(Reading time: 24 - 47 minutes)

23. என் இனியவளே - பாலா 

En Iniyavale

வ்வளவு நேரம் அப்படியே நின்றார்கள் என்று தெரியாமல் அந்த மோன நிலையிலே இருந்தார்கள்.

இனியாவிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.

இளவரசன் தான் அவளை தள்ளி நிறுத்தி விட்டு ஜன்னல் புறம் போய் நின்று கொண்டான். இனியா அப்படியே அமர்ந்து விட்டாள்.

அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வர அவளுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.

பின்பு அவனே பேசுவான் என்று அவள் எதிர்ப்பார்த்திருக்க அவனிடமோ சிறிதும் அசைவில்லை.

அவளே சென்று “இளா” என்று அழைத்து அவன் தோளில் கை வைத்தாள்.

மெல்ல திரும்பிய அவன் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழிந்து இனியா மறுபடியும் “இளா” என்று அழைத்தாள்.

அவன் என்ன என்றவாறு தலை அசைத்தான்.

“பேசணும் இளா” என்றாள்.

அவன் ஏதும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இளா” என்று அவள் ஏதோ பேச எத்தனிக்கையில் அவன் திரும்ப அவளை கட்டியணைத்தான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஏதோ பேச முயற்சித்தும் அவளாள் பேச இயலவில்லை.

“இந்த நிமிஷம் எனக்கு வேற எதுவும் நியாபகம் இல்லை. என் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. நீ எப்படி பீல் பண்ற” என்று கேட்டான்.

“நானும் அப்படி தான் பீல் பண்றேன்”

“தென் நாம இப்ப எந்த பிரச்சனையை பத்தியும் பேச வேண்டாம். ப்ளீஸ்” என்றான்.

இனியாவிற்குள் நிறைய குழப்பங்களும், அவனுக்கு கொடுக்க வேண்டிய விளக்கங்களும், அவனிடம் கேட்க வேண்டிய விளக்கங்கள் என்று ஏதேதோ தோன்றினாலும் அவன் அப்படி கூறியதால் ஏதும் கேட்காமல் அதை எல்லாம் மறந்து அவனிடம் ஒன்றினாள்.

“ஐ லவ் யூ இளா” என்றாள்.

இளவரசன் அவளை விளக்கி அவள் முகத்தையே கூர்ந்து பார்த்து விட்டு, அவள் நெற்றியில் முத்தமிட்டவாறு “ப்ரீசியஸ் வேர்ட்” என்றான்.

இனியா அவன் முகத்தில் சந்தோஷம், நிம்மதி எல்லாவற்றையும் தாண்டி ஏதோ வருத்தம் இருப்பதை கண்டாள்.

“இளா” என்று திரும்ப விளக்கம் சொல்ல ஆரம்பித்தவளை தடுத்து “நீ இப்ப சொன்னியே இதுவே எனக்கு போதும். நம்ம எல்லாத்தையும் தெளிவா பேசற நாள் வரும். அப்ப எல்லாத்தையும் பேசலாம். பட் நாட் நவ்” என்றான்.

“இல்ல நீங்க ஏதோ பீல் பண்ற மாதிரி இருக்கு. அதான்” என்றாள்.

“ஓ மேடம்க்கு அதெல்லாம் தெரியுதா. என் பேஸ்ல அதெல்லாம் உன்னால கண்டு பிடிக்க முடியுதா. பரவால்லையே”

இனியாவிற்கு ஏதோ அவன் வார்த்தை வலியை தந்தது.

விளக்கம் சொல்லலாம் என்று வந்தால் அதையும் வேண்டாம் என்று சொல்கிறான், சமாதானமாக பேசுவது போல் தான் இருக்கிறது. ஆனால் இப்போது அவன் சொன்னதற்கு என்ன அர்த்தம். அவன் முகத்தில் இருந்து என்னால் அவன் உணர்ச்சிகளை கண்டு கொள்ள முடியாதா, என்ன பேசுகிறான் இவன் என்று எண்ணினாள் இனியா.

“பைட் பண்றதுன்னா இப்பவே போட்டுடலாம் இளா. அதை மனசுல வச்சிட்டு ஒன்னும் பேச வேண்டாம்” என்றாள் குழந்தை போல் முகத்தை சிறிது கோபம் போல் வைத்துக் கொண்டு.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த இளவரசன், அவளின் கலவையான ரியாக்ஷன்களை கண்டு புன்னகைத்தான்.

இவள் இவ்வாறு பேசினால் எப்படி தன்னால் இவள் மேல் கோபம் கொள்ள முடியும் என்று எண்ணிக் கொண்டான். புன்னகை அவன் முகத்தில் தவழ்ந்தது.

