(Reading time: 29 - 58 minutes)

ருத்தருக்கு எல்லாம் இருக்கும் போது அதோட அருமை புரியாது. உன்னை எல்லாம் பூ மாதிரி வீட்டுல வச்சி வளர்த்துட்டாங்க. அதான் உனக்கு வெளி உலகம் தெரியலை. இப்ப உனக்கு என்ன பிரச்சனை, ஒருத்தனை லவ் பண்ணினே. அவன் சரி இல்லை, அவ்வளவு தானே, அதுக்கு எதுக்கு வாழ்க்கையே போச்சின்ற மாதிரி இவ்வளவு பண்ணிட்டு இருக்க. உன் மேல யாருக்கும் அக்கறை இல்லைன்னு சொல்றியே, உன் மேல எவ்வளவு அக்கறை இருந்தா உன் அண்ணன், நீ லவ் பண்ணவனை பத்தி விசாரிச்சி அவனை பத்தின உண்மையை உனக்கு புரிய வச்சிருப்பாரு, எனக்கு தெரியும், இந்த டீன் ஏஜ்ல இருக்கற பசங்களுக்கு அவங்க பண்றது தப்புன்னாலும் அதை ஏத்துக்க மாட்டாங்கன்னு, அந்த விஷயத்தை நீ அவ்வளவு ஈஸியாவா ஏத்துக்கிட்டு இருப்ப, அதை உனக்கு புரிய வைக்கறதுக்கு உங்க அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்”

“அவருக்கு என்ன அவசியம் அவனை பத்தி விசாரிக்கணும்ன்னு, நீயா லவ் பண்ணவனை தேடி போய் ஏன் அவர் விசாரிக்கணும்”

இப்போது ஸ்ருதியின் முகத்தில் யோசனையின் அறிகுறி தெரிந்தது.

ஆனால் இனியாவின் ஆக்ரோஷம் மட்டும் குறையவில்லை. அதை கண்ட இளவரசன் ஒரெட்டு முன்னால் வைக்க, தங்கையின் முகத்தில் யோசனையை கண்ட சிவா அவனை தடுத்தான்.

“வெளியில இதே காதலால தவிச்சிட்டு இருக்கற எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா, லவ் பண்ணிட்டு அவனையே வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு, அப்புறம் அவன் சரியில்லாம, வீட்டுக்கும் போக முடியாம, அங்கேயும் வாழ முடியாம வாழ்க்கையே நரகமா எவ்வளவு பேர் இருக்காங்கன்னு தெரியுமா. அவங்க வாழ்க்கையை எல்லாம் விடவா உன் வாழ்க்கை பிரச்சனைல இருக்கு.”

“என்ன உனக்கு ஒரு பதினெட்டு வயசு இருக்குமா. இப்பவே உன் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சின்ற ரேன்ஜ்க்கு பேசுறியே, இதெல்லாம் ஒரு விசயமே இல்ல தெரியுமா, வெளிய வந்து இந்த உலகத்தை பார். ஒரு வேலை சோறு கிடைக்காதவனுக்கு அது தான் பெரிய கஷ்டம். அதை வெறும் கஷ்டம்ன்ற வார்த்தைல மட்டும் சொல்லிட முடியாது. நாம எல்லாம் வேணும்னே சாப்பிடாம இருக்கும் போது பசிச்சி பசிச்சி சாப்பாடு கிடைக்காம அதுக்காக ஏங்கிட்டு இருக்கறவங்க இருக்காங்க தெரியுமா. ஒரு வேளை உனக்கு பசிக்கும் போது சாப்பிடாம இருந்து பாரு. அப்ப தெரியும். உயிர்ன்னா அவ்வளவு ஈஸியாவா போயிடுச்சி உனக்கு. இதே பசியால தினம் தினம் சாகறவங்க எத்தனை பேர் தெரியுமா.”

“இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல ஒரு நியூஸ் போட்டிருக்கான் போய் பாரு, நேத்து பிறந்த பச்சை குழந்தையை குப்பை தொட்டியில போட்டிருக்காங்க, நாய் போய் ஏதோ இழுத்துட்டு இருக்கும் போது, குழந்தையோட கால் தெரிஞ்சிச்சாம், அதை பார்த்துட்டு போலீஸ்க்கு சொல்லி இருக்காங்க. ஆம்பளை குழந்தை தான், பெண் குழந்தைன்றதால போட்டுட்டு போயிட்டாங்கன்னு சொல்றதுக்கு கூட இல்லை. அந்த குழந்தை செத்து போயிடுச்சி. அதை படிக்கும் போது நமக்குள்ள ஒரு அழுகை, துக்கம் வரும் தெரியுமா. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, ஆனா அந்த நியூஸ் பார்த்துட்டு எனக்குள்ள இருக்கற தாய்மையுணர்வு வெளியே வந்து அழுகுது”

“ஆனா அதுக்காக நாம அந்த குழந்தைக்கு எந்த உறவும் கிடையாது” என்றவளால் மேலே பேச இயலாமல் குரல் தழுதழுக்க கண்ணீர் வடிந்துக் கொண்டிருந்தது.

அதற்குள் இளவரசன் உள்ளே வந்து விட்டான்.

“இனியா என்னடா” என்று அவளை லேசாக அனைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் தேம்பி அழுதாள்.

“சரி வா. நாம கிளம்பலாம்” என்றான் இளவரசன்.

“இல்ல இளா. இருங்க. நான் கொஞ்சம் பேசணும்” என்றாள்.

“இல்ல டா வேண்டாம். நாம இன்னொரு நாளைக்கு வரலாம்”

“இல்ல. நான் இப்போ சொல்ல வேண்டியதை சொல்லிடறேன்” என்றவளின் குரலில் அழுத்தம் தெரிந்தது.

“சரி” என்றவன் ஆனால் அங்கிருந்து கிளம்பவில்லை.

“அப்படி யாருனே தெரியாத ஒரு குழந்தை மேல நமக்கு அந்த பீலிங் வரும்ன்னா, உன் அண்ணனுக்கு உன்னை பார்க்கும் போது எப்படி இருக்கும் சொல்லு. உன் அண்ணன் நைட் எல்லாம் தூங்கறது இல்லையாம். உன் ரூம் அடிக்கடி வந்து பார்த்துட்டு போறாராம். அவரால அவரோட பிசினெஸ் கூட சரியா பார்க்க முடியலையாம். இதெல்லாம் தெரியுமா உனக்கு. நீ செத்துட்டா கூட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லைன்னு நீ எப்படி சொல்ற”

“அந்த குழந்தை செத்து போயிடுச்சே, அந்த குழந்தை யாரோடதா இருந்தாலும், ஒரு 75 பெர்சென்ட் வாய்ப்பு வந்து அந்த குழந்தை யாராலையோ ஏமாத்தப் பட்ட ஒரு பொண்ணோட குழந்தையா இருக்க தான் வாய்ப்பு இருக்கு. அப்படிப்பட்ட அந்த பொண்ணு மேல எனக்கு எவ்வளவு வெறுப்பு வருது தெரியுமா, ஆனா எங்களுக்கு சொல்லி தந்த ஒரு முக்கியமான விஷயம் எல்லாருக்குமே அவங்கவங்க பக்கத்துல ஒரு நியாயம் இருக்கும்ன்றது தான். என்னால அந்த பொண்ணை மன்னிக்கவே முடியலை, இருந்தாலும் அந்த பொண்ணுக்கு என்ன சூழ்நிலையோன்னு நினைக்கும் போது, எதுவா இருந்தாலும், அவளும் மனசை கல்லாக்கிக்கிட்டு தானே அந்த விஷயத்தை செஞ்சி இருப்பா. அவளோட நிலைமையை நினைச்சி பாரு, அந்த பொண்ணை விட என்ன குறைவான நிலைமையை கடவுள் உனக்கு கொடுத்திருக்காரு. ஒரு வேளை உன்னை மாதிரி ஒரு குடும்பம் அந்த பொண்ணுக்கு கிடைச்சிருந்தா அந்த குழந்தை இப்படி இன்னைக்கு செத்து போயிருக்காது”

இது எல்லாவற்றையும் விழி மூடாமல் சிலையை போல் கேட்டுக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.

