(Reading time: 22 - 44 minutes)

னால் அத்தை என்று கூறும் போது அவனால் சரியாக கூறவே இயலவில்லை. அப்படி அழைக்கலாமா வேண்டாமா என்ற தடுமாற்றம் இருந்தது. அங்கிருந்த அனைவருக்குமே அது தெரிந்தாலும் யாரும் அதை கண்டு கொண்டதாக காட்டி கொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் ஐயர் வந்து பூஜை செய்து வீட்டையே புகை மண்டலமாக ஆக்கினார்.

அவர் இளவரசனிடம் பாலும் வாழைப்பழமும் கலந்த கலவையை கொடுத்து எல்லோருக்கும் தர சொன்னார்.

அவனும் எல்லோருக்கும் கொடுத்தான். இனியாவிற்கு கொடுக்கும் போது மட்டும் தலையை குனிந்தவாறு அவள் கையில் கொடுத்து விட்டு விலகி சென்று விட்டான்.

பூஜை முடிந்த உடனே அவன் மாடி ஏறி சென்று விட்டான்.

இனியாவும் அவன் திரும்ப வருவானா வருவானா என்று சிறிது நேரம் பார்த்து விட்டு முகத்தை சோர்வாக வைத்துக் கொண்டாள்.

அதைக் கண்ட சந்துரு ஜோதிக்கு சைகை செய்தான். அவளும் தான் பார்த்துக் கொள்வதாக கூறி சைகை செய்தாள்.

இனியா சமையலில் உதவி செய்துக் கொண்டிருந்தாள்.

பின்பு சந்துரு “சமையல் செய்யறதுக்கு எத்தனை பேரு. ஏன்மா நீங்க, அத்தை,  இன்னும் லதா அக்கா வேற இருக்காங்க இல்ல, அப்புறம் எதுக்கும் இவங்க ரெண்டு பேரை வேற வேலை வாங்கறீங்க. பாருங்க. அங்க அபி அழுதுக்கிட்டே இருக்கா. உங்க சமையலை விட அவளை பார்த்துக்க தான் ஆள் அதிகம் தேவை. இவங்க ரெண்டு பேரையும் அனுப்புங்க” என்றான்.

ராஜி ஏதோ சொல்ல வந்து அதற்குள் முந்திக் கொண்ட லக்ஷ்மி “நாங்க எல்லாம் வேலை செய்யறோம்ன்னு சொல்லு. இவங்க ரெண்டு பெரும் எங்களுக்கு அப்படி ஒன்னும் ஹெல்ப் பண்ணலை. இவங்களை யாரு இங்க கூப்பிட்டா. கூட்டிட்டு போ கூட்டிட்டு போ” என்றார்.

ஜோதியும் தப்பித்தோம் என்று தங்கையை கூட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

வெளியில் சென்று பார்த்தால் அபி அமைதியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இனியா சந்துருவை பார்த்து “என்ன இது. இவ அழுகறான்னு சொன்னீங்க. அவ சமத்தா தானே இருக்கா” என்றாள்.

“அட போங்க அண்ணி. உங்களை பிளான் போட்டு கூட்டிட்டு வந்தா நீங்க என்னடான்னா இப்படி பேசறீங்க”

“ஓ இது தான் உங்க ஊருல பிளான் போட்டு கூட்டிட்டு வரர்தா. நீங்க நேரா கூப்பிட்டு இருந்தாலே நாங்க வந்திருப்போமே” என்று அவனை வாரினாள் ஜோதி.

“போதும் அண்ணி. என் மூக்கை உடச்சது எல்லாம் போதும். வழக்கம் போல பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. இப்ப நம்ம ஆபரேஷன் ஸ்டார்ட் பண்ண வேண்டிய டைம் இது”

“ஹேய் ஹேய். அப்படி என்ன ஆபரேஷன். உங்களுக்கு எதாச்சும் ஆபரேஷன் பண்ணணும்ன்னா நானே பண்றேன்”

“இது சரி படாது. உங்களுக்கு உங்க தங்கச்சி வாழ்க்கை மேல அக்கறையே கிடையாது. நீங்களும் ஏதும் உருப்படியா பிளான் போட மாட்டீங்க. நான் அழகா பிளான் போட்டாலும் அதுக்கு ஒத்துழைக்க மாட்டீங்க.”

“ஓஹோ. சரி சொல்லுங்க. நீங்க அப்படி என்ன பிளான் போட்டிருக்கீங்க”

“ம்ம்ம். அப்படி கேளுங்க. அண்ணி இப்ப எங்கண்ணன் மாடில தனியா தான் இருக்காரு. இப்ப போய் இனியா அண்ணி பேசலாம். அவர் போன்ல தானே பேச மாற்றாரு. அவரால நேர்ல எல்லாம் இவங்களை பார்த்துட்டு பேசாம இருக்க முடியாது. சோ இது ஒரு நல்ல சேன்ஸ்”

“ஏன் சந்துரு. உங்களுக்கு அப்படி என்ன கொலைவெறி என் மேல. சிங்கத்தோட குகை உள்ள என்னை தனியா போக சொல்றீங்க. நான் தான் அன்னைக்கே சொன்னேன் இல்ல என் உடம்பு இந்த அடி ஒதை எல்லாம் தாங்காதுன்னு அப்புறம் ஏன்”

“அட என்ன அண்ணி நீங்க. நாங்க சிங்கத்தோட குகை உள்ள இன்னொரு சிங்கத்தை தானே அனுப்பறோம். உங்களை நீங்களே அண்டர் எஸ்டிமேட் போட்டு வச்சிருக்கீங்க. இது தான் கரெக்ட் டைம். நீங்க போங்க.”

