(Reading time: 19 - 37 minutes)

05. பொம்முவின் தேடல் - லோகேஷ் 

ந்த அடர்ந்த காட்டில் பாதுகாப்பான ஒரு ஓரிடத்தில் குதிரவண்டியுடன் மாதவனும் அவன் அருகில் நிற்கும் ஒரு வாலிபனும் பேசிக்கொண்டு இருந்தன. கலைந்த தலைமுடியும் எப்போதும் வெறுப்பான முகத்தோடு காணப்பட்டான் அந்த வாலிபன்.

“நீ சொன்ன மாதிரி முதல்ல என்னோட கழுகுகளை வச்சு  கட்டேரிகலள்கிட்ட இருந்து அந்த பொம்மையையும் பைனையும் காப்பாத்தினேன்....அப்புறம் அந்த பைரவனோட உடலை அதோட ஜென்மத்துக்கு கொண்டு போக சொல்லிருக்கேன்.....இன்னும் என் கழுகுகளை வச்சு நான் எவ்வளவு தான் உனக்கு உதவி செய்யணும்? எனக்கு எப்போ அந்த அமிர்தப் பானையோட வரைப்படத்தை தரபோற?” என்றான் அந்த வாலிபன் வெறுப்பாக.

“கோவப்படாத ராஜேந்திரா....நீ கழுகுகளோட அரசன் ....உனக்காக வேலை செய்ற அந்த கழுகள் மேல ஏன் இவ்வளவு கவலை படற? ” – மாதவன்.

“நான் ஒன்னும் சுயநலம் கொண்டவன் இல்ல....நான் என் நாட்டு மக்களையும் எனக்காக எதையும் செய்யும் கழுகளை மதிப்பவன்.....எனக்கு அந்த அமிர்தம் வேணும்...அந்த ஒரு காரணத்திற்காக தான் உன்கிட்ட இன்னும் கெஞ்சிகிட்டு இருக்கேன்” – ராஜேந்திரன்.

“”கண்டிப்பா உனக்கு அந்த அமிர்தம் கிடைக்கும்....இப்போ நீ எனக்கு இன்னொரு உதவி செய்யணும்....நீ காப்பாத்தின அந்த பொம்மையும் பையனும் இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த நிலாயுகத்தின் மலையில் இருந்து மேற்கு திசைப்பக்கம் கிழே காட்டில இறங்கி வரப்போறாங்க...நீ உன்னோட கழுகுகள வச்சு அவங்களை கிழக்கு திசையில் இருக்குற காட்டில் கொண்டு போய் சேர்க்கணும்...” – மாதவன்.

“நீ சொல்றத செய்யறேன்....ஆனா கிழக்கு திசை காட்டில பயங்கரமான மிருகங்கள் இருக்குமே?....ஏன் இப்படியெல்லாம் பண்ற?..என்ன காரணம்?” – ராஜேந்திரன்.

“உனக்கு அமிர்தம் ஒரு கொள்கைன்னா...எனக்கும் ஒரு கொள்கை இருக்கு....அதை உன்கிட்ட சொல்லமுடியாது.” – மாதவன்.

ராஜேந்திரன் மாதவனை பார்த்துக் கொண்டே இருக்க மாதவன் அந்த இடத்தை விட்டு தன குதிரைவண்டியை கிளப்பி சென்றான். வெகுதூரம் செல்ல ஆரம்பித்தான்.

Bommuvin thedalகுதிரை வண்டியில் சந்தோஷமாக அந்த அந்த இருண்ட காட்டு வழியில் வந்துக்கொண்டிருந்தான்.  திடிரென அவன் வண்டி முன்னே இரண்டு அரக்கர்கள் வந்து குதித்தனர். ஆனால் மாதவன் பயப்படவில்லை.

“டேய்..வசமா மாட்டிகிட்டான்...இனிக்கு இந்த பொடிப் பையனையும்  குதிரைகளையும் சாப்பிட வேண்டியதுதான்..” – முதல் அரக்கன். பக்கம் வந்து நின்றான்.

“ஆமான்டா...இவனே விட்டுட்டோம்னா நாம பட்டினிதான்.” – இரண்டாம் அரக்கன்.

“என்னை புடிச்சாதான நீங்க சாப்பிட முடியும்” என்று மாதவன் தன் வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். வண்டி அந்த முதல் அரக்கனின் கால்களுக்கு  நடுவில் வேகமாக புகுந்து சென்றது. அரக்கர்கள் அவனை துரத்த ஆரம்பித்தனர். மாதவன் பயங்கர வேகமாக ஒரு திசையில் சென்றான். அரக்கர்களும் அவனை விடுவதாய் தெரியவில்லை. நீண்ட தூரம் சென்ற மாதவன் ஒரு குகையின் பாகம் வந்தான். அவன் வண்டியை நிறுத்தி அந்த குகையை பார்த்த நேரம் அங்கே பாய்ந்து வந்த முதல் அரக்கன் அவனை கப்பென கையில் பிடித்தான். அவன் பின்னே வந்து நின்றான் இரண்டாம் அரக்கன்.

“ஏண்டா பொடிபயலே! எங்களை ஓட வச்சு பாக்குறியா...இப்பவே உன்னை முழுங்குறேன் பார்!” – முதல் அரக்கன் கோவத்துடன்.

“வேணாம்...வேணாம்...என் மேல கோபம் வேணாம்...உங்களுக்கு என்னை மாதிரி ஒரு பையன் அப்புறம் ரெண்டு குதிரைங்க உணவா கிடைச்சா போதுமா?” – மாதவன்.

