(Reading time: 24 - 48 minutes)

ல்ல அத்தை. மாமா மேல தப்பு இல்லை. அவர் ஏதோ சொல்ல வந்தார். நான் தான் ஸ்ருதி நேத்தும் சூசைட் பண்ண ட்ரை பண்ணான்னு சிவா சொல்லி பீல் பண்ணதுல நானும் அப்செட்ல இருந்தேன், அதுல மாமா சொல்ல வந்ததை கவனிக்காம இனியாவை கூட்டிட்டு போயிட்டேன். என் மேல தான் தப்பு.” என்றான்.

“இல்லப்பா. இதுல உங்க தப்பு ஒன்னும் இல்லை. அவளை பத்தி இவருக்கு எல்லாம் தெரியும். அதுவும் காலைல இருந்து அவ அதையே நினைச்சி பொலம்பிட்டு இருந்தா. அப்புறமும் அவர் இதை பத்தி எதுவுமே சொல்லாம அனுப்பினது தான் தப்பு. இதுல இவ இருந்த கோபத்துல அந்த புள்ளையை வேற ரொம்ப திட்டிட்டான்னு சொல்றியே”

“ஹ்ம்ம். ஆமா தான். ஆனா இப்ப நினைச்சி பார்த்தா ஸ்ருதிக்கு இப்படி ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் தான் தேவைன்னு நினைக்கறேன். நாங்க எல்லாம் அவ அதுல இருந்து வெளியே வரணும்ன்னு அவ கிட்ட கெஞ்சி, கொஞ்சி சொல்லி பார்த்தோம், ஆனா அதுல அவ ரொம்ப வீக் ஆகிட்டான்னு நினைக்கறேன். இன்னைக்கு இனியா பேசினதுல அவளுக்குள்ள ஏதோ சேன்ஜ் இருக்கும்ன்னு தான் நினைக்கிறேன். பார்க்கலாம்” என்றான்.

பின்பு அவன் கிளம்புவதற்கு முன் லக்ஷ்மியிடம் “பார்த்துக்கோங்க அத்தை பார்த்துக்கோங்க” என்று திரும்ப திரும்ப சொன்னான்.

அவரும் சளைக்காமல் “சரி” என்று கூறினார்.

பின்பு அவன் கிளம்ப எத்தனித்தான்.

மனமேயில்லாமல் அவன் கிளம்புவதை பார்த்த ராஜகோபால் அவனிடம் “ஏதோ டேபிலேட் கொடுத்தாங்கன்னு சொன்னியே. அதெல்லாம் என்ன ஏதுன்னு கொஞ்சம் வந்து விவரம் சொல்லிட்டு போயேன்ப்பா. ஜோதி தான் இனியா ரூம்க்கு எடுத்துட்டு போயிட்டான்னு நினைக்கறேன். வாயேன்” என்றார்.

“சரி மாமா” என்றான் உற்சாகத்துடன்.

லக்ஷ்மியும் இதை எல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

“லக்ஷ்மி என் மொபைல் நம்ம ரூம்ல வச்சிருக்கேன், அந்த கேசவன் கிட்ட பேசணும். அதை எடுத்துட்டு வாயேன்” என்று மனைவிக்கு அழகாக ஒரு வேலை கொடுத்து விட்டு தன் மருமகனுடன் மாடிக்கு செல்லும் கணவரை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு தன் அறைக்கு நுழைந்தார் லக்ஷ்மி.

னியாவின் அறைக்குள் இளவரசனும், ராஜகோபாலும் நுழையும் போது அவள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

ஜோதி பக்கத்திலேயே அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

எங்கே அத்தை வந்து விடுவாரோ என்ற அச்சத்தில் “சரி மாமா. நான் கிளம்பறேன்” என்று வெளியே வந்தான் இளவரசன். கூடவே ஜோதியும், ராஜகோபாலும் வந்தனர்.

ராஜகோபால் ஜோதியிடம் “என்னம்மா. அவ தான் தூங்கறாலே, நீ ஏன் அங்க உட்கார்ந்திட்டிருக்க” என்றார்.

“அவளை நல்லா பார்த்துக்கணும்ன்னு மேலிடத்து உத்தரவுப்பா” என்றாள் ஜோதி சிரித்துக் கொண்டே.

இளவரசனால் அவன் மாமாவை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.

“சரி கிளம்பறேன் மாமா” என்று விட்டு கிளம்பி விட்டான்.

இருவரும் சிரிக்கும் சத்தம் அவனை பின் தொடர்ந்தது.

