(Reading time: 43 - 85 minutes)

வனுக்கு அவள் பாடம் எடுத்தது எதிலும் கவனம் இல்லை...அவளின் குரலும், செயலுமே இதமாக்க தலையை கோதியவளின் கரம் பற்றி முத்தமிட்டான்... அவன் கவலை குறைந்ததை உணர்ந்து,

“தப்பு செய்து திருந்தி வாழணும் நினைக்கிறவங்களை  அங்கீகரிக்கணும். அவரோட நாம ஓட்டி உறவாட வேண்டாம். ஆனா, கல்யாணத்துக்கு போகாட்டி எப்படி?. அதான் பத்திரிக்கை வைக்க சொன்னேன் என்றாள்.” என விளக்கம் கொடுத்த பின்னும் அவன் திருப்தியடையாத முகத்துடன்,

“அவனை பார்க்கிறப்போ எனக்கு வர்ற வலி உனக்கு தெரியாதுடா.” என்றான் வேதனையுடன்.

“உங்க வலிக்கு நான் மருந்தாக முடியும்னா என் கூட வாங்க கார்த்திக். இல்லைன்னா நான் டவுசரை அனுப்பி விட்டுடுறேன். ஏதாவது ஒரு முடிவு எடுங்க. எனக்காக எடுக்காதீங்க. உங்களுக்காக எடுங்க.”  என்று சொல்லி விட்டு எழ, கார்த்திக் உடன் வருவதாக சம்மதித்தான்.

அவர்களை எதிர்பார்த்து காத்திருந்த தன்ராஜ் பாண்டியன் சென்று விட்டதை சொல்ல சந்தியாவிற்கு வருத்தம். கார்த்திக்கோ எந்த உணர்ச்சியும் காட்டவில்லை.  ஆனால், அவன் மேல முதல் முறையாக ஒரு நல்ல எண்ணம் உருவானது.

அவர்களுக்காக கூடியிருந்த கூட்டத்தின் நடுவே நின்ற சிவா புயலாய் போனவன் மனைவி பின் அமைதியாக வருவதை கண்டு,

“எப்படி இருந்தவன் இப்படி ஆகிட்ட” என்று கிண்டலடிக்க,

“நீங்களும் அப்படி ஆகப்போறீங்க. உங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்து வைத்திருக்கேன். கேக் வெட்டின பிறகு சொல்றேன்” என்றாள் சிவாவின் அருகில் வந்து. அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. “கரீனா, தீபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா அளவுக்கு இல்லாடினாலும், நஸ்ரியா மாதிரியாவது இருப்பாங்களா பொண்ணு?” என் அளவிட முடியாத பந்தா காட்ட,

சந்தியா முறைத்தாள்.

அதற்கு சிறிதும் அசராமல், “முந்தி மாதிரி இல்ல சிஸ்டர். இப்போ என் ரேஞ்சே தனி” என்று காலரை தூக்கி விட்டு நீட்டி முழக்க,  அவன் தோளில் நட்பாக கை போட்ட கார்த்திக்,

“மச்சி, கவலைப்படாதடா... உன் பேச்சிலர் வாழ்க்கைக்கு பங்கம் வராம பாத்துக்க நான் இருக்கேன்” என்றான் வில்லங்கமாக. இப்போது முறைப்பது சிவா முறையாயிற்று.

சந்தியா வெட்டிய கேக்கை முதலில் சுவைத்தது ஓவியா குட்டி தான்...

சந்தியாவிற்கு பிறந்த நாள் கவிதை வாசித்தான்  நிரஞ்சன்...

கோடை காலம் வந்தாலும்...

இலையுதிர் காலம் வந்தாலும்...

மழைக் காலம் வந்தாலும்....

பனிக் காலம் வந்தாலும்....இனி

உன் வாழ்க்கையில் என்றுமே வசந்த காலமே!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

என்றான். தங்கு தடையில்லாமல் தமிழில் தெளிவாக சொன்னது கண்டு அனைவரும் அசந்து போய்விட்டனர்.

