(Reading time: 19 - 37 minutes)

முண்டகண்ணா எப்படி உத்து உத்து பார்கிறான் பாரு என்று மெதுவாக முனுமுனுத்துக் கொண்டு இருந்தாள் அனன்யா, விரேன் வெகுநேரம் நிற்க வைக்க கடுப்பில் அவனை திட்டிகொண்டிருந்தாள்.

அனன்யாவின் வாய் அசைவதை வைத்து கண்டுக்கொண்டவன், “ஹே என்ன? என்ன முனுமுனுத்துட்டு இருக்க? என்னை பத்திதானே அவ்ளோ திமிரா உனக்கு? நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க நீ மட்டும் இரு” என்று மிரட்டினான். அவள் கொஞ்சம் மிரண்டு விழிக்க பக்கத்தில் இருந்த அவள் தோழிகளும் அவளை பாவமாக பார்த்துவிட்டு விரேனிடம் கெஞ்சுவதுபோல் பார்த்தனர்.

“”உங்க தோழிய கடுச்சு தின்ன மாட்டேன் போங்க போங்க”” என்று அனுப்பிவைத்தான்.

அவர்களுக்கும் தெரியும் விரேன் ஒன்றும் செய்யமாட்டான் என்று, வந்த முதல் நாளே அனைவரும் விரேனை பற்றி கூறியதை வைத்தே இருப்பதிலேயே பயங்கர மொக்கையாக ராக்கிங் செய்வது விரேன் மட்டும்தான் என்றும் அவர்கள் அறிந்ததே. ஆனால் அவன் போடும் அறுவையை மட்டும் யாராலும் ஈடுகட்ட முடியாது என்பதும் அவர்கள் அறிந்ததே, அந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் அனன்யாவை பாவமாக பார்த்தார்கள்.

வேறு வழியின்றி அறுவை முடிந்துவரபோகும் தோழிக்கு தேவைப்படுமே என்று தைலம் எடுத்து வைப்பதற்காக அவசரமாக விடுதிக்கு சென்றனர்.

“”முன்னாடியே யாராவது மச்சான் ராக்கிங் பத்தி சொன்னாங்களா?”” என்று தேவ் கேட்டு அவள் ஆம் என்று தலை ஆட்டுவதற்கு முன்பே “கேட்காட்டியும் பரவால்லை நான் சொல்றேன் கேட்டுக்கோ, மச்சான் ராக் பண்ணா சும்மா கதி கலங்கிடும் தெரியுமா?” என்று தெரிந்த சினிமா வசனங்கள் எல்லாம் பேசினான்.   

கடவுளே இவன் வசனம் பேசி பார்க்க வேறு யாரும் கிடைக்கலையா? நான் தான் கிடைத்தேனா? கணேஷா காப்பாத்து... என்று அழுகாத குறையாக புலம்பினாள் மனதில்.

“”சரி சரி விடு மச்சான், நம்ம எவ்ளோ terrornu தெரியாதுல...”” என்று பிகுபண்ணிக் கொள்ள அட கடவுளே இவன் மொக்கை போடுவான்னு தெரியும் அதுக்காக இப்படியா 5 நிமிஷத்துக்கு ஒரு வசனம் பேசிக்கொல்லுரானே, புலம்பிக்கொண்டு பேசாமல் நின்றாள் அனு.

“”சரி நீ இப்போ என்ன செய்யணும்னு நான் சொல்றேன்”” என்று buildup குடுக்க, எப்பாடா.... விஷயத்துக்கு வந்துட்டானுங்க...என்று நினைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

““நம்ம தலைவன் ரஜினியோட ஊர்காவலன் படத்துல ராதிகா அக்கா அவர விடிய காலைல எழுப்பிவிட்டு தலை குளுச்சுவிட்டு வசனம் பேசும் அந்த சீன் தெரியுமா?”” என்று விரேன் கேட்க தெரியும் என்பதுபோல் தலை ஆட்டினாள்.