இனியா போகலாம் என்றவாறு தலை அசைத்தாள்.

இளவரசன் இனியாவை கூட்டிக் கொண்டு கிளம்பி விட்டான்.

வழி எல்லாம் கண்ணீர் வடித்துக் கொண்டே வந்தாள் இனியா. இளவரசன் என்னென்னவோ சொல்லியும் வாயே திறக்காமல் அவள் கண்ணீர் சிந்திக் கொண்டே இருந்தாள்.

ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியாமல் இளவரசன் காரை நிறுத்தி விட்டு அவளின் கன்னத்தை கையில் தாங்கி கொண்டு “என்னடா. விடு எதையும் நினைக்காதன்னு சொல்றேன் இல்ல” என்றான்.

“இல்ல இளா. என்னால தாங்கிக்கவே முடியலை. பச்சைக் குழந்தை இளா. எப்படி அவங்களால அது முடிஞ்சது. அந்த குழந்தை செத்துப் போயிடுச்சே” என்று தேம்பினாள்.

“நீ தான் சொன்னியே டா. அவங்களுக்கு என்ன சிட்டுவேஷனோ” என்றான்.

“நானும் அப்படி நினைக்கறேன் தான். ஆனா இதுவும் கொலை தானே. கருவுல இருக்கற ஒரு குழந்தையை கலைச்சா கூட கொலைன்னு நினைக்கறவங்க எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா. இந்த குழந்தை முழுசா வளர்ந்து இந்த பூமிக்கு வெளியே வந்த கொஞ்ச நேரத்துல, அந்த குழந்தையோட தொப்புள் கொடி கூட கட் பண்ணி இல்லையாம் தெரியுமா. எப்படி அவங்களுக்கு இப்படி மனசு வருது”

இளவரசன் எதுவும் சொல்லாமல் அவளை தன் தோளின் மேல் சாய்த்துக் கொண்டான்.

இனியா பேசிக் கொண்டே இருந்தாள்.

“ரொம்ப பெரிய தப்பு பண்றவங்களுக்கு தான் தூக்கு தண்டனை கொடுக்கறாங்க. ஆனா அவங்களுக்கு கூட தூக்கு தண்டனை கொடுக்க கூடாது, தூக்கு தண்டனையையே ரத்து பண்ணணும்ன்னு எல்லாம் சொல்றாங்க. நம்மளால சகிச்சிக்க முடியாத தண்டனையை பண்றவங்க உயிருக்கு கூட நாம கருணை காட்டறோமே, ஆனா அது பச்சை குழந்தை இல்லையா, அதை அவங்களால வளர்க்க முடியலைன்னா ஏதாச்சும் ஆசிரமத்துல விட்டிருக்கலாம் இல்ல, ஏன் இளா இப்படி பண்ணாங்க”

ஏன் இளா இப்படி பண்றாங்க என்று அவள் கேட்டுக் கொண்டே சென்றாலே தவிர, அவனின் பதிலை கூட எதிர்பார்க்காமல் அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே சென்றாள்.

“அதுல அந்த பொண்ணுக்கு பார்த்தீங்களா அவ உயிரோட வால்யூ கூட தெரியலை. நாட்டுல இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க இளா. இவங்களை எல்லாம் என்ன பண்றது இளா” என்று பேசிக் கொண்டே சென்றவள் மயங்கி விட்டாள்.

இளவரசன் “இனியா இனியா” என்று அழைத்துப் பார்த்தான். தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் அடித்து பார்த்தான். ஆனால் அவளோ விழிக்கவில்லை.

அப்படியே அவளை தன் மடி மேல் சாய்த்துக் கொண்டு, வண்டியை விரைவாக ஹாஸ்பிடலிற்கு விட்டான்.    

தொடரும்

En Iniyavale - 27

En Iniyavale - 29

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.