(Reading time: 22 - 43 minutes)

தன்பின் என்ன?!?! அண்ணனின் முகத்தை தங்கையும், தங்கையின் முகத்தை அண்ணனும் உடனே கண்டுக்கொள்ள ஒரே பாசமழைதான்... எப்படியெப்படியோ கடினப்பட்டு நடக்கவிருந்த கல்யாணம் இவ்வளவு எளிதாக முடியும் என்று நவீன் சிறிதும் நினைக்கவில்லை. அன்று அன்புகரசியின் முகத்தை பார்த்து சென்றவன் வீட்டில் சம்பத் தங்கையின் நினைவாக வைத்திருந்த புகைப்படத்தை வைத்து கண்டுக்கொண்டான். அதன்பின் என்ன பெரிய research செய்து அவர்தான் தன் அத்தை என்று உறுதி ஆனதும் ஆளை பிடிக்க முடியவில்லை.      

இவர்கள் பேச பேச அர்ச்சனாவுக்கு தான் ஆச்சர்யத்தின் மேல் ஆச்சர்யமாக இருந்தது. அவளது அதிர்ச்சியை உணர்ந்தவன் அவள் அருகில் சென்று “ஹாய் அத்தை பொண்ணு....” என்று கூப்பிடவும்... அவனை எப்போது போல் முறைத்தாள் அர்ச்சனா, இவள் என்னடா எப்போ பார்த்தாலும் முறைக்குறாள் என்று நொந்துவிட்டு, “அவளவள் மாமன் மகனை பார்த்தா ஆசையாய் மாமான்னு கூப்பிடுவாங்கன்னு சொல்லுவாங்க, ஹ்ம்ம் எனக்கும் வந்திருக்கா பாரு ஒரு அத்தை..... பொண்ணு....” என்று அழுத்தம் கொடுத்து அலுத்துக்கொண்டான். அவன் பேசிய விதத்தில் லேசாக புன்முறுவல் பூக்க அவனுக்கு காட்டாமல் முகத்தை வேறுபுறம் திரும்பிக்கொண்டாள் அர்ச்சனா.

“ம்ம்ம் ஹ்ம்ம் இது சரி வராது உனக்கு என்னை ஒரு ஆளாய் கூட பிடிக்கலை போல நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடுறேன்” என்று கூறி நகர போனவனை, யாரும் அறியாமல் கை பிடித்தாள்... அவன் கண்கள் விரிய அவளை நோக்க, “எல்லாம் புடிக்கும்...ஓவரா சீன் போடாம அடக்கி வாசிங்க மா....மா...” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் கூறினாள் அவனது அர்ச்சனா.

இப்படியெல்லாம் அவள் தன்னிடம் பேசியத்தில்லையே என்று ஆச்சர்யமாக இருக்க, உரிமை வந்தாள் இந்த பெண்கள்தான் எப்படி மாறி போகின்றனர் என்று வியந்து சிரித்துக்கொண்டான். அர்ச்சனாவை மோகனாவுக்கும் பிடித்துப்போக அனைவருக்குமே இதில் பரம சந்தோஷம். நவீனின் தந்தையே முஹுர்த்த நாளையும் குறித்துவிட, அர்ச்சனா தடுத்தாள்...

“எனக்கு கல்யாணத்துல இஷ்டம்தான் மாமா ஆனா அம்மாவை இங்க தனியேவிட எனக்கு மனசு வரலை” என்று அவள் கூறவும். சம்பத்தின் முகம் கனிந்தது. இத்தனை நாள் கழிச்சு என் தங்கச்சியை பார்க்குறேன்மா நான் மட்டும் இவ்வளவு தள்ளியா வைப்பேன். உன்னோட சேர்த்து ஏன் தங்கச்சியையும் அழைச்சுகிட்டு போயிடலாம்” என்று கூறிய பின் தான் அர்ச்சனாவின் முகம் தெளிந்தது. ஆனால் அன்புக்கரசி இதை மறுக்க வாய்திறக்கவும் நீ எங்க வீட்டிலேயே இருக்கணும்னு இல்லை அன்பு பக்கத்து வீடே காலியாகத்தான் இருக்கு அங்க கூட இருக்கலாம் உனக்கும் அர்ச்சனா கூடவே இருந்த மாதிரி இருக்கும்... என்று கூறி இருவருக்கும் சங்கடம் இல்லாமல் பார்த்துக்கொண்டார். மோகனாவிற்கும் இதில் ஆச்சர்யம் இல்லை என்பது புரிந்து போக சுகமாகவே சென்றது.  

டுத்து நடந்தவையெல்லாம் வேகமாக தெரிந்தது. அன்றே ஒரு அய்யரை கூப்பிட்டு, பெரிய ஆர்ப்பாட்டம் இன்றி அஹல்யாவின் பெற்றோரையும் அர்ஜுனின் பெற்றோரையும் மட்டும் அழைத்து தாம்பூலம் மாற்றி தேதியும் குறித்துவிட்டனர். இது எல்லாம் கனவில் கூட இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று அர்ச்சனாவிற்கு தோன்றவில்லை. நவீனின் மீது நல்ல எண்ணமே இருந்தாலும் தாய்காக எதையும் மனதில் வளர்க்காமல் இருந்துவிட்டு ஆனால் எதிர்பார்க்காத வண்ணம் அவனே மாப்பிள்ளையாக வரவும் மனதில் ஏதோ பாரம் குறைந்த உணர்வு தோன்றியது அவளுக்கு..

எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் நவீனின் முகம் சோர்ந்தது. அவன் தயாராக குறித்த தேதியில் மண்டபம் எதுவும் கிடைக்காததால் மூஹுர்த்ததை தள்ளி வைத்தனர். அவனது முக மாற்றம் பார்த்து அர்ச்சனாவிற்கு சிரிப்பாக இருந்தது. அவள் சிரிக்க பார்க்கவே நவீனுக்கு எட்டாம் அதிசயத்தை பார்ப்பதை போல் இருந்தது.

ஹாய் அஸ்வத்” என்று எப்போதும் போல் அவன் தனிமையில் இருக்கும் நேரம் பார்த்து அவனிடம் சென்றான் தர்ஷன். பதிலுக்கு புன்முறுவல் பூத்தவன்.

“என்ன விஷயம் தர்ஷன்?”  

“இல்லை அடுத்த வாரம் என் வீட்டுக்கு வரியா?”

“ஏன் என்ன ஸ்பெஷல்?”

“சும்மாதான் வீட்டில எல்லாரும் ஊருக்கு போறாங்க அதான் பேச்சு துணைக்கு கூப்பிட்டேன்” என்று கூறினான்.

சிறிது யோசித்தவன் தோழன் என்று கூறிக்கொள்ள அவனுக்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தாலோ என்னவோ அஸ்வத்க்கு மறுக்க தோன்றவில்லை, “நான் சனிக்கிழமை சொல்லுறேன்டா” என்று கூறிவிட்டு பேச்சு வேறுபக்கம் சென்றது.         

Go to Kadhal payanam # 14

Go to Kadhal payanam # 16

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.