(Reading time: 17 - 33 minutes)

ருவரும் பேசியது அதன் பிறகு ஒரு வார காலம் தான். காதலை சொல்லி பேசிய ஒரு வார காலமும் அழுகை சோகம் மட்டுமே இருவருக்குள்ளும். பெற்றோருக்காக காதலை விட்டுக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தனர் காதலை சொன்ன உடனே ஏதோ ஒரு நம்பிக்கையில் ராதா

"என் அப்பாவிடம் கூறலாம், அவர் எனக்கு ஃப்ரண்ட் மாதிரி, புரிந்து கொள்வார்" என்றாள்.

கிரிஷ்னா "வேண்டாம், அவங்க ஒத்துகலைனா, உன் மீது உள்ள நம்பிக்கை பொய்யாகிவிடும், அவங்களுக்கும் கஸ்டம் தான்" என்றான்.

ராதா கேட்கவில்லை,தன் தந்தையிடம் லேசாக தான் கூறினாள்

"நான் லவ் பண்றேன்பா, நேத்து தான் அத அவனிடம் சொன்னேன், ஆனா நா உங்கள மீறி போகமாட்டேன்பா, ரோஹித்துக்கு நா துரோகம் பண்ண மாட்டேன்பா, நா கடைசி வரை உங்க கூடவே இருகேன்பா, கிரிஷ்னா ரோஹித்தையே கல்யாணம் பண்ணிக்கோ, உங்க அப்பா அம்மா சம்மதிச்சா நாம சேரலாம், இல்லனா வேணானு சொல்லிட்டான்பா" என்று கூறினாள்.

அவர் ஃப்ரண்ட் இல்லை அப்பா தான் என்று நிருபித்தார். பாசமாக பேசி

“இனி நீ அவனுடன் பேசாதி, அதான் அவனே உன்ன ரோஹித்தை கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டான்ல..அதோட அந்த விசயத்தை மறந்துரு"என்றார்.

அவளும் சரி என்றாள். இருவரும் பிரிந்தனர் கவலையோடு பெற்றோருக்காக. நடக்குறது நடக்கும் என்று. ஒரு முறை கூட நேரில் பேசியது இல்லை. இருவரும் ஒருவர் மீது ஒருவர் சொல்லாமலே உயிரையே வைத்திருந்தனர்.

ராதாவிற்கு ரோஹித்தின் வாழ்க்கை பாதிக்க கூடாது. அதனால் எப்படியாவது தன்னை மறக்க வேண்டும் என்பது தான் ராதாவின் விருப்பம். கடைசி வரை கிரிஷ்னாவின் நினைவோடு அம்மா அப்பா கூடவே வாழ்ந்து விடவேண்டும் என்று நினைத்தாள். இதே தான் கிரிஷ்னாவின் மனதிலும் கடைசி வரை திருமணம் செய்யாமல் ராதாவை நினைத்துக்கொண்டே வாழ்ந்து விடலாம் என்று. இருவரின் முடிவும் இருவருக்கும் தெரியாது.

ஆனால் நான் திருமணம் செய்து கொள்வேன், விரைவில் உன்னை மறந்து விடுவேன் என்று மாற்றி மாற்றி கூறி இருவரும் கூறிக்கொண்டனர் ஒருவர் வாழ்க்கையை ஒருவர் நினைத்து பிரியும் நேரத்தில் அழுதுகொண்டே. ஒருவர் அழுவது ஒருவருக்கு தெரிய கூடாது என்று மறைத்தனர். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்திருந்தனர்.அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. பிரிந்தனர், ஆனால் ஒருவரை மறக்கவில்லை. காதல் அதிகரித்து கொண்டே தான் போனது.

ராதா ரோஹித்திடம் "எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை, ஆனால் அப்பா சொன்னால் நான் கண்டிப்பா பண்ணிப்பேன், நீங்க மனசுல ஆசைய வளர்த்துக்காதிங்க, எனக்கு ஐ.ஏ.ஸ் ஆகனும், நிறைய லட்சியம் இருக்கு, இப்போதைக்கு நாம பேசவேணாம், கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துகலாம் எல்லாதையும், இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும், வீட்டுல சொன்னா எல்லாரும் ஃபீல் பன்னுவாங்க.சொல்லாதிங்க" ன்றாள்.

ரோஹித் கோவப்பட்டான். " நான் உன்ன உண்மையா தான் லவ் செய்தேன், நான் வீட்ல சொல்ல மாட்டேன், நம்பலாம்” என்றான்.

ஆனால் அப்போதே வீட்டில் கூறி விட்டான். ஏகப்பட்ட பிரச்சனைகள், "நல்ல வேளை தான் காதலிக்கும் விஷயத்தை பற்றி கூறவில்லை. தெரிந்திருந்தால் அப்பாவிற்கு எவ்வளவு அவமானம்" என்று தேற்றிக்கொண்டாள் ராதா.