“”ம்ம்ம்ம்ம் அந்த சீன்ன இப்போ நடுச்சுக்காட்டு”” என்று சாதரணமாக கூறினான்.

என்ன சரியானசினிமா பைத்தியமா இருப்பானுங்க போல என்று எண்ணிக்கொண்டு யோசனையில் நின்றாள்.

““டேய் மச்சான் அந்த சீன்ன தனியா நடுச்சா நல்லா இருக்காதேடா”” என்று அருகில் இருப்பவன் கூற, “அட ஆமாம்ல, சரி இப்போ என் கையில யாரு மாட்டுரானோ அவன் கூடத்தான் நீ நடிக்கணும்” என்று கண்களை மூடி ஒருவனின் கை பிடித்து இழுத்தான். போச்சு இன்னும் எவன் வந்து தலைவலியை அதிகமாக்க போறான்னு தெரியலையே என்று அவள் பயந்துக்கொண்டு இருக்கையில், விரேனின் கையில் மாட்டிய அஸ்வத்தோ ஒன்றும் புரியாமல் முழித்தான்.

கண் முழித்து பார்த்தவன் “அந்த லக்கி பாய் நீ தானா?” என்று விரேன் கூறிக்கொண்டு இருக்க, “இவன் கூடலாம் என்னால நடிக்க முடியாது” என்று அனன்யா கூறினாள், அனன்யா கூறியதை கேட்டு அஸ்வத்திற்கு வெறுப்பாக இருக்க “அட நீங்க என்ன அண்ணே பொண்ணு கையை பிடிக்குற மாதிரி என் கையை பிடுச்சுட்டு இருக்கீங்க விடுங்க நான் போறேன்” என்று கையை விடுவித்து கொண்டான்.

“”அட நில்லுடா”” என்று அவன் தோள்மேல் கை போட்டுகொண்டான். “நீ என்ன என்னமோ உன் கையை புடுச்சு இழுத்த மாதிரி முகத்தை வச்சுருக்க” என்று அதட்டி பேச வாய் திறவாமல் அமைதியாக நின்றாள் அனு.

அவளை சில நிமிடங்கள் பார்த்தவன் விரேனின் காதில் ஏதோ கூற “அப்படின்ற?” என்று கேள்வியாக பார்த்துவிட்டு அனுவை மேலும் கீழும் பார்த்தான் “நீ சொல்லுறதும் கரெக்ட் தான் விட்டுருவோம்” என்று அவன் பதிலுக்கு கூறினான்.

இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று ஒன்றும் புரியாமல் முழித்தாள் அனு, “டேய் விரேன் உன்னை சித்ரா மேடம் கூப்பிட்டாங்கடா” என்று அவன் தோழன் வந்து கூற, “இந்த மேடம்க்கு வேற வேலை இல்லை அந்த assignment முடுச்சியா? இந்த assignment முடுச்சியானு கேட்டுட்டே இருப்பாங்க” என்று புலம்பிக்கொண்டு இடத்தைவிட்டு நகரத்தான்.

ஹப்பாடா என்று பெருமூச்சுவிட்டு இடத்தை காலி செய்தவள் ஒரு நிமிடம் நின்று அஸ்வத்தை நோக்கி சைகையில் விரேனிடம் என்ன கூறினான் என்று கேட்க, தலையில் அடித்துக்கொண்டான் அஸ்வத், இவள் ஒருத்தி பேச மாட்டேன் மாட்டேன்னு இப்படி சைகையில் பேசி கொள்ளுவாள்.

“”நீ சரியான அட்டு figure உன்னை ராக் பண்ணி அவர் தகுதியை குறைச்சுக்க வேண்டாம்னு சொன்னேன் அதை தான் கரெக்ட்னு சொன்னாரு”” என்று அவன் பொறுமையாக கூற.

“”ச்சே, ஏதோ சொல்லி உதவி பண்ணியே தேங்க்ஸ் சொல்லலாம்னு பார்த்தேன் நீ திருந்தவே இல்லை ஹ்ம்ம்”” என்று கோவமா கூறி இடத்தை விட்டு நகர்ந்தாள்.

