(Reading time: 33 - 65 minutes)

““ன்னும் இல்லை இப்போவெல்லாம் foreign கே போறாங்கனு சொன்னேன்”” என்று ஏதோ சொல்லி சமாளித்தான், அவன் இப்போது கூறியது அவள் தோழிகள் கிண்டல் செய்ததை நினைவுப்படுத்த புன்முறுவல் பூத்தால் அவன் மீண்டும் புரியாமல் கேட்க, ““இல்லை என் ஃப்ரிண்ட்ஸ் கூட அதான் சொன்னாங்க”” என்று கொஞ்சம் தட்டு தடுமாறி சொன்னாள் அவள் சொன்ன விதத்திலேயே அவர்கள் தன்னை வைத்துதான் கிண்டல் செய்திருகிறார்கள் என்று புரிந்து போக, ““சரியா தான் சொல்லிருக்காங்க”” என்று கூறி ரகசிய புன்னகை பூத்தான். அந்த பேச்சு காரணம் இல்லாத கூச்சத்தை தர பேச்சை மாற்றுவதற்காக அவனது மோதிரத்தை பற்றி பேச துவங்கினாள்.

““உன் ரிங் கிடைச்சிதா?”” என்று அவள் கேட்ட மறுநொடி அவன் முகம் மாறியது. ஆசையாய் பார்த்து வாங்கிய மோதிரத்தை துளைத்த வருத்தம், அது என்னவோ அனு தன்னை விட்டு தள்ளி சென்ற உணர்வை தர மௌனமாக வேறெங்கோ பார்ப்பது போல் ““இல்லை”” என்று மட்டும் தலையசைத்தான். அவனது செயலில் அவன் எவ்வளவு வருத்த படுகிறான் என்று புரிந்து போனவளுக்கு குற்ற உணர்வு தொற்றிக்கொண்டது. தன்னால் தானே இப்படி வருந்தும் அளவிற்கு போனது என்று தோன்றினாலும் மோதிரத்தை கொடுக்கவும் மனம் இடம் தரவில்லை. அதை தந்துவிட்டால் அஸ்வத் தள்ளி சென்றதுபோல் உணர்வு ஏற்படுமே என்று அவள் வருந்த மௌனமாய் இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.

ன்று நாள் முழுவதும் வேகமாக செல்ல, விருப்பட்ட இடத்தையெல்லாம் சுற்றி பார்த்தனர். என்னதான் வெளியில் சந்தோஷமாக சுத்தினாலும் ஒரு ஓரத்தில் மனசு வருத்ததுடனே இருந்தது அனுவிற்கு. ஒரு நாள் முழுவதும் ஆட்டத்தில் போக மறுநாள் அனைவரும் ஷாப்பிங்கில் இறங்கினர். அவரவர் ஆசை பட்டதை வாங்கிக்கொண்டு வீட்டை அடைவதற்கே இரவாகி போக, மனம் சோர்ந்து போனது விடிந்தால் கிளம்ப வேண்டும். சந்தோஷமாக இருக்கும் நாட்கள் மட்டும் வேகமாக செல்வது போல் தோன்றும் அதே போல் தோன்ற வேறுவழியின்றி வெகு நேரம் அனைவரும் சேர்ந்து அமர்ந்து கதை பேசிவிட்டு உறங்க சென்றனர்.  

காலை அரக்க பறக்க எழுந்து கிளம்பி வந்த கேசவ் இன்னும் யாரும் கிளம்பாமல் இருப்பதை கண்டே புரிந்து கொண்டார் யாருக்கும் மனம் இல்லை என்று, இருந்தும் என்ன பயன் ஒவ்வருதராக கிளப்பிக்கொண்டு இருந்தார். வந்த போது இருந்த துள்ளல் இல்லை, மீண்டும் அதே வகுப்பறை என்னதான் லூட்டி அடித்தாலும் படிக்க வேண்டுமே என்று வருத்தப்படும் அருண் அண்ட் கோ குழு.. எப்படியோ கிளம்பி காலேஜ் வந்தடைந்தனர்.. அனைவரும் பேசியவாறே குழுகுழுவாக பிரிந்து சென்றனர்.

