(Reading time: 22 - 44 minutes)

வனோ அவளின் மன நிலைக்கு எதிராக உற்சாகமாக பேசினான்.

“என்னடீ ரிங் போச்சா இல்லையான்னே எனக்கு டவுட்டா இருக்கு. நீ என்னடான்னா உடனே பேசுற. மாமா போன் பண்ணுவேனான்னு பார்த்துட்டே இருந்தியா”

அவளுக்கு தான் தொண்டையில் ஏதோ தடுப்பது போல் பேசவே முடியவில்லையே.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை” என்று தன் அழுகுரல் அவனுக்கு தெரிந்து விடுமோ என்று மெதுவாக கூறினாள்.

ஆனால் அதற்குள்ளே அவனுக்கு அவள் குரலின் வித்தியாசம் தெரிந்தது.

“ஏய் இனியா என்னாச்சி டா. ஏன் உன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு” என்றான் சீரியஸ் குரலில்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லையே” என்று திரும்பவும் வரவழைத்த தெம்பான குரலில் கூறினாள்.

ஆனால் அவனோ அதை ஏற்றுக் கொண்டால் தானே.

“அப்படியா”

“ம்ம்ம்”

“என்னடி இப்ப என் கிட்ட உண்மையை சொல்ல போறியா இல்லையா” என்று அதட்டினான்.

எவ்வளவோ சமாளிக்க முயன்றும் தோற்று போனவளால் அழ மட்டுமே முடிந்தது.

அவளின் அழுகையை கேட்டவனால் என்னவென்றே யூகிக்க முடியவில்லை.

“ஏய் என்னடா என்னாச்சி மா” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆனால் அவளோ பதில் கூறினால் தானே.

அவளின் அழுகையின் ஊடே “இளா” என்று மட்டும் கேட்டது.

“ஏய் நான் என்னடி நினைக்கறது. நாலு மணி வரைக்கும் நல்லா பேசிட்டு போனவ இப்ப இப்படி ஏண்டி அழுகற”

எதற்கும் எந்த பதிலும் இல்லை. அவளின் அழுகுரல் மட்டுமே பதிலாய் வந்தது.

“ஏய் என் செல்லம்ல ஏண்டா அழுகற, ப்ளீஸ் மா ப்ளீஸ் இங்க நான் சொல்றதை கொஞ்சம் கேளேன். நான் இங்க இருந்துட்டு நீ அழுறதை கேட்டுட்டு நான் என்ன பண்ண முடியும். நான் எப்படி பீல் பண்ணுவேன்னு நீயே கொஞ்சம் நினைச்சி பாரேன்” என்றவன் அப்போது தான் உணர்ந்தான் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை.

“ம்ம்ம். ஹலோ” என்றவளால் தொடர்ந்து பேச இயலவில்லை.

தன் குரல் தழுதழுக்காமல் இருக்க தொண்டையை செருமி சீர்ப்படுத்திக் கொண்டு “ஏய் இப்ப அழுகையை நிறுத்துறியா இல்லையாடீ, பேசமாட்ட அழ தான் போறேன்னா போன் கட் பண்ணிட்டு அழு. அதை விட்டுட்டு மனுசனை டென்சன் பண்ணிக்கிட்டு” என்று அவன் கோபமாக பேசியவுடன் தான் விக்கித்து நின்ற அவள் அழுகை நின்றது.

ஆனால் பேச பயந்தவளாக ஏதும் பேசாமல் இருந்தாள்.

“இப்ப பேச போறியா இல்லை போனை வச்சிடவா”

“இளா” என்றாள் தேம்பலுடன்.

“எதாச்சும் பேசு டீ. எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லிடு. எதுவுமே சொல்லாம நீ அழுதா நான் இங்க இருந்துட்டு என்ன டீ பண்ணுவேன்”

சிறிது அழுகையினூடே நடந்த எல்லாவற்றையும் கூறினாள்.

“இதுக்கா டீ அழுற.”

“என்ன இப்படி சொல்றீங்க. காலைல மாமா பேசனதுல இருந்து அம்மா கண்டிப்பா ஒத்துப்பாங்கன்னு நான் எவ்வளவு சந்தோசப் பட்டேன் தெரியுமா. ஆனா இப்ப நாங்க பேசனதை கேட்டுட்டு அம்மா நெற்றிக் கண் திறக்காத குறையா எங்களை முறைச்சிட்டு போனாங்க தெரியுமா” என்றாள்.

