(Reading time: 19 - 37 minutes)

ரு வழியாக ரகளை அடித்து இரவு உணவையும் முடித்து மீண்டும் தங்கள் சொற்பொழிவை துவங்க அறைக்கு சென்றனர். அனைவரும் சிறிது நேரம் அவர்களது வேலையை பார்த்துக்கொண்டு இருக்க அனு தன் கணேஷுடன் தனியாக வந்தாள்.

அவர்களது ரூம் காலியாக இருக்க அன்று நடந்தவற்றை கணேஷிடம் விவாதிக்க துவங்கினாள். சிறிது நேரம் அவள் புலம்ப அவளது அறைத்தோழி வந்து சேர்ந்தாள். ரகசியமாக நீ இங்கயே இரு கணேஷ் நான் போய் வேற இடம் எதுவும் காலியா இருக்கானு பார்த்துட்டு வரேன் என்று சென்றாள்.

“இந்த பொண்ணு என்ன எப்போ பார்த்தாலும் அஸ்வத்தை திட்டுகிறது, சாரி சொல்லி சேரட்டும்னுதானே அஸ்வத்தை இன்று காப்பாற்ற அனுப்பினேன் அவனது நல்உள்ளம் புரியவில்லையே இந்த பெண்ணுக்கு” என்று கணேஷ் புலம்ப....

“அண்ணா இப்போது என்ன கூறினாய்” என்று கேட்டவாறு பக்கத்து ஷெல்ப்பில் இருந்து முருகன் எட்டி பார்த்தார்.

“அட தம்பி முருகனே நீ எங்கே இங்கு?” என்று ஆச்சர்யமாக கேட்டார்

“உன்னை அனன்யா அழைத்து வந்தாள், என்னை பிருந்தா அழைத்து வந்தாள்..” அலட்சியமாக கூறிவிட்டு தொடர்ந்தார் “சரி நீ சொல்லு இப்போது நீ என்ன புலம்பிக்கொண்டு இருந்தாய்?”

“ஏன் அஸ்வத்தின் நல்லுள்ளம் அனன்யாவிற்கு புரியவில்லை என்றேன்..”

“ஐயோ அண்ணா மெதுவாக பேசு, இது மட்டும் அனுவின் காதில் விழுந்தது உன்னை ஆற்றில் தூக்கி போட்டுவிடுவாள்”

“ஆற்றில் விழுவது என்ன புதிதா தம்பி, என்னைத்தான் வருடாவருடம் எனக்கு சளி பிடித்துவிடும் என்று கூட யோசிக்காமல் ஆற்றில், கடலில் போடுகிறார்களே” என்று பாவமாக புலம்பினார்.

“அவர்கள் நல்ல ஆற்றில் போடுவார்கள் ஆனால் நீ இப்போது பேசியதை அனன்யா கேட்டாள், அவள் கூவம் ஆற்றில் போட்டுவிடுவாள் பத்திரம்” என்று மிரட்டினார் பொறுப்பான தம்பி.

“அய்யோ செய்தாலும் செய்வாள், நான் வாயை மூடிக்கொள்கிறேன்”.

இவர்களது உரையாடல் முடிவதற்கும் அனு அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. “கணேஷ் நான் உன்கூட பேசுறதுக்கு இங்க தனியா இடமே இல்லை நான் பேசுறதை கண்டிப்பா யாராவது கேட்டுருவாங்க சோ நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்... இனிமே நான் டைரி எழுத போறேன் உனக்கு எழுதுற மாதிரி தான் சோ அப்பயும் நீ என்கூடவே இருப்ப சரியா?” என்று தன் புது பிளானை கூறினாள்.

ஹப்பாடா என்று காதில் இருக்கும் பஞ்சை கணேஷன் எடுக்க நீ கொடுத்து வைத்தவன் அண்ணா என்று ஏக்கமாக பார்த்தார் முருகன்...

ம்மாவாசையன்று நிலவு விடுப்பு எடுத்துக்கொள்ள நட்சத்திரங்கள் மட்டும் ஒளி பரப்பி கதை பேசிக்கொண்டிருந்தன. இரவில் தலை குளித்துவிட்டு வெள்ளை சுடிதார் அணிந்து, தலை துவட்டி உலர்வாகவிட்டு அறைக்கு வந்தவள் எங்க பிருந்தாவையும் ரியாவையும் காணோம் என்று தேடியவாறு அபியின் அறைக்கு சென்றாள்.

விளக்கு அணைக்கப்பட்டு நடுவில் மட்டும் செல் ஃபோன் வெளிச்சம்வர, தோழிகள் அனைவரும் ஒருவர் கைகளை மற்றவர்கள் மாற்றி மாற்றி பிடித்துக்கொண்டு ஆர்த்தியை சுற்றி அமர்ந்திருந்தனர்.

“”ஜன்னல் ஓரத்தில வெள்ளை டிரஸ்ல தலையை விரித்து போட்டுக்கிட்டு நின்னுகிட்டு இருந்தாளாம் அப்போ...”” என்று ஆர்த்தி கதையை கூறிக்கொண்டு இருந்தாள்.

