(Reading time: 22 - 44 minutes)

ப்படியும் இருக்குமா”

“சரி நீ இதை நினைச்சி இன்னும் டென்சன் ஆகாத. நான் வந்த உடனே எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன். நான் இன்னும் அம்மா கிட்ட பேசவே இல்லை. அது என் தப்பு தான். நான் வந்த உடனே முதல் வேலை அம்மாவை சரி பண்ண வேண்டியது தான். ஓகே வா”

“ம்ம்ம் சரி” என்றவளின் குரல் இன்னும் குழம்பி இருந்தது.

“சரி. டைம் ஆகிடுச்சி. நீ போய் தூங்கு. ப்ளீஸ். இல்லைன்னா நாளைக்கு காலைலயும் அத்தை முன்னாடி தூக்க கலக்கமா இன்னைக்கு மாதிரி போய் நின்னா அவங்க சும்மா இருக்க மாட்டாங்க. சொல்லிட்டேன்”

“இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ் ப்ளீஸ்”

“என்னடி வழக்கமா நான் தான் இப்படி கேட்பேன். இப்ப என்ன நீ இப்படி ஆகிட்ட”

“ஆமா. அப்ப நான் பெர்மிட் பண்ணேன் இல்ல. சோ இப்ப நீங்களும் பெர்மிட் பண்ணணும்”

“ஐயோ ஐயோ சரி சரி. இல்லன்னா நீ இப்படியே பேசி இன்னும் டைம் ஆக்கிடுவ”

“எல்லாம் நேரம் தான் போங்க. எனக்கும் டைம் வரும். பார்த்துக்கறேன்”

“பாக்கலாம் பாக்கலாம்”

“சரி மா. டைம் ஆகிடுச்சி. நான் போனை வைக்கவா”

“இளா. தூக்கம் வரலை இளா”

“ஏய் நான் என்ன டா சொன்னேன். பட் நீ இப்ப இப்படி அடம் பிடிக்கற”

“நிஜமாவே தூக்கம் வரலை. உண்மையை தானே சொல்ல முடியும்”

“சரி. பாப்பாக்கு நான் பாட்டு பாடுவேனாம். நீங்க தூங்குவீங்களாம். சரியா”

“ம்ம்ம்”

செல்லமே செல்லம் என்றாயடி

அத்தான் என்றே சொன்னாயடி

யாதுமாகி என் உள் நின்றாய் அடியே

செல்லமே செல்லம் என்றாயடி

அத்தான் என்றே சொன்னாயடி

யாதுமாகி என் உள் நின்றாய் அடியே

உன் கையில் நான் குழந்தையடி

என் கையில் நீ குழந்தையடி

ஒரு வார்த்தை சொன்னால் அடி

நாம் தாலி கட்டி கொள்வோம்.

“சரி. நான் போனை வைக்கறேன்”

“என்ன அதுக்குள்ளே மேடமே வைக்கறீங்க”

“எப்படியும் நீங்க அதை தானே சொல்வீங்க. அதான்”

“ஹாஹஹா பிரில்லியன்ட்”

“சரி வச்சிடவா”

“நான் உனக்கு தூங்கறதுக்கு ஒரு பாட்டு பாடினேன் இல்லை. அதே மாதிரி நீயும் நான் தூங்கறதுக்கு ஒரு பாட்டு பாடிட்டு போவியாம். சரியா”

“இல்ல. எனக்கு மூட் இல்ல”

“ப்ளீஸ் நானும் தூங்கனும் இல்லை ஒரே ஒரு பாட்டு டா”

உயிரின் உயிரே உனது விழியில்

என் முகம் நான் காண வேண்டும்

உறங்கும் போதும் உறங்கிடாமல்

கனவிலே நீ தோன்ற வேண்டும்

காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்

காலம் தாண்டி வாழ வேண்டும்

வேறு என்ன கேட்கிறேன்  

உயிரின் உயிரே   

என அதற்கு மேல் அவளால் பாட முடியாமல் அழுகை வந்து போனை கட் செய்து விட்டாள்.

திரும்பவும் இளவரசன் அழைக்கவும் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு “நீங்க தானே வைக்க சொன்னீங்க. அப்புறம் என்ன. நாளைக்கு பேசலாம் இளா”

“நீ இப்படி அழுதுட்டே வைச்சா நான் எப்படி அப்படியே போவேன். சொல்லு. ஏன்மா இப்படி பண்ற”

“சரி இளா. என்னால இப்ப பேச முடியும்னு தோணலை. நான் வைக்கறேன். நாம நாளைக்கு பேசலாம்”

“இல்ல ஒரு நிமிஷம்”

“இல்ல இளா. இப்படியே நாம மாத்தி மாத்தி பேசிட்டே இருக்க வேண்டியது தான். சோ விடுங்க. ஐ கேன் மேனேஜ்” என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டாள்.

