(Reading time: 26 - 52 minutes)

துசரி என்னே ஒரு போது அறிவு, என்னே ஒரு போது அறிவு” என்று அவனை கிண்டல் செய்தவாறே வந்தாள், “சரி நீங்க ஏதோ கேட்க வந்தீங்களே continue...” என்று கூற, “ம்ம்ம்ம் நன்றி, இந்த குச்சிமிட்டாய் தான் ரொம்ப இடிக்குது” என்று அவள் ருசித்து சப்பிக்கொண்டு வந்ததை சுட்டிக்காட்டினான்.

“வெரி குட் question... அதாவது அண்ணா, எல்லாரும் உதட்டை சிவப்பாக்க கஷ்ட்டப்பட்டு செலவு செய்து  லிப்ஸ்டிக் வாங்கி சிரமபடுறாங்க, ஆனால் என் அறிவுரை என்னன்னா? இந்த இயற்கை அழகு பொருள் அவங்க கண்ணுக்கு தெரியலை, இந்த ரோஸ் குச்சிமிட்டாய் சாப்பிட்டால் ஒதடு லிப்ஸ்டிக் போட்ட மாதிரி மாறிடும் அவ்வளவு தான் secret” என்று விளையாட்டாய் காரணம் கூறியவண்ணம் பேசிக்கொண்டு வந்தாள்.

“அண்ணா அங்க பாரேன் அம்மா யார் கூடவோ பேசிகிட்டு இருக்காங்க, இந்த ஊரோ?” என்று சிறிது நேரம் யோசித்தவள் “ஒருவேளை உங்களை மாப்பிள்ளை பார்க்க வந்தவங்களா இருக்குமோ?” அவள் கேட்ட கேள்வியில் கொஞ்சம் குலம்பிபோனவன் முகம் சுருங்கிப் போனது, “அட விடு அண்ணா உங்களுக்கு பிடுச்சால்தானே why feelings?” என்று கொஞ்சம்  சமாதானம் செய்து ஒரு கையில் பலூனையும் மறுகையில் குச்சிமிட்டாயையும் ஏந்திய வண்ணம் சென்றாள்.      

தாயுடன் சென்று நின்றுகொள்ள எதிரே நிற்கும் அவனை கண்டு மீண்டும் அதிர்ந்து போனாள். அவசர அவசரமாக கையில் உள்ள பலூனை அர்ஜுனின் கையில் கொடுத்துவிட்டு,  குச்சிமிட்டாய் வைத்து இருந்த கையை பின்பக்கம் மறைத்துக்கொண்டாள். இவள் செய்வதை எல்லாம் ரசனையுடன் பார்த்துக்கொண்டு இருந்தது அஸ்வத்தே தான். துளசியும் ஹேமாவும் வெகு ஆர்வமாக பேசிக்கொண்டு இருக்க, கண்ணனும் வெங்கட்டும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர். அஸ்வத்தின் பார்வையை தவிர்பதற்காக அனு அவர்கள் பேச்சை கவனிப்பது போல் நடிக்க, அஸ்வத்தின் கண்கள் மட்டும் அவளை விட்டு அகலவில்லை. சிறிது நேரம் பொருத்து கண்கள் தானாக அவன்புறம் செல்ல அப்போதும் அவன் தன்னையே பார்த்தும் பார்க்காதது போல் நோட்டம் விடுவதை பார்த்துவிட்டு லேசாக சிரித்துக்கொண்டாள். அவனிடம் இருந்து கண்கள் அஹல்யாவிடம் சென்று நின்றது, அவளோ வெட்கப்பட்டு கன்னங்கள் சிவந்திருந்தாள், இது என்ன புதுக்கதை நம்ம இல்லை இவ்வளவு வெட்கப்படனும் இவங்க ஏன் இப்படி வெட்க படுறாங்க அப்படி யாரைத்தான் பாக்குறாங்க என்று அஹல்யாவின் கண்கள் செல்லும் திசையை நோக்கி அவள் கண்கள் செல்ல அங்கே அர்ஜுன் காதல் பார்வையை வீசியவாறு நின்றுக்கொண்டிருந்தான்.

