(Reading time: 26 - 52 minutes)

ஹே சீக்கரம் குடிடி... போய் பொங்கல் வைக்கணும், இப்பவே நேரம் ஆகிடுச்சு” என்று ஹேமா அதட்ட, “சரி சரி கத்தாதிங்கம்மா, நம்ம ஊருக்கு போற வரைக்கும் நோ அதட்டல்ஸ் ஷு” என்று வாய் மீது கைவைத்து அமைதியாக இருக்க சொன்னாள். ஒருவாறு அவளையும் இழுத்துக்கொண்டு கோவிலின் உள்ளே சென்றுகொண்டிருக்க, கோவிலின் உள்ளே கண்ணனின் குடும்பத்தார் நுழைந்தனர். என்னதான் சின்ன ஊராக தெரிந்தாலும் கோவில் மட்டுமே அந்த ஊரின் பெரும் பகுதியை வளைத்து அமைந்து இருந்தது. கோவிலின் முன்னால் இருக்கும் வெற்றிடத்தில் எல்லாம் இப்போது திருவிழா கடைகள் போடப்பட்டு இன்னும் அழகை கூட்டியது. பெண்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாய் வர, தரிசனங்கள் திருப்தியாக கிடைக்கும் அளவிற்கு பார்த்துக்கொண்டனர். கோவிலுக்கு பின்புறமாக பொங்கல் வைப்பதற்கு என்று ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

“ம்ம்ம்ம் ஆஹா.... அம்மா நெய் வாசனை சும்மா கும்முன்னு ஊரையே இழுக்குது”, என்று மோப்பம் பிடித்தவாறு தாய்க்கு அருகிலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் அனு.

“ஏய் சாமிக்கு படைக்குறது இப்படியெல்லாம் ருசிப் பார்க்ககூடாது” என்று ஹேமா அதட்ட, “நான் என்ன எடுத்து சாப்பிட்டா பார்த்தேன்” என்று அலுத்துக்கொண்டாள் அனு. பதிலுக்கு ஹேமா முறைக்க சாமி விஷயங்களில் விளையாடினால் ஹேமாவிற்கு மிகவும் கோவம் வரும் என்பதால் அடக்கி வாசித்தால் அவள். பார்த்து பார்த்து பக்தியுடன் செய்ய பொங்கல் சூப்பராக ரெடி ஆனது.

“நல்ல தரிசனம் இல்லைமா...”

“ம்ம்ம்ம்ம்ம்... எத்தனை நாள் ஆச்சு இங்க வந்து, இங்க வந்தாலே மனசு நிம்மதியா இருக்கு” என்று மனதில் பட்டதை எல்லாம் கூரிகொண்டிருந்தார் துளசி.

“சரி தரிசனம் முடிஞ்சுது, கிளம்பவேண்டியது தானே” என்று ஆரம்பித்தான் அஸ்வத்.

“உனக்கு என்னடா இவ்வளவு அவசரம் இங்கதான் அவ்வளவு பொண்ணுங்க வராங்கள பொறுமையா சைட்டடி” என்று கிளம்ப மனமின்றி கூறினாள் அஹல்யா.

“ஆமா ஆமா பொண்ணுங்க வந்துட்டாலும்... நானே செல்லுல சிக்னல் இல்லையேனு கடுப்புல இருக்கேன், அனு என்ன பண்ணிக்கிட்டு இருக்காளோ?! குலதெய்வம் கோவிலுக்கு  போகபோறேன்னு சொன்னதோட சரி, எங்கனு கூட சொல்லலை. இவளாவது reply பண்ணலாம் இல்லை ஹ்ம்ம்..” என்று தன் போக்கில் வாய்க்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.

“என்னடா தனியா பேசிக்கிட்டு இருக்க?” என்று அவனை கொஞ்சம் சீண்டிவிட்டு கிளம்ப ஆயத்தமனனர் கண்ணன் குடும்பத்தார்.

“அம்மா திரும்பி சாயந்திரம் வருவோம்ல? நைட் தான் இன்னும் நல்லா இருக்கும்” என்று அவள் கெஞ்ச, “கண்டிப்பாக வருவோம்” என்று கண்ணன் பதிலளித்தார்.

