(Reading time: 24 - 48 minutes)

ந்து நிமிடம் கழித்து வெளியே வந்தவன் கையில் மூன்று ப்லேட் பஜ்ஜி, வடை எல்லாம் இருக்க, ஜான் ஒரு கையில் juice glass-உடன் கவின் தோளில் கைப்போட்டவாரே பேசி சிரிக்க, அவர்களையே அனைவரும் வாய் மூடாமல் பார்க்க, ஆச்சர்யத்தோடு தங்களைப் பார்த்த ஜெனியைப் பார்த்து ஒற்றைக் கண்ணடித்தான் கவின். அவள் குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் புறையேறியது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் மாற, அதற்கேற்றார் போல ஒருவன் கையில் greeting card-உடன் ஜெனியை நெருங்கியவன், அவள் கையில் அதை திணித்துவிட்டுச் சென்று விட்டான். அவள் அதை திறக்க கூட முயலாமல் திகிலோடு ஜானைப் பார்க்க, அவன் வேகமாக ஜுஸை கீழே வைத்து விட்டு, அவளிடம் வந்து கார்டை வெடுக்கென பறித்து பிரித்து படித்தான். பின்பு அவளை முறைத்துவிட்டு சென்று விட்டான்.

அன்று முழுவதும் மூட் அவுட்டாகவே இருந்த ஜெனியை யாராலும் இயல்பாக்க முடியவில்லை. கவினும் எவ்வளவோ முயற்சி செய்து விட்டான், அவள் திரும்ப திரும்ப தன் தந்தையை நினைத்து பயந்து கொண்டே இருந்தாள்.

"இப்போ என்ன.. உங்கப்பா கிட்ட அது எனக்கு வந்த லெட்டர்னு நான் சொல்றேன்.." இப்படி சொன்னது ஒரு பெண்ணாயிருந்தால் பரவாயில்லை. சொன்னது கவின்..

"ம்ச்ச்.. போடா.. நடக்கறது நடந்து தான் தீரும்.. இந்நேரம் அந்த குண்டன் daddyக்கு phone பண்ணிருப்பான்.." என்று அதையே நினைத்து கலங்கியவளை

"இங்க பாரு ஜெனி.. உங்க daddy வந்தா நாங்க போய் பேசுறோம்.. சொன்னா புரிஞ்சுப்பார்டா.." என்று அனு அவள் முகத்தை திருப்பி அவள் கண்களைப் பார்த்துச் சொல்ல, ஜெனி விரக்தியாய் சிரித்தாள்.

தற்கு மேலும் அவர்களையும் கலவரப்படுத்த வேண்டாம் என்று தான் இயல்பாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டாள். கவினும் அது தான் சாக்கு என்று தான் மொக்கைகளை அவிழ்த்துவிட, சற்று நேரம் அங்கு அடியும் சிரிப்புமாக கும்மாளமாக இருந்தது. இதை ஒரு ஜோடி கண்கள் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

அதை கவனித்த அனு, கவினின் தோளை இடித்து,

 "அங்க பாரு.. உன்னையே ஒரு ஆளு ரொம்ப நேரமா நோட் பண்ணுது.." என்று ஜாடையாக தீப்தியைக் காட்ட, திரும்பிப் பார்த்தவன்,

 "என்னவாயிருக்கும்...?" என்று யோசிப்பது போல் தாடையைத் தட்ட,

"ஒரு வேளை உன்ன சைட் அடிக்கிறாளோ.. பேசாம நீ ஆள மாத்திறேன்.. ஜெனிக்கு வேற வில்லன்கள் கூடிட்டே போறாங்க.." என்று அருண் கூற

"இடிக்கு பயந்துட்டு யாராவது உரலுக்குள்ள தலைய விடுவாங்களா..கோனலா இருந்தாலும் என்னோட இடியே எனக்கு போதும்...." என்று பெரிய மனதுடன் சொல்லிவிட்டு அனுவிடம் hi-five கொடுத்துக் கொண்டான். அவர்கள் பேச்சு காதில் விழுந்ததோ என்னவோ.. தீப்தி சட்டென்று முன்புறம் திரும்பிக் கொண்டாள்.

றுநாள் காலை, காலேஜிற்கு தன் தந்தையுடன் வந்திறங்கிய ஜெனி தரையை விட்டு முகத்தை நிமிர்த்தவே இல்லை. ட்ரிம் செய்யப்பட்ட பெரிய மீசை, மிலிட்ரி ஹேர் கட், சற்றே பெரிதான தன் உடலையும் fit-ஆக வைத்துக்கொள்ள அவர் படும் பாடு நன்றாகத் தெரிந்தது. shoe முதல் நகக்கண் வரை அத்தனையிலும் ஒரு சுத்தம், கட்டுப்பாடு தெரிந்தது. முகத்தில் எந்த இலக்கமும் இல்லாமல் கேன்டின் நோக்கிச் சென்றவர், சற்றுத் தயங்கி நின்ற ஜெனியைத் திரும்பி ஒரு பார்வை பார்க்கவும், பேசாமல் அவர் பின்னாலேயே சென்றாள்.

கேன்டின் உள்ளே சென்றவர் ஜானிடம் "யார்?" என்று கேட்க, ஜான் greeting கொடுத்தவனை கைகாட்டினான்.

