(Reading time: 9 - 17 minutes)

"ன்ன சார் சிக்னல் கிடைக்கலியா...? எனக்கும் கிடைக்கலை"

"ம்ம்..ம்ம்"

" வண்டி கெளம்புறதுக்குள்ளே பேசிட்டா நல்லது....இல்லைன்னா வீட்டுலே கவலைப் பட்டுட்டேயிருப்பாங்க....அவங்க கவலைப் படுவாங்களேன்னு நம்ம தூக்கம் போயிரும்....அப்புறம் வந்த வேலை முடிஞ்ச மாதிரிதான்."

"ஆமாமா..."

அவரைப் பார்த்தால் நாற்பது வயதுக்கு மேலிருக்கும் போலிருந்தது. என்ன ஒட்டுதல்.

"சாப்பிட்டீங்களா"

"இல்லை சார்.....இனிமேதான்..."

"வாங்க சார் ....சாப்பிடலாம்"

"ஜீவா ரொம்ப சென்சிடிவ் ....ஒரு வார்த்தை தாங்க மாட்டா...."

" ம்ம்..."

"ஜீவாவுக்கு இப்பிடி நான் வெளிலே சாப்புடுறதெல்லாம் பிடிக்காது......ஆனா என்ன பண்ணுறது.....எப்பவும் சோத்து மூட்டையயைத் தூக்கிட்டு அலைய முடியுமா....சொன்னாக் கோவப் படுவா...."

தயா சுவாரசியமில்லாமல் "ம்...ம்" என்றான்.

பேருக்கு எதையோ வாங்கிக் கொறித்துக் கொண்டிருந்தான்.

"காபி சொல்லவா சார்?"

"எனக்கு வேண்டாம்....நீங்க...?"

"அய்யய்யோ காபியெல்லாம் சாயந்திரம் ஐஞ்சு மணிக்கு மேலக் குடிக்கவே விடமாட்டா  ஜீவா....நானும் குடிக்கிறதில்லே" என்று சிரித்தார்.

வண்டி கிளம்பும் நேரமாகி விட்டதற்காக அடித்த ஹாரனுக்கு இருவரும் எழுந்து பேருந்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். மீண்டும் மீண்டும் டையல் செய்து கொண்டே சங்கடமாக முகத்தை வைத்துக் கொண்டார். என்னவோ 'சிக்னல் கிடைக்கலையா சார்' என்று தயா கேட்க மாட்டானா என்பதைப் போல் தயாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"ப்ச் ...பேசமுடிலை சார்....கவலைப் பட்டுட்டேயிருப்பா...தூங்கக் கூட மாட்டா....கையிலியே மொபைலை வச்சுட்டிருப்பா சார்.....SMS கூட ட்ரை பண்ணிட்டேன் சார்....போக மாட்டேங்குது...."

தாங்க முடியாமல் தயா கேட்டே விட்டான். "நீங்க லவ் மேரேஜா சார்.....?"

"ஏன் சார் அப்படிக் கேட்டீங்க?.....அவங்களைப் பற்றியே கவலைப்படுறேனேன்னு கேக்குறீங்களா...?...."

"இல்லே சார் இவ்வ்ளோ ஒட்டுதலா இருக்கீங்களேன்னு....."

"அது ஒரு பெரிய கதை சார்......கேக்குறதுக்கு நீங்க் விருப்பப் பட்டா சொல்றதுக்கு நான் ரெடி சார்......ஊருக்குப் போய்ச் சேர்வதற்கு முன்னாலே கண்டிப்பா முடிச்சுருவேன்...." என்றவாறு பளிச்சென்று சிரித்தார்.

அவராகவே தயாவின் அருகில் இருந்தவரை எழுப்பி அவரிடத்துக்குப் போகச் சொல்லி தயாவின் அருகே உட்கார்ந்து கொண்டார்.

"என்னடா....இப்பிடி ஆர்வமாயிருக்கிறேனேன்னு பார்க்குறீங்களா.....இதை நான் இதோட ஒரு அம்பது பேருக்காவது சொல்லிட்டிருக்கேன் சார்.அதைச் சொல்றதுலே அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு.....உங்களுக்குக் கேக்க இஷ்டம்தானே....."

