(Reading time: 23 - 45 minutes)

ருவரும் சேர்ந்து சிரித்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள இப்போது அர்ஜுனின் கண்கள் பழையபடி காதல் ரசத்தை கொட்டியது, அஹல்யாவின் முகம் குங்குமம் போல் சிவந்து போக, அருகில் உள்ள தூணில் சாய்ந்து கைகளை கட்டியவாறு அவளை கண்களால் பருகியவன் “ஹ்ம்ம்... ஏன்டி இப்படி கொல்லுற...” என்று அலுத்துக்கொண்டான் அர்ஜுன். அவனது பேச்சில் இன்னும் வெட்கம் வர முகம் மேலும் சிவந்து போனது...

“ம்ம்ம் ஹ்ம்ம்.... நீ இப்படி வெட்கப்பட்டுடே இருந்தாள் எப்போதான் அடுத்த stage போகுறது?” என்று கண்ணடித்து கிண்டல் செய்தான். அவள் எதுவும் பேச முடியாமல் வெட்கப்பட்டு திரும்பி செல்ல எத்தனிக்க அவள் கைபிடித்து நிறுத்தியவன், “ஹே எங்கே போற? என்கூட வா” என்று அவளை மண்டபத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான்.

கருமேகங்கள் சூழ்ந்து அருகில் எங்கேயோ மழை பெய்வதை சுட்டிக்காட்ட அந்த ஈர காற்றினை முகத்தை மேல்நோக்கி பார்த்து கண்கள் மூடி அனுபவித்தாள் அஹல்யா. குளிர்ந்த காற்று, மழை பெய்வதற்கு முன்னால் வரும் மண் வாசனை, மனம் கவர்ந்த காதலி என்று எல்லாம் சுற்றி இருக்க அர்ஜுன் கிறங்கிப் போனான். அவளின் எதிரில் நின்று அவளை ரசித்தவன் மெதுவாக அவளின் இதழை வருடினான். அர்ஜுனின் கண்கள் கிறக்கத்தை காட்ட நாணத்தில் தலைக் குனிந்தாள் அஹல்யா. அவளது முகத்தை இரு கைகளால் தூக்கியவன் அவளை நோக்கி குனிந்தான். அவன் தன்னை நோக்கி வரவும் அஹல்யாவின் மனம் படபடக்க கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவளின் படபடப்பு மூடி இருக்கும் அவளது இமைகளிலும் இறுக அழுத்தி இருக்கும் அவளது உதட்டிலும் தெரிந்தது அவனுக்கு. மெல்லியதாக சிரித்தவன் அவளது முன்நெற்றியில் இருந்த முடியினை ஒதுக்கியவன், தன் இதழ்களை பதித்தான். அவனது செயலில் மனம் நிறைந்தவள் அவள் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.

அவளை தன்னோடு அணைத்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்தவாறு அமர்ந்துக்கொண்டு தன் விரல்களோடு அவள் விரல்களை கோர்த்து அமைதியாக அமர்ந்து இருந்தான் அர்ஜுன். இருவருக்குமே பேச தோன்றவில்லை மனம் முழுவதும் நிறைந்து இருந்தது. அமைதியாகவே நேரத்தை கழித்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அவளது முகம் பார்த்தான், “என்ன?” என்று அஹல்யா புருவம் தூக்க தன் சட்டை பையில் இருந்து ஒரு குட்டி பெட்டியை எடுத்தான். அஹல்யா ஒன்றும் புரியாமல் முழிக்க லேசாக புன்முறுவல் பூத்தவன் அந்த பெட்டியை துறந்து ஒரு பென்டன்டை காட்டினான். அதில் அழகாக ஹார்ட் போன்ற ஒரு வடிவினுள் A என்று ஒற்றை எழுத்து பொதிக்கப்பட்டு அந்த எழுத்தின் ஒரு முனையில் மட்டும் வெள்ளை கற்கள் பதித்து இருந்தது. பார்க்கவே அந்த பென்டன்ட் மிக வசீகரமாக இருந்தது.

