(Reading time: 22 - 44 minutes)

ங்க அண்ணன் என் கிட்ட பேசினானா டா. அப்புறம் நான் எப்படி சந்தோசமா நார்மலா இருக்கறது”

“அம்மா. அண்ணன் உங்க கிட்ட பேசலை சரி. ஆனா நீங்களும் போய் அண்ணன் கிட்ட பேசலையேம்மா. அதுவும் அண்ணன் உங்களை எதிர்த்து பேசலை, சத்தம் போடலை. இதுல இருந்தே தெரியலையாம்மா அண்ணன் உங்க மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காருன்னு. நான் கூட உங்களை எல்லாம் நினைக்காம ஏதேதோ தப்பு செஞ்சிருக்கேன்மா. ஆனா அண்ணன் எப்பவுமே நம்மளை பத்தி யோசிச்சி யோசிச்சு தான் எல்லாமே செய்வார்.

நாங்க சின்னவங்கமா. எங்களுக்கு ஈகோ இருந்து நாங்க பேசலைன்னு கூட வச்சிக்கோங்க. ஏன் நீங்க வந்து பேச மாட்டீங்களா”

“---“

“அம்மா”

“நீ சொன்னது கரெக்ட் தான் சந்துரு. என் மேல தான் தப்பு. நானே அதை சரி செய்யறேன்.”

“சரிம்மா. அதெல்லாம் நீங்க பார்த்துக்கோங்க. போங்க போங்க போய் எனக்கு சூப்பரா போய் ஒரு காபி போட்டு எடுத்துட்டு வாங்க”

“ம்ம்ம். சந்துரு காபி குடிச்சிட்டு நான் ஒரு லிஸ்ட் தரேன். அதுல இருக்கறது எல்லாம் வாங்கிட்டு வந்துடு”

“என்னம்மா. ராமு அண்ணனை வாங்கிட்டு வர சொல்ல வேண்டியது தானே”

“இல்லப்பா அவர் ரெண்டு நாள் லீவ் கேட்டாரு. நானும் குடுத்துட்டேன். நாளைக்கு உங்க அப்பாக்கு தெவசம். அதுக்கு தேவையான பொருள் தான் வாங்கணும்.”

“ஓ ஆமா இல்லம்மா. நான் மறந்துட்டேன்மா. சாரிம்மா”

“இருக்கட்டும் டா. நீ போய் இந்த லிஸ்ட் ல இருக்கறது மட்டும் வாங்கிட்டு வந்திடு”

“சரிம்மா. ஐயர் எல்லாம் வந்து பண்ணுவாங்க. நீங்க படைப்பீங்க இல்லம்மா”

“ஆமாப்பா”

“அப்படின்னா சரி. நீங்க மாமா வீட்டையும் கூப்பிடுங்க”

“----”

“என்னம்மா”

“இல்ல சந்துரு. எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி பேசினா எப்படி”

“ஏன்மா. அப்படி என்ன நடந்துடுச்சி. அப்ப நீங்க இனியா அண்ணியை மட்டும் கூப்பிட்டு பேசறீங்க. இதுல பாதிக்க பட்டதே அவங்க தானே. அதெல்லாம் கூட விடுங்க. இந்த விசயத்தால நீங்க மாமா குடும்பத்தோட உறவையே விட்டுடுவீங்களா”

“வேண்டாம் சந்துரு. பேச்சுக்கு கூட அப்படி பேசாத”

“பின்ன என்னம்மா. மாமாவை பத்தி தெரிஞ்சி அவ்வளவு சந்தோச பட்ட நீங்க இப்ப இப்படி நடந்துக்கறது சரியா. இத்தனை வருஷம் தான் சந்தோஷம், துக்கம்னு எதுவா இருந்தாலும் யாரும் இல்லாம நாம தனியா இருந்தோம். இப்பவுமாம்மா.”

“இல்ல சந்துரு. எங்கண்ணன் ஊருல இருந்து வந்து இன்னும் என் கிட்ட பேசலை. அதான்”

“சரிம்மா. இப்ப நீங்களா அவங்க கிட்ட பேசறதுக்கு இது ஒரு சந்தர்ப்பம் தானே. அவங்களையும் வர சொல்லுங்கம்மா”

சிறிது யோசித்த ராஜலக்ஷ்மி “சரி” என்றார்.

“அப்படியே ஜோதி அண்ணியையும் வர சொல்லுங்கம்மா. நாளைக்கு சண்டே தானே அபியையும் கூட்டிட்டு வர சொல்லுங்க”

“ம்ம்ம். சரிப்பா”

திடீரென்று ராஜலக்ஷ்மி வீட்டிற்கு வரவும் ராஜகோபாலிற்கு ஒன்றும் புரியவில்லை.