அவனை கண்டதும் அதிர்ச்சி அடைந்தவள், ஓஹோ அண்ணனின் காதல் கன்னி இவங்கதானா??? பக்திபாடல் கேட்கும் பிரமச்சாரி மாதிரி இருந்துகிட்டு headsetla குத்துபாட்டு கேட்பதை பாரேன் என்று அவனை சிறிது நேரம் நோட்டம் விட்டாள்.

அர்ஜுனோ சுற்றி இருப்பவரை மறந்து மயங்கி போனான், அவனது லியாவை அங்கு அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, கண்டதும் உள்ளம் துள்ள அவளை நெருங்கவும் முடியவில்லை, ஆனால் அவள் கடைக்கண் பார்வையில் சொக்கி போனவன் வெளிவர விரும்பாவண்ணம் நின்றான். சேலை கட்டி அழகு தேவதையாய் அவள் நிற்க, அர்ஜுனின் கண்கள் யாரும் அறியாமல் அவளை அளவெடுத்தது. அவள் யாரும் பார்காது போது இவனை பார்ப்பதும், வெட்கத்தில் நிலம் பார்ப்பதும் அவனை மேலும் உசுப்பேத்த வெறும் பெருமூச்சு மட்டுமே விடமுடிந்தது அவனால். அவன் செய்வதையெல்லாம் பார்த்த அஹல் வெட்கத்தில் குனிந்த தலை நிமிராமல் இருக்க, அனுவோ பிழைத்து போகட்டும் என்று சிறிது நேரம் சீண்டாமல் இருந்தாள்.  

மெதுவாக அவன் தோள் மேல் கை போட்டு, அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக “இந்த பூனையும் பால் குடிக்குமானு இருந்துகிட்டு என்ன வேலை செய்றிங்க அண்ணா.. ஒரே கொஞ்சல்ஸ் போல” என்று கூறி அவள் கண்ணடிக்க ஆண் பிள்ளைக்கும் வெட்கம் வரும் என்று வெட்கப்பட்டு காட்டினான் அர்ஜுன். அவனிடம் சிறிது விளையாடியவள் தன்னையே யாரோ பார்ப்பதுப் போல் தோன்ற திரும்பினாள், அங்கு அஸ்வத்தின் கண்கள் அவளையே பார்த்துவண்ணம் இருந்தது.

இப்பொது கொஞ்சம் குறும்பு எட்டிப்பார்க்க லேசாக கை அசைத்து “ஹலோ போதும் கண்ணு வலிக்க போகுது” என்று மெதுவாக கூறினாள், அவனும் பதிலுக்கு “ஓ... உனக்கு இவ்வளவு பேச தெரியுமா? நான் கூட கொஞ்சம் குச்சிமிட்டாய் சாப்பிடவும் நிறைய வெட்கப்படவும் தான் தெரியும் போலனு நினைச்சேன்” என்று கூறி அவன் பார்வை அவள் இதழ்களில் படிந்து சென்றது.           

இப்போது தடுமாறுவது அவளது முறை ஆனது, எப்படி ball throw பண்ணாலும் அடுச்சுடுரானே என்று எண்ணிக்கொண்டு “யாரு வெட்கப்பட்டா நானா? ச்சே ச்சே” என்று ஒன்றும் தெரியாதவள் போல் நடிக்க அவன் இதழ்களில் ரசனையான புன்முறுவலுடன் “ஓஹோ...” என்று மட்டும் கூறினான். இவர்கள் பேச்சின் மூலம் நேரத்தை கடத்த மூத்த ஜோடி மௌன பாஷையில் பரிமாறிக்கொண்டனர். இதற்கிடையே பெரியவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்க ஆர்வம் தோன்ற அனு ஹேமாவை பார்க்க, ஹேமாவின் பார்வையோ அவ்வப்போது அமைதியாய் நிற்கும் அஹல்யாவின் மீது படிந்துச்சென்றது.

