(Reading time: 22 - 44 minutes)

ல்ல இளா. நார்மலா இப்படி ஆகி இருந்தா கூட நான் அவ்வளவு பீல் பண்ணி இருப்பேனான்னு தெரியலை. ஆனா காலைல இருந்து நான் அவ்வளவு சந்தோசமா பீல் பண்ணினேன். திடீர்னு ஏதோ கனவு கலைஞ்ச மாதிரி இருக்கு. அதுவும் இல்லாம அம்மா எதுவும் திட்ட கூட இல்லாம என்னை முறைச்சிட்டு போனாங்க. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா”

“எனக்கு புரியுது டா. ஆனா அதையே நினைச்சி பீல் பண்ணிட்டு இருக்காத. இது ஒன்னும் நிரந்திரம் இல்லை. அத்தையே ஒத்துகிட்டு நம்ம கல்யாணம் நடக்க தான் போகுது”

“ம்ம்ம்”

“ஏண்டி நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்றேன். வெறும் ம்ம்ம்னு சொல்லுற”

“வேற என்ன சொல்லணும்”

“என்னென்னவோ சொல்லலாம். ஆனா எங்க நீ தான் வளரவே மாற்றியே”

“போங்க நீங்க வேற. நானே பீலிங்ல இருக்கேன்”

“பின்ன உனக்கு ஏதாச்சும் நல்ல பீலிங்கா வரப் போகுது. இப்படி உட்கார்ந்து அழ சொன்னா நல்லா ஒப்பாரி வைப்ப”

“---“

“சரி டீ. நான் போன் வைக்கறேன். பை”

“ஏன் இவ்வளவு சீக்கிரம் போன் வைக்கறீங்க”

“நீ தான் பேசவே மாற்ற, அப்படியும் பேசினா ஒரே சோகமா பேசுற, நான் என்னடி பண்ணுறது”

“அப்படின்னா நான் பீல் பண்ணும் போது நீங்க எனக்கென்னன்னு வச்சிட்டு போயிடுவீங்களா” என்று சொல்லும் போதே அவள் குரல் உள்ளடங்கி விட்டது.

“இல்லடி, நான் அப்படி சொல்லலை”

“போதும். நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்”

“இல்லடி”

“வேண்டாம். ஒன்னும் பேச வேண்டாம். போங்க. போனை வைங்க”

உன் கண்ணில் நீர் வழிந்தால்

என் கண்ணில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணில் பாவை அன்றோ

கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

உன் கண்ணில் நீர் வழிந்தால்

என் கண்ணில் உதிரம் கொட்டுதடி

“இளா”

“இது வெறும் பாட்டு இல்லை டீ. இந்த பாட்டுக்கு இது நாள் வரைக்கும் எனக்கு முழு அர்த்தம் தெரியாது. ஆனா இப்ப நான் அதை பீல் பண்ணேன். நமக்கு பிடிச்சவங்களுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா நமக்கு எவ்வளவு வலிக்கும்னு நான் இப்ப பீல் பண்ணேன். நீ ஏதும் சொல்லாம அழுகற. எனக்கு கொஞ்ச நேரம் என்ன ஏதுன்னு ஒன்னும் புரியலை. திடீர்ன்னு பார்த்தா என்னை அறியாம என் கண்ணுல இருந்து தண்ணி வந்திருக்கு.”

“இளா”

“அதெப்படி டீ உனக்கு ஒண்ணுன்னா நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துட்டு போவேன். சொல்லுடீ சொல்லு”

“சாரி இளா”

“போடி. உன் சாரியை நீயே வச்சிக்க”

“நிஜமாவே சாரி இளா”

“எனக்கு தெரியலை டீ. அதெப்படி நீ அப்படி ஒரு வார்த்தை சொன்ன”

“நீங்க ஏன் போன் வைக்கறேன்னு சொன்னீங்க. அதான் ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்”

“இப்பவும் தான் சொல்றேன். நான் போன் வைக்க போறேன்”

“இளா. நீங்க இப்படி பேசனா நான் திரும்ப அழுவேன். சொல்லிட்டேன்”

“ஏண்டி. உனக்கு சரியா மிரட்ட கூட தெரியலை”

“நீங்க பேச்சை மாத்தாதீங்க.”

“ஏய் நேத்து மாதிரி விடிய விடிய பேசற ஐடியா எனக்கு இல்லை. நாளைக்கு எனக்கும் வொர்க் இருக்கு. உனக்கும் இருக்கு. சோ நான் சீக்கிரம் போனை வச்சிடுவேன். நீ ஒழுங்கா தூங்கனும். சரியா”

“இல்ல எனக்கு தூக்கம் வர மாதிரி எனக்கு தெரியலை. உங்க கிட்ட பேசிட்டிருந்தாவாவது நான் ஏதும் தேவை இல்லாம யோசிக்காம இருப்பேன். ப்ளீஸ் இளா கொஞ்ச நேரம் பேசிட்டிருங்க”

“சரி. மேக்சிமம் ஒரு அரை மணி நேரம். அப்புறம் நீ தூங்கிடனும். சரியா”

“ம்ம்ம்”

“அது மட்டுமில்லாம தேவை இல்லாம நீ ஏதும் இப்ப பேசினியே அந்த மாதிரி பேசக் கூடாது. புரியுதா”

“ம்ம்ம்.”

“சரி சொல்லு. நாளைக்கு வேலைக்கு போக போற தானே”

அப்போது தான் இனியாவிற்கு நாளை ஸ்வேதா வேறு ஹாஸ்பிடல் வருகிறேன் என்று மெசேஜ் அனுப்பியது நியாபகம் வந்தது. திரும்பவும் அவளுக்கு ஐயோ என்று ஆகியது. இருக்கும் பிரச்சனை எல்லாம் போதவில்லை என்று இது வேறவா என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால் உடனே அவளுக்கு நான் தானே எல்லாவற்றையும் சரி செய்து வைக்கிறேன் என்று கூறினேன். அதுவும் இது அவளின் பிரச்சனை மட்டுமில்லாமல் சந்துருவுடையதும் தானே. நான் எப்படி இப்படி சுயநலமாக என்ன ஆரம்பித்தேன் என்று எண்ணி மேலும் வருந்தினாள்.

“என்னடி திடீர்ன்னு அமைதியாகிட்ட”

“என்ன சொல்லுங்க”

“நாளைக்கு ஹாஸ்பிடல் போற இல்லைன்னு கேட்டேன்”

“ம்ம்ம். போவேன்.”

“சரி. அங்கயும் போய் அழுமூஞ்சி மாதிரி நிக்காத சரியா”

“ம்ம்ம்.”

“எனக்கு ஒரு டவுட். அம்மா முதல்ல இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னதால அத்தையும் வேண்டாம்ன்னு சொல்றாங்களா இனியா”

“இளா அப்படி கூடவா இருக்கும். அம்மா கிட்ட வேற ஏதாச்சும் ரீசன் இருக்கும் இளா”

“இல்லை டீ. எங்கயும் மாப்பிள்ளை வீட்டுல தான் வந்து பொண்ணு கேட்கணும். இங்க என் அம்மா வேண்டாம்ன்னு சொல்லிட்டதால அத்தை அதை பிரஸ்டீஜ் இசூவா நினைக்கறாங்களோன்னு எனக்கு தோணுது”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.