(Reading time: 29 - 58 minutes)

ளவரசன் ஜோதியின் வீட்டிற்கு வந்தான்.

“வாங்க. வாங்க”

“ம்ம்ம். சொல்லுங்க. ஸ்வேதாவை பத்தி என்ன பேசணும். அதுவும் அவ்வளவு இம்பார்டன்ட்டா நேர்ல பேசற அளவுக்கு”

“எனக்கு முதல்ல இதை நீங்க சொல்லுங்க. ஸ்வேதா சந்துரு மேரேஜ்க்கு நீங்க முழுமனசோட தான் ஒத்துக்கிட்டீங்களா”

ஒரு நிமிடம் யோசித்த இளவரசன் “ஏன் இப்ப திடீர்ன்னு இப்படி கேட்கறீங்க”

“இல்ல எனக்கு இப்ப அது தெரிஞ்சாகனும். இந்த விசயத்துல இன்னும் எத்தனை குழப்பம் இருக்குனு நான் தெரிஞ்சிக்கணும்” என்றாள்.

“நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு தெரியலை.”

“இல்ல. ஸ்வேதாவை சந்துருவுக்கு மேரேஜ் பண்ணி வைக்கறதுல உங்களுக்கு முழு சம்மதமா இதை மட்டும் சொல்லுங்க”

“இல்லை. எனக்கு இதுல முழு சம்மதம் எல்லாம் இல்லை.”

“அதுக்கு என் ஹஸ்பன்ட் ஏதாவது விதத்துல காரணமா”

“என்ன ஜோதி இது. என்னென்னவோ சொல்றீங்க. என்ன இது”

“இல்ல இதுக்கு தான் எனக்கு முழு விவரம் தெரியனும். அது தெரிஞ்சா தான் இந்த விசயத்துல இருக்கற குழப்பம் போகும். நான் இவ்வளவு நாள் ஸ்வேதாவை பத்தி நினைச்சது தப்பா சரியான்னு இந்த விசயத்துல தான் எனக்கு கிளியர் ஆகும்”

இளவரசன் ஒன்றும் புரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் போதே காலிங் பெல் அடித்தது.

ஜோதி போய் கதவை திறந்தால் சந்துருவும், பவித்ராவும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

ஜோதிக்கும், இளவரசனுக்கும் பெரிய அதிர்ச்சி தான். ஆனால் இளவரசன் அதை சீக்கிரத்தில் சமாளித்துக் கொண்டு “என்னடா. ரெண்டு பேரும் இங்க வந்திருக்கீங்க” என்றான்.

“இல்லண்ணே. பவித்ரா இங்க வரணும்ன்னு சொன்னாங்கன்னு அம்மா இங்க கூட்டிட்டு போய் விட சொன்னாங்க.”

அதற்குள் ஜோதியும் சமாளித்துக் கொண்டு பவித்ராவை வரவேற்றாள்.

இளவரசனுக்கோ ஜோதி சொன்னதை முழுதாக கேட்டு தெரிந்து கொள்ள முடியாத ஆதங்கம்.

ஜோதிக்கோ இளவரசனிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள நினைத்ததை கேட்க இயலாத தவிப்பு.

பவித்ராவிற்கோ இங்கு இரண்டு நாட்கள் இருக்கலாம் என்று எண்ணி வந்தால் அத்தை கூடவே சந்துருவை அனுப்பி விட்டார்களே, அவனை எப்படி சமாளிப்பது என்று எண்ணி வந்தால், இங்கு பெரிய அத்தான் வேறு இருக்கிறார்களே, இவர்கள் இருவரையும் சமாளித்து எப்படி இங்கு தங்குவது என்று கவலையாக இருந்தது.

எல்லோரும் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் சகஜமாக இருக்க முயற்சி செய்தனர்.

ஜோதி எல்லோருக்கும் காபி எடுத்துக் கொண்டு வருவதாக கூறி உள்ளே சென்றாள்.

திரும்ப காலிங் பெல் அடித்தது.

பவித்ரா சென்று கதவை திறக்க அங்கே இனியா நின்றுக் கொண்டிருந்தாள்.

பவித்ரா சென்று இனியாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.

இனியா பவித்ராவை அணைத்து அவளிடம் பேசிக் கொண்டே உள்ளே சென்றவள் அங்கு இளவரசனை கண்டு விழி விரித்து நின்று விட்டாள்.

இளவரசனோ அவளைக் கண்ட உடன் முகம் திருப்பி நின்றுக் கொண்டான்.

சத்தம் கேட்டு வெளியே வந்த ஜோதி இனியாவை கண்டு இன்னும் அதிர்ந்தாள். இளவரசனை பார்த்தாள். அவனும் அப்போது அவளை தான் பார்த்தான். என்ன செய்வது என்பதை போல் கண்ணில் சைகை காட்டினான்.

தன்னை கண்டு முகம் திருப்புபவனை கண்டு சிறிது கோபம் எழுந்தாலும் அவன் செய்கையில் நியாயம் இருப்பதால் அமைதியாகவே இருந்தாள் இனியா.

“என்னக்கா என்னை மட்டும் விட்டுட்டு நீங்க எல்லாம் ஒன்னா இருக்கீங்க” என்றாள் இனியா.

