(Reading time: 43 - 85 minutes)

டுத்தடுத்து வலி வரும்  பொழுது பூமா துடிப்பதும், அவள் துவள்வதைக் கண்ட குணாவின் தவிப்பையும், உணர்ச்சிக் கலவையாய் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா. “எப்போது குழந்தை வெளியே வரும்...” என்ற திக் திக் தருணம்.....

வெகு நேரம் போராடிய குழந்தை வெளியே வர ஆரம்பித்தது! நேகா சந்தியாவிற்கு காண்பிக்க அவளுக்கு புல்லரித்தது! குழந்தை கழுத்தில் கொடி சுற்றி இருந்ததால் சிரமப்பட்டு பயணித்ததாம்! என்ன ஒரு போராட்டம்....தாயும் சேயும்!

வந்து விட்டாள் அந்த தேவதை....

வீறிட்டு அழுது கொண்டே....

அந்த அழுகை...

தாயின் வலியை மறைய செய்த அழுகை

அவளை சிரித்தே  அழ வைத்த அழுகை

தந்தையும் தாயாக்கிய அழுகை...

தொப்புள் கொடி பந்தம் உருவாக வித்திட்டவனையே அதை வெட்ட சொல்லி கத்திரியை கொடுத்தார் மருத்துவர்..... குணாவிற்கு  கத்திரியைக் தூக்க கூட சக்தியற்ற  கிழவன் போல கை கிடுகிடுவென நடுங்கியது. தகப்பனுக்கும் தாய்மை உண்டன்றோ! உணர்ச்சிப் பெருக்கில் திளைத்தான்... பூமாவைப் பார்த்தான்.... விழிகளால்  பூரிப்பை பரிமாறினர்...

அந்த சோர்விலும் பூமா, “குழந்தைக்கு பசித்தா என்னிடம் கொடுங்க. ப்ளீஸ்..! ” என்றாள் கெஞ்சலாக! சந்தியாவிற்கு பாவமாக இருந்தது! முந்திய பிரசவமான பொழுது எத்தனை முறை பாலூட்ட என் கையில் பிள்ளை இல்லையேடி என அழுதிருப்பாள்...

சட்டென்று அவள் மனதில் பொறி தட்டியது! “பாலூட்டி இனத்திற்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம்! ஒரு சிசுவிற்கு உணவளிக்க கடவுள் பெண்ணிற்கு கொடுத்த வாய்ப்பு! அதை அந்த பொருக்கி...” மனதிற்குள் குமைந்தாள். ஆனால், இந்த முறை அழவில்லை.. தன்னை தாழ்வாக நினைத்து வருந்தவில்லை... “தூசியில் விழுந்தாலும்  ரோஜா ரோஜா தான்!”, தன்னை சுற்றி கட்டியிருந்த கூட்டை உடைத்து ஏறிந்தாள்.

‘எங்கிருந்து வந்தது தன்னம்பிக்கை? என்னுள் தான் இருந்திருக்கிறது! இந்த குட்டி தேவதை உணர்த்தி விட்டாள்!’ என்று தனக்கு தானே கேள்வி கேட்டு பதிலளித்து கொண்டே குழந்தையைப் பார்த்து சிரித்தாள்.  

குழந்தையின் வருகை எல்லாருக்கும் கொண்டாட்டம். கார்த்திக்கை அழைத்து தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை காண்பித்தாள் சந்தியா....

குழந்தை கண்களை இறுக மூடி, கைகளுக்குள் எதையோ மறைத்து வைத்திருப்பது போல இறுக மூடியிருந்தது! தலையில் மெல்லிய ரோமங்கள் ஆங்காங்கே.... ரோஜா கன்னங்கள்... பட்டு ஸ்பரிசம்...பஞ்சு மிட்டாய் பாதங்கள்....அதில் படியில் அடுக்கி வைத்த லாலிபாப்கள் போல உருண்டை விரல்கள்...

ஆசையாய் அவளின் பாதங்களை வருடிய படி, “நித்தி நிக்கி பிறந்தப்போ ஒரு பெருமை, கர்வம் வந்தது... இவளைப் பார்த்தா ஏக்கம் வருது” என்றான் ஏக்க பெருமூச்சு விட்ட படி.... ஏற்கனவே குழந்தையின் ஜனனத்தை பார்த்தவளுக்கு பூமா இடத்தில் தன்னையும், குணா இடத்தில் அவனையும் வைத்து இனம் புரியாத ஆசை தொற்றிக் கொள்ள, இவனின் ஏக்கமும் தவிப்பும் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச நெருடலை பஸ்பமாக்கியது!

பின், அவனை குழந்தைக்கு சிக்கல் சிங்காரவேலனின் பிரசாதம் எடுக்க வீட்டிற்கு செல்ல அழைத்தாள். அவர்கள் கிளம்பும் பொழுது வெளியே பனி மழை பொழிய, அதை அவளிடம் காண்பித்தான்... முதன் முறையாக பார்த்து அதிசயித்தாள்... “வெள்ளை அழகு...!” என்று குதூகலித்து பனி வாயில் விழுவதற்கு இலகுவாக வாயைத் திறந்தாள்...”மன்சிங் மான்ஸ்டர்... உன் சைவ விரதம் முடிந்தது தானே? உன்னை மறுபடியும் இங்க வந்து விட்டு  சிக்கன் பிரியாணி செய்து தாரேன்”  என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்டினான்.