“போதாதுதான்...இருந்தாலும் எங்க பசிக்கு நீயும் உண் குதிரைகளும்தான் கிடைச்சுருகீங்க?” – இரண்டாம் அரக்கன்.

“அப்படினா உங்களுக்கு ஒரு பத்து மனிதர்கள் கிடைச்சா போதுமா?” – மாதவன்.

“பத்து மனிதர்களா?..என்னடா சொல்ற? நாங்க ஏற்கனவே பசியில தவிக்கிறோம்!” என்று முதல் அரக்கன் வில் எச்சில் வடியும்படி.

“உண்மைதான் சொல்றேன்! அந்த குகைக்குள்ள பத்து மனிதர்கள் இருக்காங்க....”என்று மாதவன் அருகில் இருக்கும் குகையை காண்பித்தான்.

அரக்கர்கள் ஆனால் அதை நம்பாமல் மாதவனை முறைத்தனர்.

“என் மேல நம்பிக்கை இல்லனா அந்த குகை பக்கம் வாசல் பக்கம் போய் காத வச்சு கேளுங்க...அவங்களோட சத்தம் கேக்கும்” – மாதவன்.

முட்டாள் அரக்கர்கள் மாதவனை விட்டுவிட்டு அந்த குகை பாகம் சென்றார்கள். அந்த குகையின் வாசலாக ஒரு சிறிய துவாரம் இருந்தது. அந்த துவாரத்தில் அரக்கர்கள் காதை வைத்து கேட்டனர். மாதவன் கூறியது போல மனிதர்களின் சத்தம் கேட்டது. மாதவன் உடனே தன் வண்டில் ஏறிக்கொண்டான். அரக்கர்கள் தங்களால் அந்த துவாரத்தில் நுழைய முடியாது என்று தெரிந்துக் கொண்டனர். அதில் நுழைய ஒரு மனிதனால் மட்டுமே முடியும். உடனே அவர்கள் திரும்பிய போது மாதவன் தன வண்டியை ஒட்டி அங்கிருந்து புறப்பட்டான்.

“டேய்...இந்த குகை வாசல் ரொம்ப சின்னதா இருக்கு...எங்காளால உள்ள போக முடியாது.” என்று முதல் அரக்கன் கத்தினான்.

“ஓ ஓ  அப்படியா...அப்ப நீங்க ரெண்டு பெரும் இங்கேயே காத்திக்கிட்டு இருங்க...உங்களுக்கு உதவி செய்ய ரெண்டு பேரு வருவாங்க!” என்று உரக்க கூறியபடி மாதவன் அங்கிருந்து தன வண்டி தப்பித்தான்.

“அவன் சொன்ன மாதிரி ரெண்டு பேர் வருவாங்களா?” – முதல் அரக்கன்.

“வருவாங்கன்னு நம்புவோம்..அதுவரை இங்கயே படுத்து தூங்குவோம்! ஓடி வந்து ஒரே களைப்பா இருக்கு “ என்று இரண்டாம் அரக்கன் ஒரு மரத்தடியில் படுத்தான். அவன் அருகில் முதல் அரக்கனும் படுத்தான். இருவரும் உறங்க ஆரம்பித்தனர்.

நீங்க எடுக்க போற பயணம் சாதாரணம் இல்ல பொம்மு, கிழே நீங்க கற்பனை பண்ண முடியாத அளவுக்கு மிருகங்கள் காத்திக்கிட்டு இருக்கு” – காளியன்.

அந்த மாலை நேரம் பனி வீசும் மலையின் மேற்கு பக்கமாக உச்சியியில் கிழே இறங்குவதற்கு அரவிந்துடன் நடந்து வர அவர்களுக்கு சிறிது தூரம் வந்து வழியனுப்ப வந்தார் காளியன்.

“எனக்கு தெரியும்....ஆனா எனக்கு அரவிந்த் தான் முக்கியம். அவன் எனக்காக இங்க வந்திருக்கான். அவனை பத்திரமா அவனோட வீட்டுக்கு அனுப்புறது என் பொறுப்பு” – பொம்மு

அரவிந்தின் காலில் லேசான வலி மட்டும் இருந்தது. அதனால் அவனால் நன்றாக நடக்க முடிந்தது.

“நீங்க இதுவரை வந்தது போதும் காளியன் சார் !...நீங்க கோவிலுக்கு போங்க. உங்க பாதுகாப்புல தான் அத்தனை மக்களும் இருக்காங்க. நாங்க இதுக்கு மேல போய்கிறோம்!” – அரவிந்த்.

“நன்றி அரவிந்த். ஆனா நியாபகம் வச்சுகோங்க பொம்மு....உங்கள நம்பிதான் எங்க எங்க எதிர்காலம் இருக்கு. அமிர்தம் கிடைச்சு அரவிந்த் குணமாகி நீங்க திரும்பி இங்க வரவரைக்கும் நான் காத்திருப்பேன்!” – காளியன்.

பொம்மு யோசித்தாள்.

“நிச்சயம் நாங்க வருவோம் சார்! என்னோட  சத்தியம் !” – அரவிந்த். காளியன் திரும்பி செல்ல ஆரம்பித்தார்.

பொம்முவும் அரவிந்தும் காட்டுபகுதியை அடைந்தனர். அந்த மலைமேட்டில் பொம்முவை தூக்கிகொண்டு கிழே இறங்க ஆரம்பித்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.