அஸ்வத் முன்னே சென்று கொண்டிருக்க ““அஸ்வத்”” என்று அழைக்கும் குரல் கேட்டு திரும்பினான், அனு நின்றுக்கொண்டிருந்தாள்.

““என்ன அனு?”” என்று அவன் கேள்வியாய் பார்க்க.. அனு ஒரு அழகிய மோதிரத்தை தந்தாள். அது பார்க்க அஸ்வத் வைத்திருந்த மோதிரத்தின் சாயலில் இருந்தது.. அழகாய் சில்வர் நிறத்தில் மேலும் கீழும் கருப்பு நிற கோடுகள் போட்டு அதே நிறத்தால் A என்று எழுதி இருந்தது. அதை பார்த்த அஸ்வத்தின் கண்கள் மின்னியது, அது அந்த மோதிரதிற்காக அல்ல தனக்காக என்று அவள் தேடி வாங்கி வந்துள்ளாள் என்ற நினைப்பில் சந்தோஷத்தை முகம் காட்ட சிலையாய் நின்றான்.

அவன் ஏன் வாங்காமல் நிற்கின்றான் என்று புரியாமல், ““உன்னோட மோதிரம் மாதிரி இருக்காது ஆனால் கொஞ்சம் அழகா தான் இருக்கும்”” என்று பிடிக்காமல் போய்விடுமோ என்று கொஞ்சம் தயங்கினாலும் புன்முறுவளுடனே நீட்டினாள். இம்முறை மனம் நிறைந்து போக ““ரொம்ப அழகா இருக்கு”” என்று அவளை பார்த்து கூறியவாறே வாங்கிக்கொண்டான்.

அவள் தந்துவிட்டு நகர முற்பட, ““எனக்காகவா வாங்கின?”” என்று அவன் மென்மையாக கேட்க, அவள் சிரித்தாள் ““இது என்ன கேள்வி உன்கிட்ட வந்து தரேனா அப்போ உனக்காக தானே வாங்கினேன்னு அர்த்தம்?!”” என்று கூறினாள்.

““இல்லை எனக்காக நீ ஏன் போய் வாங்கின?”” என்று அவள் கண்கள் பார்த்து கேட்டான்.

உன் மோதிரம் என்னிடம் இருக்கு, அதனால் நீ வருத்தபடும் போதெல்லாம் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூற மனமின்றி, ““நீ அந்த மோதிரம் காணாம போனதிலிருந்து ரொம்ப வருத்தப்பட்ட அதான் கஷ்டமா இருந்துச்சு வாங்கினேன்”” என்று பாதி உண்மையை கூறிவிட்டு ஐயோ இப்படியா சொல்லுவது சரி சமாளிப்போம் என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

இந்த வார்தைகளுக்காகவே காத்திருந்தாற்போல், ““நான் வருத்தபட்டால் நீ என் கஷ்டப்படனும்?”” என்று மெல்லிய புன்னகையுடன் கேட்டான்.

இப்போது என்ன சொல்வது என்று புரியாமல் போக சமாளிப்பதற்காக, ““நீ கூட தான் எனக்கு அடிபட்டப்போ அவ்ளோ கேர் எடுத்துகிட்ட அந்த மாதிரி தான்”” என்று கூறிவிட்டு இன்னும் பேசினாள் நம் வாயில் இருந்தே வாங்கிவிடுவான் என்று எண்ணிக்கொண்டு விறுவிறுவென சென்றுவிட்டாள்         

அவள் செல்வதையே ரசித்து ஆனந்தமாக பார்த்துக்கொண்டிருந்தான் அஸ்வத். இவர்கள் இப்படி பேசிகொள்வதையும் மோதிரத்தை தந்ததையும் கண்ணில் பொறாமையுடன் பார்த்தவாறு நின்றான் தர்ஷன். ஊட்டியில் நடந்ததை எல்லாம் பார்த்தவனுக்கு முன்பே பொறாமையாக இருந்தது, இப்போது அது மோதிரம் வரை வந்ததை நினைத்து எருச்சலாக இருந்தது அவனுக்கு. இவர்களை பிரிக்கும் நேரம் நோக்கி கங்கணம் கட்டி காத்திருந்தான்.     

