(Reading time: 33 - 65 minutes)

****ஊட்டி****  

சுற்றி வளைந்து ஏறும் மலை பிரதேசப் பாதை, எங்கு பார்த்தாலும் சென்னையில் பார்க்க முடியாத பசுமையான சுற்றுபுறம். சில்லென்ற காற்று உடலை குளிர வைக்க, பசுமையான பாதைகள் கண்களை குளிர வைத்தது. அருகில் இருந்த தோழி உறங்கிக்கொண்டிருக்க விடியற் காலை ஊட்டியின் வாயிலை அடைந்த அறிகுறியாய் காற்று உடலை வருடி சென்றது. அந்த குளிர் தாங்காமல் முகத்தையும் சேர்த்து போர்த்திக்கொண்டு ஆர்த்தி உறங்க, யூக்கலிப்டஸ் மரத்தின் மணம் நாசியை வருட குளிர் காற்றோடு அந்த மணத்தையும் சேர்த்து உள்ளே இழுத்துக்கொண்டாள் அனு. வாகனமே அமைதியாக வர, மனம் மட்டும் தனக்கு தானே பேசிக்கொண்டு வந்தது, எத்தனை நாள் ஆசை, இப்படி ஒரு குளிர் பிரதேசம் போக வேண்டும், இப்படி பச்சை பசேலென இருக்கும் இடத்தை ரசிக்க வேண்டும், வாகனத்தில் சாய்ந்து அமர்ந்து சென்றவாறே மெல்லிசை கேட்டுக்கொண்டு வெளிப்புறத்தை ரசிக்க வேண்டுமென்று, நினைத்ததெல்லாம் நடக்க கண்கள் மூடி ஒருநிமிடம் அனுபவித்தாள்.

விடுப்பு எடுத்த என்னை ஏன் எழுப்புகுறாய் என்று வான்மகளிடம் அழுத்துக்கொண்டே மேக போர்வையில் இருந்து மெதுவாக எட்டி பார்த்து வருபவர்களை தூக்க கலக்கத்துடனே வரவேர்த்தான் கதிரவன்.

வாகனம் சென்று ஒரு பெரிய வீட்டின் முன் நிற்க, மாணவர்கள் அனைவரும் தங்களுக்குள் பேசியவாறே இறங்கினர். பெரிய வீட்டிற்கே உரிய கம்பிரத்துடன், வீட்டின் முன்புறத்தில் பெரிய தோட்டத்தையும் கொண்டிருந்தது. வீடு மலைமீது இருந்தமையால் சுற்றி இருக்கும் பசுமையின் அழகை நன்கு ரசிக்க கூடியதாய் இருந்தது. கீழ் இருந்த பகுதியை காட்டிலும் அந்த வீடு இருக்கும் இடம் மிகவும் சில்லென்று இருந்தது. அந்த குளிர் தாங்காமல் பெண்கள் எல்லாம் கைகளை தேய்த்து தேய்த்து கன்னத்தில் வைத்துக்கொள்ள, இதெல்லாம் ஒரு குளிரா என்று வெளியே பந்தா பண்ணிக்கொண்டு உள்ளே நடங்கிக்கொண்டு வந்தனர் மாணவர்கள்.  வீட்டை பற்றி பேசியவாறே மாணவர்கள் இருக்க அவர்களது microprocesser ஆசிரியர் அவர்கள் முன் வந்தார்.

““welcome to my sweet home students, இது எங்களோட வீடுதான்”” என்று அவர் கூறுவதை புரியாமல் பார்த்தனர் மாணவர்கள். ““இது எங்க தாத்தா காலத்தில் கட்டிய வீடு, பயப்புடாதிங்க இப்போ இருக்கும் நிறைய பில்டிங்கை விட இது ரொம்ப stronga இருக்கும்”” என்று புன்முறுவலுடன் கூறி அவர்களை உள்ளே அழைத்து சென்றார் கேசவ். ““சென்னையில் வேலைக்கு வந்து சேர்ந்ததும் இதை உபயோகிக்கவில்லை, சரி 3 நாள் எங்கோ தங்குவதுக்கு என் வீட்டிலேயே தங்கலாம்னு தான் இங்கே அழைத்து வந்தேன்”” என்று முழுவிவரத்தையும் சொல்லிக்கொண்டு இருந்தார்.        

பழைய காலத்து வீடு என்று சொல்லவும் கிண்டல் செய்த மாணவர்கள் எல்லாம் உள்ளே வந்து வீட்டை பார்த்ததும் வாயை பிளந்தனர். அந்த காலத்திலேயே மாடர்ன் ஆக வீட்டை கட்டிய பெருமை கேசவின் தாத்தாவிற்கே உரியது... பழமையும் விட்டு போகாமல் கலை நயத்தோடும் கொஞ்சம் மாடர்ன் லுக்கோடும் அனைவரையும் வசீகரிக்கும் வண்ணம் இருந்தது அந்த வீடு. ஒவ்வருத்தரும் ஒவ்வன்றின் மீது கவரபட ஆங்காங்கே பிரிந்து சென்று பார்த்தனர்.

