(Reading time: 15 - 30 minutes)

மாம்....அந்த அழியாத வரம் கிடைச்சா எனக்கு சாவே கிடையாது....” – ஷானுதா.

“சாவே கிடையாதா?....இந்த விஷயம் அந்த பொம்முவோட அத்தனை ஜென்மங்களுக்கும் தெரியாதா?” – அரவிந்த்.

Bommuvin thedal“தெரியாது/...” – ஷானுதா.

அரவிந்த் சற்று யோசித்தான். அதன் பிறகு

“இது உங்களுக்கு எத்தனாவது ஜென்மம்? உங்களுக்கு இன்னும் எத்தனை ஜென்மங்கள் இருக்கு?” – அரவிந்த்.

“எனக்கு இதுதான் கடைசி ஜென்மம்......” – ஷானுதா சந்தோஷமாக.

“என்ன சொல்றீங்க? அப்போ இதுக்கு முன்னாடி உங்களோட  6 ஜென்மங்கள் இறந்து போச்சா?” – அரவிந்த்திகைப்புடன்.

“என்னோட முதல் ஜென்மத்தில் நான் தற்கொலை பண்ணிகிட்டேன்...அதுக்கப்புறம் இரண்டாவது ஜென்மத்தில் நான் ஒரு சூனியக்காரிக்கு மகளாக பிறந்தேன்.....எங்க அம்மாதான் எனக்கு மந்திரவித்தைகளை சொல்லிக்குடுத்தாங்க....அவங்க இறந்த பின்னே நான் என்னோட மந்திர ஆராய்ச்சி மூலமா எனக்கு சாகவரம் கிடைக்க வழியை தேடினேன்...அப்போதான் நான் இரண்டாவது ஜென்மத்தில வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.....அப்போதான் எனக்கு பொம்முவோட அத்தனை ஜென்மகளை அழிச்சா எனக்கு சாகவரம் கிடைக்கணும்னும் தெரிஞ்சிகிட்டேன்....அதனால்தான் பொம்முவோட அத்தனை ஜென்மன்களையும் அழிச்சுகிட்டு வரேன்....” – ஷானுதா.

“அப்படினா இது உங்களுக்கு இரண்டாவது ஜென்மம் தானே?....ஏன் கடைசி ஜென்மம்னு சொல்றீங்க?” – அரவிந்த்.

“நான் ஒரு சூனியக்காரியானாலும் எனக்கும் மனிஷங்களை போல் குறிப்பிட்ட வருடங்கள் வரைதான் வாழமுடியும்...அதன்பிறகு ஒருவேளை நான் இறந்துவிட்டால் என்னுடைய அடுத்த ஜென்மத்தில் எனக்கு போன ஜென்மத்தில் நடந்த எதுவும் நியாபகம் இருக்காது...அதுக்காகதான் பலவருஷம் முன்னாடியே நான் ஒரு பயங்கர மந்திரவித்தையை செஞ்சு முடிச்சேன்...” – ஷானுதா

அரவிந்த் ஷானுதா என்ன சொல்ல போகிறாள் என ஆவலோடு பார்த்தான்.

“பொம்முவோட ஜென்மங்களை நான் இந்த ஜென்மத்தில இருந்துகிட்டு வரிசையா அழிக்கணும்னா நான் பலகாலம் வாழனும்....அதனால் என்னோட அடுத்த ஐந்து ஜென்மங்களை நான் தியாகம் செஞ்சு என் வாழ்நாளை இன்னும் நீளமாக்கிட்டேன் “ -  ஷானுதா.

“அப்படினா....உங்களுக்கும் பொம்முவுக்கும் இது கடைசி ஜென்மம்மா?....இதுல உங்க ரெண்டு பேருல யார் இறந்தாலும்...அவங்களுக்கு பிறவி காலம் முடியுது......அடுத்து உங்களால எந்த ஜென்மத்தையும் எடுக்க முடியாது.....அப்படிதானே?” – அரவிந்த் ஆச்சிரியமாக.

“ஆமாம்...ஆனா நான்தான் இன்னும் கொஞ்சநாளில பொம்முவை கொல்லப்போறேனே.....அதுக்கப்புறம் எனக்கு எப்பவும் மரணம் இல்ல.....” – ஷானுதா

“எனக்கு இன்னொரு சந்தேகம்....உங்க ரெண்டு பேருக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாமே ஒத்துமையா நடக்குது?....உங்க ரெண்டு பேருக்கு மட்டும் ஏன் அந்த சாகவரம் கிடைக்கணும்?....உங்க ரெண்டு பேருக்கும் என்ன தொடர்பு?” – அரவிந்த் ஆர்வமாக.

ஷானுதா உடனே அரவிந்தை கோவமாக பார்த்தாள். அரவிந்த் அதிர்ச்சியுடன் பின்னே சென்றான்.

