அனைவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். பொம்மு மனதில் கேள்விகள் இருந்தன. பொம்மு கையிலிருந்த அந்த மண்டை ஓட்டை மீண்டும் அந்த பாறைமேல் வைத்தாள்.
“இதுதான் உன் ஆறாவது ஜென்மம். நீ இன்னும் இறக்கவில்லை. உன்னோட ஆன்மா மனித உடலை விட்டு பொம்மைகுள்ளே தான் வந்திருக்கு......இந்த ஜென்மத்தில் நீ செய்ய வேண்டிய கடமை உனக்கு இப்போது தெரியும்.” என்றார் துறவி ஒருவர்.
பொம்மு தலையசைத்தாள். திடிரென அவளுக்கு அமிர்த பானையின் நியாபகம் வந்தது,
“ஆனால் எனக்கு அது மட்டும் இல்ல....இன்னொரு கடமையும் இருக்கு....அரவிந்தோட காயத்தை குணப்படுத்த இந்த நிலாயுகத்தில மறைச்சு வச்சிருக்க அந்த அமிர்தப் பானையாலதான் முடியும்...அந்த பானைக்கான வரைப்படம் உங்ககிட்ட தான் இருக்கு!” – பொம்மு மெல்ல .
“உண்மைதான். அதை நாங்க ஒரு நதிகரையில் மறைச்சு வச்சிருக்கோம்...அதை எடுக்க எங்களால் தான் முடியும். வாங்க வெளியே போகலாம்.” – துறவி.
“ஆனா இப்போ நாம யாரும் வெளியே போகமுடியாது....உங்களை பிடிக்கத்தான் எங்களை ரெண்டு அரக்கர்கள் உள்ள அனுப்பி இருக்காங்க....அவங்க உங்கள கொன்னுடுவாங்க” – அரவிந்த்.
“ஆனா அரவிந்த்...இவங்க துறவிகள்....எப்பேற்பட்ட ஆபத்தையும் மந்திரத்தால சமாளிப்பாங்க” – பொம்மு.
“நீ சொல்றது சரிதான் பொம்மு...ஆனா கடைசியா நடந்த போருக்கு பிறகு எங்களோட மந்திர சக்திகள் எங்களை விட்டு போயிற்று....அதை மீண்டும் பெறுவதற்கான முயற்சியில் தியானத்தில் ஈடுப்பட்டு வருகிறோம்” – துறவி.
அரவிந்தும் பொம்முவும் திகைத்தனர்.
“எங்களை காப்பற்றுவது இனி உன் சாமார்த்தியம் பொம்மு” – துறவி.
அரவிந்தும் பொம்முவும் யோசித்தனர். வெளியே அரக்கர்கள் கட்டும் சத்தம் அவர்களுக்கு கேட்டது. அரவிந்துக்கு ஒரு வழி தோன்றியது. உடனே துறவிகளுக்கும் பொம்முவுக்கும் ஒரு யோசனை கூறினான். அனைவரும் அதற்கான வேலையில் இறங்கினர். பொம்முவும் அரவிந்தும் கையில் தீ கொண்ட கிளையுடன் குகையின் துவாரத்தின் பக்கம் சென்றனர். அந்த துவாரத்தின் வழியாக இரண்டு அரக்கர்களும் எட்டி பார்த்தபடி இருந்தனர்.
“என்ன உள்ள எதாவது கிடைச்சுதா?” – முதல் அரக்கன் கத்தினான்.
“ஆம்...நீ சொன்ன மாதிரி நிறைய மனிதர்கள் இருக்காங்க....ஆனா அவங்களுக்கு ஒரு தலைவன் இருக்கான். அவன் உங்களை விட பெரிய அரக்கன். அவனுக்கு உன்னை மாதிரி ஒரு அரக்கனை தின்ன வேணுமாம்” – அரவிந்த் சத்தமாக.
“என்ன தலைவனா? யாரு அவன்? எங்களை திண்ணற அளவுக்கு அவன் பெரியவனா?” – அரக்கர்கள் கோவமாக.