மீண்டும் அவர்களை ஒன்று திரட்டி அறிவிப்பு தந்து அவர்களது அறைக்கு அனுப்புவதற்குள் கேசவிற்கு விழி பிதிங்கியது. அனைவரும் சிறிது நேரம் உறங்கி எழுந்த பின் பூங்காவை சுற்றி பார்க்க செல்வதாக முடிவு செய்தனர். அனைவரும் சேர்ந்து கிளம்புவதற்குள் மீண்டும் மூச்சு திணறியது கேசவிற்கு ஒற்றை வாலை சமாளிப்பதே கடினம் இதில் 25 வாலுகளை சமாளிக்க தன்னை தனியாக அனுப்பிய பிரின்சிபாலை நினைத்து அலுத்துக்கொண்டார். என்றோ ஒரு முறைதான் இந்த வாய்பே கிடைக்க, போடோவில் நன்றாக இருக்க வேண்டும் என்று அலங்காரமெல்லாம் பக்காவாக நடந்து முடிந்து எல்லா பெண்களும் வெளியே வந்தனர். உங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் ஆண்களும் ஜெர்கிங், கூலர்ஸ் என்று பக்கா உடுப்பில் வந்தனர்.

ஸ்சில் சென்றால் முழுதாக ரசிக்க முடியாது என்று சிலர் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டனர், சிலரோ பொறுமையாக நடந்து வந்தனர், இரண்டிலும் பிடிப்பு இல்லாதவர்கள் பஸ்சிலேயே வந்து சேர்வது என்று முடிவு செய்தனர். ஒருவழியாக அரட்டை காதை கிழிக்க பூங்கா முழுவதும் சுற்றி திரிந்தனர். அங்கு செல்பவர்கள் கண்கள் எல்லாம் கூட்டமாக அரட்டை அடித்து ஆட்டம் போட்டு சந்தோஷமாய் சுற்றி திரியும் அந்த வானரங்கள் மீதே இருந்தது.

இவர்களை போல் அங்கங்கு சில கூட்டங்கள் இருக்கதான் செய்தது. “அய்யய்யோ...” என்று தலையில் அடித்துக்கொண்டாள் ஆர்த்தி, அவள் கூறியது காதில் கேட்டு திரும்பிய தோழிகள் ““என்னடி என்ன ஆச்சு?””

““ஒன்னும் இல்லைடி என்னோட handbagஐ நம்ம உட்காந்திருந்த இடத்திலேயே வச்சிட்டு வந்துட்டேன். நீங்க போய்கிட்டே இருங்க வந்திடுறேன்”” என்று சொல்லி சென்றாள். அங்கே சென்ற பின்பு தான் அவளுக்கு கலக்கமே ஆரம்பித்தது. அவள் கைப்பை வைத்திருந்த இடத்தில் இப்போது வேறொரு கும்பல் இருந்தது. அவர்கள் காலை முதலே தங்களை நோட்டம் விடுவதை உணர்ந்துதான் இருந்தாள், இப்போது எப்படி தனியாக சென்று சமாளிப்பது என்று சிந்தனையோடு தயங்கி நிற்க, பின்னாலேயே அருண் வந்து சேர்ந்தான்.

““ஏய் இன்னும் இங்க என்ன பண்ணுற? வா”” என்று சொல்லி அவன் முன்னே செல்ல இவன் எதற்கு வருகிறான் என்று புரியாமல் பார்த்தாள்.

““என்னோட purseயும் அங்க விட்டுட்டு வந்திட்டேன் அதை எடுக்கணும்”” என்று கூறி மீண்டும் நடையை தொடர்ந்தான். இருவரும் சேர்ந்து அந்த கும்பல் இருந்த இடத்திற்கு சென்றனர்.

தனியாக சென்றிருந்தால் ஆர்த்தியை கிண்டல் செய்து இருப்பார்களோ என்னவோ அருண் அருகில் வரவும் தங்களுக்குள் பேசிக்கொள்வதோடு நின்றது அவர்களது கிண்டல். ஆர்த்தி கைபையை எடுத்துக்கொள்ள, அருண் தனது பர்சை அங்கும் இங்கும் தேடுபவன் போல் பார்த்துவிட்டு, ““காணவில்லை ஒருவேளை அஸ்வத்கிட்ட இருக்கும் வா போகலாம்”” என்று கூறி அவளுடன் சேர்ந்து நடந்தான். அவன் தனக்கு துணையாக வரத்தான் ஒரு பொய் சொல்லி வந்திருக்கிறான் என்று புரிந்துப் போக மெல்லிய புன்முறுவல் பூத்தது ஆர்த்திக்கு.

மெதுவாக ““தேங்க்ஸ்”” என்று மட்டும் அவள் கூற பதிலுக்கு புரியாதவன் போல பாவனை செய்து ““ஓ... நான் உனக்கு துணையா வந்ததாய் நினைச்சிட்டியா? ச்சே ச்சே அப்படியெல்லாம் தப்பு கணக்கு போட்டுறாத.. அப்படியே நீ தனியா வந்திருந்தாலும் அவங்க இப்படி ஒரு மொக்கை figurஅய் ஒன்னும் சொல்லிருக்க மாட்டாங்க”” என்று கூறி சிரிக்கவும் அவள் பொய் கோவத்தோடு தன் கையில் இருந்த கைபையை வைத்து அடித்தாள்.

