(Reading time: 26 - 52 minutes)

10. காதல் பயணம்... - Preethi

Kaathal payanam

போங்கம்மா என்னால முடியாது” அடம் பிடித்தாள் அனு.

“ஹே அடம் பிடிக்காதடி, நீ என்ன சின்ன பொண்ணா?” முகத்தை சீரியஸ்ஸாக வைத்துக்கொண்டு வாதாடினார் ஹேமா.

“பின்ன சின்ன பொண்ணு இல்லாம கெழவியா?” என்று பொறுமை இழந்து பதில் தந்துக்கொண்டு இருந்தாள்.

“பின்ன இல்லையா?! நீ பேசுறதை பார்த்தால் அப்படித்தான் இருக்கு” என்று ஹேமா அனுவை கிண்டல் அடித்தார்.

ஹாலில் அமர்ந்து இருந்த வெங்கட்டிற்கு காதே வலித்தது. “என்னம்மா பண்ற நீ? அவளுக்கு பிடிக்கலைன்னா விட்டுடேன். இப்போ என்ன வயசாகிடுச்சு அவளுக்கு?” என்று பெண்ணிற்கு பணிந்து பேசினார்.

விட்டால் போதும் என்பது போல் ஓடிவந்து தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டவள் “பாருங்கப்பா அம்மாவை.... புடவை கட்டு நகை போட்டுக்கோன்னு கொடுமை படுத்துறாங்க” என்று செல்லம் கொஞ்சி பேசினாள்.

அவ்வளவு தான் வெங்கட் உருகி போய் அவள் தலைக்கோத ஹேமா வெளியே வந்தார். “திருவிழாக்கு போறோமே, பெண்ணாய் அடக்கமாய் புடவை கட்ட சொன்னால் உனக்கு வலிக்குதா?” என்று கடிந்துக்கொண்டு முகத்தை சோகமாக வைத்துக்கொண்டார்..

ஹேமாவின் முகத்தை பார்க்க பாவமாக தோன்ற அவரிடம் சென்று ஒட்டிக்கொண்டு “அச்சோ டீச்சர் ஏன் இவ்ளோ ஃபீலிங்க்ஸ்? இப்போ என்ன நான் அடக்கமான கெட்டப்ல வரணும்  அவ்வளவு தானே!” என்று சிறிது யோசித்துவிட்டு “நான் வேணும்னா தாவணி போட்டுக்கவா?” என்று சிறுபிள்ளை போல் கேட்டாள். மனம் இளகிபோக ஹேமாவோ, “சேலையும் தாவணியும் எப்படிடி ஒன்னு ஆகும்?” என்று யோசனையாக கேட்டார்.

“அட இரண்டத்துக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை டீச்சர், சேலையோட தங்கச்சி தான் தாவணி. நீளமாக இருந்தால் சேலை, குட்டியா இருந்தால் தாவணி” என்று கூறி அவள் தன் தாயை பார்த்து கண்ணடிக்க, ஹேமா “ஆண்டவனே” என்று அலுத்துக்கொண்டு “அதையாவது ஒழுங்கா கட்டிட்டுவா” என்று கூறி சென்றுவிட்டார்.

னுவும் வெற்றி புன்னகையுடன் தயார் ஆக சென்றாள். எல்லாம் முடிந்து கிளம்ப ஆயத்தமாக வெளியே வந்த அனுவின் கண்ணில் அர்ஜுன் தென்பட்டான். “ஹா ஹா ஹா... ஐயோ என்னால முடியலையே” என்று வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள். அவளைப் பார்த்து முறைத்த அர்ஜுனோ இடுப்பில் நிற்காத வேஷ்டியை நில் என்று அடம் பிடித்து கட்டிக்கொண்டு இருந்தான்.

சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் சிரமப்பட்டு நிறுத்தி அர்ஜுனிடம் சென்றாள், “என்ன அண்ணா அம்மா வேலையா” என்று சிரிப்பினூடே விசாரித்தாள். அவனது கவனமோ கட்டி இருக்கும் வேஷ்டியிலேயே இருக்க பாவமாக ஆம் என்று தலை ஆட்டினான். “பெல்ட் போட்டு நிக்க வச்சுக்க வேண்டியது தானே அண்ணா” என்று அனு கேட்க, “ஆச்சு ஆச்சு..” என்று அதையும் சந்தேகமாக தொட்டு பார்த்துக்கொண்டான்.

