம்ப சந்தோஷப்படாத.. அவன் ஜெனியோட அப்பா ஏற்பாடு பண்ணின spy. அவன் இங்க படிக்கிறதால தான் ஜெனிய இங்க சேர்த்திருக்கார். இப்ப கூட வந்தவுடனே நீ அவள வம்பிலுப்பனு தெரிஞ்சு தான் அவ அங்க போய்ட்டா.. பாய்ஸ் கூட பேசவே கூடாதுன்னு அவங்க அப்பாவோட strict order-ஆம். அதனால கொஞ்சம் பார்த்து நடந்துக்க.." என்றாள் மிரட்டும் தோனியில்.

"விடு அனு.. இவன்லாம் ஜுஜுபி.. என்ன, 40 கிலோ எலும்புக்கு, ஒரு 100 கிலோ தோளைப் போர்த்தின மாதிரி இருக்கான்.. தூசு மாதிரி தட்டிரலாம்.." என்றவனை அனைவரும் கேலியாகப் பார்க்க..

"மாப்ள, over confidence உடம்புக்கு ஆகாது.." என்று செல்வா..

"deal டா மாப்ள.. அவன கவுத்திட்டேன்னா.. ரெண்டு மாசத்துக்கு இந்த கோட்டை நீ தான் துவச்சு தரனும்.." என்று தான் காலேஜில் சேர்ந்த நாள் முதல் துவைக்காமல் பத்திரமாய் பாதுகாத்து வைத்து போட்டிருந்த கோட்டை காட்ட, செல்வா மூக்கைப் பிடித்துக் கொண்டே

"deal டா" என்றான்.

பேக்கை அவர்களிடம் தந்து விட்டு விறுவிறுவென்று ஜானிடம் சென்றவன், குசுகுசுவென்று பேச, அவன் முகம் சீரியஸாக, கவினின் கையை பிடித்து கேன்டினுள் சென்றான். அவர்கள் வெளிவரும் வரை அனைவரும் நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்க, அங்கு நடப்பதை பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஜெனிக்கு வியர்த்து வழிந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.