வீட்டிற்கு வந்ததும், “பனி மழையில் என்னை போட்டோ எடுக்கிறீங்களா? ட்ரெஸ் மாத்திட்டு வருகிறேன்” என்று காத்திருக்க சொல்லி விட்டு சென்றவள் வெள்ளை சுடிதாரில் திரும்ப, அதைக் கண்டவனால் தன் கண்களை நம்ப முடியவில்லை. அவன் கால்கள் தன்னிச்சையாக நடக்க, இமையசைக்காமல் தன்னை நோக்கி வந்த நெடியவனின் சட்டையை  பிடித்து தன்னோடு இழுத்து,

“பொய் சொல்லி தான் உன்னை கூட்டிகிட்டு வந்தேன் பழனியப்பா...”, என்றாள் குறும்பாக சிரித்த படி... அவன் பேயை கண்டு கொண்ட மகிழ்ச்சியில் காதலுடன் கட்டி அணைத்தான். மனம் ஒன்றிய போனவர்களின் ஸ்பரிச உராய்வில் சிறிது நேரம் மவுனமாய் கழிய,

 அவன் அணைப்பில் திளைத்தவள்,  “உன் கூட குடும்பம் நடத்த ஆசை வந்துடுச்சு பழனியப்பா..“, செல்லமாய் குழைந்தாள்.

கட்டுக்கடங்கா மகிழ்ச்சியில் திளைத்தவன் அவள் மாற்றத்தை உறுதிப் படுத்த, தனது அணைப்பை தளர்த்தி அவள் முகத்தை ஆராய்ந்த படி. “பூமா அண்ணி குட்டியைப் பார்த்து உனக்கும்  ஆசை வந்துடுச்சா?”, என கேட்டான் கண்களில் ஆர்வம் மின்ன.

அதற்கு அவன் மார்பில் சாய்ந்து அவனை இறுக கட்டிக் கொண்டவள், “ம்ம்ம்....ஆமா ஆனா இல்லை... கார்த்திக் அன்னைக்கு பாடுறப்போ ஏன் அழுதேன் தெரியுமா?” என்று கேட்டாள்...

‘நெற்றி முட்டி மூக்கு உரசி கல்யாணம் செய்து கொள்ளலாம்னு சொன்ன அன்று தானே அந்த காமுகன்.....!!! அதை நினைத்து தானே அழுதிருப்பாள்’ என்று எண்ணியவன் அவளை மேலும் இறுக அணைத்து மனதின் வேதனையைக் காட்டாமல் அவளையே பார்த்தான்..

“இந்த கட்டிபிடி வைத்தியத்தில் கிடைக்கிற ஆறுதலும், அமைதியும் எதிலும் கிடைக்கலைடா பழனியப்பா! ஐ மிஸ்டு யு... அதான் அழுதேன்”

என்றாள் குரல் தழுதழுக்க. அவள் சொன்னதும் மகிழ்ந்தான். ‘என்னை தேடியிருக்கிறாள்’ என்று சந்தோஷம் கொண்டது அவன் மனது. அந்த பூரிப்பிலே அவள் முகவாயை பற்றி நிமிர்த்திய கார்த்திக்,

“ஐ லவ் மிஸ்ஸிங் யு”, என்று கண் சிமிட்டினான்.  அவன் கையை தட்டி விட்டு,

“சீண்டாம என் மொக்கையை மட்டும் கேளு” என்று மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு, 

“நமக்குன்னு வாழணும் முடிவு பண்ணிட்டேன்.... அந்த பச்சை நாய்க்காக நாம கைக்குள்ள இருக்கிற சந்தோஷத்தை ஏன் இழக்கணும்?” என்று சொன்னதும், அவன் சிரித்துக் கொண்டே,

“பல்பு இப்ப தான் எரிந்ததா....இதை தான் அன்னைக்கே சொன்னேன்...” என்று அவள் கன்னத்தை அழுத்தமாக கிள்ளினான்.

“ஸ்... ஆஆஆ..”, என கத்தி அவன் கையைத் தட்டி விட்டு, தன் கரங்களை அவன் கழுத்தில் மாலையாக்கி, 

“தத்துவம் சொல்றப்போ பனி பொழியலையே.... வைரமுத்து என்ன சொல்லியிருக்கார்....” என்று அவன் மூச்சக் காற்றை  சுவாசிப்பது போல நெருங்கியவள்,

புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது

இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

என்று பாட ஆரம்பித்தவளின் குரல் தேய்ந்து, அவளின் முத்த மழையின் வேகம் அதிகரித்தது... மழையில் நனைய நனைய அவன் ஆசை புயலாய் கிளம்பி அவளிதழ்களை மையமிடும் பொழுது கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க இருவரும் திடுக்கிட்டனர்... “அய்யோ அப்பா கார்த்திக்” என விழுந்தடித்துக் கொண்டு சமையலறைக்குள் ஓடினாள்...

இவன் திடுக்கிட்டு கதவைப் பார்க்க  உள்ளே வந்தது சரண்... அவன் கார்த்திக்கை பார்த்து ஒரு நொடி திகைத்து பின் விழுந்து விழுந்து சிரித்தான்...”மந்தி உன் முகமெல்லாம் ரங்கோலி போட்டிருக்கு” என்று சொல்லிக் கொண்டே.... ஸ்ட்ராபெரி வாசனை முகத்தில் வருவதை அப்பொழுது தான் உணர்ந்து வெட்கத்தில் நெளிந்தான்.

திருமண பந்தத்தில் இணைய இருவர் மனதும் தயாராக, பார்த்த முதல் நாளே அவன் மனதிற்குள் ஓசையின்றி அடியெடுத்து வைத்தவள், மேள தாளங்கள் முழங்க, சுற்றமும், சூழமும் வாழ்த்த அவன் கரம் பற்றி மனையாளாய் இல்லற வாழ்க்கையிலும் அடியெடுத்து வைத்தாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.