“போடி இவளே. அவங்க உன்னை முறைக்காம என்ன பண்ணுவாங்களாம். மாமா சொன்ன மாதிரி நீ பர்ஸ்டே எதுவும் சொல்லாம நடக்கறது நடக்கட்டும்ன்னு இருந்திருந்தா பரவால்ல. அப்ப ஏதோ ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி எதுவும் வேண்டாம்ன்னு சொல்லிட்ட. அதுல அத்தை உன்னை ரொம்ப பெருமையா நினைச்சிருப்பாங்க. இப்ப இந்த விஷயம் தெரிஞ்ச உடனே ரொம்ப கோப படறாங்க. அவ்வளவு தான்.”

“என்ன இவ்வளவு ஈசியா சொல்றீங்க” என்றாள் வருத்தத்துடன்.

“இல்லடா. ஒரு விஷயம் முதல்ல தெரிஞ்ச உடனே வர முதல் கட்ட அதிர்ச்சி தான் இது. அதனால நீ ரொம்ப இதை நினைச்சி உன்னை வருத்திக்காத. எப்படியும் அவங்க உன் அம்மா. உனக்கு கெடுதல் செய்யணும்ன்னு நினைக்க மாட்டாங்க. புரியுதா”

“இருந்தாலும் எனக்கு கஷ்டமா இருக்கு இளா”

“இங்க பாருடீ. நீயே ஏற்கனவே சொல்லி இருக்க இல்ல. முன்னாடி உன்னை அத்தை எப்படி கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டுட்டே இருப்பாங்கன்னு. ஆனா இப்ப நம்ம கல்யாணத்துக்கு அவங்க ஒத்துக்கலைன்னாலும் உன்ன முன்ன மாதிரி இப்ப கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி கேட்கறது இல்ல தானே. அதுக்காக அவங்க நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்ன்ற ஐடியால இருக்காங்கன்னு நான் சொல்லலை. ஆனா நீயே யோசிச்சி பாரு. இதே மாதிரி வேற எங்கயாச்சும் நடந்திருந்தா அந்த பேரண்ட்ஸ் அந்த பொண்ணுக்கு உடனே அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு தானே நினைப்பாங்க. ஆனா அத்தை எல்லாருக்குமே யோசிக்க ஒரு டைம் கொடுத்திருக்காங்க இல்ல”

“நீங்க சொல்றது எல்லாம் சரி தான். ஆனா என்னால முடியலை இளா” என்று திரும்ப அதிலேயே வந்து நின்றாள்.

“சரி அதை விடு செல்லம். நான் இருக்கேன் இல்ல. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். நீ தேவை இல்லாம டென்சன் ஆகாத. சரியா”

“ம்ம்ம்” என்றவள் உடனே “நம்ம கல்யாணம் நடக்கும் தானே இளா” என்றாள்.

“ஏண்டீ உனக்கு இந்த டவுட் வருது. கண்டிப்பா நடக்கும்”

“ம்ம்ம்”

“ஏண்டி ஸ்ருதி ஏறவே மாட்டேங்குது. ஏன் இப்படி டல்லாவே பேசுற”

“நீங்க சொல்றது எல்லாமே எனக்கு புரியுது. ஆனா என்னால பிரச்சனைக்கு வெளியே வந்து யோசிக்க முடியலை. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”

“வேண்டாம் டா. இந்த பேச்சு வேண்டாமே ப்ளீஸ்”

“ம்ம்ம். சரி. வேற எதாச்சும் பேசுங்க”

“சரி. நீ சாப்பிட்டியா. சொல்லு

“ம்ம்ம்”

“நீ எங்கே ஒழுங்கா சாப்பிட்டிருக்க போற. சரி தானே”

“ம்ம்ம். சாப்டேன். பட் பிடிக்கலை. அதனால கொஞ்சமா சாப்டேன். ஆனா சாப்டேன்”

“சரி சரி. நீ இப்ப ஒழுங்கா பேச போறியா இல்லையா. ஏன் நான் அவ்வளவு சொல்லியும் இப்படி சோகமா பேசிட்டிருக்க சொல்லு”

“நீங்க எப்படி தான் இப்படி நார்மலா இருக்கீங்களோ எனக்கு தெரியலை”

“நானும் உன்னை மாதிரி சோக ராகம் வாசிக்கணும்ன்னு நினைக்கறியா.”

“நான் ஒன்னும் அப்படி சொல்லலை”

“போடி இவளே. நீ ஒண்ணுமே சொல்லாம அழுகவும் எனக்கு எப்படி இருந்துச்சி தெரியுமா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.