தயாவுக்கும் இனி தூக்கம் வரப் போவதில்லை ....என்னதான் சொல்றாருன்னு பார்ப்போம் என்று சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.

அவரும் சாய்ந்து கொண்டார். அவரின் முகத்தை நன்றாக அப்போதுதான் பார்த்தான் தயா. நல்ல களையான முகம். பளிச்சென்ற பல் வரிசை.ஹேண்ட்சம் ஆண்களின் வரிசையில் முதல் இடம் பிடிக்கக் கூடியவர்.

ந்த ஜீவாப் பொண்ணு எங்க வீட்டுக்கு அடுத்தவீட்டுப் பொண்ணு. அவங்க வீட்டுலே நாலும் பொண்ணுங்க. அதனாலே எனக்கு அவங்க வீட்டுலே என்ன வேலைன்னாலும் சின்ன வயசுலேருந்தே நாந்தான் செய்வேனாக்கும். அதனாலே என் மேல ரொம்ப நம்பிக்கை

ஜீவா என் கூடதான் படிசசா . நாங்க எல்லாம் ஒண்ணாதான் காலேஜுக்கு டவுண் பஸ்ஸிலெ போவோம். அப்போலாம் பொண்ணுங்க கிட்டே அவ்வ்ளோ ஈஸியா பேசிர முடியாது....அதுங்களும் அவ்வ்ளோ லேசுலே பேசாதுங்க நம்மகிட்டேலாம். சும்மா பார்க்குறதோட சரி. அப்படித்தான் ரொம்ப நாளா நான் அந்தப் பொண்ணு ஜீவாவை எப்பிடியாவது நம்மளைப் பார்க்க வைக்கணும்னு ஸ்டைல்னா ஸ்டைல் அவ்வ்ளோ ஸ்டைலா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு கண்ணாடி கிண்ணாடி மாட்டிக்கிட்டுப் போவேன்.

அப்படித்தான் ஒருநாள் பஸ்ஸிலே போகும் போது  "இதை வச்சுக்கறீங்களா"ன்னு அவ புஸ்தகத்தை எங்கிட்டெ கொடுத்தா.அவ்வ்ளோதான் அவ எங்கிட்டே புஸ்தகத்தைக் கொடுத்ததே என்னை அவளுக்குப் புடிச்சுருக்குன்னு ஒரே ஆனந்தம்தான்.

அப்புறம்  நானே தினமும் வாங்கி வச்சுக்கிட ஆரம்பித்தேன்.என் ஃப்ரெண்ட் ஆனந்த்கிட்டே இதைப்பற்றிச் சொல்லி சொல்லி மகிழ்ந்திருக்கிறேன்.ஆனாப் பாருங்க அந்தப் பொண்ணு என்னைத் தலைநிமிர்ந்து கூடப் பார்க்காது. அதனாலேயே அந்தப் பொண்ணை அவ்வ்ளோ புடிச்சுது.இப்பிடியே  போயிட்டிருந்தப்போ மனசுலேருந்ததையெல்லாம் கொட்டி ஒரு லெட்டரை எழுதி வச்சுக்கிட்டு தினமும் இன்னிக்குக் கண்டிப்பா கொடுக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு வர்றதும் கொடுக்காமலே போவதுமாக நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது.

அப்படித்தான் ஒருநாள் இன்னிக்குக் கொடுக்காமல் வீட்டுக்குப் போறதில்லைன்னு நெனைச்சுட்டு கை காலெல்லாம் வெட வெடன்னு நடுங்க காத்துட்டு இருந்தப்போதான் அது நடந்துச்சு...........அந்த அதிர்ச்சி இன்னிக்கு வரைக்கும் என் மனசுலே படிஞ்சு கெடக்கு சார்....."

"அப்படி என்ன ஆச்சு சார் "என்று தயா ஆச்சரியத்துடன் கேட்டான்.

கொஞ்சம் வெறுமையாகப் பார்த்து விட்டுச் சொல்ல ஆரம்பித்தார். 

தொடரும்

Karai othungum meengal - 17

Karai othungum meengal - 19

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.