(Reading time: 24 - 48 minutes)

29. என் இனியவளே - பாலா 

En Iniyavale

னியாவை அந்த நிலையில் பார்த்த இளவரசன் பதறிப் போய் அவளை ஹாஸ்பிடலிற்கு அழைத்து சென்றான்.

அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விட்டு ஜோதிக்கு போன் செய்து விஷயத்தை கூறினான்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த டாக்டர் “ஒன்னும் இல்லை, கொஞ்சம் டிப்ரஷன்ல இருந்த மாதிரி இருக்காங்க. இன்ஜெக்சன் போட்டிருக்கேன், கொஞ்ச நேரத்துல விழிச்சிடுவாங்க. நீங்க கூட்டிட்டு போகலாம், பட் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க” என்றார்.

“ஓகே டாக்டர், தான்க் யூ வெரி மச்” என்றவன் உள்ளே சென்று இனியாவை பார்த்தான்.

கண்விழிக்காமல் சோர்வாக படுக்கையில் இருந்தவளை பார்க்க முடியவில்லை அவனால்.

இதற்கு அப்புறமும் அவள் வீட்டிற்கு தெரியப் படுத்தாமல் இருப்பது நல்லது அல்ல என்று எண்ணியவன் ராஜகோபாலிற்கு போன் செய்தான்.

“மாமா”

“சொல்லுப்பா. என்ன இன்னும் நீங்க வீட்டுக்கு வரலை”

“மாமா நான் சொல்றதை கேட்டு டென்ஷன் ஆகாதீங்க. இனியாக்கு கொஞ்சம் மயக்கம் வந்துடுச்சி. பட் இப்ப நல்லா தான் இருக்கா.”

“என்னப்பா என்ன சொல்ற”

“மாமா நான் தான் சொல்றேன்ல. என்னை கொஞ்சம் நம்புங்க. அவளுக்கு ஒன்னும் இல்லை, என் ப்ரண்ட் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வரும் போது கொஞ்சம் மயங்கிட்டா. ஒன்னும் பிரச்சனை இல்ல, நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டேன், டாக்டர் ஒன்னும் ப்ராப்லம் இல்லன்னு சொல்லிட்டார்”

“நிஜமா ஒன்னும் பிரச்சனை இல்லையேப்பா” என்று பலமுறை கேட்டுக் கொண்டார்.

“இல்ல மாமா. நான் தான் கூட இருக்கேன் இல்ல. நான் பாத்துக்கறேன், இன்னும் ஒரு ஒன் அவர்ல நாங்க வீட்டுல இருப்போம்.”

“எந்த ஹாஸ்பிடல் சொல்லுப்பா. நான் வரேன்”

“இல்ல மாமா. அதெல்லாம் வேண்டாம். ஜோதிக்கு போன் பண்ணியிருக்கேன். அவங்க வரேன்னு சொன்னாங்க. நாங்க ரெண்டு பேருமே கூட்டிட்டு வந்துடறோம். நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க. நான் தான் ஓன் அவர்ல வந்துடுவேன்னு சொல்றேன் இல்ல”

“சரிப்பா. சீக்கிரம் வந்திடுங்க”

“சாரி மாமா. காலைலயே நீங்க அவளை அனுப்ப தயங்கினீங்க. நான் தான் இருந்த அவசரத்துல கவனிக்காம விட்டுட்டேன். என்னாச்சி மாமா”

“காலைல நியூஸ் பேப்பர்ல ஒரு நியூஸ் படிச்சா. அதுல இருந்து ரொம்ப அப்செட்டா இருந்தா”

“ஹ்ம்ம். ரொம்ப எமோஷனல் ஆகிட்டா. அதான் இப்படி மயக்கம் வந்துடுச்சி மாமா. இனியா ரொம்ப சென்சிடிவா மாமா ”

“சென்சிடிவ்ன்னு இல்லை. அந்த மாதிரி விஷயம் கேள்விப்பட்டா நமக்கே வருத்தமா தான் ஆகிடுது. இன்னும் பொண்ணுங்கன்னா சொல்லனுமா. தாய் மனசாச்சே அவங்களுக்கு. என் அம்மா காலத்து மனுஷின்னா எல்லாம் விதின்னு நொந்துப்பாங்க. எங்க காலத்து பொம்பளைங்க இப்படி பண்ணிட்டாங்களேன்னு செஞ்சவங்களை திட்டிட்டு இருப்பாங்க. இப்ப இருக்கற புள்ளைங்க நல்லா படிச்சிருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் தெரியும். அவங்க இதெல்லாம் விதின்னு எடுத்துட்டு போயிட்டிருக்க மாட்டாங்க. அவங்களுக்கு இந்த சமூகத்து மேல தான் கோபம் வரும்” என்றார் ஆயாசமாக.