அவனது முகபாவனையில் இன்னும் சிரிப்புவர, “அப்பறம் என்ன அண்ணா உங்களுக்கு அதெல்லாம் நிக்கும் நீங்க இப்படி முழிக்குரதை நிறுத்துங்க” என்று கிண்டல் செய்தாள்.

“ஏன் வாலு சொல்ல மாட்ட, அவன் அவன் கஷ்டம் அவன் அவனுக்கு... purse வைக்க பாக்கெட் இல்லை, செல் போன் அனாதையா நிக்குது, இதிலே வேஷ்டி இருக்கா இல்லையான்னு அப்போ அப்போ சந்தேகம் வேற வருது” என்று தன் குறைகளை எல்லாம் அவளிடமாவது புலம்பி தீர்த்துக்கொள்ள பார்த்தான்.

“அச்சோ என் பசங்களை பார்த்தால், என் கண்ணே பட்டுடும் போல இருக்கே” என்று கண்ணில் கிண்டலுடன் உதட்டில் நக்கல் சிரிப்புடன் எதிரே வந்தார் வெங்கட். அனுவும் அர்ஜுனும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு இடுப்பில் கையை வைத்துக்கொண்டு வெங்கட்டை மேலும் கீழும் பார்க்க அவர் பதிலுக்கு என்ன என்பதுபோல் புருவம் தூக்க, இருவரும் ஒருசேர “அம்மா......... அப்பா ஏதோ சொல்லுறாங்க என்னனு கேளுங்களேன்....” என்று இருவரும் ஹேமாவை கூப்பிட்டனர். அதற்கு ஹேமாவின் குரல் மட்டும் அம்பாய் பறந்து வந்தது, “என்ன??? என்னவாம்ம்ம்ம்ம்?” என்று அவர் கணீர் குரலில் கேட்க, “ஐயோ என்ன கொலைவெறிப்பா உங்களுக்கு” என்று பம்மிக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார் வெங்கட். அவரது செயலில் சிரிப்புவர இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாக சிரித்துக்கொண்டனர்.

ம்மா.... அம்மா..... என்னம்மா பண்றிங்க இங்க வாங்களேன்” அஹல்யா துளசியை ஏலம் போட்டாள்.

“என்னடி....” என்று அவசரமாக தயாரானவாறு அவளிடம் சென்றார்.

“நீங்க தானே புடவை கட்ட சொன்னிங்க பாருங்க நிக்கவே மாட்டிங்குது. இதுக்கு தான் சுடிதார் போட்டுவறேன்னு சொன்னேன்” என்று புடவை நழுவும் கடுப்பில் பேசிக்கொண்டிருந்தாள்.

“புடவை கட்டினா என் பொண்ணு அழகா இருப்பாள்டி அதான் கட்ட சொன்னேன்” என்று திருஷ்ட்டி சுற்றியவாறு ஐஸ் வைத்து அஹல்யாவை சேலை கட்ட வைத்திருந்தார் துளசி.

“ஆமாம் இப்படியே ஐஸ் வைத்தே வேலையை நடத்துங்கம்மா” என்று புடவையை சரி செய்தவாறே புலம்பினாள். இவர்கள் பேசிக்கொண்டிருக்க அஸ்வத்தின் குரல் வெளியில் இருந்து கேட்டது, “அம்மா இப்படி சொன்னா அக்கா எவ்வளவு தரதாய் டீல் போட்டுருக்காள்?” என்று நக்கலாக கூறினான்.

பதிலுக்கு அவளிடம் இருந்து கோவக்குரல் வரும் என்று எதிர்பார்த்த அவனுக்கு மண்டையில் பவுடர் டப்பவால் ஒரு அடிதான் கிடைத்தது.

