(Reading time: 23 - 45 minutes)

A for ananya” என்று மனம் பதில் அளித்தது. அவன் பார்வை தடுமாற செய்ய வேறுபுறம் விழிகளை அகற்றி “நல்லா இருக்கு” என்று கூறினாள். இவளை இப்படி சீண்டுவதும் அவள் தடுமாறுவதை பார்த்து ரசிப்பதுவுமே அஸ்வதிற்கு விருப்பமான ஒன்றாக போனது.

அவன் தன் மோதிரத்தை கலட்டி அவளிடம் தந்து பார்க்க கூறினான். ஒரு கையில் செல்லை வைத்துக்கொண்டு மறுகையில் ஜூஸ் வைத்திருந்தாள் அனு. செல் இருக்கும் கையால் அந்த மோதிரத்தை வாங்க அது தடுமாறி கீழே விழுந்தது. விழுந்த அவசரத்தில் நாற்காலியை நகற்றி தேடிப்பார்த்தனர் இருவரும். நாற்காலியில் பட்டு அந்த மோதிரம் நகர்ந்துப் போக இருவரும் தாங்கள் இருந்த இடத்திலேயே தேடினர்.

மோதிரம் முதலில் அனன்யாவின் கண்ணில்தான் பட்டது. அவனிடம் தரலாம் என்று எண்ணி எடுத்தவள், மறுநிமிடமே “என்னையா கிண்டல் பண்ற? தேடு தேடு நல்லா தேடு ஒரு நாள் நல்லா தேடு அப்பறமா உன்கிட்ட தரேன்” என்று மனதிலேயே திட்டிக்கொண்டு தன் பையில் போட்டுக்கொண்டு அவனிடம் சென்றாள்.

மோதிரத்தை அவளது நினைவாகவே வாங்கினான் அஸ்வத் அது துளைந்து போகவும் முகம் சுருங்கி போனது அவனிற்கு. அவனது முகம் சுருங்கவும் அனன்யாவிற்கு பாவமாக இருந்தது... “அச்சோ... அஷ்குட்டி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான்டா அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா சரியா...” என்று மனதிற்குள்ளேயே அவனை கொஞ்சினாள் அனு. ஒருவாறு எங்கு தேடியும் கிடைக்காமல் போக சோகமாகவே கிளம்பி சென்றான் அஸ்வத். அவன் செல்வதையே கள்ள சிரிப்போடு பார்த்துக்கொண்டு இருந்தாள் அனு.  

“நீயே சொல்லு கணேஷ் ஏன் அவனோட பார்வையை நான் தவிர்க்கிறேன்? தடுமாறிபோறேன்  ஏன்னே புரியலை... இது எத்தனை நாளைக்கு? அவனுக்கும் இப்படிதான் இருக்குமா? இது நிஜமாவே காதல் தானா? வேண்டாம் அவனே சொல்லட்டும் அப்பறம் சொல்லலாம், இந்த மோதிரத்தை கண்டிப்பா அவன்கிட்ட கொடுக்கனுமா? கொடுக்கலாமா? வேணாமா?” என்று மனம் பல எண்ணங்களில் குழம்பியது... கடைசியில் கொடுக்கவேண்டாம் என்று முடிவு செய்து தன் டைரியினுள் வைத்து மூடினாள். அவள் எடுத்த முடிவு அவளது மனதில் ஒரு இனிய உணர்வை பரவ செய்தது அதே நினைப்பில் இதழில் புன்முறுவலுடன் அவள் உறங்க செல்ல அந்த பக்கம் கணேஷும் சிரித்தார்..       

****பெங்களூர்****

ன்று அனுப்பிய நன்றி என்ற குறுஞ்செய்தியை தொடர்ந்து அன்று முதல் தேஜுவும் பதில் அனுப்பினாள். அவளிடம் இருந்து பதில் வருவதை கண்ட நிரஞ்ஜனுக்கு தலை கால் புரியவில்லை சந்தோஷத்தில் மிதந்தான். (அவர்கள் செய்யும் உரையாடல்களில் ஒரு சாம்பிள்....)

“சோ, நீ பேரை சொல்ல மாட்ட?”

“ம்ம்ம் ஹ்ம்ம்.... சொன்னா கண்டு பிடுச்சிடுவியே!”

“அதுனால என்ன இப்போ...”

“நான் ஒன்னும் அழகா இருக்க மாட்டேன் அப்பறம் என்னை புடிக்கலைன்னு சொல்லிடீனா?”

“நீ திரும்பி லவ், அது இதுன்னு உளறினால் அப்பறம் நான் மெசேஜ் அனுப்ப மாட்டேன்.”

“ஐயோ தெய்வமே அப்படி எல்லாம் செய்திடாத இப்போதான் உன் மெசேஜ் தரிசனமே கிடைக்க ஆரம்பிச்சு இருக்கு எனக்கு... இனிமே அப்படி பேசலை நீ சொன்ன மாதிரி வெறும் ஃப்ரிண்ட்ஸ் தான் போதுமா?” என்று கடைசி வாக்கியத்தை மட்டும் வெறுப்பாக முடித்து இருப்பதை காட்ட கோவமாக இருக்கும் ஸ்மைலியை குறுஞ்செய்தியில் சேர்த்து அனுப்பினான்.

“நீ ஏன் ஃபோன் பண்ணினால் அட்டென்ட் பண்ணாமல் மெசேஜ் பண்ற?”

“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்...” என்று பாதியில் முடித்தான்.

“ம்ம்ம்ம் சரி...”

“அப்பறம்?”