கிரிஷ்னா ராதா காதலிப்பதாகச் சொன்ன விஷயத்தை யாரிடமும் கூறவில்லை. தன் நெருங்கிய நண்பர்கள் சிலரை தவிர, ராதாவின் பெயர் கெட்டு விடக் கூடாது என்பதற்காக... அவன் காதலிப்பது ஒரளவிற்கு அனைவருக்கும் தெரியும் திவ்யாவிடமும் கூறிவிட்டான். ராதா மீது அதிக அன்பு வைத்திருந்தான். ரோஹித் தன்னை புரிந்து கொள்ள கூட நேரம் இல்லாமல் உடனே அவனின் பெற்றோரிடம் கூறியதையும், அதுவும் கூறமாட்டேன் என்று கூறியும். அந்த ரோஹித் எங்கே..!

தன் காதல் முக்கியம் இல்லை, ராதாவின் குடும்பம், கௌரவம் என்று ராதாவை பற்றி மட்டும் யோசித்த கிரிஷ்னா எங்கே..! என்று நினைத்தாள்.

ல்லூரி காலம் முடிந்தது, அம்மா அப்பாவின் அழுகை, எல்லாம் சேர்ந்து அவளை நடிக்கச் செய்தது சந்தோசமாக இருப்பதாக. காதலை மறந்து விட்டதாக, மறப்பதற்கு அது ஒன்றும் காயம் அல்ல, காதல்...என்றும் மனசை விட்டு போகாது சாகும் வரை. எத்தனையோ முறை செத்து விடலாம் என்று தோன்றியிருகிறது ராதாவிற்கு. ஆனால் இப்பொழுது அதற்கும் வழி இல்லை. காதலுக்காக தான் இறந்ததாக அம்மா அப்பா நொந்து விடுவர். ஊர் உலகம் என்ன பேசும், குடும்பம் மானம் மரியாதை எல்லாம் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. ராதா இப்போது யோசிக்கிறாள் காதலை பற்றி கூறாமலே இருந்திருக்கலாம் என்று.

ஆனால் ராதாவிற்கு நம்பிக்கை இருந்தது தனது காதலில். என்னுடைய காதல் உண்மையாக இருந்தால் அந்த காதலே எங்களை சேர்த்து வைக்கும் என்று நம்பினாள். திருமணம் இன்னும் ஒரு வருடம் கழித்து என்று கூறியிருந்தனர். அதற்குள் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்று நம்பிக்கொண்டிருந்தாள்.

கிரிஷ்னாவிடம் கடைசி நாளில் ஒரு கீ செயின் கொடுத்தாள். அவன் நியாபகமாக கேட்டான் என்பதற்காக. அவள் அவனை பிரிந்திருந்தாலும் ஒரு நிமிடம் கூட அவன் நினைவு அவளை விட்டுப்போகவில்லை. வெளியில் நடித்துக் கொண்டிருந்தாள் பெற்றோருக்காக

ராதா எதோ நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருகிறாள். மனதில் ஒரு முடிவோடு. அது ஆரம்பத்திலிருந்து எடுத்த முடிவு தான் என்றாலும் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது அவளுக்கு தெரியவில்லை. கிரிஷ்னாவின் முடிவு என்ன...? ராதா மனதில் இருப்பது என்ன...?

இறுதியில் இவர்களின் காதலுக்கு என்ன தான் முடிவு..........?

வேண்டுகோள்: நீங்களே ஒரு முடிவு சொல்லுங்க நண்பர்களே..........என்ன தான் நடக்கும் என்று.......... 

தொடரும்...  

Go to episode # 01 

Go to episode # 03

{kunena_discuss:699}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

15 comments

  • oh, iththanai varusaththai ore episode la koduthutteengale..<br />nice epi.. radha krishna seranum, athu than sariyaa irukkum..
  • very nice episode...<br />krishna - radha kandippa seranum anitha mam...<br />true love never fails... :P
  • Super update.. Orae update la ivlo info solitinga.. Gud (y) nichayamaga radhavum krishnavum than seranum... :yes: Avargalin latchiyangalaium adaiyanum..
  • Interesting plot Anitha.<br />BTW, sent you an email, please check it and feel free to get back if you have any questions / doubts :)
  • Thanks jansi :thnkx: , neenga solrathu sari, rendu perum avanga ambition la kavanam seluthanum ipo, matravai thaana nadakkum. irunthalum rendu perukkum ikattanaa soolnilai. vera vali irukaa....?
  • nice update...........radha Krishnan dan seranum.....rendu perum orutharuku oruthar romba nesikiranga........radha nambara madri avanga love-e avangala sethudum............. :yes:
  • Hi Anita, nice update inda episodela neraiya visayangala solliyirukeenga. Krishna & Radha kaadalku enna mudivunnu ketirukeenga .enakennamo avanga rendu perume avanga ambitionla kavanam selutanumnu tonudu.oru varusatla evvalavo nadakalame ......ராதாவிற்கு நம்பிக்கை இருந்தது தனது காதலில். நாம பண்ற காதல் உண்மையா இருந்த அந்த காதலே நம்மல சேர்த்து வைக்கும் என்பது தான். .... :cool: :)

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.