“வாம்மா” என்றார் தயங்கியவாறு.

ஆனால் அவருக்கு மாறாக லக்ஷ்மியோ அவரை உற்சாகமாக வரவேற்றார்.

“வாங்கண்ணி வாங்க. என்ன அங்கேயே நிக்கறீங்க”

“ம்ம்ம்”

“என்ன இந்த பக்கம் வந்தே ரொம்ப நாள் ஆச்சி” என்றார் லக்ஷ்மி.

மற்ற இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

இவ்வளவு நடந்தும் அண்ணி தன்னிடம் பேசுவார்கள் என்று கூட ராஜி எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவரோ இவ்வளவு உற்சாகமாக வரவேற்று ஏன் வரவில்லை என்று கேட்கவும் பதில் கூற முடியாமல் விழிக்க மட்டுமே முடிந்தது.

“இல்ல. வர முடியலை” என்றார்.

“சரி. இருங்க. நான் போய் உங்களுக்கு எதாச்சும் சாப்பிட எடுத்துட்டு வரேன்”

“இல்லல்ல. எதுவும் வேண்டாம். நாளைக்கு அவருக்கு தெவசம். அதான் உங்களை நாளைக்கு அங்க வர சொல்லி கூப்பிட வந்தேன்”

மற்ற இருவரும் ஒன்றும் பேசவில்லை.

சிறிது அமைதி காத்த “சந்துரு தான் இத்தனை வருஷம் எதுவா இருந்தாலும் யாருமே இல்லாம தனியா இருந்துட்டோம். இப்ப தான் நமக்கு மாமா இருக்காங்களேம்மா. அவங்களையும் கூப்பிடுங்கன்னு சொன்னான். அதான்” என்றவாறு இழுத்தார்.

“அதுக்கு ஏன் அண்ணி தயங்கறீங்க. நீங்க வான்னு சொன்னா வர போறோம். இத்தனை வருசத்துல இவரு உங்களை பத்தி எல்லாம் தெரியாம எப்படி வருத்தப் பட்டாரு தெரியுமா. இப்ப தான் நாம சந்திச்சிருக்கோம். இனிமே எந்த சந்தோசமா இருந்தாலும் துக்கமா இருந்தாலும் ரெண்டு வீட்டுக்கும் ஒன்னு தான். நாங்க நாளைக்கு வறோம்”

ராஜி லக்ஷ்மியின் கையை பிடித்து கண் கலங்கியவாறு “ரொம்ப தேங்க்ஸ் அண்ணி” என்றார்.

ராஜலக்ஷ்மி அங்கிருந்து கிளம்பியவுடன் ராஜகோபால் லக்ஷ்மியிடம் “ஏன் லக்ஷ்மி நாம நாளைக்கு அங்கே போய் தான் ஆகணுமா” என்றார்.

“இவ்வளவு நேரம் பேசனதை கேட்டுட்டு தானே இருந்தீங்க. அப்புறம் ஏன் உங்களுக்கு இப்படி ஒரு டவுட்.”

“இல்ல. என்னென்னவோ நடந்து போச்சி. அதான்”

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்”

“நீ தெளிவா தான் இருக்கியா. எனக்கு இதுல தான் அடிக்கடி டவுட் வருதே. ஒரு முறை ரொம்ப தெளிவா பேசுற, இன்னொரு முறை சுத்த முட்டாள் மாதிரி பேசுற.”

“இப்ப நான் அப்படி என்ன முட்டாள் தனமா பேசிட்டேன்”

“பின்ன என்னவாம். என்னெல்லாம் நடந்துடுச்சி. நீயும் தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்னு சொல்லிட்ட. அப்புறம் ஏன் இப்ப இப்படி”

“அந்த பிரச்சனை முடிஞ்சிடுச்சிங்க. இப்ப ஏன் அதை இழுக்கறீங்க. அதுவும் உங்க தங்கச்சியும் அப்ப எல்லாமே யோசிச்சி நல்ல முடிவை தான் எடுத்தாங்க. எல்லாத்துக்கும் மேல என் பொண்ணே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா இல்ல. அவ்வளவு தான். அத்தோட என்னை பொறுத்த வரைக்கும் இந்த பிரச்சனை முடிஞ்சி போச்சி. இப்ப அவங்க உங்க தங்கச்சி மட்டும் தான். இத்தனை வருஷம் தான் அவங்க தனியா இருந்துட்டாங்க. இனிமேலும் அவங்க அப்படி இருக்க கூடாது. இதை நாம ஏற்கனவே எடுத்த முடிவு தான். அதுல எந்த மாற்றமும் கிடையாது. உங்களுக்கு இப்ப புரியுதா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.