நேரே அவனிடம் சென்றவர்

"I am ஆல்பர்ட் கிருபாகரன், இது என் மகள் ஜெனிப்பர் கிருபாகரன்.. சக மாணவியா இவளைபத்தி இவ்ளோ விஷயம் தெரிஞ்சா போதும்.. அப்புறம் என்னால ஒழுக்கத்தவறை எப்போதும் ஒத்துக்க முடியாது. இது மாதிரி தவறு இதுவே கடைசியா இருக்கட்டும். இப்பவும் அஃபிஸியல்லா கம்ப்ளெய்ன் பண்ணிட்டுதான் போவேன். இதுக்கு மேலையும் அவள டிஸ்டர்ப் பண்ணீங்கன்னு தெரிஞ்சது, என்னோட இன்னோர் முகத்த பார்க்க வேண்டியிருக்கும்...பீ கேர்ஃபுல்..!!!" என்று எச்சரித்து விட்டு சென்றார்.அவர் மறைந்த அடுத்த நொடி,
" என்னடா..ஜெனியோட அப்பா வ.வ.ச. சிவனாண்டி மாதிரி பேசிட்டு போறாரு" அருண் சொல்ல,

“ வைரஸ் மாதிரி இங்கயே ப்ரொஃபஸரா இல்லைனு சந்தோஷப்படுடா...இல்லைனா நாம ரொம்ப வருஷம் ஒரே இயர்ல இருக்கு வேண்டியிருக்கும்...” என்று செல்வா கூற, அவர்களை அடக்கிய கவின் ஜெனியைக் காட்டினான்.
ஜெனிக்கு அவமானமாய் இருந்தது. காலேஜில் இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் சகஜம், இதை இவ்வளோ பெரிய கலேபரம் ஆக்கத் தேவையில்லை. ஆனால் மற்றவர்கள் அவள்தான் தன் அப்பாவை அழைத்து வந்ததாய் எண்ணிக் கொள்வார்கள் என்று நினைத்தவளுக்கு தான் அங்கு ஒரு காட்சி பொருள் போல் இருப்பது பிடிக்காமல் அங்கிருந்து வேகமாக சென்றாள். பிறகு அனு, நந்து அனைவரும் சேர்ந்து ஒரு வழியாக அவளை சமாதானப் படுத்தினார்கள்.


காலேஜ் நோட்டீஸ் போர்டில், எந்த நாள் எந்த ஃபங்ஷன் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி இந்த வாரம் கேம்ப் ஃபயர் நைட் என்று இருந்தது. மற்றவர்களுக்கு அது பரிட்சயம் ஆகையால் ஃபஸ்ட் இயர்ஸ் மிகுந்த ஆர்வத்துடன் அந்த நாளுக்காக காத்திருந்தனர்.

ந்த நாளும் வந்தது,
அது நைட் நிகழ்ச்சியாதலால், முறையாக எல்லோர் வீட்டிற்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டு, டேஸ் காலர்ஸ் அனைவரும் ஹாஸ்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எல்லா நிகழ்ச்சிகளிலும் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது.
இரவாகையால் இவகுவான உடையில் குளிருக்கு ஏற்றார் போல ஸ்வெட்டரோ, ஜெர்க்கினோ அனிந்து கொண்டு வந்திருந்தனர். அனு கேங்கிற்கு ஜெனியும் தங்களுடன் தங்கப் போவதால் ஒரே கொண்டாட்டமாய் இருந்தது. 

காலேஜ் பில்டிங் முன்னால் இருந்த சின்ன க்ரவுன்டின் நடுவில் நெருப்பு வைத்து அதை சுற்றிலும் கொஞ்சம் இடம் விட்டு அமர்வதற்காக பெஞ்ச் போடப்பட்டிருந்தது. அனைவரும் வந்தவுடன் வார்டன் வந்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்து சில எச்சறிக்கை அறிவிப்பை வாசிக்க, அவரை பேச விடாமல் கை தட்டி தட்டியே அவரை பேக் செய்தார்கள். அதன் பிறகு ஒவ்வொரு batch ஆக முன் வந்து தங்கள் batch இன் பெயரை சொல்லி ஆராவரித்தபடி தங்களுக்கு பிடித்த பாடலை போட்டு ஆடினார்கள், பிறகு தங்கள் பேட்ச்சிற்கென இருக்கும் டான்ஸ் ஸ்டெப்பை நெருப்பை சுற்றி வந்து ஆடினர்.

ஃபெரஷ்ஷர்ஸின் முறை வந்த பொழுது, தங்களுக்குள் பேசி தங்கள் பேட்ச்சிற்கு 'phoenix' என்று பெயர் வைத்தார்கள். பிறகு தங்கள் பிரத்யேக ஸ்டெப்பாக 'வாத்து டான்ஸை' கண்டுபிடித்து, அதை அனைவரும் நெருப்பைச் சுற்றி ஆடினார்கள். எல்லோருத் ஆடி களைத்து பெஞ்ச்சில் அமர, தன் இடத்தில் அமர்ந்த நந்துவிற்கு அதுவரை இருந்த வைராக்கியம் மறைந்து, கண்கள் சந்துருவைத் தேட அவனை காணாமல் முகம் வாடிப்போனது. தலையை குனிந்தபடிஅவனைத் தேடியதற்காக தன்னையே  நொந்து கொண்டவள், சட்டென்று ஏதோ உறுத்த நிமிர்ந்து பார்த்தாள், கொஞ்ச தூரத்தில் சந்துரு மரத்தில் சாய்ந்தவாரே கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். எப்பொழுதும் ஃபார்மலில் இருக்கும் அவன், ஜீன்ஸ் டீசர்ட்டில் இறுக்கம் எல்லாம் கலைந்து வசீகரமாய் இருந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.