“எங்களுக்கு ஏன் வம்பு?...அந்த தலைவன் கிட்ட நீயே பேசு....” என்று பொம்முவும் அரவிந்தும் விலகியபோது. அங்கே உள்ளே விளக்கின் வெளிச்சத்தில் சுவற்றில் ஒரு நிழல் தெரிந்தது. அது ஒரு பெரிய வயிறு கொண்ட அரக்கன் போல தோன்றியது. அதை கண்டதும் இரண்டு அரக்கர்கள் பயந்தனர்.
ஆனால் அந்த நிழலை அப்படி காட்டுவது ஆசனம் தெரிந்த துறவீகள்தான். அவர்கள் ஒன்றாக சேர்ந்து உடலை வளைத்து ஒரு பெரிய அரக்கனின் நிழலை காட்டினர். அவர்கள் மொத்தம் சேர்ந்து ஒரே வசனத்தை பேசினார்கள் அது ஒரு பயங்கர குரலாக வெளிப்பட்டது.
“யார் அந்த அரக்கர்கள்?...அவர்களை நான் உண்ண வேண்டும்!” என்று துறவிகள் குரலை வெளிபடுத்த அரக்கர்களுக்கு பயம் அதிகமானது.
“இதோ பாருங்க பெரிய அரக்கரே....நாங்க உங்களை எதிர்குற அளவுக்கு பெரிய ஆள் இல்லை...இருந்தாலும் நான் முதல்ல அனுப்புன ரெண்டு பேரை மட்டும் திரும்பி எங்ககிட்ட விட்டா போதும்...நாங்க போய்டுவோம்.” என்று பயந்து நடுங்கியபடி முதல் அரக்கன் கூறினான். அரவிந்த் மறைவாக நின்று சிரித்துக் கொண்டிருந்தான். ஆனால் பொம்மு ஏதோ ஒரு யோசனையில் இருந்தாள்.
“என்ன அந்த அப்பாவிகள அனுப்பனுமா?....முதல்ல உங்களை பிடிக்க என் ஆட்களை அனுப்புறேன் முடிஞ்சா அவங்க கிட்ட இருந்து தப்பி ஒடுங்க” என்று துறவிகள் குரல் கொடுக்க இரண்டு அரக்கர்கள் உடல் உதற ஆரம்பித்தது. துறவிகள் அரக்ககன் உருவத்தை விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி குகையின் துவாரத்தை நோக்கி நடந்து வந்தனர். அதை கண்ட அரக்கர்களுக்கு அங்கே நிற்கும் தைரியம் இல்லை.
“அய்யயோ....அந்த அரக்கனோட ஆளுங்க வராங்க....இதுக்கு மேல இங்க இருந்தோம்னா நாம உள்ள அந்த பெரிய அரக்கனுக்கு சாப்பாடுதான் ! வா ஓடிடலாம்!” என்று முதல் அரக்கன் அங்கிருந்து தலைதெறிக்க ஓட ஆரம்பித்தான். அவனை தொடர்ந்து இரண்டாம் அரக்கனும் பின்னே ஓடினான். பொம்மு , அரவிந்த் மற்றும் துறவிகள் குகையை விட்டு வெளியே வந்து பார்த்தபோது அரக்கர்கள் எங்கோ ஓடி மறைந்தனர். அரவிந்த் பொம்முவை பார்த்தான். பொம்மு இன்னும் ஏதோ ஒரு யோசனையில் இருந்தாள்.
“என்னாச்சு பொம்மு? என்ன யோசிக்கிற?” – அரவிந்த்.
“என்னோட இந்த ஆறாவது ஜென்மரகசியத்தில இந்த ஜென்மத்தையும் கொல்ல அந்த சூனியக்காரி வருவாள்னு போட்டிருக்கு.....” – பொம்மு மெல்ல.
“அதனால என்ன இப்போ?” – பொம்மு.
“அப்படினா....என்னோட கடந்த 5 ஜென்மகளையும் கொலை செய்திருக்காள் அந்த சூனியக்காரி ஷானுதா” – பொம்மு.
அரவிந்த் மற்றும் துறவிகள் அதைகேட்டு அதிர்ந்து போனான்.
தொடரும்
Go to Bommuvin Thedal episode # 04
Go to Bommuvin Thedal episode # 06
{kunena_discuss:697}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.