“”ஆமா இவள் பெரிய அழகி உயர்த்தி சொல்ல”” என்று அவனும் திட்டிவிட்டு வேறுபுறம் சென்றுவிட்டான்.

“”அனு தைலம் தேச்சுக்கோ..அனு டீ குடிக்குரியா?அனு தலைவலிக்குதா?அனு ரெஸ்ட் எடுக்குரியா?”” என்று மாற்றி மாற்றி அவள் தோழிகள் ஏழ்வரும் கேட்க நியூஸ் எப்படி பரவுச்சு என்று புரியாமல் பார்த்தாள்..

“”நானே.. அது நானே...”” என்று பாடிக்கொண்டு முன்னால் வந்தாள் ஆர்த்தி.

“”அனு ஆர்த்தி கதை சொன்ன விதம் இருக்கே எப்பப்பா சூப்பர் உனக்கும் ஒரு தடவை சொல்லுவாள் கேளு””, என்று மான்வி கூறினாள். ஆர்த்தி பயங்கரமாக திகில் கதை சொல்லும் விதத்தில் எபக்ட்ஸ் குடுத்து நடித்துகொண்டிருந்தாள்.

“”அப்புறம் வில்லன் கண்மூடி கை நீட்டி இழுக்க, கையில மாட்டினதோ நம்ம ஹீரோ...”” என்று கூற அந்த கும்பலே கைத்தட்டியது, “நம்ம ஹீரோ வில்லனை பார்க்குறாரு ஹீரோயின பார்க்குறாரு...” விட்டாரு பாரு வில்லனுக்கு ஒருஅடி என்று ஆர்த்தி நடித்துக்காட்ட அனன்யாவை தவிர மற்றவர்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“”ஹே அனன்யா கோவப்படுறாள் பாரு நடந்ததை மட்டும் சொல்லு டி”” என்று சிரித்துக்கொண்டே கூறினாள் ஸ்வாரா...

“”ஓகே ஓகே நம்ம ஹீரோ வில்லனோட காதுல ரகசியமா சொல்ல, சமரசமா பேசி நம்ம வில்லன் ஹீரோயின விட்டுட்டாரு”” என்று கூறி கதையை முடித்தாள்.

“”ஹே அனு இதுக்கெல்லாம் கோவப்படலாமா?”” என்று ரியா கேட்க நான் ஒன்னும் கிண்டல் பண்ணதுக்கு கோவப்படலை அந்த அஸ்வத்தை வச்சு கிண்டல் செஞ்சதுக்காக கோவப்படுறேன் என்று அனு உம்மென்று கூற.

“”இது என்னடா புதுகதை அது ஏங்க மேடம்?!”” என்று பிருந்தா கேட்டாள். “அவன் என்னோட எதிரி” என்று கூறிக்கொண்டு இருக்க அனன்யாவின் செல் சிணுங்கியது. “ச்சே கரெக்டா ஸ்டோரி சொல்லும் போதும் கரெக்டா disturb பண்றாங்கப்பா” என்று அலுத்துக்கொண்டாள் தியா...   

““ஹே தேஜு எப்படி இருக்க?”” உற்சாகமாக அனு கேட்டாள்.

“”ம்ம்ம்ம் ரொம்ப கேவலமா இருக்கேன்.. அறிவு இருக்காடி உனக்கு? ஊருக்கு போய் ஒரு வாரம் ஆச்சு ஒரு ஃபோன் பண்ணியா?”” என்று திட்டினாள்.

“”சாரி தேஜு இங்க காலேஜ் செட் ஆக கொஞ்சம் லேட் ஆகிடுச்சு சாரி சாரி”” என்று பலமுறை சாரி சொல்லி தாஜா செய்தாள்.

