(Reading time: 29 - 58 minutes)

28. என் இனியவளே - பாலா 

En Iniyavale

போனை அவன் கட் செய்த பின்பும் காதிலேயே வைத்துக் கொண்டிருந்தாள் இனியா.

அவன் பேசிய பேச்சு அவனுக்கு அவள் மேல் உள்ள அன்பை காட்டியது. அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நினைத்துப் பார்த்தாள்.

“ஏன் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி இருந்தா மட்டும் நான் உன்ன திட்ட மாட்டேனா?  உன் கிட்ட எனக்கு அந்த உரிமை கூட இல்லையா. உனக்கு வேணும்னா நமக்கு கல்யாணம் ஆகலைன்னு எல்லாம் டிபரன்ஸ் தெரியலாம். எனக்கு அதெல்லாம் தெரியாது. என்னை பொறுத்த வரைக்கும் நீ தான் என் பொண்டாட்டி. ஆனா உனக்கு தான் அப்படி ஏதும் நினைப்பில்லை.”

ஆமா அவன் சொன்னது சரி தான். நானும் தான் ஏன் அப்படி பேசி வச்சேன்? ஏதோ ஒரு கோபம். ஆனால் அது அவனுக்கு தான் வர வேண்டியது என்று இப்போது தோன்றுகிறது.

அவன் சொன்னதை போல என் அழுகையை தாங்காம ஓடோடி வந்தவனுக்கு நான் என்ன செஞ்சேன் பதிலுக்கு என்று நினைத்தவளுக்கு தன் மேலே கோபம் வந்தது.

ஆனால் ஸ்வேதாவும் பாவம் தானே. அவளையும் நினைத்து பார்க்க வேண்டி இருக்கிறது. எல்லாத்தையும் நினைச்சி பார்க்கும் போது தான் செஞ்சது தப்புன்னு தோணலை. ஆனா எதுவா இருந்தாலும், அவன் கிட்ட தான் முதல்ல சொல்லி அவன் மூலமா விஷயத்தை ப்ரொசீட் பண்ணி இருக்கணும். ஆனா கடைசியா அதையும் அவன் எனக்காக ஒத்துக்கிட்டான் தானே. ஆனா நான் அப்பவும் சண்டை போட்டு வைக்கறேன். அவன் என்னை திட்றதுல தப்பே இல்லை என்று எண்ணியவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

ஆனா நிஜமா அது திட்டினது தானா? என்று எண்ணியவளுக்கு திரும்ப சிரிப்பு வந்தது. அவனுக்கு சரியா திட்டக் கூட தெரியலை. ஆனா அது நல்லா தான் இருந்தது.(எவ்வளோ சேட்டை பார்த்தீங்களா. விடுங்க இளா கிட்ட சொல்லிடலாம்.)

ங்கே பாலுவின் பாடோ பெரும்பாடாக போனது. அவன் எவ்வளவோ முயன்றும் அவனால் ஜோதியை சமாதானப் படுத்த இயலவில்லை.

ஜோதியை அழைத்துக் கொண்டு அவன் வீட்டுக்கு கிளம்ப போவதாக அவன் ராஜகோபாலிடம் கூறும் போது கேட்டுக் கொண்டிருந்த இனியா அவனிடம் “ஏன் மாமா கிளம்பறீங்க. ரெண்டு நாள் இங்கேயே இருங்களேன்” என்றாள்.

“ஏன் உங்க அக்கா கிட்ட நான் மாமா அத்தை முன்னாடியே வாங்கி கட்டிக்கறதுக்கா”

“என்ன மாமா சொல்றீங்க.”

“நீ பாட்டுக்கு என்னையும் இந்த ஸ்வேதா விசயத்துல இழுத்து விட்டுட்ட, இப்ப யாரு அவஸ்தை படறது. நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசனேன்றதுக்காக அவ என் கூட பைட் பண்ணிட்டு இருக்கா. அதுல இங்கே வேற இருந்து அவ எதாச்சும் பேசி வைச்சா அத்தையும், மாமாவும் கஷ்டபடுவாங்க, அதான் எதுக்கு இந்த பிரச்சனை எல்லாம்னு கிளம்பறோம்”

“அக்காக்கு என்னவாம் மாமா”

“நீ இப்படி ஈஸியா என் கிட்ட கேட்கற. அதை நான் உன் அக்கா கிட்ட கேட்க முடியுமா சொல்லு.”

“என்ன மாமா நீங்க. இதுல அவளுக்கு என்ன பிரச்சனையாம்.”

“அவளுக்கு ஸ்வேதாவை பிடிக்காதுன்னு உனக்கே தெரியும்ல இனியா. அதுவும் இப்ப இனியா போய் வாழப் போற வீட்டுல எதுக்கு அவளை நுழைக்கறீங்கன்னு என் கூட சண்டை. என்ன செய்ய சொல்ற”

“மாமா நம்ம பர்சனல் ரிவென்ஜ் எல்லாம் அவளோட கல்யாண விசயத்துல காண்பிக்கலாமா மாமா. அதுவும் கல்யாண வயசுல இருக்கற பொண்ணு கிட்ட போய்”

“இதெல்லாம் நூத்து கிழவி மாதிரி பேசு. உன் கல்யாணம் நடக்கறதை பத்தி நினைக்காத”

“என்ன மாமா நீங்க போய் இப்படி பேசறீங்க.”