“என்ன சிரிப்பு. சண்டையா சமாதானமா சொல்லுங்க” என்று சீறுவது போல் பேசுபவளை கண்டு அவனால் புன்னகை மட்டுமே புரிய முடிந்தது.

“சண்டை போடலாம். ஆனா நான் உன் முகத்தை பார்க்காம திரும்பி நின்னு தான் போடணும்”

“ஏன்”

“என்னால உன்னோட இந்த முகத்தை பார்த்து சண்டை போட முடியும்னு தோணலை. அதான்” என்றான்.

அவளால் சிரிது நேரம் ஏதும் பேச இயலவில்லை. பின்பு சமாளித்துக் கொண்டு “ஐயோ போதும். இதுக்கு முன்ன என் கிட்ட நீங்க கோப பட்டதே இல்லைன்ற மாதிரி தான்” என்றாள்.

“ம்ம்ம். அது என்னவோ உண்மை தான்னாலும், இப்ப நீ சமாளிக்க தான் பேசற. அது இருக்கட்டும். பட் நீ சொன்னது உண்மை தான். ஆனா அட் எ டைம்ல கோபப்பட்டு பேசறது வேற, ஆனா நின்னு நிதானமா யோசிச்சிட்டு, அப்புறம் உன் முகத்தை பார்த்து சண்டை போடறது கொஞ்சம் கஷ்டம் தான்”

சிறிது நேரம் அமைதியிலே கழிந்தது.

“சரி இளா. நாம இன்னைக்கே எல்லாத்தையும் பேசி முடிச்சிடலாம். இனி இந்த பிரச்சனை எல்லாம் நமக்குள்ளே வர வேண்டாம்”

“நீ சொல்றது கரெக்ட் தான். பட் எனக்கென்னவோ இப்பவே பிரச்சனை எல்லாம் போயிடும்னு தோணலை, இன்னும் நாம பேஸ் பண்ண வேண்டியது எவ்வளவோ இருக்கு. நாம இதெல்லாம் பேசறதுக்கு ஒரு டைம் வரும். அப்ப பேசலாம். இப்ப வேண்டாம்” என்றான்.

“இல்ல. எனக்கென்னவோ இப்பவே எல்லாத்தையும் பேசி சால்வ் பண்ணிடலாம்ன்னு தோணுது, இல்லன்னா எனக்கு உள்ளுக்குள்ள ஒரு மாதிரி கஷ்டமா இருக்கும், அப்புறம் கொஞ்சம் பயமா இருக்கும்” என்றாள்.

அவள் அருகில் சென்ற இளவரசன் அவள் முகத்தை கையில் ஏந்திய படி, “உனக்கு எந்த பயமும் தேவை இல்லை. அதை முதல்ல புரிஞ்சிக்க. சரியா. நாம இப்ப அதெல்லாம் பேசினா, திரும்ப எங்க பிரச்சனையா வந்து நிக்குமோன்னு தோணுது, நான் இப்ப நமக்குள்ள பிரச்சனை வரர்த விரும்பல. அதுக்குன்னு ஒரு டைம் வரும். அப்ப பேசிக்கலாம். உனக்குள்ள இருக்கற பயம் வருத்தம் எல்லாத்தையும் நீ விட்டுடு. நமக்குள்ள எந்த பிரச்சனை வந்தாலும், நான் உன் மேல வச்சிருக்கற அன்புல எந்த மாற்றமும் வராது. இதை மட்டும் நீ நியாபகத்துல வச்சிக்க” என்றான்.

இதை கேட்டுக் கொண்டிருந்த இனியா மிகவும் நெகிழ்ந்த நிலையில் இருந்தாள். அவளால் ஏனோ திரும்ப நார்மலாக இயலவில்லை. அவளுக்கு தான் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று தோன்றி அவளையே அவள் மனசாட்சி குற்றவாளி கூண்டில் நிற்க வைத்தது.

அவளின் வருத்தம் அவள் முகத்தில் தெரிந்தது. அதை பார்த்த இளவரசனால் தாங்கி கொள்ள இயலவில்லை.

“என்னடா” என்றான்.

“நான் தான் எல்லாத்துக்கும் காரணம் இல்ல, ஐ’ம் சாரி” என்றாள்.

“லூஸ் மாதிரி பேசாம, குட் கேர்ளா இருப்பியாம். ” என்றான்.

ஆனால் அவளோ திரும்பவும் “சாரி இளா.” என்றாள்.

அவன் எவ்வளவோ முயன்றும் அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வர இயலவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.