இந்த வகுப்பு மாணவர்களுக்கே உரிய குணம் இது, என்னதான் தங்கள் வகுப்பு மாணவிகளை தாங்களே கிண்டல் செய்தாலும் மற்றவர் யாரும் அவர்களிடம் எல்லை மீரவிடாது பாதுகாப்பாய் பார்த்துக்கொள்வதில் தவற மாட்டார்கள். அந்த உணர்விலே தான் அருண் அங்கு சென்றது. இத்தனை நாள் அருணை கண்டால் ஓடுபவள் அன்று முதல் நட்பை பகிர்ந்துக்கொண்டாள்.

““ஹே சுத்தி சுத்தி வேடிக்கை பார்த்து போர் அடிக்குது ஏதாவது கேம் arrange பண்ணுங்க”” என்று கெஞ்சாத குறையாக அபி ஆரம்பித்தாள்.

““அப்படியா சொல்ற சரி கண்ணாம்பூச்சி விளையாடலாமா”” என்று கிண்டலாக அருண் கேட்க, அவன் சொன்ன பதிலில் நிறுத்துடா உன் மொக்கையை என்பது போல் அனைவரும் முறைத்தனர், “என்ன எல்லாரும் அட் எ டைம்(at a time) நம்மளையே டார்கெட் பண்றாங்க, சமாளிக்க முடியாதே” என்று உள்ளே பயந்துபோய், ““சரி சரி விடுங்க இப்போ என்ன விளையாடனும் அவ்வளவு தானே”” என்று கூறி சிறிது நேரம் இல்லாத மூளையை கசக்கி சைக்கிள் race என்று ஐடியா கொடுக்க அனைவரும் சரி என்று உற்சாகமாக ஒத்துக்கொண்டனர்.

என்னதான் வீர சாகசம் இல்லையென்றாலும் ஊட்டி பாதை வளைவு நெளிவாக இருக்க கேசவ் கொஞ்சம் பயந்து வேண்டாம் என்று தடுத்தார், அதற்கும் அருண் ஐடியா வைத்திருக்க 2, 2 பேராக race வைக்கலாம் என்றும் செல்பர்வகளிடம் கைபேசி இருக்கட்டும் என்றும் ஐடியா தந்து ஒருவாறு கேசவ்வை தாஜா செய்தான். எப்படியோ அவரும் ஒத்துகொள்ள இவர்களது ஆட்டத்தை அமைதியாக வேடிக்கை பார்க்க துவங்கினார். மற்ற ஆசிரியர்கள் வந்தால் இப்படி விளையாட்டுதனம் செய்ய இயலாது என்று திட்டம் போட்டு டீனிடம் கெஞ்சி கேசவையே அழைத்து வந்தனர், அதே நேரம் தங்களால் அவர் எந்த பிரச்சனையிலும் மாட்டிகொள்ளாமல் இருக்கும் அளவிற்கு நடந்தும் கொண்டனர்.    

பேச்செல்லாம் முடிந்து விளையாட்டை ஆரம்பித்தனர். சைக்கிள் race ஆரம்பித்தனர், இந்த ஐடியாவை தந்த அருண் முன்னே நிற்க, கலந்துகொள்ள போகும் ஒரு ஜோடி தயாராக நின்றது. ஒருபுறம் அஸ்வத்தின் தோழர்கள் நின்று உற்சாகத்தோடு கத்தி ஊக்குவிக்க மற்றொரு புறம் அனன்யாவின் தோழிகள் கரகோஷத்தோடு ஊக்குவித்தனர்... இருவரும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர வேண்டும் என்று முடிவானது. 

இவர்கள் பெரிய கார் race அளவிற்கு பில்ட்up தர, முக்கிய கதாபாத்திரங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நக்கலாக பார்த்து சிரித்துக்கொண்டனர். ““ரெடி ஸ்டார்ட்”” என்று கூறி அருண் விசில் அடிக்க, இருவரும் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தனர். பின்னால் இருந்த உற்சாக குரல்கள் மெல்ல மெல்ல மறைய தூரமாக நகர்ந்து சென்றனர் அஸ்வத்தும் அனன்யாவும்... சில தூரம் அஸ்வத் முன்னே போக அவனை முந்த அனன்யா வேகமாக செல்ல என்று போட்டி போட்டுக்கொண்டனர். சிறிது தூரமாக வந்தபின்பு, ரோட்டின் நடுவில் கல் இருப்பதை கண்டு அஸ்வத் வளைந்து அனன்யாவின் முன்னே வர, திடிரென்று மிதிவண்டியை மெதுவாக இயக்க முடியாமல் அஸ்வத்தின் சைக்கிளில் முட்டி இருவரும் கீழே விழுந்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.