“பின்ன எப்படி சொல்றதாம். எனக்கே நான் பண்ணது தப்போன்னு இப்ப தோணுது. எப்படியும் நீயும் இளவரசனும் அவங்களை விட பெரியவங்க. அட்லீஸ்ட் உங்க கல்யாணம் நடக்கற வரைக்குமாச்சும் வெயிட் பண்ணிட்டு அப்புறம் இதைப் பத்தி பேசி இருக்கலாம். எல்லாரும் சொல்ற மாதிரி என்ன அவசரம் அவங்க கல்யாணத்துக்கு”

“மாமா நான் அப்படி நினைக்கல. எங்க மேரேஜ் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா எங்களுக்கு முன்னாடி இருந்தே அவங்க லவ் பண்றாங்க இல்ல, அவங்க லவ் பிரச்சனைல இருக்கு. இதுவே எனக்கும் அவருக்கும் ஒரு பிரச்சனைன்னா அதை சால்வ் பண்ண நீங்க எல்லாரும் இருக்கீங்க இல்ல மாமா. அதே மாதிரி தானே இதுவும். அதை நான் ஸ்வேதாவுக்கு பண்றதா நினைக்காம சந்துருக்கு பண்றதா அக்கா நினைச்சா எந்த பிரச்சனையும் இருக்காது. அதுவும் இல்லாம இது ஒன்னும் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்க சின்ன ப்ராப்ளமும் இல்லை. உங்களையும் இதுல சம்மந்தப் படுத்தி இளா ஏதேதோ தப்பா ஸ்வேதாவை நினைச்சிட்டு இருக்காரு. அதுல போய் நான் எப்படி மாமா தலையிடாம இருக்க முடியும், அதனால தான் உங்க கிட்டவும் ஹெல்ப் கேட்டேன்.”

“ம்ம்ம். நீ இந்த விஷயத்தை சொல்ல போய் தான் நானும் ஸ்வேதாக்கு சப்போர்ட் பண்ணி பேசனேன். ஆனா உங்க அக்காக்கு இது புரிய மாட்டேங்குதே”

“நீங்க பொறுமையா எடுத்து சொல்லுங்க மாமா. அதெல்லாம் அக்கா புரிஞ்சிக்கும். அக்காக்கு ஏன் ஸ்வேதாவை பிடிக்கலைன்னு தெரியலை. ஆனா எல்லாம் சின்ன விஷயமா தான் இருக்கும். சோ எல்லாத்தையும் சரி பண்ணிடலாம் மாமா”

“ம்ம்ம். சரி. ஆனா எதுவா இருந்தாலும் அதை நான் எங்க வீட்ல போயே வச்சிக்கறேன். இல்லைன்னா இங்க பிரச்சனை ஆச்சுனா யாரு அத்தை மாமா முகத்துல முழிக்கறது”

“சரி மாமா. ஆனா அக்காவை சரி பண்ணிடுங்க சரியா”

“ம்ம்ம். ஒரு கல்யாணம் நடக்க எத்தனை பேரை சரி செய்ய வேண்டி இருக்கு”

“பின்ன சும்மாவா மாமா. நீங்க தானே என்னை கல்யாணம் பண்ணிக்க கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லிட்டு இருந்தீங்க. சோ நீங்க இதெல்லாம் செஞ்சி தான் ஆகணும்” என்றாள் சிரித்துக் கொண்டே.

“ம்ம்ம். எல்லாம் என் நேரம். நீ நல்லா சிரி”

“ஹிஹிஹி. அது சரி மாமா நீங்க அக்காவுக்கு இந்த அளவுக்கு பயப்படுவீங்களா. எனக்கு இன்னைக்கு வரைக்கும் இது தெரியாம போச்ச்சே”

“நீ ஏன் பேச மாட்ட. கல்யாணம் ஆன ஒவ்வொருத்தனுக்கும் தான் அவனவன் கஷ்டம் தெரியும். நாளைக்கு என் சகலையும் என் லிஸ்ட்ல தான் வந்து சேருவார். அப்ப பார்த்துக்கறேன்”

“அது சரி”

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஜோதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

“உங்களையும் இதுல சம்மந்தப் படுத்தி இளா ஏதேதோ தப்பா ஸ்வேதாவை நினைச்சிட்டு இருக்காரு” என்று இனியா கூறிய வார்த்தைகளே அவள் காதில் கேட்டுக் கொண்டிருந்தது.

“இதற்கு என்ன அர்த்தம்?”

இதை பற்றி இங்கு கேட்பதை விட தங்கள் வீட்டுக்கு போய் பேசிக் கொள்வதே சரி என்று எண்ணி கிளம்பி விட்டாள் ஜோதி.

வீட்டிற்கு சென்று கணவரிடம் இருந்து எல்லாவற்றையும் கேட்டறிந்த ஜோதி முதல் வேலையாக இளவரசனுக்கு போன் செய்து ஸ்வேதாவின் விஷயத்தை பற்றி பேச வேண்டும் என்றும் நேரில் பேச வேண்டும் என்று கூறினாள். அவனும் வருவதாக கூறினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.