போனை கட் செய்தவளுக்கு அழுகையை தாங்க முடியவில்லை. அழுதுக் கொண்டே இருந்தவளுக்கு உறக்கம் மட்டும் கண்களை தழுவவில்லை.

நெடு நேரம் யோசித்தவளுக்கு இளவரசன் சொன்ன ஒரு வார்த்தை மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. “அம்மா முதல்ல இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னதால அத்தையும் வேண்டாம்ன்னு சொல்றாங்களா இனியா”.

ஒருவேளை அப்படியும் இருக்குமோ.

திங்கள் கிழமை காலையிலேயே சீக்கிரமாக கிளம்பி வந்த இனியாவை என்னவென்று கேட்க தோன்றினாலும் ஏதும் கேட்காதவராக லக்ஷ்மி அமைதியாக இருந்தார்.

“என்னடி சீக்கிரம் கிளம்பிட்ட” என்று ஜோதி தான் கேட்டாள்.

“இல்ல சீக்கிரம் போகணும்க்கா” என்று கூறிவிட்டு கிளம்ப எத்தனித்தாள்.

“ஏய் என்னடி சாப்பிட கூட இல்லாம கிளம்பற”

“வேண்டாம்க்கா” என்று விட்டு கிளம்பி விட்டாள்.

நேராக இளவரசனின் வீட்டுக்கு சென்றாள் இனியா .

திடீரென்று அவள் வரவும் ஒரு நிமிடம் திகைத்த ராஜலக்ஷ்மி பின்பு சுதாரித்து “வாம்மா” என்று வரவேற்றார்.

என்ன பேசுவது என்று ஒரு நிமிடம் புரியாமல் திகைத்த இனியாவும் “ஏன் அத்தை நான் இங்கே வரக் கூடாதா” என்றாள்.

“ஏம்மா உன்னை யாரு அப்படி சொல்ல போறா”

“அப்ப ஏன் அத்தை நான் வந்தவுடனே ஒரு நிமிஷம் யோசிச்சிட்டு அப்புறம் வான்னு கூப்பிட்டீங்க”

“என்னம்மா இப்படி கேட்கற. என்னடா திடுதிப்புன்னு காலைலேயே வந்து நிக்கறயேன்னு தான் யோசிச்சேன். அது தப்பா. சொல்லு”

திரும்ப இனியாவால் ஏதும் சொல்ல இயலவில்லை.

ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தான் அவள் முகத்தை நன்றாக பார்த்தார். தூங்காமல் சிவந்து போன கண்களுடன் காலையிலேயே வந்திருப்பவளை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

“என்னம்மா ஏதும் பேசாம உட்கார்ந்திருக்க”

“அத்தை உங்களுக்கு என்னை பிடிக்கலையா அத்தை”

“என்னம்மா இது இப்படி கேட்கற. உன்னையா எனக்கு பிடிக்காது. ஏன் மா இப்படி கேட்கற”

“அப்ப ஏன் அத்தை எங்க கல்யாணத்துக்கு நீங்க ஒத்துக்க மாற்றீங்க. நான் ஏதாச்சும் தப்பு பண்ணிருந்தா சொல்லுங்க அத்தை. நான் மாத்திக்கறேன். இல்லை வேற ஏதாச்சும் பிரச்சனையா இருந்தாலும் சொல்லுங்க அத்தை. நேத்து நைட் புல்லா யோசிச்சிட்டேன். வேற எந்த பிரச்சனைன்னாலும் உங்களுக்கு பேசிக்கா என்னை பிடிச்சிருந்தா அந்த ஒரு விஷயம் மத்த எல்லா பிரச்சனையையும் ஓரம் கட்டிடும் தானே அத்தை. அப்படின்னா உங்களுக்கு என்ன பிடிக்கலைன்னு தானே அத்தை அர்த்தம். அது மட்டும் ஏன்னு சொல்லுங்க அத்தை” என்றாள்.

எதுவும் கூறாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராஜலக்ஷ்மியின் முகத்தையே பதிலுக்காக பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா.   

தொடரும்

En Iniyavale - 24

En Iniyavale - 26

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.