(Reading time: 15 - 30 minutes)

08. பொம்முவின் தேடல் - லோகேஷ் 

ந்த குட்டிச்சாத்தான் சியாத்தும் பொம்முவும் அந்த குகையிலிருந்து வெளியே காட்டுக்கு பேசிக்கொண்டே வந்தார்கள்.

Bommuvin thedal“நான் போன ஜென்மத்தில் ஒரு குட்டிசாத்தான்னா? என்னால நம்ப முடியல.” – பொம்மு

“உண்மைதான்....அப்போ உங்க பெயர் விஹான். ரொம்ப பலசாலி. எங்களை எந்த ஆபத்திலும் காப்பாத்தகூடியவர். ஆனா உங்களை அந்த “ – சியாத் சொல்லும்போதே

“சூனியக்காரி ஷானுதா கொன்னுட்டாள்” – பொம்மு வேகமாக.

“ஆமாம்...ஆனா அது உங்களுக்கு எப்படி தெரியும்?” – சியாத்.

“என்னோட எல்லா ஜென்மத்தையும் அந்த ஷானுதா கொன்னுட்டாள்...என்னை தவிர” – பொம்மு.

“அவளுக்கு முடிவு காலம் நெருங்கிகிட்டு இருக்கு” – சியாத் கோபத்துடன்.

“என்ன நடந்துச்சுன்னு எனக்கு சொல்லுங்க....” – பொம்மு மெல்ல.

சியாத் பெருமூச்சு இழுத்து கதையை சொல்ல ஆரம்பித்தார். பொம்மு பொறுமையாக கேட்டாள்.

“பல வருஷங்களுக்கு நாங்க இந்த நாட்டிலே சந்தோஷமா வாழ்ந்தோம்....அப்போ இந்த நிலாயுகத்தில காடு பயங்கர மிருகங்கள் எதுவும் இல்லாம. ரொம்ப அழகா இருந்திச்சு....அரசர் மகேந்திரன் அப்போ பிறக்கலை...அவரோட அப்பா தான் இந்த நாட்டை நல்லபடியாக நடத்திவந்தார்.....குட்டிசாத்தான்களுக்கும் நாட்டில் இடம் கொடுத்த நல்ல உள்ளம் கொண்ட அரசர்......எங்களோட வேலையே மரங்களை வளர்க்கிறதுதான்.....அதுக்காக செடிகளை தேடி எடுத்திட்டு வருவோம்....விஹான் ஒருநாள் ஒரு செடியை கண்டுபிடிச்சார்....அந்த செடி ரொம்ப ஆபத்தான செடி...அது வளர்ந்து மரமாச்சுனா இந்த பூமிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்னு அவர் சொன்னார்....”

“அதனால அந்த செடியை அழிக்கிற வேலைல நாங்க இறங்கினோம்....ஆனா அந்த செடியை எங்களால அழிக்கவே முடியல....அந்த நேரத்தில்தான் அந்த ஷானுதா எங்களை தேடி வந்தாங்க....அவங்க எங்ககிட்ட இருந்த அந்த செடியை கேட்டாங்க.....ஆனா விஹான் அதை குடுக்க மறுத்தார்....அதனால எங்களுக்கும் அந்த ஷானுதாவுக்கும் பெரிய சண்டை வந்துச்சு.....அப்போ ஷானுதா எங்க ராஜா விஹானை கொன்னுட்டாள்.”

“விஹான் இறக்கும் முன் அவர் இதே நாட்டுக்கு ராஜாவாக அடுத்த ஜென்மத்தில வருவேன்னு சொன்னாரு....அதோட அவரே ஒருநாள் எங்களை சந்திக்கிற நேரம் வரும்...அன்னிக்கு அந்த ஷானுதாவை எதிர்த்து நடக்க போகும் போருக்கு எங்களையும் ஒரு பங்குக்கு கூப்பிடுவேன்...அதுவரை என்னை தேடி நீங்க யாரும் வரக்கூடாதுன்னு அவரு சொன்னாரு.”

