(Reading time: 29 - 58 minutes)

னியாவும் அவளுடனே உள்ளே ஓடி விட்டாள்.

ஆனால் இளவரசனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னடா” என்று சந்துருவிடம் கேட்டான்.

“நீங்க என்னடான்னா கண்ணை மூடிட்டு இருக்கீங்க. அண்ணி என்னன்னா உங்க முகத்தையே பார்த்துட்டு இருக்காங்க. நாங்க அத்தனை பேர் வந்து இங்க நிக்கறோம். ஆனா உங்களை தவிர மத்த யாருமே அவங்க கண்ணுக்கு தெரியலை” என்று சிரித்தான்.

பாலுவும் அவனுடன் சேர்ந்துக் கொண்டு இளவரசனை கலாட்டா செய்து கொண்டிருந்தான்.

பின்பு உணவு உண்ட பிறகு பவித்ரா கிளம்ப பிடிக்காமல் “இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம்” என்று கிளம்புவதை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் ஓய்வாக அமர்ந்திருந்தனர்.

ஜோதி கட்டியிருந்த சேலையை காட்டி பவித்ரா ஏதோ விசாரிக்க ஜோதி அதை பற்றி விவரிக்க ஆரம்பிக்க பாலுவும் இளவரசனும் ஒரு பார்வை பார்த்து சிரித்துக் கொண்டனர்.

இளவரசன் திரும்ப ஹெட் செட்டை எடுத்து ஒரு காதில் மாட்டிக் கொள்ள பாலு “நீ கொடுத்து வச்சவன், நான் அப்படியா” என்றான்.

“ஏன். அப்படி சொல்றீங்க” என்றான் இளவரசன்.

“பின்ன நீ பாட்டுக்கு ஹெட் செட் எடுத்து மாட்டிக்கிட்ட. ஆனா என் நிலைமைய பாரு, நான் மட்டும் அப்படி செஞ்சேன்னா அங்க பேசிட்டிருக்க என் பொண்டாட்டி கண்ணுக்கு அது மட்டும் கரெக்ட்டா தெரியும், உடனே இங்க ஒரு முறை முறைப்பா. எனக்கு அது தேவையா”

“ஹாஹஹா”

“நீ சிரிப்பா. எல்லாம் எவ்வளவு நாளைக்கு”

“ம்ம்ம். அதையும் பார்க்கலாம்”

இப்போது எல்லோரும் சரியாக அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாலு இளவரசனை பார்த்து “பார்த்தியா” என்றான்.

அதற்குள் ஜோதி “என்ன அங்க சத்தம்” என்றாள் சினிமா பாணியில்.

“ஒன்னும் இல்லை. சும்மா பேசிட்டு இருந்தோம்” என்றான் அவனும் சளைக்காமல்.

எல்லோரும் சிரித்துக் கொண்டனர்.

திடீரென்று சந்துரு “அப்படி என்னண்ணே அப்போத்துல இருந்து ஹெட் செட் போட்டு கேட்டுக்கிட்டு இருக்கற” என்று மொபைலை பிடுங்கி விட்டான்.

திடீரென்று அவன் மொபைலை பறித்து விட்டதில் திகைத்த இளவரசன் ஓடி சென்று கிட்டத்தட்ட சண்டையிட்டு அவனிடமிருந்து திரும்ப மொபைலை பறித்தான்.

எல்லோருக்கும் ஒரே திகைப்பு.

“அண்ணி. அப்படி என்ன ஒரே சிரிப்பு சிரிச்சிட்டு பார்த்துட்டு இருக்கீங்க. அப்படி என்ன இவர் மொபைல்ல கேட்கறாரு. இப்படி சண்டை போட்டு மொபைல் வாங்கறாரு, அதை கேட்காம என்ன ஒரே சிரிப்பு.” என்றான் இனியாவிடம்.

இனியாவிற்கோ அவனிடம் கேட்க தயக்கம். அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக இருந்தாள்.

சந்துருவுக்கு தெரியும் அவர்கள் இருவரும் சரியாக பேசி கொள்வதில்லை என்று, அதனால் தான் ஏதோ பேச்சில் இனியாவை சேர்த்து பேசினான். ஆனால் அவளோ எதுவும் கேட்கவில்லை.