ட்டம் விடும் வாலிபன் போல் கையை அங்கும் இங்கும் அசைத்து வராத சிக்னலை பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான் அர்ஜுன். “கடவுளே ஏன் இப்படி சோதிக்கிறாய், ஒரு மெசேஜ் அனுபலாம்னு பார்த்தால் இப்படியா!?” நொந்து போனான் அர்ஜுன். அவனது செயல்களை பார்த்த அனுவிற்கு சிரிப்பாக இருந்தது, படையல் இட்டு சாமி தரிசனம் முடிந்து சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து இருந்தனர் வெங்கட் குடும்பத்தினர்..

“அர்ஜுன் என்ன பண்ற இங்கவா” என்று கையில் பொங்கலை வைத்துக்கொண்டு ஹேமா அழைக்க, “இருங்கம்மா ஒரு முக்கியமான கால் பண்ணனும் ஆபீஸ்க்கு” என்று பொய் சொல்லி தொலைவில் நின்றான், “ஆமாம் ஆமாம் ரொம்ப முக்கியமான கால்தான்” என்று கிண்டல் செய்தாள் அனு.              

அரிதாக கிடைத்த சிக்னலில் தன் லியாவிற்கு தொடர்புக்கொண்டான் அவளது அஜூ. துளசி, கண்ணன், அஸ்வத்துடன் கோவிலை விட்டு சென்றுக்கொண்டிருக்கையில், அஹல்யாவின் கைபேசி அலற, அவசரமாக அதை mute செய்து சிறிது பின்தங்கி அழைப்பை எடுத்தாள், எடுத்து ஆசையாக பேச அஜூ வாய்திறக்க பக்கத்துலையே அஸ்வத் இருப்பதை கண்டு, மெதுவாக  “அஸ்வத் இருக்கான் நானே அப்பறம் கால் பண்றேன் பாய்...” என்று கூறி வைத்துவிட்டாள்.

“அஸ்வத் வந்தால் இவளுக்கு என்ன, கடுச்சு திங்கவா போறான். ஹ்ம்ம்ம்... அஸ்வத்.... நீயும்  இப்படி அனுபவிப்ப” என்று வந்த எருச்சலில் சபித்தான் அர்ஜுன். அந்த நேரம் பார்த்து அனு அவன் அருகில் வர, மற்ற வார்த்தைகளை விட அஸ்வத் என்ற பெயர் மட்டும் பலமாக கேட்டது அவளுக்கு “என்ன, என்ன அண்ணா சொன்னீங்க?” என்று அவள் விழிக்க கடுப்பில் இருந்த அர்ஜுன், “ம்ம்ம்ம் அஸ்வத்னு ஒரு ஃப்ரண்டு ஃபோன் அட்டென்ட் பண்ணலை அதான்...” என்று மழுப்பி சென்றான்.    

ந்த நேரத்தில் அர்ஜுன் புலம்பினானோ, அஸ்வதிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அருகிலேயே அர்ஜுன் இருப்பதை பார்த்து அழைப்பை துண்டிக்க நினைத்து பின் என்ன தோன்றியதோ, எடுத்து “அண்ணா இருக்காங்க நான் அப்பறம் கால் பண்றேன்” என்று வைத்துவிட்டாள். அவன் ஒன்றும் புரியாமல் முழித்து கைபேசியையே பார்த்தான் அப்போதுதான் மூளையில் பொறிதட்டியது, அவன் இருக்கும் இடத்தில் வரும் சாமி பாடலும் அவள் அழைப்பை எடுத்தபோது கேட்ட பாடலும் ஒன்றாக ஓடியது என்று, என்னதான் எதர்ச்சியாக இருக்கலாம் என்று தோன்றினாலும் அவள் இங்கு இருக்க வாய்ப்பு உண்டோ என்று மனம் பதைத்தது.

“ஹய்யோ இவ்வளவு ஸ்பீக்கர் செட் இருக்கிறதே, அப்படியே அவள் இங்கே இருந்தாலும் எங்கேன்னு போய் தேடுறது” என்று  யோசனையுடனே வந்தான் அஸ்வத்..