“அவர் இறந்தப்பின் ஷானுதா அந்த செடியை எடுத்திட்டு போய் நிலாயுகத்தின் கோவில் மலைக்கு கீழே ஓரிடத்தில் விதைத்தாள்.....ஆனா அந்த செடியை அவளால் சரியாக பராமரிக்க முடியல....அந்த செடியை ஒழுங்கா மரமா வளக்கனும்னா குட்டிச்சாத்தான்களால் தான் முடியும்னு அவளுக்கு தெரிஞ்சுபோச்சு.....அதனால எங்க இடத்துக்கு அவ மறுபடியும் வந்தாள்....இந்தமுறை அவள் எங்ககிட்ட இருந்து நிறைய குட்டிச்சாத்தான்களை கடத்திட்டு போனாள்...அவங்களை அடிமையா வச்சு அந்த செடியை வளர்த்து இனிக்கு மரமாக்கிட்டாள்....தீயமரம்னு நாங்க அதை சொல்லுவோம்”

சியாத் கண்ணில் நீருடன் சொல்லிமுடித்தார்.

பொம்முவுக்கு ஒரு விஷயம் புரிந்தது. தன்னுடைய ஒவ்வொரு ஜென்மத்துக்கும் சாகும் முன் தான் என்னவாக அடுத்த ஜென்மத்தில் பிறப்போம் என்று தெரிந்து விடிகிறது.

“அந்த தீயமரத்தால அப்படி என்ன நடந்திட போகுது?” – பொம்மு புரியாமல்.

“என்ன இப்படி கேக்குறீங்க?....அந்த மரத்தால்தான் இந்த நாடே காடுபோல இருக்கு...அந்த மரத்திலருந்து காட்டேரிகள் பிறக்கும்...அந்த மரத்திலிருந்துதான் இந்த காட்டில இருக்கிற அத்தனை வினோத ஜந்துக்கள் பிறந்துகிட்டு இருக்கு....அவை எல்லாமே அந்த மரத்தை விதைச்ச ஷானுதாவுக்கு அடிமையாகிடும்....” – சியாத்.

“அப்படினா....அந்த தீயமரத்திலிருந்து தான் ஷானுதாவோட காட்டேரிகள் பிறந்துகிட்டு இருக்கா?.....” – பொம்மு ஆச்சரியமாக

“ஆமாம் அந்த மரத்தில ஒருநாளைக்கு ஒரு காட்டேறியும் அரக்கர்களும் பிறப்பார்கள்.....நாளுக்கு நாள் அது அதிகமாகிகிட்டே இருக்கும்....” – சியாத்.

“அந்த மரத்தை அழிக்க முடியாதா?” – பொம்மு

“அதை அழிக்கிற வழி இன்னும் தெரியலை....” – சியாத் வருத்ததுடன்.

பொம்மு சிறிது நேரம் யோசித்தாள். விஹானின் ஜென்மரகசியத்தில் அந்த மரத்தை அழிப்பதற்கான வழி இருக்கலாம் என்று எண்ணினாள்.

ந்த நிலாயுகத்தின் பயங்கரமான காட்டின் நடுவுவே உள்ள கோவில் மலைக்கு கீழே அதன் அடிவாரத்தில் ஒரு மிக பெரிய ராட்சத மரம் இருந்தது. அதுதான் அந்த ஷானுதா வளர்க்கும் தீயமரம். அந்த தீயமரத்தில் இருந்து புறப்படும் அதன் வேர்களில் முளைத்த மரங்கள் தான் நிலாயுகத்தை ஆண்டு வரும் காடு. அந்த தீயமரத்தின் கிளைகள் இலைகள் எல்லாமே சிவப்புதான். அந்த மரத்தை சுற்றி இருக்கும் அடிமைகளான குட்டிச்சாத்தான்கள் ஓய்வில்லாமல் அந்த மரத்திற்கு நீரை எங்கெங்கோ கொண்டு வந்து ஊற்றிக்கொண்டு இருந்தன. அந்த மரத்தில் இருந்து திடிரென ஒரு அரக்கன்தோன்றினான். பிறகு ஒரு ராட்சத பாம்பு தோன்றியது. அதை தொடர்ந்து ஒரு அரக்கன் தோன்றினான். இப்படியே அந்த மரத்தில் இருந்து வினோத் ஜந்துக்கள் பிறந்தக்கொண்டே இருந்தன.