“இல்ல சந்துரு. வீட்டுல வேற எல்லாரும் இருக்காங்க. எனக்கென்னவோ இது சரியான டைமா தெரியலை”

“இல்ல இனியா. எனக்கும் சந்துரு சொல்றது தான் சரின்னு தோணுது. ஏன்னா அவருக்கு என்ன கோபம் இருந்தாலும் வீட்டுல எல்லாரும் இருக்காங்கன்னு அவரால கத்தி கூட பேச முடியாது. சோ இந்த சேன்ஸ் நீ யூஸ் பண்ணிக்க” என்றாள் ஜோதி.

இனியா சிறிது நேரம் யோசித்து விட்டு “ரெண்டு பெரும் என்னவோ சொல்றீங்க. பார்க்கறேன். இது மட்டும் சொதப்பிச்சி, உங்க ரெண்டு பேரையும் நான் சும்மா விட மாட்டேன்” என்றாள்.

ஜோதி சிரித்தவாறே சரி என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

இனியா சென்றவுடன் “என்ன அண்ணி. பிளான் சொதப்பினா நம்மளை சும்மா விட மாட்டேன்னு சொல்றாங்க. நீங்களும் சரின்னு சொல்றீங்க” என்று சந்துரு கேட்டான்.

ஜோதி இன்னும் சிரித்தவாறே “இந்த பிளான் யாரு கொடுத்தது” என்றாள்.

“நான் தான்”

“அப்ப பிளான் சொதப்பி அடின்னு கொடுத்தா யாருக்கு தருவாங்க”

“எனக்கு தான்” என்று சந்தோஷ் சுப்பிரமணியம் பட்டாபி மாதிரி கூறினான்.

ஜோதி விழுந்து விழுந்து சிரித்தாள்.

“சரி இப்பவே அதை நினைச்சி பயப்படாத. வா நாமளும் மாடிக்கு போகலாம். எங்கம்மா தேடிட்டு வந்தா எஸ்கேப் ஆக ஈசியா இருக்கும்” என்றவாறு அவனை அழைத்து சென்றாள்.

ளவரசனின் அறைக் கதவை தட்டினாள் இனியா.

கதவை திறந்த இளவரசன் இனியாவை பார்த்து அதிர்ந்தது அவன் முகத்தில் தெரிந்தது. நிமிடத்தில் அதை மறைத்துக் கொண்டு “என்ன” என்று முகத்தில் கடுமையை வரவழைத்துக் கொண்டு கேட்டான்.

எங்கே கதவை அறைந்து சாத்தி விடுவானோ என்று பயந்த இனியா டக்கென்று அவன் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

அதைக் கண்டு இன்னும் அதிர்ந்தவன் “ஏய் இப்ப என்ன பண்ற. அறிவில்லை உனக்கு” என்றான்.

“இல்ல. இப்ப அதுக்கென்ன. நீங்க எனக்கு கொஞ்சம் தரப் போறீங்களா. அதுக்கு முதல்ல அங்க இருக்கணும் இல்ல. நானும் நேத்துல இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன் இதையே கேட்டுக்கிட்டு”

ஒரு நிமிடம் அவனை நிதானப் படுத்திக் கொண்டவன் “இப்ப இங்க எதுக்கு வந்த. யாருனா வந்தா என்ன ஆகும். ஒழுங்கா இங்கிருந்து போ” என்றான்.

“அதெல்லாம் போக முடியாது.”

“இங்க பாரு நீ இப்படி எல்லாம் பேசி என்னை டென்ஷன் படுத்தினா நான் என்ன செயவேன்னே எனக்கு தெரியாது.”

“ஹான். அப்படி என்ன செய்வீங்க. சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிடுவீங்களா. எங்க முடிஞ்சா கூப்பிடுங்க பார்க்கலாம்”

“வேண்டாம். நான் ஏதும் தேவை இல்லாம பேச விரும்பலை. ஒழுங்கா போயிடு”

“ஹ்ம்ம். இதை எல்லாம் என்னை பார்த்து சொல்லுங்க. நீங்க தேவை இல்லாம பேச மட்டுமா விரும்பலை, நான் வந்ததுல இருந்து என்னை பார்க்க கூட தான் விரும்பலை இல்ல. தெரியாம என்னை பார்த்திட்டா கூட கண்ணை திருப்பிட்டு போறீங்க”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.