(Reading time: 19 - 37 minutes)

ன்ன பொம்மு நீ? உன்ன நம்பி எவ்வளவு பொறுப்பு இருக்குனு அவரு எடுத்து சொல்றாரு...அவர்கிட்ட திரும்பி வருவேன்னு சொல்ல முடியாதா உன்னால?” – அரவிந்த்

“இல்ல அரவிந்த்...நடக்குற விஷயங்கள் எல்லாம் பயங்கரம். முதல்ல அந்த அமிர்தம் பானையை கண்டுபுடிச்சி உன் உடம்பு சரியானதும். நாம இங்கிருந்து எப்பிடியாவது தப்பிச்சு நம்ம வீட்டுக்கு  போய்டுவோம்” – பொம்மு

“இது சரியில்ல பொம்மு. உன்ன நம்பி அங்க அத்தனை பேரு இருக்காங்க...” – அரவிந்த்.

“வேண்டாம் அரவிந்த். இது எனக்கு ஆபத்துனு தோணுது. எனக்கு நான் யாருனு தெரிஞ்சுக்குற ஆர்வமே போய்டுச்சு!” – பொம்மு.

அரவிந்த் எதுவும் பேசவில்லை. அவர்கள் பயணம் தொடர்ந்தது.

Bommuvin thedalஇரவு வந்தது. எங்கும் இருட்டு. ஆனால் காட்டில் எதோ ஆங்காகே நெருப்புகள் தோன்றி மறைந்து கொண்டு இருந்தது. நிறைய மரங்கள் பள்ளங்கள் தாண்டி பொம்முவும் அரவிந்தும் நடந்து வந்துக் கொண்டிருந்தனர். இன்னும் மலையின் பாதி தூரத்தை கூட அவர்கள் நெருங்கவில்லை. 

பொம்மு திடிரென அவர்களை நோக்கி ஏதோ விண்ணிலிருந்து வருவதை பார்த்தாள்.

“அரவிந்த்! அங்க பாரு....” என்று பொம்மு அங்கே கைகாட்ட அரவிந்தும் அங்கே பார்த்தான். விண்ணில் ஏதோ கூட்டமாக பறந்தபடி அவர்களை நெருங்கி கொண்டிருந்தன. அது அவர்களை இதற்கு முன் காப்பாற்றிய அதே கழுகுகள். பொம்முவும் அரவிந்தும் அந்த கழுகுகளை அடையலாம் காணும் நேரத்தில் அவைகள் பொம்முவையும் அரவிந்தையும் தூக்கி சென்றன. இரண்டு பெரும் பயங்கரமாக அலறி கத்தினர். அந்த கழுகுகள் அவர்களை கிழக்கு பக்கம் கொண்டு சென்று உள்ள மலையின் பெரிய பள்ளதை நோக்கி  தூக்கி போட்டுவிட்டு விண்ணில் மறைந்தன.

“அரவிவிவிவிவிந்த்!!!” என்று பொம்மு கத்தினாள். அரவிந்த் மலையிலிருந்து உருண்டியபடிய சரிந்து விழ ஆரம்பித்தான். பொம்முவும் அவனை காப்பாற்ற உருண்டுக் கொண்டே சரிந்து விழ ஆரம்பித்தாள். உருண்டோடும் வேகம்குறைவதாய் தெரியவில்லை. செடி புதர்கள் பள்ளங்கள் தாண்டி அவர்கள் சென்று கொண்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மலையின் ஓரம் வருவதை அவர்கள் அறியவில்லை. அவர்கள் வந்த வேகத்திற்கு இருவரும் மலையை விட்டு பறந்தனர். அங்கிருந்து வெகுதூரத்தில் கிழே உள்ள காட்டின் மரங்களை நோக்கி அவர்கள் ஆகாயத்தில் இருந்து கிழே சென்று கொண்டிருந்தனர். இருவரும் தங்கள் கைகளை பிடித்து கொண்டு பயங்கரமாக கத்திகொண்டிருந்தனர். சில்லென காத்து அவர்கள் முகங்களை உரசி கொண்டிருந்தது. இன்னும் சில நொடிகளில் அவர்கள் எதோ ஒரு மரத்தில் விழ போகின்றனர்."