“சரி விடுங்க மாமா. நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடறோம். அத்தை கிட்ட கொஞ்சம் எதாச்சும் சொல்லி வைங்க.”

“அவ கிட்ட என்ன சொல்றதுன்னு தான் தெரியலை. இப்ப இனியாக்கு ஒன்னும் இல்லைல்ல” என்றார் திரும்ப.

“சரி மாமா. விடுங்க. நீங்க அத்தை கிட்ட ஒன்னும் சொல்ல வேண்டாம். சொன்னா தான் அத்தை டென்சன் ஆகிடுவாங்க. நேர்ல இனியாவை நல்லா கூட்டிட்டு வந்துட்டு அப்புறம் சொன்னா அந்த அளவுக்கு பயப்பட மாட்டாங்க” என்றான்.

அவருக்கும் அதுவே சரியாக பட “சரிப்பா. சீக்கிரம் வாங்க” என்றார்.

போனை வைத்து விட்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

முதல் தினமே தன்னிடம் சீறியவள், அப்புறமும் இருவருக்கும் எப்போதும் சண்டை தான். எப்போதும் படபடவென்று பொறிபவள் இன்று இப்படி இருக்கிறாளே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது.

அவளின் தலையை மென்மையாக தடவியவன் “இனியா எந்திரிடா” என்றான்.

அவள் முகத்தில் இருந்த சோர்வையும் மீறி அவள் முகத்தில் துக்கம் தெரிந்தது.

அவள் முகத்தில் இருந்த துக்கம் அவனையும் துன்புறுத்தியது.

அவள் ஸ்ருதியிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவளின் வார்த்தைகளில் தெரிந்த வருத்தம் அவனை தாக்கியது.

‘அந்த நியூஸ் பார்த்துட்டு எனக்குள்ள இருக்கற தாய்மையுணர்வு வெளியே வந்து அழுகுது’ என்று அவள் கூறிய வார்த்தைகள் திரும்ப திரும்ப அவன் நினைவிற்கு வந்தது.

“எவ்வளவு அற்புதமானவர்கள் பெண்கள்” என்று எண்ணிக் கொண்டான்.

அவள் கையைப் பிடித்துக் “எழுந்து வாடா. உன் கிட்ட நிறைய சண்டை போடணும். எனக்கு ஈடா நீ என்னை திட்டணும், சண்டை போடணும், நீ அப்படி இருந்தா தான் எனக்கு பிடிக்குது. உன்னை இப்படி பார்க்க முடியலை” என்றான் மெதுவாக.

சரியாக அதே நேரம் இனியா கண் விழித்தாள்.

அதை கவனிக்காமல் இளவரசன் பேசிக் கொண்டிருந்தான்.

“இனி நீ என்ன சொன்னாலும், நீ ஏன் அப்படி சொன்னன்னு எல்லாம் நான் கேட்கவே மாட்டேன். என் இனியா வாய் நிறைய பேசினா தான் எனக்கு பிடிக்கும். இப்படி ஏதும் பேசாம இப்படி இருந்தா நல்லா இல்லை.” என்றான்.

அவன் பேச்சில் லேசாக சிரித்த இனியா அவன் கைப் பிடியில் இருந்த அவள் கையை லேசாக அசைத்தாள்.

இளவரசன் உடனே அவள் முகத்தை பார்க்க அவளோ சிரித்தாள்.

“என்னடா” என்றான்.

“தேவை இல்லாம வாக்கு குடுக்காதீங்க” என்றாள்.

இளவரசனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன”

“இல்ல என்னவோ சொல்லிட்டிருந்தீங்களே”

அப்போது தான் அவளின் கேலி புரிந்தவனாக “என்ன எப்படி பயமுறுத்திட்ட தெரியுமா. இப்ப என்னடான்னா சிரிக்கிற” என்றான்.

அவளின் முகம் வாடியது.

“சாரி இளா.”

“எனக்கு எதுக்கு சாரி சொல்றீங்க மேடம். உனக்கு எதுவா இருந்தாலும், அதை பார்த்துக்க நான் கடமை பட்டவன். ஓகே. சோ நீங்க இப்படி இனி பேசினா அடி தான் கிடைக்கும்”

“அடிப்பீங்களா” என்றாள் தலையை சரித்து கண்ணை சிமிட்டி.

இளவரசன் சேரை சிறிது தள்ளிப் போட்டு அமர்ந்து விட்டான்.

என்ன என்று இனியா கண்ணாலே வினவினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.