(Reading time: 19 - 37 minutes)

ன்ன பாத்தீங்களா? அதுங்கள பிடிச்சீங்களா?” என்று அரக்கர்கள் வெளியே துவாரம் வழியாக எட்டி பார்த்து கேட்டார்கள்.

“இருங்க ....இப்பதான நாங்க பாக்க போறோம்!” – அரவிந்த்

Bommuvin thedalஅரவிந்தும் பொம்முவும் தொடர்ந்தனர். அவர்கள் குகையின் கடைசியை அடைந்து பார்த்தபோது அதிர்ச்சி. அங்கே ஒரு பத்து துறவிகள் ஆங்காங்கே அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்து கொண்டு இருந்தனர். அவர்கள் உச்சரிக்கும் மந்திரம் தான் குரல்களாக பொம்மு அரவிந்துக்கு கேட்டிருந்தது. அந்த துறவிகள் வெகு காலமாக அங்கே இருப்பதை அவர்களின் தோற்றமே சொன்னது.

“இவங்க துறவிகள் “ – பொம்மு மெல்ல

“இவங்கதான் காளியன் சொன்ன அந்த துறவீகளா?” – அரவிந்த் .மெல்ல

“நிச்சயம் அவங்களா தான் இருக்கும்” – பொம்மு.

“ஏய் ....எதாவது கிடைச்சுதா?” – அரக்கர்கள் குரல் ஒலித்தது.

“பொம்மு....இவங்கள எழுப்பனும்....” – அரவிந்த்.

பொம்முவும்  அரவிந்தும்  மெல்ல துறவிகள் அருகே சென்றார்கள். அங்கே அணைந்து போன விளக்கு ஒன்று இருந்தது. பொம்மு தன் கையிலிருந்த கிளையின் தீயால் அந்த விளக்கை பற்ற வைத்தாள். அந்த விளக்கின் வெளிச்சம் அந்த குகையை பிரகாசமாக்கியது. அந்த துறவிகள் மெல்ல கண் விழித்தனர். அங்கே அவர்கள் நடுவில் நின்றிருந்த பொம்முவை ஆச்சர்யமாக கண்டு எழுந்து நின்றனர்.

“வணக்கம் அரசே!” – என்று பொம்முவை பார்த்து வணங்கினார் ஒரு துறவி.  அவரோடு மற்ற துறவிகளும் வணங்கினர்.

பொம்முவும் அரவிந்தும் குழம்பினர்.

“என்ன சொல்றீங்க? என் பெயர் பொம்மு..நான் உங்க அரசர் இல்ல!” – பொம்மு.

“நாங்க சரியாக தான் சொல்றோம். நீங்க இப்போ பொம்முவா இருக்கலாம். ஆனா நீங்கதான் அரசர் மகேந்திரன்..” – அந்த துறவி

“நீங்க சொல்றது எங்களுக்கு புரியல....தெளிவா சொல்லுங்க!” – அரவிந்த்.

“சொல்கிறோம்...அம்பது வருஷத்துக்கு முன்னாடி நிலாயுகம் நாட்டின் அரசர் மகேந்திரனுக்கும் சூனியக்காரி ஷானுதாவுக்கும்  போர் நடந்தது. அந்த போருக்கு எங்களையும் அரசர் அழைச்சிட்டு  அழைச்சிட்டு போனார்.” – துறவி.

“அப்படினா நீங்க உண்மையிலேயே அந்த நிலாயுகத்தின் கோவில் துறவீகளா?” – பொம்மு ஆச்சர்யமாக.

“ஆமாம் “ – துறவி

“அப்படினா நீங்க அந்த சூனியக்காரி ஷானுதாவையும் அவளோட போர்படையையும் பார்த்தீங்களா?” – அரவிந்த்.

“ஆமாம்..” – துறவி

“அப்படினா...அரசர் இன்னும் உயிரோட இருக்குறாரா?” – அரவிந்த்.

“ஆமாம்” – துறவி.

“எங்கே?” – அரவிந்த்.

துறவி பொம்முவை கைக்காட்டினார்.

“ஏன் இப்படி குழப்புறீங்க?....எங்களுக்கு தெளிவா சொல்லுங்க....நீங்க எப்படி இங்க வந்தீங்க? அரசர் என்ன ஆனாரு? அந்த போர்ல என்ன நடந்துச்சு?” – அரவிந்த்.

“அந்த ஷானுதாவை எதிர்த்து அரசர் சண்டை போட்டார். அப்போ அந்த ஷானுதா  பண்ண ஒரு மாயவித்தையால அரசரோட ஆன்மா அவர் உடலை விட்டு வெளியேறி வேற ஒரு பொருளில் புகுந்து விட்டது.” – துறவி. பொம்முவும் அரவிந்தும் திகைத்தனர்.