பொம்முவும் அரவிந்தும் மரங்களை நோக்கி கிழே சென்று கடைசியில் எதோ ஒரு மெத்தான இடத்தில் விழுந்தனர். அரவிந்துக்கும் எதுவும் அடிபடவில்லை.

“அய்யயோ என் வயிறு மேல எதோ விழுந்துடுச்சு!” என்று ஒரு கோரமான குரல் கூவியது. உடனே அரவிந்தும் பொம்முவும் தாங்கள் விழுந்த இடம் என்னவென்று சுற்றி சுற்றி பார்த்தார்கள். அது ஒரு மலை அரக்கனின் வயிற்று பகுதி. அந்த அரக்கன் உறங்கும் நேரத்தில் பொம்முவும் அரவிந்தும் அவன் வயிற்றில் விழுந்திருப்பது அவர்களுக்கு புரிந்தது.

“என்னது? என்னது?” என்று தன் வலது கைகளில் தன் வயிற்றை தடவி பூச்சிகளை பிடிப்பதுபோல் போம்முவையும் அரவிந்தையும் பிடித்தான் அந்த அரக்கன். அவன் அருகில் இன்னொரு அரக்கனும் அமர்ந்திருந்தான். மாமிச உணர்வை அறிந்தான் அந்த அரக்கன்.

“ஏய் இங்க பாருடா!” என்று அந்த அரக்கன் தன் பாக்காம் இருந்த அரக்கனை கூப்பிட்டான். அந்த இரண்டாம் அரக்கன் பொம்முவையும் அரவிந்தையும் தன் கையில் வாங்கி நகையை பார்பாது போல அவர்களை சுற்றி சுற்றி பார்த்தான்.

“இதுங்க ரெண்டுத்துல எதோ ஒன்னு மாமிசம் கொண்ட மனிஷன் !” என்றான்  இரண்டாம் அரக்கன்.

முதல் அரக்கன் அருகில் இருந்த பெரிய பாறையை தூக்கினான்.

“டேய் அத ரெண்டுத்தையும் கீழ போடு! இந்த பாறையால நச்சுக்கிடறேன்....அப்புறம் அதுங்கள சாப்பிடலாம்!” – முதல் அரக்கன்.

பொம்முவுக்கும் அரவிந்துக்கும் அதிர்ச்சி. இரெண்டாம் அரக்கன் யோசித்தான். ஆனால் அவர்களை தன் கையால் வாங்கி  தரையில் தொப்பென போட்டான் முதல் அரக்கன். இரண்டு பேரும் எழுந்திருக்க முடியாமல் துடித்தனர். முதல் அரக்கன் தன் தலைக்கு மேல் வரை பாறையை உயர்த்தினான். பொம்மு கத்த ஆரம்பித்தாள். ஆனால் அரவிந்த் எதையாவது சொல்லி தப்பிக்க நினைத்தான். அரக்கன் பாறையை அவர்கள் மேலே போட முயன்ற போது

 “வேணாம் போடாத!” என்று இரண்டாம் அரக்கன் தன் அந்த பாறையை பிடித்து வலப்பக்கம் வீசினான். பொம்முவும் அரவிந்தும் கண்களை திறந்து பார்த்தனர்.

“ஏன் இப்படி பண்ண ?” – முதல் அரக்கன்.

“இவங்கள வச்சு நாம அவங்கள பிடிக்கணும்?” – இரண்டாம் அரக்கன்

“ஒன்னும் புரியல ” – முதல் அரக்கன்.

“அந்த பொடிப்பையன் தான நமக்கு சொன்னான்...இங்க ரெண்டு பேரு வருவாங்க அவங்கள வச்சு தான் அந்த குகைக்குள்ள இருக்குற மனிஷங்களை பிடிக்கணும்னு !” – இரண்டாம் அரக்கன்.