“அம்மா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, கார் சாவியை அங்கேயே வச்சுட்டு வந்திட்டேன் இதோ வந்திடுறேன்” என்று விறுவிறுவென கோவிலின் முன் பகுதிக்கு சென்றான். முன்னும் பின்னும் பேராசையுடன் அனுவை தேடி கண்களை சுழலவிட்டான். தொலைவில் இருப்பாளோ என்று எக்கி எக்கி அவன் தேட அனுவோ அவனிடம் இருந்து பத்தடி தூரத்திலேயே இருந்தாள். அவளை கண்டதும் மனம் துள்ளிகுதிக்க, ஏதோ வாங்க செல்பவன் போல் அவள் இருக்கும் இடத்திற்கு அருகமையில் சென்றான். அப்போதும் அவள் கவனிக்காமல் இருக்க அவளது கைபேசிக்கு அழைக்க முயன்றான், பின்பு அவளால் எப்படியும் எடுக்க முடியாது என்று தோன்றவும் யோசனையை கைவிட்டான். 

“அம்மா கண்டிப்பா நைட் திரும்பி வருவோம்ல அம்மா?” என்று அவள் மீண்டும் மீண்டும் கேட்டதையே கேட்க, வெறுத்து போன அர்ஜுன் “ஹே போதும்டி வேணும்னா நீ இங்கேயே இரு, நாங்க கிளம்புறோம். உன் தொல்லை தாங்க முடியலை” என்று தலையில் அடித்துக்கொண்டான்.  

இவர்கள் பேசிக்கொள்வதை பார்த்தவனுக்கு அவளிடம் பேசவேண்டும் இருந்தது, அதுவும் சிறுபிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு பெற்றோடு கொஞ்சி பேசும் அவனது அனுவை கண்ணெடுக்காமல் பார்க்க தோன்றியது. அவள் பேசும் அழகையே பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ விரைவாக ஒரு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினான் “I can see you...”

இதை கண்டதும் அவள் யாரும் பார்க்காத வண்ணம் அவனை தேடினாள், அவனோ வேண்டும் என்றே அருகில் இருந்த தூணில் ஒளிந்துகொண்டான். அவனது சிறுபிள்ளை செயல் அவனுக்கே சிரிப்பாக இருந்தது.  அவள் முகத்தில் அந்த ஒரு நொடியில் வியப்பு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்ற உணர்வுகள் மாறி மாறி தோன்றி மறைவதை கண்டு சிரிப்பாக இருந்தது. அவள் தேடி களைத்து போக “Don’t play...” என்று ஒரு குறுஞ்செய்தி பதிலாக அனுப்பிவிட்டு பேச்சை தொடர்ந்தாள். குறுஞ்செய்தி பார்த்து ரசித்து சிரித்துக்கொண்டவன் அவளை ஒருமுறை எட்டி பார்த்துவிட்டு இரவு வருகையில் அவளுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம் என்று எண்ணிக்கொண்டு சென்றுவிட்டான். 

“எவ்வளவு நேரம்டா சாவி கிடைச்சதா?”

“அது...ஆஆ என் பாக்கெட்லேயே இருக்குதும்மா, நான்தான் பார்க்காமல் விட்டுட்டேன்” என்று விரைவாக சாவியை எடுத்து கார் பக்கம் திரும்பினான்.

அவன் கூறியதை சந்தேகமாக பார்த்த அஹல்யா “அம்மா....இவனை நம்பாதிங்க ஓடிபோய் ஏதோ பொண்ணை பார்த்துட்டு வந்திருக்கான் போல...” என்று அவனை சந்தேகமாக பார்த்தவாறே உள்ளே ஏறினாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா அவளை நம்பாதிங்க” என்று அவளைப் பார்த்து விளையாட்டை முறைத்துவிட்டு திரும்பிக்கொண்டான். இவர்கள் விளையாட்டாய் பேசி சண்டை போடுவதையெல்லாம் பார்த்து ரசித்தவாறே வந்தார்கள் துளசியும் கண்ணனும்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.