(Reading time: 22 - 44 minutes)

ளவரசனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஏதும் கோபமாக கத்தி விட்டாலும் பிரச்சனை. சத்தம் போட்டால் எல்லோரும் வந்துடுவாங்க. இவ இதெல்லாம் தெரிஞ்சி தான் எல்லாரும் இருக்கும் போது தைரியமா இங்க வந்திருக்கா.

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு, “கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்ன இல்ல. அப்புறம் உனக்கு என் கிட்ட பேச கூட என்ன உரிமை இருக்கு” என்றான்.

“என் அத்தை பையன்ற உரிமை தான்.”

அவன் டென்சன் ஆவதை பார்த்து, “சரி. கல்யாணம் தானே வேண்டாம்னு எங்க அப்பா கிட்ட சொன்னேன். நம்ம லவ் வேண்டாம்னு உங்க கிட்ட வந்து சொன்னேனா, சொல்லலையே”

“வேண்டாம் இனியா. என்னை பைத்தியக்காரனா ஆக்காத. என்னை என் வழியில போக விடு.”

“என்னது. சும்மா போயிட்டு இருந்த சின்ன புள்ளையை நீங்க தானே இதே வீட்டுல வச்சி விரும்பறேன்னு சொன்னீங்க. இப்ப என்ன மாத்தி பேசறீங்க”

இளவரசனுக்கு கோபம் ஹை பிச்சில் ஏறிக் கொண்டிருந்தது. கோபமாக அவன் கையை பிடித்து “என்னடி நினைச்சிட்டிருக்க மனுசனை பைத்தியமாக்கணும்ன்னே முடிவு பண்ணிட்டியா. மாத்தி மாத்தி பேசிக் கிட்டு”

“விடுங்க. ஒரு ரொமேன்டிக்கா பேச தெரியுதா உங்களுக்கு. இப்படி வில்லன் ரேன்ஜ்க்கு பேசறீங்க. கையை விடுங்க முதல்ல. காதலிக்கற பொண்ணை இப்படியா பண்ணுவீங்க. விட்டா என் கை தனியா வந்திடும் போலருக்கு. சரி. ஆமா நான் தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னேன். அதுக்காக அப்படியே விட்டுடுவீங்களா. இந்த பின்னாடியே வந்து திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு எல்லாம் கேட்க மாட்டீங்களா. உங்க லவ் அவ்வளவு வீக்கா. சொல்லுங்க.”

அவன் ஏதும் பேசவில்லை.

“சொல்லுங்க இளா உங்க லவ் அவ்வளவு வீக்கா. நான் வேண்டாம்ன்னு சொன்னா விட்டுடுவீங்களா” என்றாள்.

இளவரசனால் அவள் கண்களை ஏனோ பார்க்க இயலவில்லை. ஏதோ உயிரையே கண்களில் தேக்கி வைத்துக் கொண்டு இருப்பது போல் இருந்தது.

விடுவிடுவென்று எழுந்து வெளியே சென்று விட்டான்.

அவன் சென்ற வெகு நேரம் கழித்தே இனியா வெளியே வந்தாள்.

என்ன தான் பிரச்சனை பெரிதாக கூடாது என்று விளையாட்டு போலவே அவனிடம் பேசினாலும் கடைசியாக உள்ளே இருந்த வருத்தம் வெளி வந்து விட்டது. அவளையே தேற்றிக் கொண்டு வர நேரம் ஆகியது.

வெளியே அவளை ஜோதியும் சந்துருவும் எதிர் கொண்டனர்.

“என்ன ஆச்சி அண்ணி”

“டீடெய்லா ஏதும் பேச முடியலை. அதுக்கு டைம் இல்ல. அவருக்கு புரியற மாதிரி ஒரு கேள்வி மட்டும் கேட்டுட்டு வந்திருக்கேன். பார்க்கலாம்” என்றாள்.

“அப்பாடா” என்றான் சந்துரு.

ஜோதி என்னவென்று கேட்க,

“ஏன் கேட்க மாட்டீங்க. பிளான் சொதப்பினா எனக்கு தானே டின் கட்டி இருப்பாங்க. இப்ப கிரேட் எஸ்கேப் இல்ல. அதான்”

“ஓஹோ. இப்ப கூட நீங்க எஸ்கேப்னு யாரு சொன்னது, இன்னும் பிளான் சக்சஸ் எல்லாம் ஆகலை, உங்களுக்கு டின் கட்டவும் சேன்ஸ் இருக்கு”

“அட என்னங்க நீங்க. ஏதோ ஐடியா கொடுத்தேன். அதுக்காக என்னையே டார்கெட் பண்ணுவீங்களா”

“சும்மா ஐடியா கொடுத்தா ஓகே, நான் கூட தான் அவளை போன்னு சொன்னேன். ஆனா சிங்கம் அப்படி இப்படின்னு ஏத்தி விட்டது யாரு, சோ உங்களுக்கு டின் கன்பார்ம்” என்று சிரித்தாள்.

“ஐயோ சாமி. எங்கண்ணன் கல்யாணத்துக்குள்ள என் நிலைமை என்ன ஆகும்ன்னு தெரியலையே” என்றவாறு டவலை எடுத்து தலையில் போட்டுக் கொண்டான் சந்துரு.

னைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

லக்ஷ்மியும், ராஜியும் பரிமாறவும், சந்துருவும், ஜோதியும் எல்லாரும் போட்டு சாப்பிட்டுக்கலாம், நீங்களும் சாப்பிடுங்க என்று அவர்களையும் அமர வைத்தனர்.

இளவரசனுக்கு எதிரில் சந்துரு தான் அமர்ந்திருந்தான். சந்துருவிற்கு பக்கத்தில் இனியா அமர்ந்திருந்தாள்.

இனியா அவனை பார்க்காதது போல் வேண்டுமென்றே இருந்தாள்.

இளவரசன் அடிக்கடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சந்துரு தான் அதை பார்த்து விட்டு, அண்ணனிடம் ஜாடையாலே என்ன என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

அப்போதைக்கு வேறு புறம் திரும்பினாலும், திரும்ப அவன் பார்வை அவன் அனுமதி இல்லாமலே அவள் புறம் திரும்பியது.

மற்ற எல்லோரும் ஏதேதோ பேசி கொண்டே சாப்பிட்டனர்.

திடீரென்று அபி இளவரசனிடம் “அங்கிள் அந்த ரசம் எடுங்க” என்றாள்.

இளவரசன் கனவில் இருந்து முழித்தவனாக திணறி அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தான்.

“தேங்க்ஸ் அங்கிள்” என்று கூறிய அபி திடீரென்று நினைவு வந்தவளாக “ஐயய்யோ, நான் உங்களை சித்தப்பான்னு தானே கூப்பிடனும். மறந்துட்டேன். இனிமே மறக்காம அப்படியே கூப்பிடறேன்” என்று கூறியவாறு சாப்பிட ஆரம்பித்தாள்.

அவளை தவிர அனைவரும் சாப்பிடுவதை விட்டு விட்டு இளவரசனையே பார்த்தனர்.   

தொடரும்

En Iniyavale - 20

En Iniyavale - 22

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.