இப்படியே காதல் பார்வைகளிலும், அரட்டை வகுப்பிலும், கிண்டல் பேச்சுகளிலும், நாட்கள் மெல்ல நகர 5 நாட்கள் தொடர்ந்து விடுப்பு கிடைக்க, விடுதி மாணவர்கள் எல்லாம் அழுக்கு மூட்டை கட்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினர். அர்ஜுனும் சிறிது நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு வருவதாக கூற அவனும் அனன்யாவும் சேர்ந்து வீட்டிற்கு சென்றனர்.

““டீச்செரம்மா”” என்று கூறிக்கொண்டு ஆசையாக தன் தாயை கட்டிக்கொண்டாள் அனு. ““என்னடி இப்படி இளைச்சு போயிருக்க? ஒழுங்கா சாப்பிடறது இல்லையா?”” என்று செல்ல அதட்டல்கள் வந்தது ஹேமாவிடம் இருந்து.

““அதெல்லாம் நல்லாத்தான் இருக்கேன்”” என்று கூறிக்கொண்டு ஆயாசமாக ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து இருந்த தந்தையின் மடியில் படுத்துக்கொண்டாள். அவரும் பாசமாக அவளது தலையை கோதிவிட்டார்.         

அவளை போல் ஊரை கூட்டாமல் அமைதியாய் வீட்டினுள் வந்து அமர்ந்தான் அர்ஜுன். ““ஒருவழியா ரெண்டு பேருக்கும் சேர்ந்து நேரம் கிடைச்சுதா வீட்டு பக்கம் வர?”” என்று கூறிக்கொண்டு குடிக்க காபி கொடுத்தார். அனு தன் பையில் இருந்து அவர்களுக்கு வாங்கி வந்ததை ஆசையை தந்தாள். ஹேமாவிற்கு சேலை, வெங்கட்டிற்கு சட்டை, அர்ஜுனுக்கு ஒரு கூலிங் கிளாஸ் என்று வாங்கி வந்திருந்தாள். மகள் வாங்கி வந்ததை பெருமையாய் வாங்கிக்கொண்டு பேச்சை தொடர்ந்தார் ஹேமா.

““சரி ரெண்டு பேரும் அதிசயமாய் வீட்டில இருக்கீங்க நம்ம குலதெய்வம் கோயில்ல நாளைக்கு திருவிழா இருக்கு அதுக்கு போயிட்டு வந்திடலாம்”” என்று தனது என்னதை கூற, அனு குதித்தாள் ““ஹையா அந்த கோவிலுக்கு போயே ரொம்ப நாள் ஆச்சு, அதுவும் திருவிழா அப்போ வேற போறோம் சூப்பரா இருக்கும்”” என்று சந்தோஷமாக குதித்தாள். அர்ஜுனும் அதை ஆமோதிக்க அடுத்த நாளைக்கு தேவையான பொருட்களை எடுத்துவைக்க துவங்கினார் ஹேமா. ஹேமா ஏதோ செய்வதை பார்த்த அனு ““என்னம்மா கோவிலுக்கு தானே போறோம் அதுக்கு எதுக்கு அரிசி சக்கரை எல்லாம்...”” என்று புரியாமல் கேட்டாள்.

