அந்த நேரத்தில் எதிர்ப்பட்டான் மனோ.
அப்பா போன் பண்ணார் மனோ. ரொம்ப கோவமா இருக்கார். 'பிறந்தநாளுக்கு நான் அவர் கூடவே இருக்கணும்னு விரும்பறார் மனோ .நான் கிளம்பட்டுமா? என்றாள் நிதானமாக.
அறிவிருக்கா உனக்கு?. பாசம்ங்கிற பேரிலே உன்னை அடிமையாய் நடத்தறார் அர்ச்சனா அவர். உனக்கு இது அராஜகமா தெரியலையா? அப்படி என்ன அப்பா பைத்தியம் உனக்கு.?
பதில் சொல்லவில்லை அவள்.
சரி அதை விடு. இங்கே ஒருத்தன் நினைவில்லாம கிடக்கறானே அவனை பத்தி யோசிக்கவே மாட்டியா?. நீ பக்கத்துலேயே இருந்தா அவன் சீக்கிரமா குணமாயிடுவான் அர்ச்சனா. ப்ளீஸ் போகாதே.
அப்போது அங்கே வந்த நர்ஸ் சொன்னாள் 'வசந்த் கண்முழிச்சிட்டார்.
அவன் அறையை நோக்கி ஓடியே விட்டிருந்தான் மனோ.
மனம் முழுவதும் பரவிய சந்தோஷத்தில் கண்களில் நீர் சேர ,சில நொடிகள் அப்படியே நின்று விட்டிருந்தாள் அர்ச்சனா.
பின்னர் அங்கிருந்து மெல்ல நகர்ந்தாள்.
இல்லை. மறுபடி சென்று அவன் முகத்தை பார்க்கும் சக்தி எனக்கில்லை. உள்ளே சென்றவுடன் அவன் என்னை பார்த்து புன்னகைக்கும் நொடியில் அப்படியே தோற்று, அவன் தோளிலேயே உடைந்து விட மாட்டேனா?
'நான் கிளம்பறேன் வசந்த்' தனக்குள்ளே சொல்லிக்கொண்டு மருத்துவமனையின் வாசலை நோக்கி நடந்தாள் அர்ச்சனா. ஏனோ அவள் மனம் அத்தனை அமைதியாக இருந்தது
வசந்தின் அறைக்குள் நுழைந்த மனோ அவன் கையை சட்டென பற்றிக்கொண்டான்
என்னடா இப்படி பண்ணிட்டே? ரொம்ப பயந்துட்டேன்டா.
மெல்ல புன்னகைத்தான் வசந்த்.
'இனி பைக்கை தொடு மகனே நீ அப்புறம் இருக்கு உனக்கு என்ற மனோ சொன்னா கேட்க மாட்டே நீ. இரு நாளைக்கே அதை வித்துடறேன் இரு' என்றான்.
மனோவை புன்னைகையுடன் பார்த்துக்கொண்டே இருந்தான் வசந்த்.
அப்பா, அம்மா என்று யாருமே இல்லாத வலியையும், தனிமையையும் மனோவின் புன்னகையும் ,அருகாமையும், போக்கியே விடுகிறது இப்படி ஒரு நண்பன் கிடைக்க அப்படி என்ன தவம் செய்து விட்டேனாம் நான்?
சில நொடிகள் கழித்து வசந்தின் கண்கள் எதையோ தேடின.
அர்ச்சனா ஆட்டோவில் ஏறிய நிமிடத்தில் ஒலித்தது அவள் கைப்பேசி
'எங்கே இருக்கே நீ?' என்றான் மனோ
'நான் ஆட்டோலே போயிட்டிருக்கேன்.' என்றாள் நிதானமாக.
குபீரென்று பொங்கியது அவன் கோபம் ' கண்முழிசிட்டான் அர்ச்சனா, வசந்த். அவனை ஒரு தடவை பார்க்கணும்னு கூட தோணலையா உனக்கு?
'இல்லை மனோ. நான் ஊர்லிருந்து வந்து பார்த்துக்கறேனே.' என்றாள் அர்ச்சனா
'விளையாடாதே அர்ச்சனா . முதல்லே வா இங்கே.' என்றான் கொதிக்கும் குரலில்.
இல்லே மனோ.......
எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம். 'நீ இப்போ வரப்போறியா இல்லையா?
'பிளீஸ் மனோ. நான் ரொம்ப தூரம் வந்திட்டேன்.
'வர வேண்டாம் நீ. ஆனால் இனிமே இந்த ஜென்மத்துலே நான் உன் கூட பேச மாட்டேன் அழைப்பை துண்டித்தான் மனோ.
'ஊருக்கு கிளம்பி போயிட்டாடா ராட்ஷசி. அவங்கப்பா கூட சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடணுமாம். ரொம்ப முக்கியம் பாரு. இவளையெல்லாம் தங்கச்சின்னு சொல்லிக்காவே வெக்கமா இருக்குடா ' என்றான் வசந்தை பார்த்தபடியே.
'சரி விடுடா' என்றான் வசந்த் சற்று தழைந்த குரலில். கண்டிப்பா முழு மனசோட போயிருக்க மாட்டா. எனக்கு தெரியும்.