“ஆஆஆ வலிக்குதுடி ராட்சஸி”.

“வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டும்...”

“ஹே போதும் போதும் உங்க சண்டையை இப்போவே ஆரம்பிக்காதிங்க போய் கிளம்புங்க” என்று அதட்டியவாறு துளசி முன் அறைக்கு வந்தார். “என்ன அஸ்வத் நீ வேஷ்டி கட்டலையா?” என்று தன் முயற்சி வீணானதை நினைத்து வருத்தபட்டவாறு சோகமாக வினவினார்.   

எழுந்து தாயின் அருகில் சென்று கழுத்தை சுற்றி வளைத்துக்கொண்டவன், “அஹல்ல ஏமாத்தின மாதிரி என்னை ஏமாத்த முடியாது துளசி” என்று அவரது மூக்கை பிடித்து ஆட்டியவன், “நான் இந்த கெட்டப்லையே வரேன் சரியா?” என்று அவரை சமாதான படுத்தி கிளம்ப ஆயத்தமானனர்.

nike shoe, ப்ளூ ஜீன், branded டீ-ஷர்ட் என்று பக்கா உடுப்பில் இருந்தான் அஸ்வத். அணிந்து இருந்த சட்டையோ தினமும் உடற்பயிற்சி செய்து வளர்த்த கைகளுடன் கச்சிதமாக ஒட்டி கொள்ள, கையில் இருந்த காப்பு தெரிய முழுக்கை சட்டையை சுருக்கி விட்டிருந்தான். ஜன்னலின் வழியே வந்த மிதமான காற்று அஸ்வத்தின் சிகையை களைத்து விளையாட லாவகமாக காரை ஓட்டிக்கொண்டு வந்தான். மிதமான வேகத்தில் ஒட்டியவாறு அஸ்வத் வர, கார் தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தை நோக்கி சென்றது.

ஊரின் நுழைவாயிலே தோரணமெல்லாம் கட்டி வரவேற்க அங்காங்கே உள்ள போஸ்ட் கம்பத்தில் கட்டபட்டிருந்த ஒலிபரப்பியோ

“கற்பூர நாயகியே கனகவள்ளி.....

காளி மகமாயி கருமாரியம்மா... ”

என்று பயபக்தியாக பாடி ஊரையே கட்டிபோட்டிருந்தன. ஊர் தந்த சுற்றுபுரமும் சாமிபாடல்களும் மெய்சிலிர்க்க செய்ய, மனம் முழுவதும் இதம் பரவுவதை உணரமுடிந்தது அனைவருக்கும். கடந்துவந்த பாதைகளில் எல்லாம் கூட்டம் கூட்டமாக பால்குடம் தூக்கி செல்லும் பக்தர்களின் தரிசனம் கிடைத்தது. மஞ்சள் உடை அணிந்து பால்குடம் எடுத்து நடக்க, உதடுகள் மட்டும் அதன் போக்கில் அம்மன் பாடல்களை பாடி வந்தது. இப்படி செல்லும் பக்தர்களுக்காகவே அங்காங்கே நீர்மோர் பந்தல்கள் அமைக்கபட்டிருந்தன. வரும் பக்தர்கள் எல்லாம் சிறிது நேரம் இளைப்பாற அந்த பந்தல்களில் நிற்க, சுட்டிதனமாய் சுற்றித்திரியும் வாண்டுகளும் வீடுகளில் இருந்து பாத்திரத்தோடு வந்து நின்றுக்கொண்டனர். இதமாக இருக்க குளிர் நீரில் நீர்மோர் தயாரிக்க அதற்கு அழகு சேர்த்தது கொத்தமல்லி, அருந்த அருந்த வெயிலின் தாக்கம் குறைந்தது போல் உணர்வு வர, நிம்மதியாக சென்றனர் பக்தர்கள். இவை அனைத்தையும் பார்த்தவண்ணம் வந்த அனுவிற்கு நாவூரியது இதை அருந்தி எத்தனை வருடங்கள் ஆகியது என்று தோன்ற நிறுத்தி அருந்தி செல்ல அடம்பிடித்தால் அனு.     

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.