“”சரி விடு காலேஜ் எப்படி போகுது? ஃப்ரிண்ட்ஸ் கிடைச்சாங்களா?”” என்று சுவாரஸ்யமாக பேச்சு ஆரம்பிக்க கல்லூரியின் முதல் நாள் முதல் அன்று நடந்தவை வரை சொல்லி முடித்தாள்.

“”சோ எனக்கு தெரியாம ரெண்டு பேரும் சொல்லிவச்சு ஒரே காலேஜ்ல சேர்ந்துட்டிங்கனு சொல்லு...”” என்று கிண்டல் செய்ய துவங்கினாள்.

““ச்சே ச்சே அதெல்லாம் இல்லை, எதார்த்தமா நடந்தது, ஆனா அவன் தொல்லை தாங்க முடியலை”” என்று அலுத்துக்கொண்டாள் அனு.

“”ஆமா தூரமா இருக்கும் போதே, அவ்வளவு திட்டுவ இப்போ ஒரே கிளாஸ் அவ்வளவு தான்””

“”ஹ்ம்ம் சரி அதை விடு உன் காலேஜ் பத்தி சொல்லு””

“”ரொம்ப ஜாலியா போகுது அனு, பெரிய காலேஜ் மெடிக்கல், இன்ஜினியரிங் ரெண்டும் ஒரே campus உள்ளேயே இருக்கு, கிளாஸ் நல்லாபோது ஃப்ரிண்ட்ஸ் கிடைச்சாச்சு ஆனா ஒரே ஒரு கல்ப்ரிட் மட்டும் கையில மாட்ட மாட்டிங்குது!”” கோவமாக கூறினாள் தேஜு.

““கல்ப்ரிட்டா? யாரு?””

“”யாருன்னு தான் தெரியலை அனு, காலேஜ் வந்த முதல் நாள்ல இருந்து ஒரு நம்பர்ல இருந்து மெசேஜ் வருது டெய்லி, நான் போட்டு போகிற ட்ரெஸ் என்னனு கரெக்டா சொல்லுறான் அதுல அழகா இருக்கீங்க இது கொஞ்சம் மாத்திக்கலாம்னு ஒரே கமெண்ட்ஸ் மழைதான், யாருன்னு ஃபோன் பண்ணா அட்டென்ட் பண்ணி பேசாம இருக்கான்.””

“”அது பையன்னு உனக்கு எப்படி தெரியும்?””

““ம்ம்ம்ம் டெய்லி உன்னை எனக்கு பிடுச்சுருக்கு மயிலுனு ஒரு மெசேஜ் அனுப்புறான்டி””

“”மயிலா?! நல்லா இருக்கே...” என்று அவள் உற்சாகமாக கதையை கேட்டாள்.

“ஏன் இருக்காது..?? நம்பரை பிளாக் பண்ணேன் அனு ஆனால் வேற நம்பர்ல இருந்து மெசேஜ் பண்றான் அதான் பார்த்தேன் சரி பதில் அனுபிச்சா தானே பிரச்சனைன்னு விட்டுட்டேன்... ஆனால் நேர்ல பார்க்கும் போது இருக்கு அவனுக்கு” என்று பொறுமி தீர்த்தாள்.    

“சரி சரி விடு... பிரச்சனை வராமல் பார்த்துக்கோ, பத்திரமா இரு தேஜு”...

“சரிம்மா அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. இன்னும் ஒரு வாரத்துல உன்னோட பர்த்டே, உன்னோட ஃப்ரிண்ட்ஸ்க்கு தெரியுமா?”

“இல்லைடி நான் இன்னும் சொல்லலை ஆனா நானா எப்படி போய் சொல்றது” என்று யோசனையாக கேட்டாள் அனு

“அட லூசு அப்பறம் அவங்களுக்கா எப்படி தெரியும், சரி பர்த்டே அன்னைக்காவது மறக்காமல் சொல்லிடுடி” என்று கிண்டலாக கூறினாள் தேஜு. பலமணி நேரம் இவ்வாறு பேசிவிட்டு மன நிம்மதியோடு ஃபோனை வைத்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.