'இப்படி நம்பி நம்பியே நீ பாழாப்போறே. 'விட்டுடு டா அவளை. எல்லாம் போதும்.'
ஆமாம் டா. அவளை விட்டுடதான் போறேன்' என்ற வசந்தை வியப்பாய் பார்த்தான் மனோ.
வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு கிளம்பினாள் அர்ச்சனா. அவள் சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறியபோது நேரம் பன்னிரெண்டரையை தாண்டிவிட்டிருந்தது.
அப்பாவை அழைத்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.
பலமுறை முயன்றாகி விட்டது. அவர் கோபத்தின் உச்சியில் இருக்ககூடும் என்று தோன்றியது அர்ச்சனாவுக்கு.
அவள் வீட்டை அடைந்தபோது நேரம் இரவு ஏழை தாண்டி இருந்தது. வீட்டில் யாருமே இல்லை.ஸ்வேதாவை அழைத்தபோது,எல்லாரும் பார்டியில் இருப்பதாக சொல்லி அந்த ஹோடேலில் பெயரை சொன்னாள்.
ஆட்டோவில் ஏறி அந்த ஹோடேலின் வாசலில் இறங்கி சிறிது தூரம் உள்ளே சென்ற போது எதிரே வந்தான் விவேக்.
சாதாரண உடையில், முகத்தில் பேருந்தில் வந்த களைப்பு தெரிய நின்றிருந்தவளை பார்த்துக்கேட்டான் 'உனக்காக எவ்வளவு பெரிய பார்ட்டி ஏற்பாடு பண்ணி வெச்சிருந்தேன். கேக் எல்லாம் வெட்டி முடிஞ்ச பிறகு, இவ்வளவு லேட்டா, இப்படி பைத்தியக்காரி மாதிரி வந்து நிக்கறே? எதுலே வந்தே?
'பஸ்லே..' என்றாள் அர்ச்சனா.
லூஸா நீ.? பிளைட்லே வரவேண்டியது தானே?
லேசான கோபம் பரவியது அவள் கண்களில் 'பிளைட் என்ன நம்ம ஊரு டவுன் பஸ்ஸா, பாதி வழியிலே கையை காட்டி ஏறி வரதுக்கு? நினைச்சவுடனே கிளம்பனும்னா பஸ்லே தான் வரணும்
சட்டென்று தணிந்தவனாய் 'சரி சரி கூல். ஹாப்பி பர்த்டே ஸ்வீட் ஹார்ட். மாடியிலே ரூம் இருக்கு. ஸ்வேதாவை அனுப்பறேன். சீக்கிரம் ரெடியாயிட்டு வா. என்றான் விவேக்.
அப்பா எங்கே? என்றாள்.
'இங்கேதான் எங்கேயாவது இருப்பார் நீ போய் ரெடியாயிட்டு வா.
அவளுக்காக அவன் வாங்கி வைத்திருந்த உடைகளில் ஆடம்பரம் தெரிந்தது. ஸ்வேதா செய்த எல்லா அலங்காரங்களுக்கும் உடன் பட்டாள். என்னால் விவேக்கின் கெளரவம் கெடுவானேன்?
அவள் தாயாராகி கீழே வந்தாள். இது போன்ற பார்டிகளில் அவள் அதிகம் கலந்து கொண்டதில்லை.
பார்டி முழுவதும் பணம் புரண்டு கொண்டிருப்பதை உயர்தர perfume வாசனைகளில் துவங்கி, எல்லாமே உணர்த்தின.
எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவள் கண்கள் சுற்றி சுற்றி அப்பாவையே தேடிக்கொண்டிருந்தது.
ஒவ்வொருவரையாய் அறிமுகப்படுத்தினான் விவேக். அப்போது அவன் அறிமுக படுத்திய அந்த மனிதரின் முகம் மிகவும் பரிச்சியமானதாக தோன்றியது அர்ச்சனாவுக்கு.
அவரிடமிருந்து சற்று விலகி வந்த பிறகு, 'யார் இவர்?' என்று யோசித்தபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.
திடீரென ஞாபகம் வந்தது. அவர் 'டாக்டர் சிதம்பரம்' வசந்தின் அப்பாவின் குடும்ப நண்பர். வசந்தின் குடும்பத்தை பற்றி எல்லாமே அறிந்தவர். அவரை டெல்லியில் சந்தித்திருக்கிறாள் அர்ச்சனா.
அவள் இயல்பாய் நிமிர்ந்த போது அவர் பார்வை அவள் மீதே இருப்பது உரைத்தது அவளுக்கு.
அவளிடம் எதையோ சொல்ல விரும்பியவராய், அவளை நோக்கி மெல்ல நடந்து வந்தார் அவர்.
'என்னை ஞாபகம் இருக்கா மா உனக்கு.?' நிதானமான குரலில் கேட்டார் டாக்டர் சிதம்பரம்'
தொடரும்
Manathile oru paattu episode # 09
Manathile oru paattu episode # 11
{kunena_discuss:683}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.