(Reading time: 29 - 58 minutes)

தையும் யோசிக்காமல் இனியா உடனே எடுத்து விட்டாள்.

ஆனால் எதுவும் பேசவில்லை.

“ஹாப்பி நியூ இயர்” என்றான் இளவரசன் மெதுவாக.

“ஹாப்பி நியூ இயர்” என்றாள் இனியாவும்.

“ம்ம்ம். அப்புறம் தூங்கலையா”

“இல்லை தூக்கம் வரலை”

“தூக்கம் வரலைன்னா எனக்கு போன் பண்ணியிருக்க வேண்டியது தானே”

“இல்லை இல்லை. பண்ணலாம்ன்னு தான் இருந்தேன். இருந்தாலும் கொஞ்சம் பயமா இருந்துச்சி” என்றாள் மெதுவாக.

“ஆமாம். நீ ரொம்ப பயந்தவ தான். அதுவும் என் கிட்ட”

“இளா”

“ம்ம். நம்மளை கவுக்கரதுக்குன்னா இப்படி கூப்பிட்டு தொலைப்பா. அதுவும் இப்படி மிட் நைட்ல. மத்தபடி ஒன்னும் மதிக்க மாட்டா”

“இளா. ப்ளீஸ். அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல”

“வேண்டாம். இன்னைக்கு உன் கிட்ட சண்டை போடற ஐடியா இல்லை. அதனால நீ இப்ப எந்த எக்ஸ்கியூஸ் கேட்க வேண்டாம். நார்மலா கொஞ்ச நேரம் பேசினா போதும்”

“ம்ம்ம். தேங்க்ஸ்”

“இப்ப எதுக்கு டீ தேங்க்ஸ் சொல்ற. எத்தனை டைம் சொன்னாலும் நீ திருந்தவே மாட்டியா”

“சரி. விடுங்க. திட்டாதீங்க. நியூ இயர் அன்னைக்கு இப்படியா திட்டுவீங்க”

“நான் திட்டிட்டாலும், நீ பயந்துடப் போறே”

“நீங்க இப்படியே பேசிட்டு இருங்க. அப்புறம் என்னை மட்டும் நார்மலா பேச சொன்னா எப்படி, அதுல நான் தேங்க்ஸ் சொன்னாலும் திட்றது, சாரி சொன்னாலும் திட்றது”

“சரி விடு. வேற எதாச்சும் பேசு”

“ஐ லவ் யூ”

“ஐ லவ் யூ டூ டீ”

“ம்ம்ம். இப்ப எல்லாம் இப்படி சொல்லுங்க. அப்புறம் காதல் கசக்குதுன்னு பாட்டு போட வேண்டியது, அதுவும் எல்லார் முன்னாடியும். ஏன் இப்படி பண்றீங்க.”

“போடி. நீ பண்றது எல்லாம் உனக்கு தெரியாது, என்னை மட்டும் சொல்ல வந்துட்டா”

“சரி ஓகே. நோ பைட்ஸ். நாம இந்த பைட் எல்லாம் இன்னொரு நாளைக்கு வச்சிக்கலாம்”

பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று “இனியா இன்னொரு லைன்ல கால் வருது, நான் திரும்ப கூப்பிடறேன்” என்று கால் கட் செய்து விட்டான்.

இனியாவும் அவன் கூப்பிடுவான் என்று வெயிட் செய்து கொண்டிருக்க, அவனிடமிருந்து “நாளைக்கு பேசலாம், அர்ஜென்ட் வொர்க்” என்று மெசேஜ் மட்டுமே வந்தது.

பின்பு கோபத்துடன் அவள் எப்போது தூங்கினாள் என்றே தெரியாமல் உறங்கி விட்டாள்.

காலையில் 10.30 மணி அளவில் இனியாவின் வீட்டிற்குள் நுழைந்தவன் “இனியா கொஞ்சம் அர்ஜென்ட். சீக்கிரம் கிளம்பி வாயேன்” என்றான்.

இனியாவோ பார்ப்பதற்கு ஓய்ந்து போய் தெரிந்தாள்.

ஆனால் அவனோ அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.

அவனை தடுத்து கூற வந்த ராஜகோபால் அவன் காட்டிய அவசரத்தில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார்.