“உனக்கு எல்லாமே தெரியனும்னு நினைக்காத....தெரிஞ்சா நீயும் என் கையால சாகவேண்டியிருக்கும்..” – ஷானுதா.

ஷானுதா அவனை எதுவும் செய்யவில்லை. உடனே  அங்கிருந்து மறைந்தாள். ஆனால் அரவிந்த் உடல் இன்னும் நடுக்கத்தில்தான் இருந்தது.

பொம்மு சியாத்திடம் விஹானின் அடக்கம் செய்த உடலை தான் காணவேண்டும் என்றாள். அதனால் சியாத் சில குட்டிச்சாத்தான்களை வைத்து அங்கே அவர்களின் தோட்டத்தில் புதைக்கப்பட்டு இருந்த விஹானின் எலும்புகளை தோண்டி எடுத்தனர். பொம்முவுக்கும் தேவையானது விஹானின் மண்டையோடு தான்.

பொம்மு விஹானின் மண்டையோட்டை எடுத்து பார்த்தாள். அதில் மின்னும் சில வரிகளை அவளால் படிக்க முடிந்தது.

தீயமரத்துக்காக உன் உயிரானது ஒரு சூனியக்காரியால் வேட்டையாடப்படும்.

அதனால் நீ மகேந்திரனாக அடுத்த ஜென்மத்தை எடுப்பாய்

உன்னை தெய்வமாக என்னும் உன் குட்டிச்சாத்தான்களை நிலாயுகத்தின் கோவிலுக்கு காவலாக அனுப்பு.

ஆனால் அந்த தீயமரத்தை அழிப்பது மிகவும் கடினம்.

அதையும் மீறி நீ அதை அழிக்க நினைத்தால் அந்த நிலாயுகத்தின் கோவிலே அழிக்கப்படும். 

என்று பொம்மு படித்தவுடன் அவளுக்கு ஒரே அதிர்ச்சிதான்.

“அந்த தீயமரத்தை அழிக்கறது கஷ்டம்னும்....அப்படியும் அதை அழிக்க நினைச்சா நிலாயுகத்தின் கோவிலே அழிந்து போயிடும்னு போட்டிருக்கு.....” – பொம்மு.

“நான்தான் சொன்னேனே....அந்த மரம் சாதாரண மரம் இல்ல...அதை அழிக்கிறதுக்கு வழியே இல்ல...” – சியாத்.

பொம்மு அந்த மரத்தை அழித்தால்தான் காட்டேரிகளின் எண்ணிக்கை குறையும் என்று நினைத்தாள். ஆனால் அது நடக்காது என்று எண்ணினாள்.

“உங்க எல்லாரையும் நிலாயுகத்தின் கோவிலுக்கு காவலாக அனுப்பனும்னு போட்டிருக்கு....ஆனா இந்த நேரத்துல அந்த கோவிலுக்கு காவல் என்ன அவசியம்?....அந்த கோவிலின் மலைகூட எந்த தீயசக்தியாலும் நெருங்க முடியாதே?” – பொம்மு குழப்பத்துடன்.

“நீங்க சொல்றதும் உண்மைதான்....ஆனா இந்த விஷயத்துக்கு எதாவது ஒரு காரணம் நிச்சயம் இருக்கும்....அதனால நாங்க இனிக்கே கோவிலை நோக்கி கிளம்பறோம்...” – சியாத்.

“சரி நானும்...அமிர்தத்தை தேடி போகணும்...நானும் கிளம்புறேன்...” – பொம்மு.

“அது சாதாரண விஷயமில்ல....உங்களோட உயிர் எங்களுக்கும் முக்கியமானது....தயவுசெஞ்சு போகாதீங்க” – சியாத்.

“இல்ல என் நண்பனை குணப்படுத்த அந்த அமிர்தம் எனக்கு தேவைப்படுது...நான் கண்டிப்பா போயாகனும்” – பொம்மு.

“சரி..நீங்க போகணும்னு முடிவேடுத்தாசுனா.....உங்களோட துணைக்கு எங்களோட கோக்கியையும் உங்ககூட கூட்டிட்டு போங்க...” – சியாத்.

“கோக்கியா? வேண்டாம்...அவன் என்கூட வந்தாதான் ஆபத்து...”  - பொம்மு சிரித்தபடி.

“எங்களால உங்களுக்கு இந்த உதவியாவது செய்ய விடுங்க...அவனை கூட்டிட்டு போங்க...” – சியாத்.

பொம்மு யோசித்தாள். எப்படியும் உண்மையான அமிர்தம் பானையை கண்டுபிடிக்க நிச்சயம் ஒரு குட்டிச்சாத்தானால்தான் முடியும் என்று துறவிகள் அவளிடம் கூறியது அவளுக்கு அப்போது நினைவுக்கு வந்தது. அதனால் கோக்கியை தன்னுடன் அழைத்து செல்ல பொம்மு முடிவெடுத்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.