“”அப்பறம் என்ன ஆச்சு... “”என்று பயந்து பயந்து அபி கேட்க

“”சொல்றேன்... அந்த பொண்ணு போய் ஜன்னல் கிட்ட இருந்த பொண்ண கூப்பிட்டலாம் அதுக்கு அந்த பொண்ணு பதிலே சொல்லாம ம்ம்ம்ம் ம்ம்ம்ம் மட்டும் ஜன்னலை பிடுச்சு ஆட்டிட்டே இருந்தாளாம் என்று ஒவ்வரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக குரலை ஏற்றி இறக்கி கதை கூறினாள்.

“நம்ம hostela நிஜமாவே பேய் இருக்கா?” என்று ரியாவிற்கு பின்னால் பாதி ஒழிந்துக்கொண்டு ஸ்வாரா கேட்டாள்.

“நிஜமாதான் சொல்லுறேன்டி அது திடிர்னு மாடில இருக்குமாம் திடிர்னு கிரௌண்ட் floor-ல இருக்குமாம், நைட் 3 மணிக்கு அங்கயும் இங்கயும் உலாவிக்கிட்டு இருக்குமாம் ஜல் ஜல்னு கொலுசு சத்தம் வேற கேட்குமாம்..” என்று பயந்து பயந்து கூறுவதுபோல் ஆர்த்தி தொடர்ந்து கூறிக்கொண்டு இருந்தாள். 

பூச்சிகள் வரும் என்று அறைக்கு வெளியே இருக்கும் விளக்கெல்லாம் அணைக்கப்பட்டு இருந்தன. அனு தன் தொலைபேசியின் வெளிச்சத்தில் அறைகதவை திறக்கவும், அனுவின் வெள்ளை நிற உடையை கண்டு அனைவரும் வீச்சென்று அலறினர், அவர்களின் கூச்சலில் அனுவும் பயந்து கையில் உள்ள தொலைபேசியை கீழே போட்டு கண்களையும் காதையும் மூடிக்கொண்டாள்.

“ஹே அது நம்ம அனுடி“ என்று முதலில் சுதாரித்தது ரியாவே... வேகமாக வந்து அறைவிளக்குகளை போட்டாள் ஆர்த்தி.

வெளிச்சம் வந்தவுடன் கண்களை திறந்து “போங்கடி.... “ என்று ஆரம்பித்தவள் பயம் அடங்கும் வரை திட்டி தீர்த்தாள்.

“cool down அனு cool down” , என்று ஒன்றாக அனுவை அமைதி செய்தவர்களுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.

“என்ன சிரிப்பு ஹ்ம்ம்” என்று போலியாக கோவபட்ட அனுவுக்கும் சிரிப்பாக வந்தது...ஒரு வழியாக பேய் கதைகள் எல்லாம் பேசி பேசி சிரிப்பு கதைகளாக மாறியபின்பு உறங்க சென்றனர் அனைவரும்...

கண் சொருகி நன்றாக தூங்க போகும் நேரத்தில் கதவு தட்டும் ஓசை கேட்க பட்டென கண்விழித்தாள் அனு. சுற்றும் முற்றும் பார்த்தவள் யாரும் அந்த சத்தத்திற்கு எழாமல் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தனர். மற்ற நாட்களாக இருந்தாள் தெரிந்திருக்காதோ என்னவோ அன்று கேட்ட கதைகள் எல்லாம் அப்போது நினைவிற்கு வர நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது. கதவு திறக்காமல் இருக்க கதவு தட்டும் ஓசை இன்னும்பலமாக கேட்டது.  

அனைத்துகடவுளையும் மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு கதவை திறந்தவள் தூக்கிவாரிபோட்டு பின்னால் சென்றாள்... அவள் கண்முன் தலைவிரி கோலமாக அபி நின்றாள்.

“ச்சே என்னடி கோலம் இது, ஒரு நிமிஷம் இதயமே நின்னு போச்சு” என்று திட்டிக்கொண்டு இருக்க விறு விறுவென அபி உள்ளே வந்தாள்... “என்னால தூங்கவே முடியலை அனு, ஆர்த்தி பேய் கதை சொன்னாலும் சொன்னா தனியாவே தூங்க முடியலை நான் இங்கயே படுத்துக்கவா?” என்று பாவமாக கேட்க அவளை பார்த்த அனுவிற்கு சிரிப்பாக இருந்தது..

மிகவும் பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு நெற்றியில் பெரிதாக திரினூர் வைத்துக்கொண்டு பழுத்த பழம் போல் தெரிந்தாள், சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டு “படுத்துகோடி” என்று அவளுக்கும் இடம் தந்து அவள் அருகில் படுத்துக்கொண்டாள் அனு.

காலை பொழுது என்றும் போல் இனிமையாக விடிந்தது, மழை காலம் துவங்கி இருந்ததால் விடித்தது கூட தெரியாமல் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர்... முகத்தில் பளிச்சென மின்னல் ஒளிப்பட சிறு சிணுங்களுடன் கண்விழித்தாள் அனு..       

Go to Kadhal payanam # 04

Go to Kadhal payanam # 06

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.