ஜோதி பதில் சொல்வதற்குள் பவித்ரா “அப்படி எல்லாம் இல்லக்கா. நான் இங்க வரணும்ன்னு சொன்னேன், அதான் அத்தை என்னை இங்க விடறதுக்கு இவரை அனுப்பினாங்க என்று சந்துருவை காண்பித்து, இப்போது தான் வந்தோம்” என்றாள்.

அடுத்து இனியா கேள்வியாக இளவரசனை நோக்க, அவனோ உனக்கு எல்லாம் நான் என்ன பதில் சொல்வது என்பதை போல ஏதும் கூறாமல் “சரி நான் கிளம்பறேன்” என்றான் ஜோதியிடம்.

“என்ன அதுக்குள்ளே கிளம்பறீங்க. கொஞ்ச நேரம் இருங்க. எப்படியோ எல்லாரும் ஒன்னா வந்திருக்கீங்க. அதனால கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம். நான் போய் உங்க எல்லாருக்கும் காபி அண்ட் ஸ்னாக்ஸ் கொண்டு வரேன்”

அவரவருக்கு ஒரொரு பிரச்சனை இருந்ததால் யாராலும் முதலில் நார்மலாக பேச இயலவில்லை. பின்பு மெதுவாக எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து பொதுவான விசயங்களை பேச ஆரம்பித்தார்கள். பின்பு பாலுவும் வந்து சேர்ந்தான்.

பாலு தான் ஆரம்பித்தான். “சரி ரெண்டு நாள்ல நியூ இயர் வருது. எல்லாரும் எங்கயாச்சும் போலாமா”

ஜோதி உடனே “ஐயோ, என் வீட்டுக் காரருக்கு கூட இப்படி எல்லாம் ஐடியா வருது. பரவால்லையே” என்றாள்.

பாலு அவளை முறைத்து விட்டு “கிண்டல் எல்லாம் போதும். ஏதாச்சும் பிளான் போடலாமா” என்றான்.

ஆனால் இளவரசன் “நீங்க ஏதாச்சும் பிளான் போடுங்க. என்னால கன்பார்மா வர முடியுமான்னு தெரியலை, முடிஞ்சா நான் வந்து ஜாய்ன் பண்ணிக்கறேன்” என்றான்.

இனியா முகம் சுருங்கினாள்.

இனியா “நான் வரலை மாமா” எனவும், பின்பு அனைவருமே எங்கும் போக வேண்டாமென முடிவெடுத்து விட்டனர்.

பின்பு ஜோதி இரவு அங்கு தான் சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும் என வற்புறுத்தியதால் எல்லோரும் அங்கேயே சாப்பிட ஒத்துக் கொண்டனர்.

பவித்ரா ஜோதிக்கு ஹெல்ப் செய்கிறேன் என்று சொல்லி அவளிடம் அங்கேயே இருப்பதை பற்றி பேசுவதற்காக எழுந்து சென்றாள். இனியாவும் எழுந்து வர ஜோதி தான் பார்த்துக் கொள்வதாக கூறி அவளை அங்கேயே இருக்க சொல்லி விட்டார்.

இனியாவும் இளவரசனிடம் ஏதாவது பேசலாம் என்று எண்ணி அங்கேயே இருந்து விட்டாள். ஆனால் அவனோ பேசினால் தானே. மொபைலை எடுத்து யாருக்கோ போன் செய்து பேச ஆரம்பித்து விட்டான்.

அவளும் பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமையிழந்து எழுந்து சென்று விட்டாள்.

பின்பு ஜோதி இனியாவை அனுப்பி இளவரசனை சாப்பிட அழைத்துக் கொண்டு வர சொன்னாள் ஜோதி.

அவளும் அவனை அழைக்க தோட்டத்திற்கு வந்தவள் ஹெட் செட்டை போட்டுக் கொண்டு ஏதோ மெய்மறந்து அமர்ந்திருந்தவனை டிஸ்டர்ப் செய்ய இயலாமல் அங்கேயே மெதுவாக சத்தம் வராமல் அவன் முகத்தை பார்த்தவாறே அமர்ந்து விட்டாள் இனியா.

எவ்வளவு நேரம் அப்படியே சென்றதோ தெரியவில்லை. திடீரென்று ஜோதி “ம்க்கும்” என்று சத்தம் செய்தாள்.

இனியா திரும்பி பார்க்க இளவரசன் கண் திறந்து பார்த்தான். அவர்களை சுற்றி எல்லோரும் நின்றிருந்தார்கள்.

“என்னக்கா” என்றாள் இனியா.

“என்ன என்னக்கா. உன்னை எதுக்காக இங்கே அனுப்பினேன். ஆனா நீ என்ன பண்ற”

“இல்லக்கா. அது வந்து” என்றவளால் ஏதும் கூற முடியவில்லை.

“என்ன அது வந்து, உன்னை இவரை கூட்டிட்டு வர சொல்லி அனுப்பினேன், நீயும் வரலை. அப்புறம் பவித்ராவை உன்னை கூட்டிட்டு வர சொன்னேன், அவளும் வரலை. திரும்ப சந்துருவை அனுப்பினேன். இப்படி நான் அனுப்பின யாருமே திரும்பி வரலை. என்னடான்னு நானே வந்து பார்த்தா இங்கே ஒரு லவ் சீன் போயிட்டிருக்கு” என்றாள்.

“அக்கா சும்மா இரு” என இனியா அதட்டவும், ஜோதி சிரித்துக் கொண்டே உள்ளே போய் விட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.