“ஆமாம் அவன் சொன்ன ரெண்டு பேரு இவங்களாதான் இருக்கும் ! “ என்று முதல் அரக்கன்  ஆச்சர்யத்தோடு கூறிவிட்டு பொம்மு, அரவிந்த் பக்கம் திரும்பினான்.

“உங்கள விடணும்னா நீங்க எங்களுக்கு ஒரு வேலைய செய்யணும்!” – முதல் அரக்கன்.

“கண்டிப்பா செய்யறோம்....ஆனா நீங்க எங்கள விட்டுடனும்” – அரவிந்த் படபடப்பாக

 “நீங்க இந்த துவாரம் வழியா உள்ள போயி அங்க இருக்குற மனிதர்கள வெளியே கொண்டு வாங்க “ – இரண்டாம் அரக்கன்.

பொம்முவும் அரவிந்தும் அந்த இடத்தை சுற்றி பார்க்க ஆரம்பித்தார்கள். நிறைய மரங்கள் சூழப்பட்டு இருட்டான அந்த இடத்தில் ஒரு பெரிய பாறைகளால் நிரம்பிய குகை முன் அவர்கள் நின்றிருந்தனர்.

அந்த குகையின் வாசலானது நிறைய பாறைகளால் மூடப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு மனிதன் நுழையும் அளவுக்கு ஒரு துவாரம் இருந்தது.

“இந்த குகைல என்ன இருக்கு?” – பொம்மு.

“இந்த குகைல மனிதர்கள் இருக்காங்க...அவங்களை நாங்க சாப்பிடனும்......அந்த மனுஷங்களோட  சத்தத்தை கேட்டு பார் உங்களுக்கே தெரியும். எங்களால அந்த துவரத்துல நுழைய முடியாது அதனால் தான் உங்கள போக சொல்றோம் ” – இரண்டாம் அரக்கன் வாயில் எச்சில் வடியும்படி.

பொம்முவும் அரவிந்தும் அந்த இருட்டு துவாரத்தில் காதை வைத்து கேட்டபோது. நிறைய மனிதர்கள்  பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.

“கேட்டுச்சுல? சீக்கிரம் உள்ள போய் எதாவது கொண்டுவாங்க....” என்று துடித்தான்  முதல்  அரக்கன்.

பொம்முவும் அரவிந்தும் அந்த துவாரம் வழியாக மெல்ல உள்ள சென்றனர். உள்ளே எதுவும் தெரியவில்லை. நிறைய மரகிளைகள் அவர்கள் அரவிந்த் தலையை உரசிக்கொண்டு இருந்தது. பாறைகளில்  அவர்கள் நிற்பதை உணர்ந்தனர். அரவிந்த் தன் தலையை தட்டிய ஒரு கிளையை ஓடித்தான்.

அவர்கள் குரல்கள் எதிரொலித்தது.

“என்ன சத்தம் அது ?” – பொம்மு.

“நான்தான் கிளையை ஒடைச்சேன்” – அரவிந்த்.

“அதை என் கையில குடு” என்று பொம்மு கேட்க அரவிந்த் அந்த கிளையை அவளிடம் கொடுத்தான். பொம்மு தன் கைகளை வைத்து மாயஜாலம் செய்ய உடனே கிளையின் முனையில் தீப்பிடித்தது. அந்த வெளிச்சத்தில் பொம்முவும் அரவிந்தும் தங்களை பார்த்துக்கொண்டார்கள். சுற்றி பார்த்தபோது எங்கும் மரவேர்கள் கிளைகள் நிரம்பி இருந்தனர். சுற்றி  எங்கும் பாறைகள்தான். ஒரே ஒரு பாதை நேராக சென்றது. அங்கிருந்துதான் மனிதர்களின் சத்தம் வந்தது. அரவிந்தும் பொம்முவும் மெல்ல அங்கே செல்ல ஆரம்பித்தனர். வழியில் அவர்கள் சிலந்திகள் , தேள்களை தாண்டி வரவேண்டி இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.