“மது சொல்லது நான் மனப்படம் செய்யுது” என்றான் பெருமையாக...

“நேத்து கூட ‘ழ்’ சரியா வரலையே உங்களுக்கு...”, சந்தேகமாய் கேட்டாள் சக்தி..

“அது சில நேரம் வராது... அப்போ மது ஹெல்ப் பண்ணுது”  என்று மதுவைப் பார்த்து விஷமமாக சிரித்தான். பதிலுக்கு மதுவும் ரகசியமாய் சிரித்தாள்..

பின், சந்தியா கேட்ட பாடலை  மீரா பாடினாள்...

கண்ட நாள் முதலாய்  காதல் பெருகுதடி

கையில் வேல் பிடித்த காதல் சிவ பாலனை

அவள் பாட சொன்னதே அவள் பழனியப்பனுக்காக! அவனை காதலுடன் பார்த்தாள்.. அவனும் வள்ளிக்கண்ணுவின் விழி வழி கலந்தான்... எல்லாரும் கார்த்திக்கை பாட சொல்ல கேட்க மறுத்து விட்டான்..

பூமா,  சந்தியாவின் விடலைப் பருவ புகைப்படத்தை ஓவியமாய் பரிசளித்தாள்... “இது அத்தானுக்குடி.. உனக்கு இல்ல...”, என்று கார்த்திக்கை பார்த்து சிரித்துக் கொண்டே...

ஸ்ரீ, “பிறந்த நாளைக்கு என்ன கிப்ட் பண்ணார் உங்க பாஸ்? பவுடர்  டப்பாவா?” என கிண்டலடித்தாள்.

குணா அவனது புது உணவு தயாரிப்பை பிறந்த நாள் விருந்தில் வைக்கும் முன்  கார்த்திக்கை  ருசி பார்க்க அழைக்க அவன் சிவாவை பலி கடாவாக்கினான். அதை ருசி பார்த்து விட்டு பசியே பறந்து போக, தனக்கு பார்த்து வைத்த பெண்ணை பற்றி விசாரிக்க சந்தியாவைத் தேடினான். அப்பொழுது  தோழிகளுடன் உணவு உண்டு கொண்டிருந்த சக்தியிடம் விசாரித்து விட்டு அவளை பூசணிக்காய் என கிண்டலடிக்க,

“உனக்கு இந்த பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா காகா?” என அருகிலிருந்த தனது தோழி காயத்ரியை கேட்க அவளோ காதலுடன் சிவாவைப் பார்க்க,

அதை உணராத சிவா, அவள் தட்டைப் பார்த்து விட்டு, “காகாவே  காக்கா பிரியாணி சாப்பிடுகிறதே ஆச்சர்ய குறி!” என  அவளையும்  கலாய்க்க                      

“நான் வெஜிடேரியன். எனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரிந்து வைத்துக்கோங்க”, என்று குரலில் குழைந்தாள்.

“எனக்கு எதுக்கு தெரியணும்? உங்களை கட்டிக்க போற இழிச்சவாயன்கிட்ட சொல்லுங்க” என்றான் அலட்சியமாக.

“அதனால தான் சொல்றேன்” என்றாள் வெட்கத்துடன்...

“ஓ...சரி..சரி..” என்று பலமாக தலையாட்டியவன், அதன் பின் மண்டைக்குள் மின்னல் வெட்ட அதிர்ச்சியாய் “யு... மீ...ன்..மீன்.....” என திக்கினான்.

“மீனும் சாப்பிட மாட்டேன்..” என்றாள் காயத்ரி...

“அந்த மீன் இல்ல... லவ் மீன்....இல்ல...யு மீன் லவ்....” இதயம் பட படக்க கேட்டான், அதற்கு தலையாட்டிக் கொண்டே தலை குனிந்தாள் காயத்ரி...