அவன் ராஜகோபாலிடம் “மாமா ப்ரண்டோட சிஸ்டர்க்கு ஒரு ப்ராப்லம். அதான் இனியாவை அவளுக்கு கவுன்சிலிங் கொடுக்க கூட்டிட்டு போறேன். ஏற்கனவே சொல்லி இருந்தேன். இவ்வளவு நாள் டைம் வேஸ்ட் பண்ணிட்டேன்.” என்று சொல்லிக் கொண்டே போனான்.

அதற்குள் இனியா கிளம்பி வந்து விட்டாள்.

ராஜகோபால் இளவரசனிடம் “பார்த்துக்கோப்பா” என்று மட்டும் கூறி அனுப்பி விட்டார்.

வழியில் “ஸ்ருதியை பத்தி ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல இனியா. நியாபகம் இருக்கா” என்றான்.

அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

“அதான் அந்த ஷங்கர் குரூப் ஆப் கம்பனீஸ் சொன்னேனே”

“ம்ம்ம். நியாபகம் இருக்கு”

“இப்ப செகண்ட் டைம் ஸ்ருதி சூசைட் ட்ரை பண்ணிட்டா. திரும்ப காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம். ஆனா அவளோட பிஹேவியர் எதுவும் சரியில்லை. அவளை எப்படி காப்பாத்தறதுன்னு தெரியாம என் பிரண்ட் ரொம்ப பீல் பண்றான்”

அதற்குள் அவர்கள் அந்த வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

இளவரசனின் கார் அந்த வீட்டில் நுழையும் போதே வெளியே வந்த சிவா அவர்களை நேராக ஸ்ருதியின் அறைக்கு அழைத்து சென்றான்.

சிவா ஸ்ருதியிடம் “ஸ்ருதி இது இனியா. இளவரசன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு” என்றான்.

ஸ்ருதி நிமிர்ந்து இவளை பார்த்தாலே தவிர வேறு எதுவும் பேசவில்லை.

இனியா அவர்கள் இருவரையும் வெளியே இருக்க சொல்லி விட்டு ஸ்ருதியிடம் பேச ஆரம்பித்தாள்.

ஆனால் அவ்வளவு எளிதில் ஸ்ருதி வாய் திறக்கவில்லை.

நெடுநேரம் கழித்து பேசினாலும் அவள் பேச்சு முழுவதுமே நெகடிவாகவே இருந்தது. அரை மணி நேரத்தில் ஸ்ருதி பேசிய பேச்சுக்கள் மிகவும் குறைவு.

இனியா ஒருத்தர் இந்த மாதிரி சூசைட் பண்ணிக்கிட்டா அவங்க வீட்டுல இருக்கறவங்க எப்படி பீல் பண்ணுவாங்க என்று எடுத்து சொல்லிக் கொண்டிருக்கும் போது ஸ்ருதி அவளை கட்டுப் படுத்த முடியாமல் பக்கத்தில் இருந்தா பிளவர் வாஷை தூக்கி எரிந்து விட்டு கத்த ஆரம்பித்து விட்டாள்.

அதற்குள் பக்கத்து அறையில் இருந்த சிவாவும், இளவரசனும் ஓடி வந்தார்கள். இனியா கண்ணசைவில் அவர்களை உள்ளே வர வேண்டாமென்று ஜாடை காட்டினாள்.

“உனக்கு என்ன தெரியும். நான் செத்தா யாரும் பீல் பண்ண மாட்டாங்க. நான் யாருக்கும் முக்கியம் இல்லை. என் உயிர் போறதுனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நான் இருக்கறதே வேஸ்ட். நான் எல்லாருக்கும் பாரமா தான் இருக்கேன். எனக்கு மூளையும் கிடையாது. புத்தி இல்லாதவ, அதனால தான் என்னால வாழவும் முடியலை, ரெண்டு முறை சாக ,முயற்சி பண்ணி அதுவும் முடியாம கிடக்கிறேன்”

இப்போது இனியாவிற்கு கோபம் வந்து விட்டது.

“ஆமா முட்டாள் தான் நீ. அதனால தான் உனக்கு உன் உயிரோட வால்யூ தெரியலை. நீ செத்தா யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையா. யார் சொன்னது அப்படி, உன் மேல உயிரையே வச்சிருக்கவே தானே உன் அண்ணன் இப்படி உனக்கு பாதுகாப்பு போட்டு, நீ பண்ண முட்டாள் தனமான முயற்சி எல்லாத்துலையும் இருந்து உன்னை காப்பாத்தி இருக்காரு.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.