ஷானுதா அங்கே நடக்கும் வேலைகளை நோட்டமிட்டு கொண்டிருந்தாள். அங்கே   மரத்தில் தோன்றும் அத்தனை ஜந்துக்களும் அவளுக்கு அடிமை என்பதால் அவளை அந்த ஜந்துக்கள் வணங்கிவிட்டுத்தான் காட்டிற்குள் செல்லும்.

ஷானுதாவுடன் அரவிந்த் பயந்தபடி அங்கே தோன்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஜந்துக்களை கண்டான்.

“என்ன அரவிந்த்...பயமாருக்கா?...இந்த மரத்தை வச்சுத்தான் இவ்வளோ பெரிய காட்டை நான் உருவாக்கினேன்....இந்த மரத்தை வச்சுதான் வினோத ஜந்துக்களை நான் அடியாக்கிகிட்டு இருக்கேன்...இங்கே இருக்கிற அந்த கோவில் மலையை தவிர என்னால இந்த உலகத்தில எந்த இடத்தையும் ஆட்சி செய்ய முடியும்...” – ஷானுதா பெருமையாக.

“எ ....ஏன் அந்த கோவில் மலைய உங்களால ஆட்சி செய்ய முடியல?” – அரவிந்த்.

ஷானுதா அரவிந்த் முறைக்க அரவிந்த் நடுங்கினான்.

“இந்த கோவில் மலையையும் என்னால ஆட்சி செய்ய முடியும்...ஆனா அதுக்கான நாள் இன்னும் எனக்கு வரல...அந்த நாள் வரும்வரை அந்த கோவிலை என்னாலையும் அன் அடிமகளாளையும் அந்த கோவில் மலையை நெருங்க முடியாது...” -  ஷானுதா அந்த  மலையை    பார்த்தபடி.

  அரவிந்த் ஏதோ கேட்க முன் வந்து ஆனால் பயத்தில் கேட்காமல் நிறுத்தினான்.

“பயப்படதா அரவிந்த்...கேளு” – ஷானுதா.

“நி....நீங்க எதுக்காக பொம்முவோட எல்லா ஜென்மங்களையும் அழிச்க நினைக்கிறீங்க....என்ன காரணம்?” – ஷானுதா.

“உன்கிட்ட இதை நான் சொல்லறதுல எனக்கு பிரச்சனை இல்ல....ஏன்னா உன்னை நான் நம்புறேன்....” என்று பெருமூச்சு இழுத்தாள் ஷானுதா.

ஷானுதா அரவிந்தின் தோல் மேல் கையை வைத்து அவனுடன் காட்டுக்குள் எங்கோ நடந்தபடி சொல் ஆரம்பித்தாள்.

“என்னோட ஜென்மகளுக்கும் பொம்முவோட ஜென்மகளுக்கும் ஒரு சமமான சக்தி இருக்கு....அது அற்புதமான சக்தி....பொம்முவோட அத்தனை ஜென்மங்களையும் நான் கொன்னுட்டா எனக்கு அழியாத வரம் கிடைக்கும்....அதேமாதிரி என்னோட எல்லா ஜென்மங்களையும் பொம்மு அழிச்சா அவளுக்கு அந்த அழியாத வரம் கிடைக்கும்” – ஷானுதா.

“அழியாத வரமா?” – அரவிந்த்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.