மாடி ஏறிவந்தார் அப்பா. தன் மகளின் அறை வாசலில் நின்றார். கண்களை மூடிக்கொண்டு படுத்துக்கிடந்தாள் அவள். அப்பாவின் காலடி சத்தம் கேட்டது அவளுக்கு.
கண்களை திறக்கவில்லை அவள். சில நிமிடங்கள் கழித்து ஒரு பெருமூச்சுடன் அடுத்த அறையில் சென்று படுத்தார் அப்பா.
என் மகள் எனக்கு மட்டுமே சொந்தம். அவள் என்னுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எங்கேயோ போய்விட்டிருந்தது.
அர்ச்சனா அப்பா....என்று அழைப்பதை ஒரே ஒரு முறை கேட்டுவிட்டால் போதுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. எத்தனை பெரிய துரோகத்தை செய்து விட்டேன் நான். அவள் இனி என்னை அப்பா என்று அழைப்பாளா?
கடந்த பத்து பன்னிரண்டு நாட்களில் எத்தனை முறை என்னை கைப்பேசியில் என்னை அழைத்திருப்பபாள். ஒரு முறையாவது பேசினேனா? அதற்கெல்லாம் சேர்த்து வைத்துதான் இப்போது தவிக்கிறேன்.
‘அர்ச்சனா அப்பாவை மன்னிச்சிடுமா’ அவர் மனம் திரும்ப திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருந்தது. பின்னர் அவர் தன்னையே கேட்டுக்கொண்டார். மன்னித்துவிடு என்ற ஒரு வார்தையில் சரியாகிவிடும் தவறையா நான் செய்திருக்கிறேன்.
இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. இந்த இரண்டு நாட்களும் அர்ச்சனாவின் அப்பாவிற்கு நரகமாய் கழிந்திருந்து.
யார் முகத்தையும் பார்க்கும் சக்தியற்றவராய் மாடியில் அந்த அறைக்குள்ளேயே சிறை வாசம் அனுபவித்துக்கொண்டிருந்தார்.
ஓரிரு முறை அவர் கீழே சென்ற போது கூட, யாருமே, யாருமே அவரிடம் ஒற்றை வார்த்தை பேசவில்லை. அவர்கள் பார்க்கும் பார்வையில் பல நூறு தூக்கு தண்டனைகளை அனுபவித்துக்கொண்டிருந்தார் அப்பா.
‘தயவு செய்து என்னை அப்படி பார்க்காதீர்கள். நான் செய்த தவறுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.’ கத்த வேண்டும் போல் இருந்தது அவருக்கு.
இந்த இரண்டு நாட்களும் சரியான நேரத்திற்கு உணவு மட்டும் அவரை தேடி அவர் அறைக்கு வந்து விட்டிருந்தது. அதை கொண்டு வந்து கொடுத்தவன் மனோ. அவனும் வேறெதுவும் பேசவில்லை அவரிடம். மொத்தமாய் உடைந்து போயிருந்தார் அப்பா.
அன்று மதியம் மனோ அலுவலகத்தில் இருந்தபோது ஒலித்தது அவன் கைப்பேசி.
‘அர்ச்சனா ஆபீஸ்லே மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க .ஹாஸ்பிட்டல்லே அட்மிட் பண்ணி இருக்கோம் கொஞ்சம் வரீங்களா?
பதறிக்கொண்டு ஓடினான் மனோ.
கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க அவனை பார்த்து புன்னகைத்தாள் அர்ச்சனா.
சரியா சாப்பிடலை. அதனாலேதான் என்றார் டாக்டர்.
மனதாலும் உடலாலும் அவள் துவண்டு போயிருப்பது புரிந்தது அவனுக்கு.
‘ஏண்டா.... நம்ம வீட்டு ராஜகுமாரி டா நீ . ஏண்டா இப்படி எல்லாம் பண்றே? எனக்கு உன்னை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு டா.
புன்னகையே பதிலாக்கினாள் அர்ச்சனா.
இதற்கு தான் சொன்னானா வசந்த். நடந்ததெல்லாம் தெரிஞ்சா அவ தாங்க மட்டாடா. அவ கிட்டே சொல்லாதே என்றானா?
அவனுக்கு ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது இதற்கெல்லாம் மருந்து அவன் ஒருவன் மட்டுமே. அவனை எப்படியும் தேடி கண்டுப்பிடித்தாக வேண்டும்.
என்ன நடந்தது அவனுக்கு? யோசித்தபடியே அமர்ந்திருந்தான் மனோ. ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு.
அவனுக்கு நடந்தது இதுதான்.
அன்று புகைப்படம் உடைந்த வருத்தத்திலும் மனதில் நிரம்பி இருந்த அழுத்தத்திலும் வீட்டை விட்டு நடந்தவன் டில்லி விமான நிலையத்தை அடைந்தான்.
மனதை ஒரு நிலைக்கு கொண்டு வர வழி தெரியாமல், எங்கே சென்றால் நிம்மதி கிடைக்கும் என்று புரியாமல் தன் உள்ளங்கைகளுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் தோளை ஒரு கரம் ஆதரவாக அணைத்துக்கொண்டது.
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெரும்!
Manathile oru paattu episode # 20
Manathile oru paattu episode # 22
{kunena_discuss:683}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.