ன்னடா லக்ஷ்மி வரவில்லையே என்று தன்னறைக்கு சென்ற ராஜகோபால் சாவகாசமாக அமர்ந்துக் கொண்டிருந்த மனைவியை கண்டார்.

“என்னம்மா நான் என் போன் கேட்டேனே” என்றார்.

“ஆமா. எந்த கேசவன் கிட்ட பேச போறீங்க. நீங்க”

“அதான் மா நம்ம கேசவன்”

“அதான் எந்த கேசவன்”

அதற்குள் வேகமாக யோசித்தவர் “நம்ம ஸ்வீட் கடைக் காரர் கேசவன்”

“சரி அவர் கிட்ட எதுக்கு நீங்க பேச போறீங்க”

“ஸ்வீட் ஆர்டர் கொடுக்கறதுக்கு தான்”

“எதுக்கு. நம்ம பொண்ணு உடம்பு சரி இல்லாம வீட்டுல இருக்காளே, அதுக்கா”

(பொண்டாட்டி கிட்ட ஒரு பொய் சொல்லிட்டே இந்த முழி முழிக்க வேண்டி இருக்கே, அவனவன் எப்படி தான் ஆயிரம் பொய் சொல்லிட்டு ஜாலியா இருக்கானோ – ராஜகோபாலின் மனசாட்சி)

“அது வந்து அது வந்து” என்று அவர் திணறிக் கொண்டிருக்கையிலே

“இன்னும் எந்த பொய் சொல்லலாம்ன்னு நீங்க ஒன்னும் யோசிக்க வேண்டாம். எல்லாம் எனக்கு தெரியும். உங்க மருமகனை மேல கூட்டிட்டு போறதுக்கு என்னை ஏதோ பொய் சொல்லி அனுப்பினீங்க. அதானே”

“ஐ. அப்படின்னா நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா”

“என்ன. நான் எங்க ஒத்துக்கிட்டேன்”

“இப்ப தானே உங்க மருமகன்னு சொன்னே”

“அது உங்க தங்கச்சி பையன்றதுக்காக சொன்னது” என்று லக்ஷ்மி சொன்னவுடன் ராஜகோபாலின் முகம் மாறிவிட்டது.

லக்ஷ்மிக்கே வருத்தமாகி விட்டது. ‘எந்த அளவுக்கு இனியாவின் திருமணத்தை எதிர்பார்த்திருந்தால் இப்படி வருத்தப்படுவார்’ என்று.

“அந்த அளவுக்கா நீங்க இனியா கல்யாணத்தை எதிர்பார்க்கறீங்க”

“பின்ன இல்லையா. ஏன். நீ இனியா கல்யாணத்துக்காக ஆசைப் படலையா” என்றார்.

“ம்ம்ம். எனக்கும் தான் ஆசையா இருக்கு”

“அப்புறம் ஏன் லக்ஷ்மி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல மாற்ற”

“என்னால என்னவோ இதுக்கு முழு மனசோட சம்மதம் சொல்ல முடியலைங்க”

ஒரு நிமிடம் யோசனையில் மூழ்கிய ராஜகோபால் “ஏன் லக்ஷ்மி. ராஜி காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டான்ற எண்ணம் உன் மனசுல பதிஞ்சி அதனால தான் உன்னால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியலையோ, என் மச்சானும் நம்ம இனம் தான், வேற கூட கிடையாது” என்றார்.

“என்னை பத்தி நீங்க இப்படி தான் நினைச்சிருக்கீங்களா”

“லக்ஷ்மி”

“பின்ன என்னங்க நீங்க.  இதனால எல்லாமா நான் வேண்டாம்ன்னு சொல்லுவேன். இப்பவே எத்தனை புள்ளைங்க வீட்டை எதிர்த்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கறாங்க. இன்னும் நம்ம பேரப் பிள்ளைங்க ஜெனரேஷன்ல எல்லாம் யாரு இந்த ஜாதி, மதம் எல்லாம் பார்க்க போறா, அப்ப எல்லாம் மோஸ்ட்லி அப்பா அம்மாக்கு வெறும் இன்பர்மேஷனா தான் பிள்ளைங்க விஷயத்தை சொல்லிட்டு கல்யாணம் பண்ணிப்பாங்க போல. இவ்வளவு யோசிக்கற நான் ஏன் இந்த ஜாதி எல்லாம் பார்க்க போறேன்”

“அப்புறம் உனக்கு என்ன தான் மா பிரச்சனை”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.