“சரி துளசி நேரம் ஆச்சு நாங்க கிளம்புறோம் சீக்ரம் நல்ல செய்தியை சொல்லுங்க” என்று ஹேமா சொல்லிக்கொண்டு நகர, இவ்வார்த்தையை முக்கியமான ஜோடி கேட்க மறந்தது. அனு இதை உன்னிப்பாக கவனித்துவிட நல்ல செய்திதான் என்று புரிந்துப்போனது அவளுக்கு.

ரு குடும்பத்தாரும் விடைபெற்று தத்தம் வீட்டிற்கு செல்ல, காரில் கனவுலகில் மிதந்து கொண்டு வந்த அர்ஜுனை ஹேமாவின் அலைபேசி உலுக்கியது.

“ஹலோ சொல்லுங்க மகி,அதுவா சாரிங்க நான் அப்போவே சொல்லனும்னு இருந்தேன் பையன் மேல் படிப்பு படிக்க போறதாய் சொல்லுறான் சோ இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டான் சாரிங்க” என்று அவர் இழுக்க மறுபுறம் இருந்த ஹேமாவோடு வேலை புரியும் மகிக்கு புரிந்துப்போனது. ஹேமா அழைப்பை துண்டிக்கவும் துள்ளிக்குதிக்காத குறைதான் அர்ஜுனுக்கு ஹப்பாடா ஒரு பிரச்சனை முடிஞ்சது என்று எண்ணிக்கொண்டு நிம்மதியாக வந்தான்.

அவனது முகத்தில் இருந்தே அவன் சந்தோஷம் புரிந்துப்போக சிறிது விளையாடிப் பார்க்க ஆசைபட்டாள் அனு. “என்னம்மா அண்ணி வர போறாங்கனு சந்தோஷமாய் இருந்தேன் அதையும் கெடுத்துட்டிங்களே...” என்று போலியாக வருந்தினாள். ஐயோ இவள் என்ன புது குண்டை போடுறாள் என்று நினைத்து அர்ஜுன் முழிக்க, வெங்கட் தொடர்ந்தார். “அண்ணி ரெடி அனு, என்ன வேற அண்ணி ரெடி பண்ணியாச்சு” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

இவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டு வந்த அர்ஜுனு கடுப்பாக இருந்தது. “என்னம்மா இது எனக்கு இப்போ கல்யாணமே வேண்டாம். எனக்கு எந்த பெண்ணையும் பிடிக்கலை” என்று கோவமாக பேசிக்கொண்டிருந்தான்.

“அண்ணா நல்லா யோச்சு சொல்லு உனக்கு கல்யாணம் வேண்டாமா? எந்த பொண்ணையும் பிடிக்கலையா? முக்கியமா இப்போ நம்மப் பார்த்து இருக்க பொண்ணை?” என்று அவள் மர்மமாக கேட்டாள்.

“யாராக இருந்தால் என்ன? எனக்கு பிடிக்கலை, வேண்டாம்னு சொல்லிடுங்கம்மா” என்று அலட்சியமாக கூறினான்.

“நிஜம்மாத்தான் சொல்லுறியா அண்ணா கடைசியா கேட்குறேன்...” என்று அவள் இழுக்க... “இதுல என்ன திரும்பி யோசிக்க இருக்கு வேண்டாம்” என்று மீண்டும் மொழிந்தான்.

“கிடைத்த அழகான பெண்ணும் போச்சா” என்ற வருத்தம் ஹேமாவின் முகத்தில் தெரிய, அனுவோ நக்கலாக “அப்போ சரிம்மா அண்ணாக்கு இன்னைக்கு கோவில்ல பார்த்த அஹல்யாவை பிடிக்கலையாம் அவங்க வீட்ல சொல்லிடுங்க” என்று அவனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கூறினாள்.

அஹல்யா என்று கூறிய மறுநொடியே அர்ஜுன் இன்ப அதிர்ச்சிகொள்ள வாய் பேசாமடந்தை ஆனான். அய்யய்யோ தெரியாம சீன் போட்டுடோமோ என்று அவன் திரு திருவென முழிக்க அனு சத்தமாக சிரிக்க துவங்கிவிட்டாள். இவள் சிரிப்பதை இயலாமையோடு பார்த்துவிட்டு அர்ஜுன் முகத்தை திருப்பி கொள்ள, ஹேமாவும் வெங்கட்டும் புரியாமல் பார்த்தனர்.