அதை அவளிடம் தந்து, “இதை உன் செயினில் சேர்த்து போட்டுக்கோ, எப்போவும் உன்கூடவே இருக்கணும் போல இருக்கு, நீ இதை போட்டுகிட்டா எனக்கு எப்பவும் உன்கூட இருக்க மாதிரி இருக்கும்” என்று அர்ஜுன் சொல்லி முடிக்க அதை அவள் கழுத்தில் அணிந்து இருந்தாள். ஆசை தீர பார்த்தவன் மீண்டும் அவள் விரல்களுடன் விரல் கோர்த்துக்கொண்டு, “இதை வாங்கத்தான் நான் வெளியேப் போனேன், நீ அதுக்குள்ள அவசர பட்டுட்டடா” என்று கூறியவனின் குரலில் மீண்டும் அந்த நினைவின் சாயல் வந்த போனது அஹல்யாவிற்கு புரிந்தது. “தன் மேல் இவன் இவ்வளவு பாசம் வைத்திருகிறானா?” என்று மனம் உருக விரல்களை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். இருவருக்குமே எவ்வளவு நேரம் அப்படி அமைதியாக இருந்தோம் என்று தெரியாது வானமெல்லாம் இருட்டிவிட்ட பிறகே உணர்ந்தவர்கள் எழுந்தனர். அன்றே இருவரும் ஊருக்கு திரும்ப இருந்தமையால் மறக்காமல் கைபேசி என்னை வாங்கிக்கொண்டான் அர்ஜுன். பலநாள் சேர்ந்து இருந்த உணர்வு மனதில் அப்படியே இருக்க அதை தேக்கி வைத்துக்கொண்டு இருவரும் கிளம்பினர்.  

****திருப்பூர்****

விடியல் காலையில் சாமி பாடல்களை ஒருபுறம் ஓடவிட்டு, உலகில் உள்ள தெய்வங்களை எல்லாம் மணி அடித்து எழுப்பி, பால், நீர் என்று படைத்து, ஊதுபத்தி புகையில் வீட்டையே முழ்கடித்து மனம் உருக வேண்டிக்கொண்டிருக்கும் தன் மனைவி ஹேமாவின் கையால் ஒரு கப் காபிகாக பேப்பர் படித்தவாறு காத்திருந்தார் வெங்கட்.

அவர் மனம் நினைத்ததை உணர்ந்த ஹேமாவோ தன் வேண்டுதலை விரைவாக ஒரு ஒருமணி நேரத்தில் முடித்து கையில் காபியோடு வந்தார்.

மங்களகரமாக இருக்கும் தன் மனைவியை ஆசையாக பார்த்தவாறு அமர்த்திருந்தார் வெங்கட். அருகில் வந்து காபியை மேசை மீது வைத்த ஹேமா, வெங்கட்டின் பார்வையை வரும் வழியிலேயே பார்த்தமையால் அவரது முகத்தை மீண்டும் பேப்பரை நோக்கி திருப்பிவிட மனைவியின் செயலில் சிரிப்பு வர காப்பியை பருகியவாறு, “இன்னைக்கு என்ன இரண்டு செட் ஊதுபத்தி அதிகமாக இருக்கும் போலவே பலத்த வேண்டுதலோ??” என்று கிண்டலாக வினவினார் வெங்கட்.

“சாமிக்கு ஏத்துறதை கிண்டல் பண்ணாதிங்க...ஆமா, ரொம்ப பலத்த வேண்டுதல் எப்படியாவது என் மகனோட மனதை மாற்றேனு வேண்டிக்கிட்டேன்”.

ஹேமா என்ன கூற வருகிறார் என்று புரிந்து போக, “இப்போ என்ன ஹேமா வயசு ஆகிடுச்சு அர்ஜுனுக்கு இப்போவே கல்யாணம் பண்ணிவைக்க ஆசை படுகிற?” என்று நிதானமாக கேட்டார்.

“அதெல்லாம் காலாகாலத்தில் ஆரம்பித்தால் தான் சரியாக இருக்கும்” என்று தான் போட்ட மனக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தார்.

“நீ பேசுவதை பார்த்தால் பொண்ணையும் ரெடியா வைத்திருப்ப போலவே?” என்று சந்தேகமாக பார்க்க, “அட ஆமாங்க எப்படி கண்டு புடுச்சிங்க?” என்று ஆச்சர்யமாக கேட்டாள்.

“அது சரி... யாரு அந்த பொண்ணு?”

“என்கூட வேலை செய்கிற ஒரு ஆசிரியையின் பொண்ணுதாங்க, பாக்க நல்லாத்தான் இருக்காள். ஆனால், நான் இன்னும் அந்த டீச்சர்கிட்ட இதை பத்திப் பேசலை அர்ஜுன் வந்து ஓகே சொன்ன உடனேயே நம்ம போய் பொண்ணு பார்க்கலாம்ங்க” என்று கண்களில் ஆசை தேக்கியவாறு கேட்டார் ஹேமா.

மனைவியின் மனதை புரிந்தவர், “அர்ஜுனுக்கும் சரினா நம்ம போய் பார்க்கலாம்” என்று கூறி முடித்தார்.

“அதெல்லாம் நான் சொன்னா என் பையன் கேட்டுகுவான்” என்று பெருமிதமாக கூறிக்கொண்டார் ஹேமா.        

நெருக்கங்கள் கூடுமா?!         

Go to Kadhal payanam # 07

Go to Kadhal payanam # 09

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.