““திருவிழாக்காக மட்டும் போகலை அனு, உன் அண்ணனுக்கு கல்யாணம் சீக்ரம் நடக்கனும்னு பொங்கல் வச்சு வேண்டிக்க போறோம்”” என்று அடிக்கியவாறே ஹேமா சொல்ல, அனு பதிலுக்கு ““அட பாருடா அப்போ சீக்ரமே எனக்கு ஒரு அண்ணி வர போறாங்கனு சொல்லுங்க”” என்று கூறி அண்ணனை கிண்டலாக பார்த்தாள். அவள் கூறிய செய்தியில் அஹல்யாவின் நினைப்பு வர மெல்லியதாக சிரித்தான் அர்ஜுன். அவளை தொடர்ந்து ஹேமாவே, ““அண்ணி எல்லாம் ரெடி தான் உன் அண்ணா மட்டும் ஓகே சொன்னால் அடுத்து கல்யாணம் தான்”” என்று தனது மனதில் இருப்பதை இப்படி கூறினார்.

அதை கேட்ட அனுவிற்கு சந்தோஷம் பொங்க அண்ணனை பார்த்து கிண்டல் அடிக்க திரும்ப ஆனால் அர்ஜுனின் முகம் இப்போது சுருங்கி இருந்தது. அனு குழம்பினாள், கல்யாணம்னு சொன்னதும் வெட்கப்பட்டார் இப்போ பொண்ணு ரெடினு சொன்னதும் மூஞ்சி சுருங்குதே.... சம்திங் wrong... என்று மனதில் நினைத்துக்கொண்டு. ““அது சரி அண்ணாவுக்கு பிடித்தால்தான் கல்யாணம்”” என்று அந்த பிடித்தாலில் அழுத்தம் தந்து கூற, அர்ஜுனின் முகம் தெளிந்தது.

அவனின் முகத்தை வைத்தே ஏதோ ஒன்று நடப்பது புரிந்து போக மர்மமாக சிரித்துக்கொண்டாள்.

““வாடா தென்னை மரம் எப்படி இருக்க? டூர் எப்படி போச்சு?”” என்று வெகு நாள் கழித்து வரும் தம்பியை அஹல்யா அன்பாக அழைக்க ஆனந்தமாகவே உள்ளே வந்தான்.

““எல்லாம் நல்லாத்தான் இருக்கேன் உனக்கு மட்டும் எதுவும் வாங்கிட்டு வரலை அக்கா”” என்று வேண்டும் என்றே வம்பிழுத்தான்.

““வாங்காமல் வந்திருவியா? இங்க வந்தால் என்கிட்ட உதை கிடைக்கும்னு உனக்கு தெரியாதா என்ன?”” என்று அவர்களுக்குள் விளையாடிக்கொண்டிருக்கையில் துளசி மணக்க மணக்க கையில் காபியோடு வந்தார். அதை அனுபவித்து குடித்துவிட்டு சோபாவில் தாயின் மடியில் படுத்துக்கொண்டான். இவன் படுத்துக்கொண்டு இருக்க, அஹல்யா அவனது பையை நோண்டினாள். ““லூசு அக்கா நானே எடுத்து தர மாட்டேனா?”” என்று கேட்டவாறு படுத்து இருந்தான்.

““நீ எப்போ எழுந்து எப்போ எடுத்து தரவது நானே எடுத்துக்குறேன்”” என்று கூறி தனக்கு வாங்கி வந்த வளையல், காதணி, உடைகளைகளை பார்த்து எடுத்துக்கொண்டாள். அன்னையின் மடியில் புன்னகையுடனே கண்களை மூடியவாறு படுத்திருந்தான் அஸ்வத். அவனது தலையை கோதியவாறு என்னப்பா ரொம்ப சந்தோஷமாய் இருக்க போல, என்ன விஷயம்? என்று கேட்க பதில் என்னவென்று சொல்வது என்று யோசித்து ““ஒன்னும் இல்லை அம்மா”” என்று மறைத்து மோதிரத்தை பார்த்துக்கொண்டான். அவன் மனம் முழுவதும் அனன்யா இருந்தாள்.

““சரி நீயும் இருக்கப்பவே நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்திடலாம் அஸ்வத். நாளைக்கு போகலாம்னு முடிவு பண்ணிருக்கோம்”” என்று அறிவிப்பு தர அவனும் சரி என்று ஒத்துக்கொண்டான்.         

Go to Kadhal payanam # 08

Go to Kadhal payanam # 10

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.