“அம்மா... அண்ணாக்கு இந்த பொண்ணுனா மட்டும் ஒகேவாம்” என்று மீண்டும் சிரித்துக்கொண்டே கிண்டல் செய்தாள். அவள் சொன்னது உடனே புரிந்து போக ஹேமா அர்ஜுனின் புறம் திரும்பி, “அடப்பாவி இது எப்போவிருந்து?” என்று ஆச்சர்யமாக வினவினார். அவன் அசடுவழிய சிரிக்க, அதை பார்க்க முடியாமல் அனு “ப்பாஆஆஆஆஆ பார்க்க முடியலை நிறுத்து அண்ணா... ஆமாம் இது காதல் திருமணமா இல்லை நிச்சயத்த திருமணமா?” என்று நக்கலாக ஹேமாவை பார்த்து கேட்டாள்.

அவளுக்கு பதில் சொல்லும் வண்ணம் வெங்கட், “உன் அண்ணன் மற்றும் தாயின் புண்ணியத்தில் இது love come arranged marriage” என்று கூறி சிரித்தார். அர்ஜுன் வீட்டில் சுற்றி வளைத்தது போல் சொல்லாமல் அஹல்யாவிடம் நேராகவே விஷயம் சென்றது.

ஹல்...” துளசி பேச்சை துவங்கினார்.

செல்லில் ஏதோ பார்த்துக்கொண்டு வந்தவள் பதிலளித்தாள், “என்னம்மா...”

“இன்னைக்கு அர்ஜுன் தம்பி வந்திருந்தாங்கள அந்த பையனை உனக்கு பிடிச்சுருக்கா?” என்று நேராக கேட்க. அவர் ஏன் அப்படி கேட்கிறார் என்று புரிந்துப்போதும் வேண்டும் என்றே நடித்தாள் அஹல்யா.

“அர்ஜுனா? யாருமா? ஓஹோ நம்ம வரும்போது ஒரு family பார்த்தோமே அவங்களை சொல்றிங்களா? நான் அவங்க முகத்தை சரியா பார்க்கவே இல்லையேமா...” என்று பக்காவாக நடித்தாள். அவளது பேச்சை கேட்டு அதிர்ந்த அஸ்வத் கண்ணாடி வழியாக அவளை பார்த்து “எப்பா உலகமகா நடிப்புடா சாமி...” என்று சைகை செய்ய அஹல்யா வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

“அடடா பையன் போட்டோ கூட வாங்கலையே” என்று கண்ணன் சிறிது வருத்தம் காட்ட, அதை அவள் செல்லை நோன்டினாலே கிடைக்கும்ப்பா என்று மனதில் சொல்லிக்கொண்டான் அஸ்வத்.

“பார்த்தாள் ரொம்ப நல்ல பையனாதான் தெரியுது அஹல், சென்னைல வேலை செய்யுறாராம் நல்ல பையனாதான் தெரியுது உனக்கு பிடித்து இருந்தால் மேல பேசலாம்” என்று விலாவரியாக சொன்னார் கண்ணன்.

இதை கேட்ட அஸ்வதிர்க்கு தலையே சுற்றியது, நீங்க சொல்லாட்டியும் அவளுக்கே இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சிருக்கும்ப்பா என்று மனதில் புலம்பிக்கொண்டான். அஹல்யாவின் நிலையோ காரை நிறுத்த சொல்லி ரோட்டில் தையதக்கவென்று குதிக்கவேண்டும் போல் இருந்தது. இருவரும் தங்கள் மன பேச்சுக்களை நிறுத்திவிட்டு, “உங்களுக்கு சரின்னா எனக்கும் சரிதான்ப்பா” என்று அடக்கமாக சொல்லிமுடித்தாள் அஹல்யா.         

Go to Kadhal payanam # 09

Go to Kadhal payanam # 11

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.