ஜோதி “ஆமா அப்படி என்ன கேட்கறீங்க. ஏன் இப்படி மொபைலை சண்டை போட்டு வாங்கனீங்க” என்றாள்.

“அதுவா” என்று இழுத்தவன் இனியாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, மொபைலில் இருந்து பாட்டை ப்ளே செய்தான்.

காதல் கசக்குதைய்யா வர வர காதல் கசக்குதைய்யா

மனம் தான் லவ் லவ்னு அடிக்கும் லபோன்னு தான் துடிக்கும்

தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும்

அந்த பாடலை கேட்ட இனியாவின் முகமோ விழுந்து விட்டது.

எல்லோரும் அவளை பாவமாக ஒரு பார்வை பார்த்தார்கள்.

ஜோதியோ இளவரசனை “என்ன இது” என்றவாறு பார்த்தாள்.

அவனோ “சும்மா” என்று வாயசைத்து கண்களை சிமிட்டினான்.

பின்பு இளவரசன் கிளம்ப தயாரானான்.

சந்துரு மெதுவாக “பவித்ரா கிளம்பலாமா” என்றான்.

பவித்ராவோ எப்படி சொல்வது என்று தயங்கிக் கொண்டிருக்க, இளவரசன் அவளை பார்த்து விட்டு “பவித்ரா நீ வேணும்னா இங்க ரெண்டு நாள் இருந்துட்டு அப்புறம் வா” என்றான்.

பவித்ரா அவனை நன்றியுடன் பார்த்தாள்.

பின்பு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வெளியில் வந்தவுடன் சந்துரு “என்னண்ணே. பவித்ராவை இங்கேயே இருக்க சொல்லிட்ட. அம்மா என் கிட்ட இங்கேயே இருந்து அவளை கூட்டிட்டு வான்னு ஆர்டர் போட்டு அனுப்பினாங்க. இப்ப அம்மா கிட்ட என்ன சொல்றது” என்றான்.

“விடு டா. பவித்ராக்கு நம்ம வீடு புதுசு இல்ல, அவ ஏதோ அன்ஈசியா பீல் பண்ற மாதிரி இருக்கு. அதான் இங்க இருக்க சொன்னேன். அம்மா கிட்ட நான் பேசிக்கறேன் வா” என்றான்.

இளவரசனுக்கு எதுவும் தெரியாததால் அவன் அதை நர்மாலாக தான் சொன்னான்.

ஆனால் சந்துருவிற்கு தான் ஒரு மாதிரி ஆகி விட்டது. தன்னால் தான் பவித்ரா அவன் வீட்டில் இருக்க தயங்குகிறாள் என்று எண்ணி அவனுக்கு வருத்தமாகி விட்டது.

நியூ இயரும் வந்து விட்டது.

இனியா காலேஜ் படிக்கும் போது மட்டும் தான் இந்த நியூ இயர்க்கு எல்லாம் விழித்திருந்து விஷ் பண்ணுவது எல்லாம், அதன் பின்பு அந்த பழக்கம் எல்லாம் மறைந்து விட்டிருந்தது.

ஆனால் இன்றோ அவளுக்கு உறக்கமே வரவில்லை. அவள் நினைவு முழுவதையும் இளவரசனே ஆக்கிரமித்திருந்தான்.

11.50க்கு படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து மொபைலில் டைம் பார்த்துக் கொண்டே இருந்தாள். 11.51, 11.52, இப்படி 11.59 வந்து விட்டது, மொபைலில் இளவரசனின் நம்பரை எடுத்து ஓபன் செய்தவளால் அவனுக்கு டயல் செய்ய இயலவில்லை.

அன்று ஜோதி வீட்டில் அவன் பேசியது, அவன் செயல், அப்புறம் அந்த பாடல் என்று எல்லாம் அவளை அவனுக்கு போன் செய்ய விடாமல் தடுத்தது.

ஒருவேளை அவள் போன் செய்து அவன் திட்டி விட்டால், வருடத்தின் முதல் நாளிலேயே அவனிடம் திட்டு வாங்கவோ, சண்டை போடவோ அவளுக்கு மனமில்லை. எனவே போன் செய்யாமல் மொபைலில் இருந்த அவனின் போட்டோவை பார்த்தவாறு இருந்தாள்.

சரியாக டைம் 12.௦௦ இனியாவின் மொபைல் அடித்தது. இளவரசன் அதில் அழைத்துக் கொண்டிருந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.