சிவா மிதந்தான்...

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே...

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

பல்வேறு உணர்ச்சிக் கலவையில் இனிதாக பிறந்த நாள் விழா முடிந்தது.

வேலைகளை முடித்து விட்டு கார்த்திக்கிடம் வந்த சந்தியா உறங்குவது போல நடித்த கார்த்திக்கின் காதை திருகி ,

“சகுனி, சிவாவை சிக்க வைத்தது நீ தான?” என்றாள் கண்களை சுருக்கி பல்லைக் கடித்த படி.. பதில் சொல்ல இயலாமல் அசடு வழிந்தான்...

“தண்டனையா  1008 முத்தம் கொடுத்திருக்கணும்” என்று  மிரட்டினாள்.

“அடிப்பாவி,,,நான் என்ன மெஷினா?”, அரண்டு போய் கேட்டான்.

“பேய்க்கு வாக்கப்பட்டா...” சொல்லிக் கொண்டே உடை மாற்ற நகன்றவளை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவன்,

என்னை பந்தாட பிறந்தவளே

இதயம் ரெண்டாக பிளந்தவளே

ஓசை இல்லாமல் மலர்ந்தவளே

உயிரை கண் கொண்டு கடைந்தவளே

உன்னை கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்

காலம் யாவும் காதல் கொல்ல வாராயோ

என்ற முழுப் பாடலைப் பாடினான். அதில் மயங்கியவளிடம் “உனக்காக, உனக்கு மட்டும் என் பிறந்த நாள் பரிசு இந்த பாட்டு” என்று ரகசிய குரலில் சொல்லிக் கொண்டே  அவள் கொடுத்த தண்டனையை நிறைவேற்ற ஆரம்பித்தான்.  

நிறைவு பெற்றது!

Go to Episode 30

கடந்த இரு வருடத்திற்கு முன்பு  தான் எனக்கு நாவல் படிக்கும் ஆர்வம் வந்தது!  எழுத்தாளர் ரமணி சந்திரன் அவர்கள் நாவலைத் தேடி  chillzee தளத்திற்கு வந்தேன்.  அப்பொழுது இதில் வந்த தொடர் கதைகளின் வாசகி ஆனேன். அந்த சமயத்தில் வந்த கதைகளில் என்னை மிகவும் ஈர்த்தது, 'மனம் விரும்புதே உன்னை' என்று கதை. அதே போல நாமும் எழுதினால் என்ன என்று தோன்றியது! சிலர் முறையாக நீச்சல் பயின்று கடலில் குதிப்பர்.  சிலர் கடலில் குதித்த பின் நீச்சல் கற்க முயல்வர் - அந்த வழியில் தான் நான் ஆழம் தெரியாமல் இந்த கதையை ஆரம்பித்தேன். 

 
கல்லாரி பயிலும் பொழுது  சிறுகதை, நாடகங்கள் எழுதிய  அனுபவத்தை வைத்து  ஆரம்பித்தேன்!  எனவே, முதல் கதையை நாடக பாணியில் வடிக்க எண்ணி, "எப்பா பேய் மாதிரி இருக்கா" கதையை ஆரம்பித்தேன். 
 
 
இந்த தளத்தில் எழுத வாய்ப்பு அளித்த ஷாந்தி அவர்களுக்கு சிறப்பு நன்றி. தொடர்ந்து வாரா வாரம் தங்கள் கருத்துக்களை சொல்லி ஊக்கம் அளித்த வாசக வாசகியர்களுக்கும் மற்றும் இந்த தளத்தை முனைப்புடன் நடத்தும் chillzee.in குழுவினருக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 
 
 
இந்த கடைசி அத்தியாத்துடன் விடை பெறுவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது! மீண்டும் விரைவில் ஒரு நல்ல கதையுடன் உங்களை சந்திக்கிறேன்... till then bye from Usha Rajam!

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.