“என்ன சொல்றீங்க? அவரோட ஆன்மா சூனியகாரியோட ஒரு பொருளில புகுந்துடுச்சா? அது என்ன பொருள்? எங்க இருக்கு?” – பொம்மு.

“பொம்முதான் அந்த பொருள்! பொம்மு என்னும் இந்த பொம்மையில் தான் அரசரின் ஆன்மா வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது. இந்த பொம்மை அந்த சூனியக்காரி ஷானுதாவோட  பொம்மை.” என்று துறவி கூறியதும் பொம்முவுக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது.

“என்ன சொல்றீங்க? அப்படினா?....நான் தான் அரசர் மகேந்திரேனா?” – பொம்மு அதிர்ச்சியுடன்.

“ஆமாம்....அந்த ஆன்மாதான் இந்த பொம்மை பேசுவதற்கு காரணம்.. சூனியக்காரியோட பொம்மை என்தால் பொம்முவுக்கு மாயாஜாலமும் செய்ய தெரிந்திக்கும்..” – துறவி.

“இந்த விஷயம் ஷானுதாவுக்கு தெரியுமா?” – அரவிந்த் அதிர்ச்சியுடன்.

“அவளுக்கு தெரியாது.....அவள் அரசர் இறந்து விட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கிறாள். அது தவறு. அரசர் இறக்கவில்லை. பொம்மு தான் அரசர் மகேந்திரேன்!” – துறவிகள்.

“அந்த போர்ல அரசர் உடலை விட்டு ஆன்மா அந்த சூனியக்காரி ஷானுதவோட  பொம்மைக்குள்ள போனது எங்களோட சக்தியால பார்க்க முடிஞ்சுது....உடனே அரசரோட உடலை எடுத்துக்கிட்டு இந்த குகைக்கு தப்பி  வந்து பதுங்கிட்டோம்! அந்த நாளிலிருந்து நாங்க இங்கேதான் இருக்கோம்” என்றார் இன்னொரு துறவி.

 “அரசரோட உடல் எங்கே இருக்கு?” – பொம்மு.

“வாங்க....காட்டுறோம்” என்று அந்த துறவி மற்ற துறவீகளுடன் இடது பக்கம் சென்றார். அரவிந்த் பொம்முவுடன் அவர்களை பின் தொடர்தான். அவர்கள் ஒரு பெரிய பாறை பக்கம் வந்தனர். அந்த பாறையின் மேல் மனித எலும்புகள் மட்டும் இருந்தது. அரவிந்த் பயந்தபடி அதை அதை கண்டான். ஆனால் பொம்முவுக்கு பயமில்லை.

“எங்களால இந்த குகையில குழியை தோண்ட முடியல செய்ய முடியல...அதனால அரசரோட உடலை இந்த பாறை மேலேயே வைத்துவிட்டோம்! இப்போது இந்த அரசரின் எலும்புகள்தான் இருக்கிறது” – துறவி ஒருவர்.

பொம்மு சிறிது நேரம் அந்த எலும்புகளையே பார்த்தான். அரவிந்த் அங்கிருக்கும் அரசரின் மண்டை ஓட்டை பார்த்து பயந்தான். மீண்டும் அதை பார்க்க வேண்டாம் என்று எண்ணினான்.பொம்மு அரசரின் மண்டை ஓட்டை கண்டாள். அந்த மண்டை ஓட்டின் நெற்றியில் எதோ எழுத்துக்கள் மின்னுவது போல அவளுக்கு தெரிந்தது.

“என்ன அது?” – பொம்மு மெல்ல.

“என்ன பொம்மு?” – அரவிந்த் .     துறவீகளும் அவளை கண்டனர்.

“அந்த மண்டை ஒட்டில எதோ எழுதி இருக்கு....” – பொம்மு.

“உன் கண்களுக்கு அது தெரியுதா?...அதுதான் உன் ஜென்மரகசியம் பொம்மு...அதை உன்னால் மட்டும்தான் காண முடியும்” என்று அந்த துறவி அரசரின் மண்டை ஓட்டை எடுத்து பொம்மு கையில் குடுத்தார்.

பொம்முவுக்கு தற்போது பயம் இல்லை. ஆனால் அரவிந்த் பயத்தில் மேலேயே பார்த்துக் கொண்டு இருந்தான். பொம்மு அந்த மண்டையோட்டில் எழுதி இருக்கும் எழுத்துக்களை பார்த்தாள். அந்த எழுத்துக்கள் சில வரிகளாக தென்பட்டது. அதை பொம்மு படித்தாள்.

“இது உன்னுடைய ஆறாவது ஜென்மம் ஆகும். உன்னுடைய இந்த ஜென்மத்தையும் கொல்ல அந்த  சூனியக்காரி வருவாள். அவளை நீ அழிக்க வேண்டுமானால் நீ மனிதர்களை விட சக்தி கொண்ட படையை உருவாக்க வேண்டும்.” – பொம்மு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.