..... இப்படியே மொக்கையாக போகும் குறுஞ்செய்தி உரையாடல்களில் சில நேரம் கலை, கல்வி, நட்பு, விருப்பம், வெறுப்பு, சினிமா, அரசியல், குடும்பம், காதல் என்று எல்லாம் கலந்து வரும் மொத்தத்தில் இவர்கள் பேசாத துறை இல்லை பேசாத நாட்களும் இல்லை என்பது போல் மாறிப்போனது சூழல். நிரஞ்ஜன் பேசி சிரிக்க வைக்கும் விதத்தில் சிறிது கவரபட்டாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்க துவங்கினாள் தேஜு. எல்லைகள் மறந்து உரிமைகள் தலைதூக்க துவங்கியது...

ஒரு நாள் குறுஞ்செய்தி வரவில்லை என்றாலும் அவளே அனுப்ப துவங்கினாள்.

“என்ன சார் ரொம்ப பிஸியா?”

அவள் தன்னுடன் உரையாட விரும்பிகிறாள் என்ற எண்ணமே சந்தோஷம் அளிக்க... “ம்ம்ம்ம் லைட்டா” என்று வடிவேலு தொனியில் பதில் அனுப்பினான்.

“அப்போ ஆளு செட் ஆகிடுச்சுனு சொல்லு” மனதில் அப்படி இருக்க கூடாதே என்ற தவிப்புடன் அனுப்பினாள்.

அவளது மனம் அவனக்கு புரிந்துப்போக வேண்டும் என்றே விளையாடினான். “அட பாருடா கரெக்டா கண்டுபுடுச்சிட்ட இப்போதான் 2 நாளாய் பேசிட்டு இருக்கோம்” என்று வம்பிற்கு இழுத்தான்.

தன்னுடன் விளையாடத்தான் பொய் சொல்கிறானோ என்று மூளை கூறினாலும், “அவன் கூறிய பதிலில் மனம் சோர்ந்தது, பதிலுக்கு அவள் வெறும் “ஓஹோ..” என்று மட்டும் அனுப்ப இப்போது அவளது மனம் அப்பட்டமாக புரிந்து போனது நிரஞ்ஜனுக்கு... குறுஞ்செய்தியை பார்த்து அவளது முகத்தை கற்பனை செய்து சிரித்துக்கொண்டான். “அச்சோ ஏன்டா முகம் சுருக்குற என் மயிலு, நீ தான் எப்பவுமே என்னோட டார்லிங், இது புரியலையே என்னோட மக்கு மயிலுக்கு” என்று தனுக்குள்ளேயே அவளை செல்லமாக திட்டி கொஞ்சிக்கொண்டு பதிலுக்கு நாக்கை வெளி காட்டி சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பினான் அவன். 

அந்த குறுன்செய்தியின் மூலம் அவன் விளையாடுகிறான் என்று புரிந்துப்போக பதிலுக்கு அவள் கண்ணாடி போட்டு சிரித்துகொண்டிருக்கும் ஸ்மைலியை அனுப்பினாள். இருவருக்கும் இருவரது மனம் புரிந்து போனாலும் வெளியே சொல்லிக் கொள்ளாமல் பொக்கிஷமாய் வைத்துக்கொண்டனர். 

****திருச்சி****

ன்னடா மச்சான் கல்யாண மாப்பிள்ளைய விட நீ ரொம்ப டக்கரா இருக்க!” எப்போதும் போல் அர்ஜுனை கிண்டல் செய்துக்கொண்டு இருந்தான் நவீன்.

“டேய் நீ வேற ஏன்டா அவனை வச்சுகிட்டே சொல்லுற, பாரு அவன் முகத்தை அழுதுட போகிறான் அவன் தான் இன்னைக்கு ஹீரோ சோ இன்னைக்கு ஒரு நாலாவது என்னை கிண்டல் பண்ணாம அவனை focus பண்ணு” என்று எதிரில் உள்ள கண்ணாடியை பார்த்து தலை கோதியவாறு பேசினான் அர்ஜுன்.

“டேய் உங்க அலப்பறை தாங்க முடியலை என் கல்யாணத்துக்கு என்னை தவற நீங்க தான்டா நல்லா ரெடி ஆகி இருக்கீங்க” என்று பொருமினான் அர்ஜுன் மற்றும் நவீனுடன் வேலைபுரியும் ஸ்ரீஹரி.

“அதாவது ஹரி... எப்பவுமே கல்யாண மாப்பிள்ளை பொண்ணை விட அவங்க தோழி தோழர்கள் தாண்டா அன்னைக்கு highlighte இந்த லாஜிக் கூட தெரியாமல் நீ என்னடா ஹ்ம்ம்” என்று ஹரியின் தோளில் கைப்போட்டு பேசியவாறு வாரினான்.

“எல்லாம் நேரம்டா” என்று தலையில் அடித்துக்கொண்டான் ஹரி.

மாப்பிள்ளை பொண்ணை கூப்பிடுங்க என்று ஐய்யர் கூற ஹரியை அர்ஜுனும், மணப்பெண் ஸ்ரீமதுவை அவள் தோழி அஹல்யாவும் அழைத்து வந்தனர்.

இருவரையும் மேடையில் அமர வைத்துவிட்டு பக்கத்தில் உள்ள தோழர் தோழிகளிடம் அர்ஜுனும் அஹல்யாவும் பேசிக்கொண்டனரே தவிர ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

“டேய் அர்ஜுன் பொண்ணோட ப்ரிண்ட்ஸ் போலடா சூப்பரா கலர் கலரா இருக்காங்க பாருடா” என்று அவன் உந்துதல் பண்ண அர்ஜுன் அவன் தலையை அந்த பெண்களின் பக்கம் திருப்பவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.