(Reading time: 22 - 44 minutes)

21. என் இனியவளே - பாலா 

En Iniyavale

போனை வைத்து விட்டு வெறித்து பார்த்துக் கொண்டிருந்த இனியாவை ஜோதியும் சந்துருவும் என்ன என்னவென்று கேள்வி கேட்ட வண்ணம் இருந்தனர். ஆனால் அவளோ ஏதும் கூறவில்லை.

கடைசியாக பொறுமை இழந்து, “விட்டுடுங்க” என்றாள்.

இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஜோதி தான் “என்னாச்சி டா. என்ன சொன்னாரு. திட்டிட்டாரா. நீ செஞ்சது அவருக்கு கஷ்டமா தானே இருக்கும்.” என்றாள்.

இனியா ஏதும் சொல்லாமல் ஜோதியையே சோர்வாக பார்த்தாள்.

“இப்ப என்னவாம் அவருக்கு” என்றான் சந்துரு.

“போன் எடுக்கலன்னா உன் கூட பேச பிடிக்கலைன்னு தெரியாதா, திரும்ப திரும்ப ஏன் போன் பண்ற, அறிவில்லைன்னு கேட்கராரு”

“சரி விடு இனியா. அவர் நீ திடீர்ன்னு இப்படி பண்ணதுல கோபமா இருக்காரு, ஏன் எனக்கே கூட கோபம் தான். ஆனா உன் மாமா தான் சொன்னாரு இனியா என்ன யோசிச்சி இப்படி பண்ணுச்சோ, எல்லாத்தையும் கொஞ்ச நாளுக்கு ஆற போடுங்கன்னு, அதான் நானும் உன் கிட்டவும் ஏதும் கேட்கலை.”

“அதே தான் அக்கா, எக்ஸாட்லி அதே தான். நடந்த விஷயம் ரொம்ப பெருசு. அதோட தாக்கம் எல்லாருக்கும் போறதுக்கு கொஞ்சம் கூட கேப் தராம அடுத்தது என்னன்னு பேசினா என்னக்கா அர்த்தம். அத்தையை தப்பு சொல்ல முடியுமா, இல்ல நம்ம அம்மாவை தான் சொல்ல முடியுமா. ரெண்டு பேருமே நல்லவங்கக்கா, அவங்கவங்களுக்குன்னு ஒரு நியாயம் இருக்கு. என்னால இதுல யாரையுமே ஹர்ட் பண்ண முடியாது. அத்தை கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னு அவரு அத்தை கிட்ட பேசலையாம். நம்ம அம்மாவுக்கும் தான் இதுல இஷ்டம் இல்லை, அதுக்காக நான் அம்மா கிட்ட பேசாம இருக்க முடியுமா. எனக்கு எல்லாரும் வேணும்க்கா. நான் எல்லாரையும் புரிஞ்சி நடந்துக்கணும்ன்னு நினைக்கறேன். ஆனா பார்த்தியா, அவர் என்னை புரிஞ்சிக்கவே இல்லை” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது.

“என்னடீ இப்படி சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டு, நம்ம வீட்டுல ஒரு பிரச்சனைன்னா நீ தானே டீ தைரியம் சொல்லுவ, இப்ப நீயே இப்படி பீல் பண்ற. லூஸ் மாதிரி அழாதே”

“இல்லக்கா. நீங்க எல்லாம் சொல்லுவீங்க இல்ல, அது கரெக்ட் தான். நான் சைக்கலாஜி படிச்சது தான் தப்பு. ஒவ்வொரு விஷயம் நடக்கும் போதும் அதோட பேக்கிரவுன்ட் என்னன்னு மனசு யோசிக்குது. ஒவ்வொருத்தவங்க ஒவ்வொன்னும் செய்யும் போது அவங்க ஏன் அப்படி செய்யறாங்கன்னு தோணுது. அதனால தான் என்னால இப்ப அத்தை இப்படி செய்றாங்கன்னா ஏன்னு தோணி அவங்க மேல எந்த கோபமும் வர மாட்டுது. அதுவே நார்மலா ஏன் அத்தை இப்படி செய்றீங்கன்னு அத்தை கிட்ட சண்டை போட்டிருந்தா இளா என் மேல கோபபட்டிருக்க மாட்டார் இல்லக்கா”

“என்னடி நீ. இப்ப உனக்கு என்னாச்சி. ஏன் இப்படி சம்மந்தம் இல்லாம ஏதேதோ பேசற. நீ சொன்ன மாதிரி நீ படிச்ச படிப்பு எல்லாம் இதுக்கு காரணம் இல்ல, உன் நல்ல மனசு தாண்டி உன்னை இப்படி அத்தை ஏன் இப்படி பண்ணாங்கன்னு யோசிக்க வைக்குது. இதுல உன் தப்பு எதுவுமே இல்லை. எல்லாம் சரி ஆகிடும். நீ தேவை இல்லாம பீல் பண்ணாத. அவ்வளவு தான் சொல்லிட்டேன்.”

இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவிற்கு மனம் நிறைவாக இருந்தது. இவங்க எங்க வீட்டுக்கு வருவதற்கு நாங்க எல்லாம் நிஜமாகவே எவ்வளவு கொடுத்து வைத்தவர்களாக இருக்க வேண்டும். அம்மாவை இவங்க எந்த அளவுக்கு நல்லா பார்த்துப்பாங்க. யாரா இருந்தாலும் நியாயமா அம்மா மேல கோபம் தான் வரணும். அதெல்லாம் இல்லாம அம்மாவோட நிலைமையில இருந்து யோசிக்கறாங்கன்னா இவங்களுக்கு எந்த அளவுக்கு நல்ல மனசு இருக்கணும். இவங்களை போய் அண்ணன் அழ வைக்கறாறே. கடவுளே எல்லாமே கூடிய சீக்கிரம் சரி ஆகிடனும் என்று எண்ணி கொண்டான்.

“என்ன அண்ணிஸ். இங்க ஒரே அழுகாச்சி சீன் போயிட்டிருக்கு. எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியலைப்பா. ஏன் ஜோதி அண்ணி இவங்க ஏன் இப்ப அழுகறாங்க. இப்ப ஏதோ பிரச்சனை நடக்கறது எல்லாம் ஓகே தான். ஆனா நீங்க கவனிச்சிருக்கீங்களா எங்க அண்ணன் கண்ணாலையே இவங்களை தேடறதும், இவங்க என் அண்ணனை தேடறதும் எப்படி நடக்கும் தெரியுமா.”

“அதுவும் இவங்க எங்க வீட்டுல இருந்தாங்களே அப்ப வீட்டுக்கு வந்த உடனே எங்கண்ணன் கண்ணு இவங்களை தான் தேடும். எப்பவுமே அவரு ஆபீஸ்ல இருந்து வந்த உடனே குளிச்சிட்டு வரேன்னு ஓன் அவர் ஆக்குவாரு. இவங்க வீட்டுல இருக்கும் போது ஒரு பைவ் மினிட்ஸ் கூட இல்லை அண்ணியை பார்க்க ஓடி வறாரு. இவங்களும் அவர் வர வரைக்கும் ஒரு வாய் சாப்பாட்டையே பிசைஞ்சிட்டு இருக்காங்க. ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப அபெச்ஷன் வச்சிருக்காங்க. இப்ப ஏதோ பிரச்சனைன்னா எல்லாமே முடிஞ்ச மாதிரி இந்த பீலிங்க்ஸ் எதுக்கு. நாளைக்கு பிரச்சனை சரி ஆன உடனே எங்கண்ணன் செஞ்ச தப்புக்கு காதை பிடிச்சி திருக வேண்டியது தானே, அதை விட்டுட்டு எதுக்கு தேவை இல்லாம கஷ்ட பட்டுட்டு”

ஜோதியும் சந்துருவோடு இணைந்து இனியாவை சிரிக்க வைப்பதற்காக “ஆமா சந்துரு, இவங்களை எல்லாம் நம்பவே முடியாது. இப்ப தான் நம்ப கிட்ட இந்த பஞ்சாயத்து எல்லாம் வரும். நாளைக்கு சேர்ந்திட்ட உடனே நம்பளை கண்டுக்கவே மாட்டாங்க பாரு” என்றாள்.

இனியா சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

“ம்ம்ம். இப்படி இல்லாம அழுதுகிட்டு”

இனியா சிரிப்பதை நிறுத்தவே இல்லை.

“ஏய் இப்ப எதுக்கு டீ இப்படி சிரிக்கற”

இனியா ஏதோ சொல்ல முயன்றும் சிரிப்பை நிறுத்த இயலாமல் அவளால் சொல்லவே இயலவில்லை.

“சொல்லிட்டு சிரிடி. நாங்களும் சிரிப்போம் இல்ல”

“ஜோதி அண்ணி. இருங்க இருங்க. எனக்கு ஒரு கெஸ் இருக்கு. அண்ணி நீங்க எங்கண்ணன் காதை பிடிச்சி திருகற மாதிரி யோசிச்சி பார்த்தீங்களா”

இனியா “ஆம்” என்றவாறு தலையசைத்து விட்டு திரும்ப சிரிக்க ஆரம்பித்தாள்.

அதை கேட்ட இருவரும் அக்காட்சியை எண்ணி பார்த்து சிரித்தார்கள்.

சந்துரு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

ம்மா அம்மா. எங்க இருக்கீங்க”

“---“

“அம்மா இங்கே தானே இருக்கீங்க. நான் கூப்பிட்டா ஏன்மா பதில் சொல்லாம அமைதியா இருக்கீங்க”

“என்னப்பா”

“என்னமா இப்படி கேட்கறீங்க. நான் கூப்பிட்டா பதில் பேசாம அமைதியா இருக்கீங்க. என்னன்னு கேட்டா ஏதும் சொல்லாம அமைதியா இருக்கீங்க”

“ஒன்னும் இல்லடா சொல்லு”

“அம்மா நீங்க ஏன் மா இப்படி இருக்கீங்க. நீங்க பழைய மாதிரி இல்லம்மா”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா”

“அம்மா எனக்கு தெரியும். அண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துக்காம நீங்களும் சந்தோசமா இல்லை, அண்ணனும் இல்லை. இந்த டெசிஷன்ல உங்க ஒருத்தருக்கு சந்தோஷம்னா கூட பரவால்ல. அப்புறம் ஏன்மா இப்படி”

“விடு சந்துரு. அந்த விஷயத்தை விடு”

“நீங்க நார்மலா இருங்க. நான் அதை பத்தி பேசலை”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.